3/22/2011

2011: திமுக தோற்பதற்கான காரணங்கள்

ஒரு கட்சியினுடைய உறுப்பினர்கள் மற்றும் அபிமானிகளைப் பொறுத்த வரையில், அவர்களது நிலைப்பாடு என்பது எக்காரணத்திற்காகவும் மாறப் போவது இல்லை. வாக்களிக்கும் வாக்காளர்களில் கிட்டத்தட்ட முப்பத்தைந்து விழுக்காடு இவ்வகையினரைச் சார்ந்தவரே!

2011 பதினான்காவது சட்டமன்ற தேர்தலைப் பொறுத்த மட்டிலும், இந்த எஞ்சியுள்ள அறுபத்தி ஐந்து விழுக்காட்டினரை நாம் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கலாம். முதலாவதாக திமுக ஆதரவு வாக்குகள், இரண்டாவதாக திமுக எதிர்ப்பு வாக்குகள், மூன்றாவதாக அதிமுக ஆதரவு வாக்குகள், மற்றும் நான்காவதாக அதிமுக எதிர்ப்பு வாக்குகள்.

திமுக ஆதரவு வாக்குகளுக்கான காரணங்களை, திமுக வெற்றி பெறுவதற்கான காரணங்கள் எனும் தலைப்பிட்ட இடுகையில் நாம் நேற்றுப் பார்த்தோம். இதோ, திமுக எதிர்ப்பு வாக்குகளுக்கான காரணங்கள்:

10. உள்ளூர்ப் பிரச்சினையில் திமுகவின் நிலைப்பாடு ஏற்படுத்திய மனநிறைவின்மை மற்றும் ஏமாற்றம். உதாரணம் - சாயப் பட்டறைகள் மூடியமை

09. இந்து மதத்தினரை மட்டும் அலட்சியப்படுத்துவது அல்லது கொச்சைப்படுத்துவது போன்ற செயல்கள்

08. தனது அபிமானக் கலைஞர்(நடிகர்கள், திரைப்படம் சார்ந்தவர்கள்) தோற்பதற்கு இவர்களே காரணம் மற்றும் அபிமானத்துக்குரியவருக்கு நாட்டமில்லாத கட்சி இது எனும் மனப்பான்மை

07. வேட்பாளர் மீதான அதிருப்தி. கடந்த முறை வந்து சென்ற இவர், இதுவரையிலும் தொகுதிக்கென்று ஒன்றுமே செய்யவில்லை.

06.தமிழக மீனவர்களைக் காப்பாற்ற ஒன்றுமே செய்யவில்லை.

05. ஈழத் தமிழர்களைக் காப்பாற்றத் தவறிய இவர்கள் துரோகிகள்!

04.தொலைக்காட்சி, திரைப் படத்துறை, பத்திரிகை, மத்திய அரசு, மாநில அரசு, கல்விச்சாலைகள்  என சகலமானதையும் இவர்களே ஆக்கிரமித்துக் கொள்கிறார்கள்.

03.கல்விக் கட்டணம் பல மடங்கு ஏறிவிட்டது. கட்சியினரே கல்விச் சாலைகள் நடத்திக் கொள்ளையடிக்கிறார்கள்.

02.குடும்ப ஆட்சி. குடும்பத்தில் உள்ளவர்கள் கோலோச்சுகிறார்கள். கோடி, கோடிகளாய்ச் சம்பாதிக்கிறார்கள்.

01. மாற்றம் வேண்டும். இவர்களே தொடர்ந்து இருந்தால், கேள்வி கேட்பாரற்றுப் போய்விடும். வளர்ச்சி தடைபடும்.

குறிப்பு: திமுகவிற்கு, அதிமுகவின் ஆதரவு வாக்குகள் பற்றிய கவலை இருப்பதாகத் தெரியவில்லை. இந்த திமுக எதிர்ப்பு வாக்குகளை, ஆதரவு வாக்குகளாக எப்படி மாற்றுவது என்பதுதான் திமுகவினரின் இலக்காக இருக்கும்.  வரலாற்று ரீதியாகப் பார்க்கும் போது, தமிழகத்திலே எதிர்ப்பு வாக்குகளை ஆதரவு வாக்குகளாக்கிக் காட்டுவது மிகவும் கடினமான செயல். 

திமுகவின் தேர்தல் அறிக்கை, பிரச்சாரம், பணபலம், ஆள்பலம் முதலானவை, எதிர்ப்பு வாக்குகளை ஆதரவு வாக்குகளாக்கிக் காட்டுமா?? அதிலேதான் திமுக/அதிமுகவின் வெற்றி, தோல்வி அடங்கி இருக்கிறது!! 

11 comments:

ஓலை said...

உங்களது 1 ம் 2 ம் இடம் மாறினால் நன்றாக இருக்கும்.

குறிப்பாக இந்த லிஸ்ட் ல் இல்லாதது:
1 அளவுக்கு அதிகமான நில ஆக்கிரமிப்பு,
2 கலைஞர் டிவி உருவாக்கியதில் ஆரம்பம் முதல் நடை பெற்று வரும் தில்லு முல்லுகள்
3 . புறம்போக்கு நிலங்களை அதிகார துச்ப்ரயோக்ம் செய்து ஆர்ஜிதம் செய்தல்.
4 . அரசு துறை திட்டங்களை தனது குடும்ப உறுப்பினர்களின் தொழிலுக்கு ஏற்றவாறு அறிவித்து செயல் படுதல்.

போன பதிவில் இடம் பெறாதவை:
1. சமத்துவ புரம்.
2. உழவர் சந்தை
3. சாலை விரிவாக்கம்
4. Some infrastructure development projects
5. நிலப் பட்டா வழங்கியது முந்தைய ஆட்சியை விட அதிகம்.

bandhu said...

//இந்த எஞ்சியுள்ள அறுபத்தி ஐந்து விழுக்காட்டினரை நாம் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கலாம். முதலாவதாக திமுக ஆதரவு வாக்குகள், இரண்டாவதாக திமுக எதிர்ப்பு வாக்குகள், மூன்றாவதாக அதிமுக ஆதரவு வாக்குகள், மற்றும் நான்காவதாக அதிமுக எதிர்ப்பு வாக்குகள்//
இந்த நடுநிலை வாக்காளர்கள் அப்படி என்று ஒரு பிரிவு இன்னும் இருக்கிறதா இல்லை எல்லோரும் இந்த நான்கு பிரிவில் வந்து விடுவார்களா?

பழமைபேசி said...

@@ஓலை

ஓலையாரே, சும்மா நாம நினைக்கிறத எழுதிட வேண்டியதுதானா?? இது அப்படி அல்லங்க... நாலு பேர்த்துகிட்டக் கேட்டு எழுதினதுங்க...

ஓலை said...

பழமை,
நான் எழுதியதை உங்க சுத்து வட்டம் யாரும் சொல்லலையா உங்க கிட்டே. யாராவது சொல்லுங்கப்பா எங்க பழமை கிட்ட. ஈரோட்டு மேயரத் தான் உதவி கேக்கோணும்.

நசரேயன் said...

நீங்க சொன்னா சரிதான்

நசரேயன் said...

இடுகை எழுதி கொடுத்தது ஓலையாரா?

ஓலை said...

தளபதி நீங்களும் எடுத்த வுடனேயே same சைடு goal போடலாமா?

Rathnavel said...

மக்கள் செய்தித்தாள் தொலைகாட்சி ஆகியவற்றில் 'செய்தி' யாரும் பார்ப்பதில்லை. சினிமா மட்டும் தான். அதனால் பழையபடி வந்து விடும் என்று தான் நினைக்கிறேன்.
நன்றி.

ராஜேஷ், திருச்சி said...

உங்களின் பாயிண்ட் 5 தவறு.. அப்படி என்றால் 2009 பாராளுமன்ற தேர்தலில் ஈழம் சூடாக இருந்த நேரத்திலே தி மு க காங்கிரஸ் மண்ணை கவ்வி இருக்க வேண்டும்.. அதுவும் வைகோ முழங்கினார்.. இப்போ வைகோ கூட முழங்க போவதில்லை.. ஈழம் என்பது வெறும் பேச்சளவில் மட்டுமே, வாக்குச்சீட்டில் illai என்பதே யதார்த்தம்பாயிண்ட் 7 எல்லா தேர்தலிலும் இருப்பதே.. பாயிண்ட் 8 - குடும்பம் என்பதும பல ஆண்டுகளாக சொல்வது.. மக்களுக்கு பழகியது தான்..பாயிண்ட் 1 , 4 , 6 , 10 மிகச்சரி - ஆனால் இலவச டி வி, 108 , கலைஞ்சர் காப்பிடு, கான்கரிட் வீடு, காஸ் அடுப்பு.. இதற்கு ஈடு கட்டிவிடும்

வடுவூர் குமார் said...

போன பதிவு மற்றும் இப்பதிவை படிச்சு கொஞ்சம் யோசித்துவிட்டு “குத்திட” வேண்டியது தான்.

முகவை மைந்தன் said...

இவர்கள் சரின்னு நினைக்கிறது தான் மக்கள் எல்லோரும் சரின்னு நினைக்க வைக்கும் வலு அவங்கக்கிட்ட இருக்கு. இதை எப்படித் தடுக்கிறது?