1/15/2011

வட கரோலைனா பொங்கல் விழா - படப்பிடிப்பு துவங்கியது

பொங்கலோ பொங்கல்! மக்களே, டென்னசி மாகாணத்தின் சட்டனூகா நகரில் இருந்து கிட்டத்தட்ட நடுஇரவில் வட கரோலைனாவின் தலைநகருக்கு வந்து சேர்ந்தோம். அவ்வேளையிலும், தமிழாசான், சொல்வித்தகர் அமரர் கா.காளிமுத்து அவர்களுடைய உறவினருடைய உணவகம் ஒன்றின் அறுசுவை நம்மை “வா, வா” என வரவேற்றுப் புசிக்க வைத்தது.

புசித்து முடித்து, அறைக்குத் திரும்பியதும் தமிழ்மணம் விருதுகளைக் கண்டேன். அகமகிழ்ந்தேன். எண்ணற்ற மணிக்கணக்கான உழைப்பு அதில் அடங்கி இருக்கிறது. நேரம் செலவழித்து எழுதிய பதிவர்களின் உழைப்பு, கட்டமைப்பு உருவாக்கிப் போட்டிதனை அறிவித்து நடத்தி முடித்த தமிழ்மணம் திரட்டியினரின் உழைப்பு, நடுவர்களின் உழைப்பு என எண்ணற்ற மணிக்கணக்கான உழைப்பு, தமிழுக்கு அர்ப்பணிக்கப்பட்டதில் மிகவும் அகமகிழ்கிறேன்.

ஈரோட்டுப் பாசறைக்குப் பல விருதுகள். மகிழ்ச்சி! மகிழ்ச்சி!! எம்மவன் பாலாசி படைத்த “புழுக்கள்”. என்றும் எம்மை சிந்தனை வயப்படுத்தக் கூடிய ஒன்று. மாப்பு, ஈரோடு கதிர் படைத்த “கோடியில் இருவர்”, அர்ப்பணிப்பின் அடிநாதத்தை ஊர் உலக்குச் சொல்லும் இடுகை. விருதுக்குப் பெருமை!!

இதோ, அம்மகிழ்ச்சியின் தொடர்ச்சியாய்த் தமிழர் திருநாளைக் காணப் புறப்பட்டு விட்டோம். நேற்றைக்குத் தமிழ்சசி அவர்கள், விளையாட்டாய்க் கேட்டதில் உண்மை இருக்கிறதுதான். ஆனால், ஊக்கமும் உற்சாகமும் பெற அவையெல்லாம் செய்யத்தானே வேண்டி இருக்கிறது?!

இன்றைய நாள், உற்சாகத்தோடும் களிப்போடும் கழியும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. பதிவர் மக்களே, தமிழ்விழாக்களுக்கு தத்தம் குடும்பத்தோடு வாருங்கள். சக தமிழரையும் வந்து கலந்து கொள்ளச் செய்யுங்கள். உள்ளூர்த் தமிழ்ச் சங்கங்களுக்கு வலிமையூட்டுங்கள்!!

ஆமாங்கய்யா... இதோ, படப்பிடிப்புத் துவங்கிருச்சு.... அட, இப்பத்தான் அறையிலிருந்து கிளம்பிட்டு இருக்கோமுங்க....தமிழால் இணைந்தோம்!

2 comments:

vasu balaji said...

அடுத்த பதிவிலாவதுஅஆளுங்க பேரு போடுங்க சாமி:)

ஈரோடு கதிர் said...

நன்றிங்க மாப்பு