4/28/2010

எல்லாமும் அவளே!

அவன் நடத்திக் கொண்டிருந்தான் நிகழ்ச்சி
அவனைக் கண்டவளுள் அன்பின் முகிழ்ச்சி
சூதன் அவன்மேல் கொண்டான் சூழ்ச்சி
அதுகண்டு அவன் தரித்தனன் தாழ்ச்சி
ஊரார் பூண்டனர் அவன்மேல் இகழ்ச்சி

அவனோ அடையவில்லை பிறழ்ச்சி
அவளோ ஆயினள் நம்பிக்கைத் திகழ்ச்சி
அதுகண்டு அவன் அடைந்தனன் நெகிழ்ச்சி
அவ்வூக்கத்தில் சூழ்ச்சிக்குப் பூண்டனன் அகழ்ச்சி
எழுச்சிகண்டதில் சூதனோ ஞெகிழ்ச்சி
ஆயினும் மாய சூதனுக்கோ வீழ்ச்சி
நாயகன் அவள்மேல் பொழிந்தனன் புகழ்ச்சி
வெட்கத்தில் அவள்முகம் கவிழ்ச்சி! நாணத்தில்
முறுகி முருகிய அவள்முகமோ கவிழ்ச்சி!!

மகிழ்ச்சி!

23 comments:

Unknown said...

மகிழ்ச்சி, மகிழ்ச்சி முடிஞ்சி இப்ப தமிழில இருக்கிற மத்த ச்சி எல்லாமா?

ஈரோடு கதிர் said...

//முகிலன் said...
இப்ப தமிழில இருக்கிற மத்த ச்சி எல்லாமா?//

இஃகிஃகி

Mahesh said...

எனக்கு இல்லை பேச்சி.... உங்களுக்குதான் அடுத்த ஆச்சி...

அன்புடன் அருணா said...

எனக்குப் பேச்சு மூச்சு நின்னு போச்சி!

நேசமித்ரன் said...

//முகிலன் said...
இப்ப தமிழில இருக்கிற மத்த ச்சி எல்லாமா?//

இஃகிஃகி

//

:)

செந்தில்குமார் said...

அருமை....

சொல்லாட்சி

பனித்துளி சங்கர் said...

இதை வாசித்து முடித்ததும் எனக்கு இன்ப அதிர்ச்சி

க.பாலாசி said...

இத்தன ‘ச்சி’ வார்த்தைகளா? அடடா....

அகழ்ச்சி = ?
ஞெகிழ்ச்சி = ?

பழமைபேசி said...

// க.பாலாசி said...
இத்தன ‘ச்சி’ வார்த்தைகளா? அடடா....

அகழ்ச்சி = ?
ஞெகிழ்ச்சி = ?
//

'ச்சி’ சொற்கள் அல்ல இவை! ‘ழ்ச்சி’ சொற்கள்!!

அகழ்ச்சி = நெருங்க விடாமல் தடுத்தல்
ஞெகிழ்ச்சி = வீரியம் கொள்தல்

க ரா said...

நல்ல தமிழ்.

குறும்பன் said...

என்ன கவிச்சி யா? ஓ கவிழ்ச்சியா மிக்க மகிழ்ச்சி இஃகிஃகி.

நீங்க சொன்னத தவிர எனக்கு வேற ழ்ச்சி ஏதும் தோனமாட்டிக்குது.
ஞெகிழ்ச்சி இப்பதான் தெரிஞ்சிக்கிட்டேன்.

நசரேயன் said...

யாரு அது ?

Starjan (ஸ்டார்ஜன்) said...

மகிழ்ச்சியாய் இருக்கு..

தாராபுரத்தான் said...

முறுகி முருகிய அவள்முகமோ கவிழ்ச்சி!!

மகிழ்ச்சி!

பத்மா said...

போட்டுத் தாக்கு

Thamira said...

அப்புறம் மகேஷ் கவிதை முன்பு உங்களுடயது நிற்பது கடினம்தான். :-)

Thamira said...

அதென்ன ஞெகிழ்ச்சி? ன்னு கேட்கலாம்னு வந்தேன். பாலாசி கேட்டுட்டாரு.!

Vidhoosh said...

எங்க பதிவுலக டி.வி.ஆர். வாழ்க..

வார்த்தை நீர்வீழ்ச்சி
பெருமகிழ்ச்சி பெருமகிழ்ச்சி
//எனக்கு இல்லை பேச்சி.... உங்களுக்குதான் அடுத்த ஆச்சி...///

பாரதி பரணி said...

கண் முன்னே வருது உங்கள் கவிதை காட்சி...படிப்பவரை மெய் மறக்க செய்யுதே உங்கள் வார்த்தை ஆட்சி...

பழமைபேசி said...

மக்கள் அனைவருக்கும் நன்றி! பிறழ்ந்து போய் பிறழ்ச்சி விடுபட்டுப் போனதைச் சுட்டிக் காட்டிய வெகுமூத்த பதிவருக்கும் நன்றியோ நன்றி!!

கயல் said...

அழகான கவிதை! எப்படிங்க முடியுது உங்களால?

க.பாலாசி said...

//'ச்சி’ சொற்கள் அல்ல இவை! ‘ழ்ச்சி’ சொற்கள்!!

அகழ்ச்சி = நெருங்க விடாமல் தடுத்தல்
ஞெகிழ்ச்சி = வீரியம் கொள்தல்//

ஓ... நன்றிங்க....

ராஜ நடராஜன் said...

//யாரு அது ?//

யாரது? ஒரு கவிதைக்கே வா:)