4/09/2010

இயற்கையின் பரிதவிப்பில்...

சமீபத்தில் நான் வாசித்துச் சிலிர்த்த எழுத்து என்றால், அது எழுத்தாளர் யாணன் அவர்களுடைய எழுத்துதான். அவர் எழுதிய சவ்வாது மலைத் தொடரை வாசிக்க வாசிக்க, எனது வாழ்க்கையின் பொற்காலம் என்று நான் கருதுகிற மலையும் மலைசார்ந்த என் பால்ய காலம் நினைவில் மோலோங்கியது.

அத்தொடரானது இருநாட்கள் எம்மை வெகுவாகப் பாதித்து, அந்த இரு நாட்களும் இடுகைகள் கூட இடவில்லை. மீண்டும் மீண்டும் என்னவெல்லாமோ எம்முள் வந்து சென்றது. இயற்கை அன்னையின் ஏகோபித்த அரவணைப்பில், பெற்ற அன்னையின் செழுமிய வளர்ப்பில், உற்றார் உறவினரின் கனிவில் வளர்ந்து திரிந்த நாட்கள் அவை. மலைவாழ் மக்கள் அள்ளி அள்ளித் தெளித்த அன்பில், திளைத்த பொழுதுகள் மீண்டும் வந்து நெஞ்சைக் கப்பிக் கொண்டது.

எம்மை அந்நினைவில் தோய்த்துத் தோய்த்து இனிமை கொண்டவன், அந்த இனிய எழுத்தாளரை அழைத்து எம்நினைவுகளைத் தட்டி எழுப்பியமைக்கான பாராட்டுகளைத் தெரிவித்துச் சிலாகிக்கவுமானேன்.

அதிலிருந்து விடுபட்ட ஓரிரு வாரத்திற்குள்ளாகவே, மீண்டும் என்னை நானே இழந்தவனானேன். பூசணிப் புருடையில் இருந்து அன்பாய்த் தேனைப் பகிர்ந்திடும் கரங்களும், மூங்கில் அரிசியில் காய்ச்சிய கஞ்சியைத் தொன்னையில் வார்க்கும் கரங்களும்... கொடிங்கியம், விளாமரத்துப் பட்டி, கரட்டுமடம், மொடக்குப்பட்டி, தளி, ஜல்லிபட்டி எனும் ஊர்களை நான் வலம் வந்த காலத்தில், முயல் மற்றும் கானகத்துப் பறவைகளின் ஊனை ஊட்டிய அம்மக்களை எளிதில் மறந்துவிட முடியுமா என்ன?!

ஆமணக்கு இலையில் ஆசை ஆசையாய் உருட்டி வைக்கும் திணை மற்றும் எள் உருண்டைகளும், வரகுக்களியும், சாமைச் சோறும் எம்முள் இன்னமும் குருதியில் கலந்தே இருக்கின்றன. அதனால்தானோ என்னவோ, நான் கண்டு மெய்மறந்த இக்காணொளியானது எம்முள் மீண்டும் பெரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தியே இருக்கிறது!
16 comments:

vasu balaji said...

அருமையான காணொளி. இவ்வளவு அமைதியான வாழ்க்கையை புடுங்கித்தானே அழிச்சாச்சு:(

ஈரோடு கதிர் said...

இனி இதெல்லாம் சேமிக்கப்பட்ட காணொளிகளில்தான் பார்க்க முடியுமே..

மனது பதறுகிறது... அந்த காணொளி காணும் போது...

Unknown said...

உங்கள் வலைதளத்தை மேலும் பிரபலப்படுத்த , மற்றும் அதிக வாசகர்களைப் பெற உங்கள் பதிவுகளை தமிழ்10 .காம் தளத்துடன் இணைத்துக் கொள்ளுங்கள் .

பதிவுகளை இணைக்க இங்கு செல்லவும் 

ஓட்டளிப்புப் பட்டை பெற இங்கு செல்லவும் 

நன்றி
தமிழ்10.காம் குழுவினர்

வில்லன் said...

எதோ புரிஞ்ச மாதிரியும் இருக்கு புரியாத மாதிரியும் இருக்கு... ஆனா நல்லா இருக்கு... எழுதுன எழுத்த சொன்னேன்னேன் (காமராஜர் ஸ்டைல்)

Unknown said...

A whole new world out there in the vast track of un-polluted tranguil. It exhilerate the senses, stimulate the mind and rejuvenate the body and soul.

நண்டு@நொரண்டு -ஈரோடு said...

ம் ...

நண்டு@நொரண்டு -ஈரோடு said...

ம்...நல்லாருக்குங்க .

கிரி said...

நல்ல பதிவு...நல்ல பகிர்வு பழமைபேசி!

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

ம்ம்.. நாம் நாகரிகம் என்ற பெயரில் அழித்துக்கொண்டிருக்கும் பாரம்பரியம் தான் எத்தனையோ??

நன்றிங்க அண்ணே

Anonymous said...

அண்ணே..
கண்ணொளி நல்லா இருக்கு.....மலைவாழ் மக்களின் வாழ்க்கை முறையை கண்முன்னாள் கொண்டு வந்ததற்கு நன்றிகள் பல....
இந்த மாதிரி அமைதியான வாழ்க்கை எத்தனை பேருக்கு கிடைக்கும்...

நல்லவன் கருப்பு..

க.பாலாசி said...

//முயல் மற்றும் கானகத்துப் பறவைகளின் ஊனை ஊட்டிய அம்மக்களை எளிதில் மறந்துவிட முடியுமா என்ன?!//

முடியாதுதான்...

கொணொளிகளை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிட்டவில்லை... முடிந்தால் மெயில் அனுப்புங்கள். மகிழ்வேன்.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

முழுசும் பார்த்து முடிக்கல.. ஒரு காலத்துல நம்ம முன்னோர்களும் இப்படித்தான் இருந்திருப்பாங்க இல்லையா! நாமளே நினைச்சாலும் இனி பின்னோக்கிப் போக முடியாது.. கூட்டங்கூட்டமாக மலைகளில் வாழும் இந்த மக்களிடமும் போட்டி, பொறாமை.. ம்ம்..

தாராபுரத்தான் said...

கைக்கு எட்டுன்னது வாய்க்கு எட்டுல்லை. படிக்க முடியது பார்க்க முடியலைங்க.ஏற்பாடு பண்ணுங்க.

பனித்துளி சங்கர் said...

//////////அத்தொடரானது இருநாட்கள் எம்மை வெகுவாகப் பாதித்து, அந்த இரு நாட்களும் இடுகைகள் கூட இடவில்லை. மீண்டும் மீண்டும் என்னவெல்லாமோ எம்முள் வந்து சென்றது. ///////அனுபவங்களை மிகவும் நேர்த்தியாக சொல்லி இருக்கிறீர்கள் . மிகவும் அருமை !

வாழ்த்துக்கள் !
பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் . மீண்டும் வருவேன்.

பாரதி பரணி said...

மிகவும் அருமையான பதிவு....கண்ணொளி என்னை வெகுவாக பாதித்தது.இதுபோன்ற காட்சிகளில் நானும் நேரில் இருந்து பார்க்க வேண்டும் என்ற தாக்கத்தை உண்டுப்பண்ணுவதாய் இருந்தது....
மனதை மயக்கும் காட்சிகளைக் கொடுத்தமைக்கு நன்றி...
இது போன்ற இடுகைகளை மிகையாய் எதிர்ப்பார்க்கும் உடுக்கை பாரதி.

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in