கல்விக் கண் திறந்தாய்;
கல்விச் சாலைகள் ஏறிட
நாளைய தலைவர்கள்
இன்றைய முகிழ்கள்
இளமொட்டுகள் பசி அகன்றிட
அன்னம் இட்டாய்!
காலைப் பிடித்தோர்
காக்கா பிடித்தோர்
காததூரம் விரட்டினாய்;
கடமை ஆற்றினோர்
கருமமே கண்ணாயினோர்
கண் இமையாகினாய்!
காந்தி பிறந்த நாளில்
உனை இழந்தோம்; அந்நாளை
விடுமுறையாகவும் ஆக்கினோம்!
ஆம்!!
உம்போன்ற தலைவர்களை
அவர்தம் அர்ப்பணிப்பை
விடு முறையாக்கினோம்;!
15 comments:
:(. அவர்களையுமே விடு முறையாக்கி நெம்ப நாளாச்சி. எங்க பார்த்தாலும் பேனர் போட்டிருப்பாங்க. விழான்னு. இவங்க படத்த தவிர மத்தவங்க படம்தான் இருக்கும்.
சிறு வயதில் சொன்னது இன்னமும் நினைவில் இருக்கிறது... காந்தி பிறந்த நாள், காமராஜர் இறந்த நாள்!...
கர்மவீரரை நினைவு கூர்ந்தமைக்கு நன்றிங்கண்ணே... எனக்கு பிடித்த ஒரே அரசியல்வாதி.
பிரபாகர்...
லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளும் இன்றுதான் என்ற ஒரு செய்தி இன்று காலைச் செய்தித் தாள்களின் கண்டேன்.
என்ன செய்வது??????
பகிர்வுக்கு நன்றிங்க மாப்பு
நெஞ்ச தொட்டுடிங்க நண்பா
//கர்மவீரரை நினைவு கூர்ந்தமைக்கு நன்றிங்கண்ணே... எனக்கு பிடித்த ஒரே அரசியல்வாதி.//
ஒரு ரிப்பீட்டு
//கர்மவீரரை நினைவு கூர்ந்தமைக்கு நன்றிங்கண்ணே... எனக்கு பிடித்த ஒரே அரசியல்வாதி.//
ஒரு ரிப்பீட்டு
யாருங்க இவரு? ஏதாவது சமீப படத்துல நடிச்சுருக்குறாருங்களா?
அம்மண நாட்டில் ஆடை தரித்தவன் கோமாளி :(
மகாத்மா காந்தியையும் அத்தோடு லால் பகதூர் சாஸ்திரி மற்றும் கர்மவீரர் காமராஜர் அவர்களையும் நினைவுகொள்ள வைத்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள்!
எனக்கு என்னவோ திலகரைபோல், சுபாஸ் போசைபோல், பகத்சிங்கை போல் காந்தியை பிடிக்காமல் போனது. காரணம் சொல்லத்தெரியவில்லை. நான் தவறாக வழி நடத்தவோ அல்லது அறிவுறுத்தப்பட்டு இருக்கலாம். மேலும் அதிக வரலாற்று புத்தகங்களை நான் படிக்காததும் ஒரு காரணமாக இருக்கலாம். அல்லது நான் படித்த ஒருசில புத்தகங்கள் அவர் பணிகளை பாராட்ட தவறி இருக்கலாம்.
அதற்காக தேசமே கொண்டாடும் ஒரு தலைவரை நான் புறக்கணிக்க போவதில்லை.
வாழ்க காந்தி புகழ்.
காமராஜரைப் பற்றி நிறைய படித்து இருக்கிறேன். அவரின் 'லீடர்ஷிப்' பண்பு மிகவும் எனக்கு பிடிக்கும். தன்னலமற்ற தலைவன். ஒரு முறை அவரின் தாயார், காமராஜர் தனக்கு மாதமாதம் அனுப்பும் பணத்தை ரூ.100 கூட்டி அனுப்ப சொன்னாராம். வீட்டிற்கு வருபவர்களுக்கு டீ காப்பி கொடுபதற்காக. அதற்கு மறுத்துவிட்டாராம். தன்னை பார்க்க வருகிறவர்களுக்கு அதெல்லாம் தேவை இல்லை என்றாராம்.
ஆனால் இன்று ஹாப் பாட்டில், சிக்கன் பிரியாணி இல்லன்னா கூட்டமே கூடாது.
இப்பிடி இருந்தா காமராஜர் ஆட்சி மீண்டும் எப்பிடி மலரும். கனவு காண எல்லை இல்லை.
தன்னலமற்ற தலைவர் காமராஜர் புகழ் வாழ்க. தற்கால அரசியல் தலைகள் ('தலைவர்' இல்லை) இவரின் பண்புகளில் 10 % கடைபிடித்தால் 'தலைவர்' ஆகலாம்.
பகிர்வுக்கு நன்றிங்க பழமைபேசி. காமராசரின் தொண்டுகளை நினைவு கூறச் செய்யும் அருமையான கவிதை. வாழ்த்துக்கள்.
இருவரையும் நினைவுகொள்வோம்.
விடு முறைதான் வசதி போல!
நீங்களாவது காந்தி பிறந்த நாள் கொண்டாடிறீங்களே!வாழ்த்துக்கள்.
நீங்க காமராஜரைப் புகழ்ந்து எழுதிவிட்டீர்கள். ஆனால் இன்றைய தினமலரில்(03.10.2010) வாசகர் கடிதத்தில் காமராஜ் ஒன்றும் பெரிய தலைவர் இல்லை, அவர்காலத்தில் அரிசிப்பஞ்சம் மற்றும் மக்களிடம் வாங்கும் சக்தியின்றி கஷ்டப்பட்டனர் என்று எழுதியிருந்தார். அதைப்படித்தவுடன் மனதுக்கு மிகவும் கஷ்டமாயிருந்தது.
நாடு விடுதலைப்பெற்ற உடன் கல்வி, தொழிற்சாலை, சாலை வசதி, நீர் வசதி இவைகளை ஏற்படுத்துவதில் அன்றைய காங்கிரசு அரசு ஈடுபட்டது. அவர்கள் போட்ட அடித்தளத்தில்தான் இன்றைய சொகுசு வாழ்வு. இதை மறந்துவிட்டார் அந்தக்கடிதத்தை எழுதியவர். காமராஜ் ஆண்ட 9 ஆண்டுகளில் 9 அணைக்கட்டுகள் கட்டப்பட்டன. நிர்வாகத்தில் அரசியல் தலையீடு என்பது அறவே இருந்ததில்லை. தலைமைச்செயலாளர் முதல்வர் அறைக்குள் காலையில் நுழைந்தால் காமராஜ் எழுந்து நின்று வணக்கம் சொல்லுவாராம். அதற்கு மற்றவர்கள் ஐயா த.செ. தங்களுக்கு கீழ் பணிபுரிபவர். அவருக்குத்தாங்கள் எழுந்து நின்று மரியாதை செய்ய வேண்டியதில்லை என்று கூறியபோது, நான் அவனுக்கு (த.செ. வயதில் இளையவர்) மரியாதை செய்யவில்லை, அவனுடைய கல்வி்க்கு மரியாதை செய்கிறேன் என்று கூறினாராம்.
1967க்குப் பிறகு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை வேலைக்காரர்களாக நடத்தும் போக்கு நடைபெறுகிறது.
காமராஜ் படத்தைப்பார்த்தும் தெரிந்து கொள்ளாத மனிதர்கள்......
மனசு ஆறவில்லை.
மிக அருமையான பதிவு
http://denimmohan.blogspot.com/
Post a Comment