4/22/2010

மும்மாயை!

சைவ சித்தாந்தத்துல பார்த்தீங்கன்னா, மாயைங்ற பொய்த் தோற்றத்துக்கு பெரிய விளக்கம் கொடுத்து, அதை மும்மாயைன்னு மூன்று விதமாப் பிரிச்சி வெச்சிருப்பாய்ங்க. தூமாயம், தூயாமாயம், பகுதிமாயம்ன்னு மூனு. அதாவது, தூய்மையான பொய்த்தோற்றம், தூய்மையற்ற பொய்த் தோற்றம், பகுதி நிலையிலான பொய்த்தோற்றம்!

தமிழினச் சூழலுக்கும் இச்சொற்கள் பொருந்தும்ங்றது என்னோட எண்ணம். இது ஒரு சுய ஆய்வுதானே ஒழிய, யாரையும் குறைபட்டுக் கொண்டு எழுதுறது கிடையாதுங்க. நவீனத்தை நோக்கி வேகமாப் போய்ட்டு இருக்கிற இந்த சூழல்ல, எல்லாருக்குமே தனிமனிதத் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டிய கட்டாய நிலை இருக்குதான்.

அதற்காக, ஒவ்வொரு நாளும் மனிதத்தை எதோ ஒரு விதத்துல கொன்னுட்டுதான் இருக்கோம். குறிப்பா, வளர்ந்து வரும் நாடுகள்ல இது வரம்பு மீறிப் போய்ட்டு இருக்கு. பெற்ற தாய் தந்தையரைக் கூட அல்லாட விட்டுட்டு, தன்னோட அன்றைய மகிழ்ச்சியே பிரதானம்னு போய்ட்டு இருக்கிற ஒரு சூழ்நிலை நாட்டுல!

இந்த சூழ்நிலையில, யாரொருவரும் அவராகவே இருக்க முடியுறதில்லை. காலநேரத்துக்கு ஏத்தபடி, நல்லவனா ஒரு பொய்த்தோற்றம்! கெட்டவனா ஒரு பொய்த்தோற்றம்!! அதுவும் இதுவுமா பட்டும்படாம ஒரு பொய்த்தோற்றம்....

ஆக, தமிழனோட இன்றைய சூழ்நிலைக்கு யார் காரணம்? ஒவ்வொரு தமிழனும்தான் காரணம். தமிழை நேசிக்கிறது கிடையாது; பண்பாடுன்னா அது என்ன விலை? அவன் அவனாவே இருக்கிறபட்சத்துல, அவன் ஒரு பொழைக்கத் தெரியாதவன். ஓங்கிப் பேசி முடிக்கிறவன் திறமைசாலி.

இந்த பின்னணியில, ஒவ்வொரு தமிழனும் சுய ஆய்வுக்கு உட்படுத்திகிறதுதான் காலத்தின் கட்டாயம். அதை விட்டுட்டு, மாயங்களோட மாயங்களா நாமும் இருந்து அடுத்தவனை வசைபாடிட்டு இருக்கிறதுல ஒன்னும் ஆகப் போறது கிடையாது. வலையுலக சமீப நிகழ்வுகளுக்கு முன்னமே நானும் என்னோட வருத்தத்தைப் பகிர்ந்துகிட்டேன்.... எப்படி? மக்கள் இன உணர்வு கொள்ளலையேன்னுதான்!

“மொழி ஒரு சமுதாயச் சாதனம்! மதத்தைக் காப்பது எளிது; மொழியைக் காப்பது எளிதன்று. வாழையடி வாழையெனக் குடும்பத்தில் நடைமுறையில் இருக்கும் பழக்கம், சடங்குகள் முதலானவை சமயத்தைக் காப்பாற்றப் போதுமானவை. ஆனால் மொழி கற்கப்பட வேண்டிய ஒன்று. கற்றால் மட்டுமே காப்பாற்றக் கூடிய ஒன்று!”

வேர்கள் தமிழில்! விழுதுகள் உலகெங்கும்!!

சென்ற ஆண்டு வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை விழாவிற்கு, நுழைவுச் சீட்டு வாங்கத் தவறியதால் நான்பட்ட அல்லல் யாதென நீங்கள் அறிவீர்கள். இந்த ஆண்டும் அதே நிலைதான் வரப் போகிறது. ஏற்கனவே பெருவாரியான நுழைவுச் சீட்டுகளுக்கான பதிவுகள் ஏற்கப்பட்டு விட்டன. எனவே துரிதகதியில் நண்பர்கள் யாவரும் பதிந்து, விழாவில் கலந்து கொள்வீர்களாக!


“செந்தமிழால் சேர்ந்திணைவோம்!
செயல்பட்டே இனம் காப்போம்!!”

21 comments:

நண்டு@நொரண்டு -ஈரோடு said...

மொழியைக் காப்பது அனைத்தையும் காப்பதாகும் .

Unknown said...

நச்சுனு ஒரு பதிவு. எல்லோரும் இடத்துக்கு தகுந்த மாதிரி மும்மாயை என்ற முகமூடியை மாட்டிக் கொண்டுதான் இருக்கிறோம்.
நாந்தான் மொத துண்டா?...

தாராபுரத்தான் said...

“மொழி ஒரு சமுதாயச் சாதனம்! மதத்தைக் காப்பது எளிது; மொழியைக் காப்பது எளிதன்று. வாழையடி வாழையெனக் குடும்பத்தில் நடைமுறையில் இருக்கும் பழக்கம், சடங்குகள் முதலானவை சமயத்தைக் காப்பாற்றப் போதுமானவை. ஆனால் மொழி கற்கப்பட வேண்டிய ஒன்று. கற்றால் மட்டுமே காப்பாற்றக் கூடிய ஒன்று!”
உண்மை.

Sivamjothi said...

You are right.. good job done by Project Madurai. If language is lost
we loose many knowledge from it.

பிரபாகர் said...

மொழி கற்கப்படவேண்டிய ஒன்று என்பதில் சிறிதும் ஐயமில்லை. கண்டிப்பாய் அதிலுள்ள சிறப்புகளைக் கற்று பேணுதல் வேண்டும்!

பிரபாகர்...

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

ரொம்ப அருமையாச் சொல்லியிருக்கீங்க.. மாயை, மொழி எல்லாமே அருமை..

நான் இப்ப வரைக்கும் எத்தனமாத் தான் இருந்தேன்.. அப்புறமா வாங்கிக்கலாம்ன்னு.. இந்த வாரயிறுதியில வாங்கிடறேன்.. நன்றி

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

மொழியைக் காப்பது மிகவும் தேவை.. அது ஒவ்வொருவரில் இருந்தும் ஆரம்பிக்க வேண்டும்.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

இன்று வட இந்திய மொழிகள் பலவும் இருக்குமிடமில்லாமல் அழிந்து வருவது கண் கூடாகப் பார்க்க முடிகிறது.

அந்நிலை.. தமிழிற்கு வராமல் காக்க வேண்டும். அதற்கு இணையச் சூழல் உதவுகிறதென்றால் அது மிகையில்லை.

கண்ணகி said...

தன்னோட அன்றைய மகிழ்ச்சியே பிரதானம்னு போய்ட்டு இருக்கிற ஒரு சூழ்நிலை நாட்டுல!

இந்த சூழ்நிலையில, யாரொருவரும் அவராகவே இருக்க முடியுறதில்லை. காலநேரத்துக்கு ஏத்தபடி, நல்லவனா ஒரு பொய்த்தோற்றம்! கெட்டவனா ஒரு பொய்த்தோற்றம்!! அதுவும் இதுவுமா பட்டும்படாம ஒரு பொய்த்தோற்றம்...

ம்.ம்...நாம்கூட பலசமய்ங்களில் முகமூடி போட்டுக்கொள்கிறோம்..

ஈரோடு கதிர் said...

மாயங்களுக்குள்ளே மூழ்கித் திழைக்க வெகுவாக பயிற்சியளிக்கப்பட்டுத்தானே கிடக்கிறோம்

vasu balaji said...

/வாழையடி வாழையெனக் குடும்பத்தில் நடைமுறையில் இருக்கும் பழக்கம், சடங்குகள் முதலானவை சமயத்தைக் காப்பாற்றப் போதுமானவை. ஆனால் மொழி கற்கப்பட வேண்டிய ஒன்று. கற்றால் மட்டுமே காப்பாற்றக் கூடிய ஒன்று!” /

இது சரி.

VELU.G said...

மிகவும் நல்ல விஷயம்

Thamira said...

அழகாய் சொல்லியுள்ளீர்கள்.

அன்புடன் அருணா said...

பூங்கொத்து!

க.பாலாசி said...

//ஆனால் மொழி கற்கப்பட வேண்டிய ஒன்று. கற்றால் மட்டுமே காப்பாற்றக் கூடிய ஒன்று!//

மிகச்சரி.... கற்றுக்கொண்டே இருக்கிறேன்.....

ராஜ நடராஜன் said...

மொழி அதன் இயல்பிற்கு தன்னை தக்க வைத்துக் கொண்டே இருந்தது.மேடை அலங்காரங்கள் பொய்த்துப்போனவை,இப்போதைய இடைச்செருகல்களும் முக்கியமாக சினிமா,உடகங்கள்,தொலைக்காட்சிகள் தமது பங்கை அளிக்காததும் (முக்கியமாக சன்,கலைஞர் என்ற இரு வியாபார நிறுவனங்கள்)மாயகளின் முக்கியமான காரணிகள்.

அனைத்து மதத்தினரும் சாம்பிராணி,மெழுகுவர்த்தி,ஊதுபத்தி கொழுத்தி வளர்க்கிறார்கள்.அதன் காரணம் கொண்டே அது வளர்கிறதே ஒழிய அதுவாக வளர்வதில்லை.

தமிழ் வளர்க்கப்படுவதில்லை.ஏதோ இணையத்தின் கருணையால் தன் முகம் காட்டி திரிகிறது.

ராஜ நடராஜன் said...

உங்களுக்கும் கூட தணிக்கை அதிகாரி பதவி கொடுத்து விட்டார்களா வலையம் சுற்றும் எலிகள்:(

BaMa said...

/// கற்றால் மட்டுமே காப்பாற்றக் கூடிய ஒன்று!///
மிகவும் அருமையான பதிவு. என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெளிவாகச் சொல்லியுள்ளீர்கள்!

பாரதி பரணி said...

//பெற்ற தாய் தந்தையரைக் கூட அல்லாட விட்டுட்டு, தன்னோட அன்றைய மகிழ்ச்சியே பிரதானம்னு போய்ட்டு இருக்கிற ஒரு சூழ்நிலை நாட்டுல!//

உண்மை வரிகள்...நானும் என் கணவரும் இங்கு(US) வந்தபோது நான் கலங்கியது ஞாபகம் வருகிறது.

Naanjil Peter said...

ஐந்தறிவின் ஒரு பகுதியே மும்மாயை. பொய்மையை மெய்மை படுத்துவதற்கு நாம் தயங்குவது இல்லை. தன்னலமே எப்போதும் முன்னிலையில் உள்ளது.
--------------------

மொழியே ஒரு இனத்தில் அடையாளம். மொழி அழிந்தால் அல்லது அழிக்கப் பட்டால் ஒரு இனம் சிதைந்து விடும். அடையாளங்களை இழந்துவிட்டு, அதை தேடி அமெரிக்காவில் அலைந்து கொண்டிருக்கிறோம்.

Prasanna Rajan said...

சுய ஆய்வுன்றதை விட அகத்தாய்வுனு சொல்றது சரியா இருக்கும். இன்னைக்கு இருக்கிற நெலமைக்கு எல்லோரும் அவங்களோட சுய அடையாளங்களை தொலைக்க வேண்டியதா தான் இருக்கு. அதுக்கு என்ன பண்றதுங்க. குறைந்த பட்சம் நமக்கு நாம உண்மையா இருக்கிறது தான் அந்த குற்ற உணர்வுலருந்து வெளிய வரக்கூடிய வழி...