3/15/2011

அமெரிக்காவில் இந்தியர்கள் மீது வெறுப்பு தோன்றி, தாக்குதல் நடக்கின்றன. என்ன காரணம்??

"ஆப்ரிக்க நாடான உகாண்டாவில் இருந்து அடித்து விரட்டப்பட்டனர். இதே அபாயம் இன்னும் பல ஆப்ரிக்க நாடுகளிலும் உள்ளது. பியூஜி தீவில் இருந்தும் இந்தியர்கள் விரட்டப்பட்டனர். இப்போது, அமெரிக்காவில் இந்தியர்கள் மீது வெறுப்பு தோன்றி, இந்தியர்கள் மீது தாக்குதல் நடக்கின்றன. இதற்கெல்லாம் என்ன காரணம்??"

பொதுவாக, மற்ற இடத்துக் கட்டுரைகளை நமது பக்கத்தில் வைத்து வியாபாரம் செய்வதில்லை. எனினும், இது மிக முக்கியமான ஒன்றாகக் கருதுவதால்... இதோ, அக்கட்டுரையின் தொடுப்பு இங்கே!!

11 comments:

ராஜ நடராஜன் said...

துண்டு போட்டு விட்டு தொடுப்புக்கு போகிறேன்!

ராஜ நடராஜன் said...

//தாம் பிழைக்கச் செல்லும் நாடுகளின் நல்லது, கெட்டதுகளில் இவர்கள் கலந்து கொள்வதே இல்லை. அந்நாட்டின் தேசிய நீரோட்டத்தில் இவர்கள் கலந்து கொள்ளாததால், அந்நாட்டு மக்களிடையே இந்தியர்களைப் பற்றிய உயர்வான மதிப்பீடு குறைந்து, சுயநலவாதிகளாகப் பார்க்கப்படுகிறோம்.//

உங்க ஊர் கதைய சொல்லிட்டீங்க!இப்பொழுது பஹ்ரைனில் நிகழும் போராட்டங்களை அறிந்திருப்பீர்கள்.இந்திய வாழ்க்கையோடு ஒப்பிடும்போது ஓரளவுக்கு வசதியான வாழ்க்கை என்பதால் சிலர் அரசுக்கு ஆதரவாக கொடி பிடித்தார்கள்.இந்திய தூதரகமே சார்பு நிலை எடுப்பது தவறு என்று அறிக்கை விட்டதும்,எது சரி எது தவறு என்பது பற்றிக்கவலைப்படாமல் நடுநிலை என்ற இந்திய வெளியுறவுக்கொள்கையையும் இந்தியர்கள் சுயநலமிகள் என்று எடுத்துக்கொள்ளலாமா?

குறும்பன் said...

சமூகத்துல எல்லோரும் முன்னேறுனா இந்த மாதிரி தகராறு வராது.

பலர் மிகவும் ஏழைகளாக இருக்க சிலர் மட்டும் மிகப்பெரிய பணக்காரர்களாக உயர்ந்தால் வெறுப்பு தானாக தோன்றிவிடும். இந்த ஏற்றத்தாழ்வு குறைந்தால் தான் பணக்காரர்களுக்கும் பாதுகாப்பு என்பதை பணக்காரர்கள் புரிந்துகொள்வதில்லை.

நான் இருக்கும் பகுதியிலும் 2 ஆண்டுக்கு முன் இந்திய வெறுப்பு தாக்குதல்கள் நடந்தன. அப்ப உங்க பகட்டை வெளியில் காட்டி வெறுப்ப சம்பாதிங்க என்பது தான் இந்திய சமூக பெரியவர்களின் அறிவுரையாக இருந்தது.

மென்பொருள் துறை மட்டும் மிகவும் முன்னேறி மற்ற துறைகள் முன்னேறவில்லையென்றால் இந்தியாவிலும் மென்பொருள் துறை ஊழியர்கள் மீது வெறுப்பு அதிகரித்து அவர்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்கும்.

வருண் said...

இந்த தினமலரு பதிவை நீங்க சீரியஸா எடுத்துக்கிறீங்களா?

யார் அது இந்த ஆர்ட்டிக்கிள் எழுதியது?

அவருடைய "பயோ" வை கொடுக்க முடியுமா? நன்றி!

இங்கே இந்தியர்கள் னா அமெரிக்கனாகிய இந்தியர்களா?

ஓலை said...

பழமை,
அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது சிலது சரியென்று தோன்றுகிறது.

பழமைபேசி said...

கட்டுரையில், மிகைப்படுத்தப்பட்டவை இருக்கிறதுதான். ஆனாலும், சமூகப்பணிகளில் நாம் எந்த அளவுக்குப் பங்கேற்கிறோம் என்பதைச் சுட்டிக்காட்டும் அடிப்படையை ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும்?!

இது இங்க மட்டுமல்ல... தாயகத்திலும் அதே பிரச்சினைதான்... பொருளீட்டுதல் அல்லது பொழுதுபோக்குத் தவிர, மற்றனவற்றுக்கு மக்கள் கூடுகிறார்களா??

திமுகவையும், அதிமுகவையும் வசைபாடுவதற்கு, அதுவும் அவனவன் வீட்டில் இருந்து கொண்டு புலம்புவதற்கு மட்டுமே தெரிந்திருக்கிறது நமக்கு?!

அரசியலாளர்கள் என்ன கடவுளர்களா?? குடிமகன் சுயநலவாதியாக இருக்க, அவர்கள் மட்டும் தூயவர்களாக இருந்து நாட்டைச் செழுமைப்படுத்த அவர்கள் என்ன தேவதூதர்களா??

யசோதா.பத்மநாதன் said...

இந்தியர்களைப் பற்றிய வெறுப்பு பரவி வருவதென்பது உண்மையே.காரணம்;

1.பொது இடங்களில் தம் மொழியில் இங்கிதமற்று உரத்துப் பேசும் தொலைபேசி.

2.நடு இராத்திரி வரை ஹிந்தியில் பாடல்களைப் உரத்துப் போட்டு விட்டு மற்றவர்களைப் பற்றிய அக்கறை இன்றி அட்டகாசமாக இருத்தல்.

3.மலிவு விலைக்கு கார்களை வாங்கி நடு வீதியில் அது நின்றதும் தள்ளிக் கொண்டு இருக்கும் குணம்.(1500 டொலர்களுக்கே நல்ல கார் வாங்கலாம்.ஆனால் வாங்க மாட்டார்கள்.)

2.காசுக்கு எதுவும் செய்யத் தயாராகும் குண இயல்பு.(கிறடிட் காட் மோசடி.மற்றவர்களின் காசைக் களவாடிக்கொண்டு ஊர் போய் சேர்ந்து விட்டார்கள். குறிப்பாகப் பெற்றோல் நிலையங்களில் இரவு வேலைக்கு நிற்பவர்கள்)

3.பொது நீரோட்டம் பற்றிய அக்கறை இன்றி மேம்போக்காக வாழுதல்.(ஒன்றிப் போகாத தன்மை)அல்லது அதனை அறிய நாட்டமற்றிருத்தல்.

4.பின் பக்கமாக உள் நுழைதல் (நேர்மையீனம்)உதாரணம்; ஒரு CPA தகைமை உள்ளவர் ஒரு பதவிக்கு குறிப்பிட்ட தொகையை சம்பளமாகக் கோருகிறார் என்றால் இந்தியர் மறைமுகமாக உள் நுழைந்து நான் அதே வேலையை குறைந்த சம்பளத்துக்கு செய்து தருகிறேன் என்று உள் நுழைவார்.

5.மூன்று நான்கு பேர் கொண்ட குடும்பம் ஒன்று வசிப்பதாகப் பேசி வீடெடுத்து விட்டு அதில் 10,12 பேருக்குக் குறையாமல் இருத்தல்.

6.பெல்கனிகளில் துணி காயப் போடுதல்.வேறு யாரும் அப்படிச் செய்வதில்லை.அது கட்டிடத்தின் - அங்கு வாழ்பவர்களின் இமேஜை பல படி கீழிறக்கும்.

7. எப்போதும் வீசிக் கொண்டிருக்கும் வியர்வை நாற்றம் மற்றும் கறி மணம்.

இவ்வாறு பல...

மனம் நொந்திருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்.இவை நான் கண்ட யதார்த்தம்.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

உண்மை தான்.. எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை.. பொறாமையும் உண்டு.. ஆனால் சில கருப்பினத்தவரிடம் நம்மை நோக்கிய நல்ல நட்புணர்வு இருக்கிறது.. எனக்கு இந்திய நண்பர்கள் உண்டு என்று சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.. இந்தி வார்த்தைகளையும் நம்மிடம் பேசிக் காண்பிப்பார்கள்.. :) ஆனால் இவர்கள் பெரும்பாலும் நம்மைப் போன்ற முதல் தலைமுறை வந்தேறிகள்..

பணியிடத்தில் அவர்களிடம் மற்றும் வெள்ளையர்களிடம் நாம் நட்பாகப் பழகினாலும் அவர்களுடன் அவ்வளவாகக் கலப்பதில்லை என்பதும் உண்மை.. நாம் நம்முடைய ஆட்களோடு தான் அதிகம் புழங்குகிறோம்.. திருமணங்களும் கூட பெரும்பாலும் இந்தியருக்குள்ளேயே தான்.. இதற்கு ஒன்றும் செய்ய முடியாது..

ஹிஸ்பானிக் ஆட்கள் நம்மைக் குறித்து இப்படி நினைப்பார்கள் என்று என்னால் நினைக்க முடியவில்லை.. ஏனென்றால் அவர்களும் நம்மைப் போலவே தான் தமது சுற்றம் சூழ வாழ்கிறார்கள்..

இரண்டாம் மூன்றாம் தலைமுறையினர் ஒன்றாகவே படித்து வளருவதால் இயல்பாகக் கலந்து விடுவார்கள்..

Darren said...

TRUE

எப்போதும் வீசிக் கொண்டிருக்கும் வியர்வை நாற்றம் மற்றும் கறி மணம் நாற்றம் நாற்றம் நாற்றம் நாற்றம் நாற்றம் நாற்றம் நாற்றம் நாற்றம் நாற்றம் நாற்றம் நாற்றம் நாற்றம்

வருண் said...

***7. எப்போதும் வீசிக் கொண்டிருக்கும் வியர்வை நாற்றம் மற்றும் கறி மணம்.**

maNimekala: What are you trying to tell us here?

I really got irritated reading this.

The problem here is, "patriotism of Indians towards the country they immigrated"?

Are you not using this opportunity to insult Indians?

Who are you anyway?

You need to ask other how you smell. I guess you know that!

LinuxAddict said...

The smell she is talking about comes from somewhere else.. ;-)