10/20/2010

வங்கணத்தி

மாறாத தென்றல்
மங்காத மதியொளி
நிசப்தமான பொழுது
மெல்லிய விசும்பல்
ஈரேழு ஆண்டுகளாய்
மெய் கிடையாகி
கிடை மடியாறிச்
செல்லுமாடமது!
ஏன்டி?
நீயும் மூக்குறிஞ்சிச் சாவடிக்குறே??

இருக்குறது மாடமே ஆனாலும்
உடுத்துறது பட்டே ஆனாலும்
சாத்துறது தங்கமே ஆனாலும்
இன்னைக்கு சமைஞ்ச அவ,
நாளைக்கு
நான் யாருன்னு கேப்பாளோ?
நான் யாருன்னு கேப்பாளோ??

15 comments:

அரசூரான் said...

//இருக்குறது மாடமே ஆனாலும்
உடுத்துறது பட்டே ஆனாலும்
கொட்டுறது தங்கமே ஆனாலும்//
எழுதியது பழமையே ஆனாலும்
கொஞ்சம் விளக்கம் தேவை

நசரேயன் said...

//நான் யாருன்னு கேப்பாளோ?//

அப்படியே கேட்டாலும் கவலைப் படுற ஆளா நீங்க

எஸ்.கே said...

அழகு! அழகு!

vasu balaji said...

கேப்பாளோ முகரைய பேப்பாளோ:))

வருண் said...

***இன்னைக்கு சமைஞ்ச அவ,
நாளைக்கு
நான் யாருன்னு கேப்பாளோ?***

யாருனு கேக்கிற அளவுக்கு வசதியும், மனதைரியுமும், தன்னம்பிக்கையும் வந்துருச்சுனா பாராட்ட வேண்டிய விசயம்.

ஒரு தொல்லை முடிஞ்சதுனு, நல்லா வாழுடினு வாழ்த்திட்டு வயசான காலத்துக்கு இப்போவே ஒரு சேவிங்ஸ்ல மிச்ச மீதிப் பணத்தைப் போட்டுட்டு நிம்மதியா இருக்காம, விசும்பி விசும்பி அழுதுக்கிட்டு!

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

புரியல :(

பழமைபேசி said...

// எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...
புரியல :(
//

அவங்கிட்ட, அவனோட வங்கணத்தி (மகளை ஈன்ற அவனுடைய அவள்) தன்னை மணம் முடிக்கச் சொல்லி வற்புறுத்தும் ஒரு காட்சிங்க இது.

ராஜ நடராஜன் said...

அதானே!நான் என்னமோ மாறுதலுக்கு ஏதோ பெரிய மீனுக்கு வாடியிருக்குமாம் கொக்கு மாதிரி ஏதோ பறவையைப் பத்தி சொல்றீங்களாக்கும்ன்னு வந்தேன்:)

ராஜ நடராஜன் said...

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்!

என்ன நடக்குது நசருக்கும் உங்களுக்குமிடையில்?நீங்க கடை கடையா அவரப் பத்தி கோள் மூட்டி விடுறதும் அவர் உங்ககிட்ட கவலைப்படுற ஆளா சொல்றது இல்லைன்னா நீங்க போட்ட பின்னூட்டதையே போட்டுத் திருப்பி தாக்குறதும்....

திரை மறைவில் என்னமோ நடக்குது!மர்மமாய் இருக்குது:)

ராஜ நடராஜன் said...

//கேப்பாளோ முகரைய பேப்பாளோ:))//

எழுத்துல குற்றமிருக்குங்குறேன்!

அது மொகரய!

பெண்களின் புகழ்பெற்ற வசனம் இது.

மூஞ்சியப் பாரு!மொகரயப் பாரு.

Unknown said...

//.. மகளை ஈன்ற அவனுடைய அவள் ..//
நானும் permutation, combination எல்லாம் போட்டு பார்த்துட்டேன், ஆனாலும் ஒன்னும் புரியலைங்க..

யசோதா.பத்மநாதன் said...

மணி, நலமா? இதனைப் பிரசுரிக்க வேண்டாம்.

தமிழ் மொழியின் விற்பன்னர் நீங்கள்.அமெரிக்கத் தமிழன் வேறு.எனக்குத் தமிழில் ஒரு சந்தேகம் இருக்கிறது.என்னுடய பதிவில் அதனை வெளியிட்டிருக்கிறேன்.

தயவு கூர்ந்து வந்து எனக்கு அச் சந்தேகத்தை நிவர்த்திக்குமாறு அன்போடும் தாழ்மையோடும் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி மணி.

a said...

intha sinna pullaikku moonu thadavaikku mela padichapuram than puriyuthu (rinjamathiri theriyuthu)

தமிழ் அனானி said...

உங்க போன் நம்பர் தர முடியுமா தல?

tamilanony @ gmail.com

தாராபுரத்தான் said...

வணக்கம்முங்க..