4/25/2010

அகநகை


மகிழ்ச்சி!மகிழ்ச்சி!!மகிழ்ச்சி!!!
மூத்த, வெகுமூத்த சீமானுள் தியாகவுள்ளமது நிறைந்த கதைகள் புதைந்து கிடப்பது காணின் மகிழ்ச்சி!மகிழ்ச்சி!!மகிழ்ச்சி!!!

மகிழ்ச்சி!மகிழ்ச்சி!!மகிழ்ச்சி!!!
தேனிலவிலிருந்து கூட, இட்ட இடுகைக்கு வாசகர் பரிந்துரைக்கான ஒப்பமுக்கு துலங்குவதில் மகிழ்ச்சி! மகிழ்ச்சி!!மகிழ்ச்சி!!!

மகிழ்ச்சி!மகிழ்ச்சி!!மகிழ்ச்சி!!!
தம்பியவன் புத்தம்புதுக் கன்றுடன் உறவாட அணவுதலாய்க் கூடியிருப்பன் என நினைந்து நினைந்து, மகிழ்ச்சி! மகிழ்ச்சி!!மகிழ்ச்சி!!!

மகிழ்ச்சி!மகிழ்ச்சி!!மகிழ்ச்சி!!!
கொங்கர் மண்ணில், மேல்கரைப் பூந்துறை நாட்டுக்கும் சிங்காரப் பட்டணத்துக்குமென ஊசல்மணியாய் ஆடிக்கிடந்தவர், ஒரு நிலையில் நின்று இடுகைகள் இடும் காலம் மீளப்போவது அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி!மகிழ்ச்சி!!மகிழ்ச்சி!!!

மகிழ்ச்சி!மகிழ்ச்சி!!மகிழ்ச்சி!!!
குடுகுடுப்பை ஆட்டி ஆட்டி வீதியிலேயே கிடந்தவர், ஒற்றை அருநெல்லி நாத்தினை ஊன்றி தோட்டக்காரனாய் ஆகி வீடு புகுந்ததில் மகிழ்ச்சி!மகிழ்ச்சி!!மகிழ்ச்சி!!!

மகிழ்ச்சி!மகிழ்ச்சி!!மகிழ்ச்சி!!!
நொம்பலத்தில் ஆழ்ந்து போய்க் கிடந்த இராச தில்லையம்பலவர், வலையில் ஓடியாடித் திரிவது கண்டு மகிழ்ச்சி!மகிழ்ச்சி!!மகிழ்ச்சி!!!

மகிழ்ச்சி!மகிழ்ச்சி!!மகிழ்ச்சி!!!
புகையிரதத்துக்கு கணக்கு வழக்குத் தொடுப்பவர், என்றாகிலும் ஒருநாள் பெற்ற பிள்ளையைப் பார்க்க அமெரிக்க தேசத்து மண்ணை மிதித்துத்தானே ஆகவேண்டும் என்பதில் மகிழ்ச்சி!மகிழ்ச்சி!!மகிழ்ச்சி!!!

மகிழ்ச்சி!மகிழ்ச்சி!!மகிழ்ச்சி!!!
பதிவுலக நக்கீரன், எதையும் அணு அணுவாய்ப் பகிர்ந்து, சல்லி சல்லியாய் நேர்முகம் கொண்டு வகுந்தெடுத்து வேதாளத்துக்கே வேதாளர் பாலிபாய்நாதன் அச்சுமுகம் தெரிந்துகொண்டதில் மகிழ்ச்சி!மகிழ்ச்சி!!மகிழ்ச்சி!!!

மகிழ்ச்சி!மகிழ்ச்சி!!மகிழ்ச்சி!!!
இரயிலடியில் வெள்ளையக்காவுடன் இச்சுஇச்சு விளையாடும் கருப்புத்தங்கம், தென்பாண்டிச் சிங்கமதை நேரில் காணப்போவது குறித்து எண்ணுகையில் மகிழ்ச்சி!மகிழ்ச்சி!!மகிழ்ச்சி!!!

மகிழ்ச்சி!மகிழ்ச்சி!!மகிழ்ச்சி!!!
பழையதே ஆயினும் நல்லபாங்குடன் ஊன்சோறு போட்டு, திருட்டுச் சோழனை தின்னுச்சோழனாக்கியவர் வடகரோலைனா வந்து போவதில் மகிழ்ச்சி!மகிழ்ச்சி!!மகிழ்ச்சி!!!

மகிழ்ச்சி!மகிழ்ச்சி!!மகிழ்ச்சி!!!
சிங்கப்பூர்க் கைலாயர் திடீர்க் காட்சியளித்ததில் மகிழ்ச்சி!மகிழ்ச்சி!!மகிழ்ச்சி!!!

மகிழ்ச்சி!மகிழ்ச்சி!!மகிழ்ச்சி!!!
இராயிக் களிக்கு ஒட்டுவாணமா இரக்கிரி கடைந்து தின்பதில் மகிழ்ச்சி!மகிழ்ச்சி!!மகிழ்ச்சி!!!

மகிழ்ச்சி!மகிழ்ச்சி!!மகிழ்ச்சி!!!
ஊர்க் கிணற்றடியில் அத்தை மகள் கையைத் தொடுகையில் மகிழ்ச்சி!மகிழ்ச்சி!!மகிழ்ச்சி!!!

மகிழ்ச்சி!மகிழ்ச்சி!!மகிழ்ச்சி!!!
சேற்றுழவில் மேயும் கொக்குகளைக் காண்பதில் மகிழ்ச்சி!மகிழ்ச்சி!!மகிழ்ச்சி!!!

மகிழ்ச்சி!மகிழ்ச்சி!!மகிழ்ச்சி!!!
மனதிற்த் தோன்றுவன, தெளிதமிழில் எழுதிப் பார்க்கையில் மகிழ்ச்சி!மகிழ்ச்சி!!மகிழ்ச்சி!!!

மகிழ்ச்சி!மகிழ்ச்சி!!மகிழ்ச்சி!!!
இதை நீங்கள் வாசிக்குங்கால், அதுவும் மகிழ்ச்சி!மகிழ்ச்சி!!மகிழ்ச்சி!!!


22 comments:

நேசமித்ரன் said...

மகிழ்ச்சி!மகிழ்ச்சி!!மகிழ்ச்சி!!!

:)

வாழ்த்துகள் பொங்கிப் பெருக தங்கி நிலைக்க

vasu balaji said...

/தேனிலவிலிருந்து கூட,/

இப்புடி சொல்லிட்டு திரியறாரா இவரு.. வரட்டும் யூத்து.. வச்சிக்கறேன் கச்சேரி..

/ஒரு நிலையில் நின்று இடுகைகள் இடும் காலம் மீளப்போவது அறிந்து கொண்டதில் /

வில்லங்கமா இடுகை போடுவேன் உங்க பதிவுலன்னு கூட மெரட்டிட்டேன்..சட்டபண்ணாதானே:))

/நொம்பலத்தில் ஆழ்ந்து போய்க் கிடந்த இராச தில்லையம்பலவர், வலையில் ஓடியாடித் திரிவது கண்டு /

ஆமாங்க. வைகுண்ட ஏகாதசிக்கு ரெண்டு படம் கணக்கால்ல நடக்குது:))

/இரயிலடியில் வெள்ளையக்காவுடன் இச்சுஇச்சு விளையாடும் கருப்புத்தங்கம், தென்பாண்டிச் சிங்கமதை நேரில் /

ஒரு வழியா வீசியாச்சா:)) சொல்லவேயில்ல

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சிதான்:))

இராகவன் நைஜிரியா said...

மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டதற்கு... மகிழ்ச்சி.......மகிழ்ச்சி.....மகிழ்ச்சி.

// புகையிரதத்துக்கு கணக்கு வழக்குத் தொடுப்பவர், என்றாகிலும் ஒருநாள் பெற்ற பிள்ளையைப் பார்க்க அமெரிக்க தேசத்து மண்ணை மிதித்துத்தானே ஆகவேண்டும் என்பதில் மகிழ்ச்சி!மகிழ்ச்சி!!மகிழ்ச்சி!!! //

அப்படியா... மிக்க மகிழ்ச்சி.

Mahesh said...

//சிங்கப்பூர்க் கைலாயர்//

அவ்வ்வ்.......

நண்டு@நொரண்டு -ஈரோடு said...

மகிழ்ச்சி

பாரதி பரணி said...

மகிழ்ச்சி...உங்கள் பதிவுகளைப் படிப்பதுவுமே மகழ்ச்சி...மகழ்ச்சி...மகழ்ச்சி... :) :)

பத்மா said...

காலைல இத படிச்சுட்டு ஆபீஸ் கிளம்பறேன் .மனசுல மகிழ்ச்சி மகிழ்ச்சின்னு ஒரு பின்னணி இசை ஓடுது .நன்றி

ஈரோடு கதிர் said...

//மூத்த, வெகுமூத்த//
யூயூயூயூயூயூத்த்த்த்து!!!!!!!!!!!!


//தேனிலவிலிருந்து//
மாப்பு... உங்களுக்கே அடுக்குமா இது

//ஒப்பமுக்கு துலங்குவதில் மகிழ்ச்சி! //
அப்படிப்போடு...

ஈரோடு கதிர் said...

//புகையிரதத்துக்கு கணக்கு வழக்குத் தொடுப்பவர், //

க்க்கும்... ரதம் எங்கே புகையுது... இவருகீது புகைச்சாத்தான் உண்டு

பிரபாகர் said...

மகிழ்ச்சி!மகிழ்ச்சி!!மகிழ்ச்சி!!!

பார்த்ததை, கேட்டதை பதிவிசாய் பகிர்தலில் உள்ளுள் இதமாய் உணர்வதில் மகிழ்ச்சி!மகிழ்ச்சி!!மகிழ்ச்சி!!!

பிரபாகர்...

க.பாலாசி said...

சந்தோசம்... மகிழ்ச்சி....

Unknown said...

செந்தமிழ்த் தேனாறு அமெரிக்காவில் துவங்கி
அகிலமெங்கும் தண்தமிழ் மாந்தரின்
கண்வழி நுழைந்து கருத்தை
இனிக்கச் செய்வதால் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி

பனித்துளி சங்கர் said...

மகிழ்ச்சி!மகிழ்ச்சி!!மகிழ்ச்சி!!!
இத்தனை தகவல்களை ஒன்றாய் தொகுத்து தந்தமைக்கு மகிழ்ச்சி!மகிழ்ச்சி!!மகிழ்ச்சி!!!

தொடருங்கள் மீண்டும் வருவேன் .

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//மகிழ்ச்சி!மகிழ்ச்சி!!மகிழ்ச்சி!!!
தம்பியவன் புத்தம்புதுக் கன்றுடன் உறவாட அணவுதலாய்க் கூடியிருப்பன் என நினைந்து நினைந்து, மகிழ்ச்சி! மகிழ்ச்சி!!மகிழ்ச்சி!!!
//

மிக்க மகிழ்ச்சி அண்ணா.. வாழ்த்துகளுக்கு..

என் மகனை விரைவில் அழைத்து வருவதாக உள்ளேன்.

இத்தனை நண்பர்களை வாழ்த்தியமைக்கு அளவிலா மகிழ்ச்சி.

நசரேயன் said...

//மகிழ்ச்சி!மகிழ்ச்சி!!மகிழ்ச்சி!!!
இரயிலடியில் வெள்ளையக்காவுடன் இச்சுஇச்சு விளையாடும் கருப்புத்தங்கம், தென்பாண்டிச் சிங்கமதை நேரில் காணப்போவது குறித்து எண்ணுகையில் மகிழ்ச்சி!மகிழ்ச்சி!!மகிழ்ச்சி!!!//

இந்தாளு ரெம்ப தெரிஞ்சவரு மாதிரியே இருக்காரு

பழமைபேசி said...

ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தவங்களுக்கும், மத்தவங்களுக்கும் நன்றியோ நன்றி!

தாராபுரத்தான் said...

ரக்கிரி, ராயிகழி..காம்பினேசன் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.

அப்பாவி முரு said...

//Mahesh said...
//சிங்கப்பூர்க் கைலாயர்//

அவ்வ்வ்.......//

அப்ப. இது நானில்லையா??

அவ்வ்வ்வ்வ்

Unknown said...

//தேனிலவிலிருந்து கூட, //

இப்படியெல்லாம் கூடவா? தேனிலவுக்குக் கூடப் போன அம்மணிக்கு இது தெரியுமா?


அது சரி.. அந்த மூத்த .. வெகுமூத்த பதிவர் யாரூ? எந்த பதிவர் சந்திப்பில் பிடிச்சீங்க? நம்ம ப்ளோரிடா தாத்தாவைத் தானே சொல்றீங்க?

Unknown said...

//ஊர்க் கிணற்றடியில் அத்தை மகள் கையைத் தொடுகையில் மகிழ்ச்சி!//

இன்னுமா?

அவ்வ்வ்வ்வ்வ்வ்..............

பழமைபேசி said...

//அது சரி.. அந்த மூத்த .. வெகுமூத்த பதிவர் யாரூ? எந்த பதிவர் சந்திப்பில் பிடிச்சீங்க? நம்ம ப்ளோரிடா தாத்தாவைத் தானே சொல்றீங்க?
//

கதிரவனைக் கைகளால் மறைக்க முடியுமா?

மாதேவி said...

"மகிழ்ச்சி".

எத்தனை என எண்ணிச் சொல்பவருக்கு பரிசு உண்டா? :)))