4/07/2010

பள்ளயம் 04/07/2010

வணக்கம்! பள்ள(ளை)யம் தொடரில், மீண்டும் உங்களை எல்லாம் சந்திப்பதில் பெருமகிழ்வு கொள்கிறேன். பள்ளயம் என்பதின் பொருள் அறிய விழைவோர், எமது இந்த முந்தைய இடுகையினைப் பார்த்துத் தெரிந்து கொள்ளவும்.

----------------------------

அமெரிக்காவுல பொருளாதார நிலைமை முன்னேறின மாதிரி ஒரு தோற்றம் ஏற்பட்டு இருக்கு. அது நிதர்சனமா? அல்லது மாயத் தோற்றமான்னு தெரியலை! நான் இருக்கும் சார்லட் மற்றும் அண்டி இருக்குற பகுதியில வேலையற்றோர் எண்ணிக்கை உயர்ந்து கிட்டத்தட்ட 12% ஆகியிருக்காம். இதுல வேற, வேலையற்றோர் நல உதவி காலாவதி ஆகிப் போச்சுதாம் நிறையப் பேருக்கு.

பங்குச் சந்தை நிலவரம் பொருளாதாரததைப் பிரதிபலிக்கும் குறியீட்டுமானியா? இந்தியாவுல பண வீக்கம், இங்க அமெரிக்க வெள்ளியோட மதிப்போ கீழ்வரம்... ஒன்னும் புரியலை போங்க!

----------------------------

நாம அடிக்கடி போறது வர்றது எல்லாமே U.S.Airwaysலதானுங்க. நெம்ப நாளாவே அது குத்துசுரும், குலைவுசுருமாத்தான் இழுத்திட்டு இருக்கு. பொசுக்குன்னு பொழிஞ்சு போயிட்டேன்னு மஞ்சக் கடுதாசி குடுத்தான்... போச்சு, என்னோட பேர்ல இருக்குற இலட்சக்கணக்கான மைலுக கோவிந்தா ஆயிடும்... அப்பப்ப இது நல்லபடியா இருக்கோணுமின்னு நினைச்சுக்கிறது உண்டு.

U.S.Airwaysம் United Airlinesம் ஒன்னுகூடறதுக்கு மறுபடியும் பேச்சுவார்த்தை நடக்காம். யெப்பா, சாமி... கொஞ்சம் ஒன்னுகூடுங்க... நிறைய வேலை வாய்ப்புகளை உண்டாக்குங்க... ஒன்னுகூடுறது உங்களுக்கும் நல்லது... உங்களுக்கு வேலை பாக்குறவுங்களுக்கும் நல்லது... எனக்கும் நல்லது!

----------------------------

சீன அரசாங்கம், அந்த நாட்டு தொலைக்காட்சி, வானொலிகள்ல ஆங்கிலப் பதங்களையும் சுருக்காங்களையும் பாவிக்கத் தடை விதிச்சு இருக்காம். அங்க செயல்பட்டுட்டு இருக்குற தமிழ் வானொலி மற்றும் இன்னபிற ஊடகங்களுக்கும் இது பொருந்துமாம். ஏம்ப்பா, சீனாவுலயே தமிழ் மொழியில ஆங்கிலக் கலப்பு இல்லன்னு ஆகுறப்ப, தமிழ்நாட்டுல? இஃகிஃகி!!

----------------------------

மக்களே, வர்ற 04/11 ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் நான்கு மணிக்கு ச்சட்டனூகா, டென்னசியில என்ன? பதிவர் சந்திப்புதான்! இஃகிஃகி!! அதனால நேஷ்வில், கூடவே அலபாமா ப்ரம்மிங்காம் பக்கத்துல இருக்குற மக்கள் எல்லாம் வந்து கலந்துக்குங்கப்பு... இடம்: Marriott Residence Inn, 215 Chestnut Street, Chattanooga, TN. மேலதிகத் தகவலுக்கு எனக்கு ஒரு மின்னஞ்சலைத் தட்டுங்க!!

----------------------------



----------------------------
(எழுத்து)அறிவுள்ளவன் எழுத்தாளன்!
அறிவும் திறமும் கொண்டவன் படைப்பாளன்!!
அறிவுடன் கூடிய திறமும், ஆளுமையும் கொண்டவன் முன்னோடி!
அறிவு, திறம், அறமுடன் கூடிய ஆளுமையும் கொண்டவன் தலைவன்!!


இது யார் சொன்னது? உடனே, பெரிய அளவுல யோசிச்சு இருப்பீங்களே? அரிஸ்டாட்டில், சேக்சுபியர் அளவுக்கு... இப்படி யாராவது பெரிய தலையச் சொன்னா நம்புவாங்க... நானே சொந்தமா சிந்திச்சு சொன்னதுன்னா, நம்பவா போறாங்க?! இஃகி!

24 comments:

தாராபுரத்தான் said...

பல் சுவை விருந்து..

பிரபாகர் said...

எழுத்தாளன், படைப்பாளன், முன்னோடி, தலைவன்... எங்கள் அண்ணன் வாழ்க, வாழ்க!....

பிரபாகர்...

dondu(#11168674346665545885) said...

யார் சார் அது வீடியோவில் காளையை (bull) பசு (cow) என குறிப்பிடுவது? கொஞ்சம் அசப்பில் பார்த்தால் பொய்சாட்சி படத்தில் வரும் பாக்கியராஜ் மாதிரி இருக்கிறார்.

அவர்தானே அப்படத்தில் பசுவையும் காளையுடன் கூட ஏரில் பூட்டி “கடவுள் என்னும் விவசாயி கண்டெடுத்த தொழிலாளி விவசாயீ விவசாயீ” என பாடிக்கொண்டே ஆனந்தமாக வயலை உழுதார்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

பழமைபேசி said...

@@தாராபுரத்தான் நன்றிங்ணா!

@@பிரபாகர் ஆகா, பிரபாகர் அண்ணே... ஏன்? ஏன்?? இஃகிஃகி!!

@@ dondu(#11168674346665545885)

வணக்கம் ஐயா! அவர் ஒரு நகைச்சுவை வலைஞர்... நகைச்சுவையாகப் பேசி நடித்து குறும்படங்களை வெளியிட்டு வருகிறார்...

http://www.youtube.com/user/wilbursargunaraj

குறும்பன் said...

//நான் இருக்கும் சார்லட் மற்றும் அண்டி இருக்குற பகுதியில வேலையற்றோர் எண்ணிக்கை உயர்ந்து கிட்டத்தட்ட 12% ஆகியிருக்காம். // ஆ.. அதிகம் பாதிக்கப்படாதது சார்லட் பகுதின்னு நினைச்சேனே..

இந்த கோடை காலத்தில் 1 காலன் எண்ணெய் $4 க்கு போகுமுன்னு சொல்லிக்கறாங்க கேள்விப்பட்டீங்களா தலைவா.

நண்டு@நொரண்டு -ஈரோடு said...

//சீனாவுலயே தமிழ் மொழியில ஆங்கிலக் கலப்பு இல்லன்னு ஆகுறப்ப, தமிழ்நாட்டுல? இஃகிஃகி!! //
அப்படியிருக்கு இங்கு நிலம...என்ன செய்ய...மானாடு வேண்டாமா ...

cow வை bullockcard ல் பொதுவாக பயன்படுத்தமாட்டார்கள் நண்பா .
ஓ...நகை சுவையா...

Anonymous said...

பள்ளயம் நல்ல இருக்கு...

//பங்குச் சந்தை நிலவரம் பொருளாதாரததைப் பிரதிபலிக்கும் குறியீட்டுமானியா? இந்தியாவுல பண வீக்கம், இங்க அமெரிக்க வெள்ளியோட மதிப்போ கீழ்வரம்... ஒன்னும் புரியலை போங்க//

இவனுக பண்ணுற பிராடுத்தனம் , எங்கே போய் முட்டும்ன்னு தெரியல.....

//நானே சொந்தமா சிந்திச்சு சொன்னதுன்னா, நம்பவா போறாங்க?!// -- நம்பிட்டேன்...நம்பிட்டேன்...நம்பிட்டேன்...

அரசூரான் said...

பழமை, உடனே மைல யூஸ் பண்ணி (ஒரு இந்திய பயணம் போட வேண்டியதுதான்) ஃபைல குளோஸ் பண்ணுங்க. நீங்களாவது மாட்டுவண்டியில் பாறை வண்டி, டயர் வண்டி என்று வண்டிகளின் வகைகள் பற்றி ஒரு பதிவு போடலாமான்னு பாருங்க.

பனித்துளி சங்கர் said...

இதுநாள் வரை அறியாத பல தகவல்களை அறிய தந்தமைக்கு நன்றிகள் !
தொடருங்கள் ., மீண்டும் வருவேன்.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

"என்னங்கண்ணே.. நவம்பர் 4ம் தேதி பதிவர் சந்திப்பிற்கு இப்பவே சொல்றீங்க"னு நினைச்சேன். அப்புறம் தெளிவாயிட்டேன். ஹிஹி..

ஒவ்வொரு நாட்டோட பொருளாதாரமும் ஒவ்வொரு மாதிரி இருக்கு. இதையெல்லாம் விவாதிச்சா நல்லா இருக்கும்..

Paleo God said...

பள்ளயம் அசத்தல் நிரந்தர தலைவரே.:)

--
மாட்டுவண்டி அறிமுகம் அடேங்கப்பா.:) ரசனையான அந்த நண்பருக்கு வாழ்த்துகள்..:)

--
சப்போஸ் மைல்ஸ் கிடைக்காதுன்னு வைங்க, அப்படியே ஒபாமாக்கு உங்க உலக சமாதான பயணத்துக்கு என்னாலான சிறு அன்பளிப்புன்னு குறிப்புடன் அனுப்பிடுங்க. :)

--
அப்புறம் சீனா செய்தி ஆச்சர்யமா இருக்குங்க. ஆங்கில மொழி அறிவுக்காக படாத பாடு பட்டதா கேள்விப்பட்டேன்..!

Unknown said...

//நாம அடிக்கடி போறது வர்றது எல்லாமே U.S.Airwaysலதானுங்க//

உங்களுக்கு ரொம்ப தைரியம் தாண்ணே..

//அறிவுள்ளவன் எழுத்தாளன்!
அறிவும் திறமும் கொண்டவன் படைப்பாளன்!!
அறிவுடன் கூடிய திறமும், ஆளுமையும் கொண்டவன் முன்னோடி!
அறிவு, திறம், அறமுடன் கூடிய ஆளுமையும் கொண்டவன் தலைவன்!!
//

ஐ, அப்ப நான் தலைவனா?

க.பாலாசி said...

//சீனாவுலயே தமிழ் மொழியில ஆங்கிலக் கலப்பு இல்லன்னு ஆகுறப்ப, தமிழ்நாட்டுல ?? //

இன்னொரு கேள்விக்குறி என்னோடது....

கடைசிக்கு பிரபாகர் அண்ணன வழிமொழிஞ்சிக்குறேன்...

//அரசூரான் said...
நீங்களாவது மாட்டுவண்டியில் பாறை வண்டி, டயர் வண்டி என்று வண்டிகளின் வகைகள் பற்றி ஒரு பதிவு போடலாமான்னு பாருங்க.//

கூண்டு வண்டிய விட்டுட்டீங்களே...

vasu balaji said...

பண வீக்கமா? என்னத்தச் செய்யன்னு தெரியாம மாலைல்லா போட்டு வெளாண்டுட்டிருக்கோம். கேள்வி கேட்டா அதுக்குமொரு மாலைன்னு வீம்பா! ஒலகத்துக் காரெல்லாமும் ஓட்டிட்டுதான் இருக்கு இங்க. ஆனாலும் ஓட்ட ஒடசல் பஸ்ஸுல நிக்க இடமில்லாமத்தான் போகுது.

வெள்ளக்காரனுக்காவது ரோசம் வந்து எங்க மொழிய இப்புடி கேவலமா பேசுறீங்களேன்னு தடை போட்டாத்தான் உண்டு:))

Unknown said...

கடுமையான மொழில எழுதி தல சுத்த வைக்கறீங்க

நேசமித்ரன் said...

//வெள்ளக்காரனுக்காவது ரோசம் வந்து எங்க மொழிய இப்புடி கேவலமா பேசுறீங்களேன்னு தடை போட்டாத்தான் உண்டு:))//

நச்!!!

வழிமொழிகிறேன்

Unknown said...

//.. சீனாவுலயே தமிழ் மொழியில ஆங்கிலக் கலப்பு இல்லன்னு ஆகுறப்ப, தமிழ்நாட்டுல? ..//
நடக்கற காரியமா சொல்லுங்க..

//வெள்ளக்காரனுக்காவது ரோசம் வந்து எங்க மொழிய இப்புடி கேவலமா பேசுறீங்களேன்னு தடை போட்டாத்தான் உண்டு:))

நச்!!! //


அதே..

துபாய் ராஜா said...

பள்ளயம் அருமை.

எம்.எம்.அப்துல்லா said...

கடைசியா எழுதி இருக்குறதை தஞ்சாவூர் கோவில் கல்வெட்டுல பதிஞ்சுருவோம் :))

வில்லன் said...

//(எழுத்து)அறிவுள்ளவன் எழுத்தாளன்!
அறிவும் திறமும் கொண்டவன் படைப்பாளன்!!
அறிவுடன் கூடிய திறமும், ஆளுமையும் கொண்டவன் முன்னோடி!
அறிவு, திறம், அறமுடன் கூடிய ஆளுமையும் கொண்டவன் தலைவன்!!

இது யார் சொன்னது? உடனே, பெரிய அளவுல யோசிச்சு இருப்பீங்களே? அரிஸ்டாட்டில், சேக்சுபியர் அளவுக்கு... இப்படி யாராவது பெரிய தலையச் சொன்னா நம்புவாங்க... நானே சொந்தமா சிந்திச்சு சொன்னதுன்னா, நம்பவா போறாங்க?! இஃகி! //

அப்படி போடுங்க அருவாள...... அதான எதோ அரிஸ்டாட்டில், சேக்சுபியர் சொன்னா சரின்னு மன்னிச்சு விட்டுரலாம்.... நீறு சொன்னதுன்னு சொன்னதாலா தான் சந்தேகமே......எதுல எதோ உள்குத்து இருக்கு கண்டிப்பாக....

வில்லன் said...

//அறிவு, திறம், அறமுடன் கூடிய ஆளுமையும் கொண்டவன் தலைவன்//

அப்படின்னா நம்ம கு ஜ மு க தலைவருக்கு இதெல்லாம் இல்ல அதனால தலைவராக நீடிக்க அருகதை இல்லைன்னு சொல்லவரிங்களா....... அத எங்கள மாதிரி நேரடியா சொல்லிட்டு போக வேண்டியது தான... எதுக்காக சுத்தி வளாச்சி கவுஜ எல்லாம் எழுதுறிங்க....

நம்ம "அண்ணாச்சி" "எதையும் தாங்கும் இதயம்" குடுகுடுப்பை இதை எல்லாம் பாத்து கோவிக்கவே மாட்டாரு..... அவரு பனக்காட்டு "நரி" இந்த சல சலப்புக்கெல்லாம் அஞ்சமாட்டாரு ....அப்படியெல்லாம் கோவிசுகிட்டா கட்சி நடத்த முடியுமா இல்ல நாய் பத்திர ஊழல் பண்ணி கையும் களவுமா புடிபட்ட பெறகும் கட்சி தலைவரா நீடிக்கத்தான் முடியுமா.........

வில்லன் said...

???
முகிலன் said...
அறிவுள்ளவன் எழுத்தாளன்!
அறிவும் திறமும் கொண்டவன் படைப்பாளன்!!
அறிவுடன் கூடிய திறமும், ஆளுமையும் கொண்டவன் முன்னோடி!
அறிவு, திறம், அறமுடன் கூடிய ஆளுமையும் கொண்டவன் தலைவன்!!
//

ஐ, அப்ப நான் தலைவனா????????

இதுல சந்தேகம் வேறயாக்கும்......மூஞ்சில அடிச்சாப்புல சொல்லிட்டாரு நம்ம நக்கீரரு....அதுக்கப்புறமும் அந்த வீணாப்போன "ஒல்லிகுச்சி" தமன்னா ரசிகர்மன்ற தலைவர் பதவி ஒரு கேடா!!!!!!!!!..... உடனே ராஜினாமா பண்ணிட்டு ரசிகர் மன்றத்த கலைசுருங்க......இல்லன்ன ரணகளம் ஆகப்போகுது.......

வில்லன் said...

// குறும்பன் said...
//நான் இருக்கும் சார்லட் மற்றும் அண்டி இருக்குற பகுதியில வேலையற்றோர் எண்ணிக்கை உயர்ந்து கிட்டத்தட்ட 12% ஆகியிருக்காம். // ஆ.. அதிகம் பாதிக்கப்படாதது சார்லட் பகுதின்னு நினைச்சேனே..

இந்த கோடை காலத்தில் 1 காலன் எண்ணெய் $4 க்கு போகுமுன்னு சொல்லிக்கறாங்க கேள்விப்பட்டீங்களா தலைவா.//

எத்தன பேரு கேளம்பிருகிங்க இந்த மாதிரி வதந்திய பரப்ப.......அவன் அவன் குடிக்க காஞ்சி கூட கெடைக்காம தள்ளாடுறான்... அடுத்தவன நம்ம்பி சவுதி அரேபியா கிரீஸ் கடனுள தள்ளாடுது.... இந்த நேரத்துல எண்ணெய் வேலைய ஒயத்துனா என்ன ஒயதாட்டி என்ன.....

வில்லன் said...

/மக்களே, வர்ற 04/11 ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் நான்கு மணிக்கு ச்சட்டனூகா, டென்னசியில என்ன? பதிவர் சந்திப்புதான்! இஃகிஃகி!! அதனால நேஷ்வில், கூடவே அலபாமா ப்ரம்மிங்காம் பக்கத்துல இருக்குற மக்கள் எல்லாம் வந்து கலந்துக்குங்கப்பு... இடம்: Marriott Residence Inn, 215 Chestnut Street, Chattanooga, TN. மேலதிகத் தகவலுக்கு எனக்கு ஒரு மின்னஞ்சலைத் தட்டுங்க!!//

எதாவது பயணசீட்டு இல்ல வண்டி அனுப்புங்க கைதட்ட இல்ல அடியாள உடனே அருவ கம்போட வேனும்ன சிங்கி கூட சொந்த செலவுல வங்கியாந்துருறோம்...எங்க போறதுன்னு தெரியாம தலைய பிச்சுக்குற நேரத்துல ஒரு வலி நிவாரிணி மாதிரி உதவி பண்ணுங்க அப்பு.....புண்ணியமா போகும்....