3/30/2010

செய்யும்படி!

உடைக்கப் போகும்
உண்மையான நாத்திகனையும்
இரசிக்க வைத்துத்தான்
உடைந்து போகிறது சிலை!
வாழ முயற்சிப்போம்
அழகு போல் அழகாய்!!

--சிவசு

நான் எழுதுகிற எழுத்துக்கும், பேசுகிற் பேச்சுக்கும், இடுகிற இடுகைக்கும் நானே பொறுப்பு. மாற்றுக் கருத்துகள் தென்படும் வேளையதில், சுருங்கக் கூறுவதாயின் தனிமனிதத் தாக்குதலற்ற மறுமொழியாய்த் தொடர்புடைய அவ்விடுகையிலேயே! விவரணம் ஆயின், தனியொரு இடுகையாய் எம்பதிவிலே!!

மாற்றுக் கருத்துகள் இருப்பின், அவ்விடுகையிலேயே மறுமொழி இடலாம். விமர்சன இடுகையாயின், அதன் சுட்டியை மறுமொழியாக இடலாம். இவை இரண்டுமன்றி, எங்கோ, எவரோ விமர்சனம் செய்வது குறித்தும், எள்ளி நகையாடுவது குறித்தும் யாதொரு பற்றியமும் எமக்கு இல! (எனக்கு எந்தவிதமான அக்கப்போரும் இப்போதைக்கு இல்லைங்க.... பொதுவான நடைமுறையச் சொல்லிக்கிறேன்... நீங்களா, எதுவும் யூகிச்சிக்காதீங்க இராசா!)

அண்மையில், ஒரு உண்மைச் சம்பவத்தைத் தழுவி யாம் கதையின் பரிமாணத்தில் எழுதிய இடுகையொன்று மற்றொரு தளத்தில் இடம் பெற்றது. அதையும் வாசித்து, கத்தார் நாட்டு அனுபவத்தையும் அறிவீராக!!

இறந்து பிறப்பன நேரியனவை!

17 comments:

vasu balaji said...

/அண்மையில், ஒரு உண்மைச் சம்பவத்தைத் தழுவி யாம் கதையின் பரிமாணத்தில் எழுதிய இடுகையொன்று மற்றொரு தளத்தில் இடம் பெற்றது. அதையும் வாசித்து, கத்தார் நாட்டு அனுபவத்தையும் அறிவீராக!!/

கண்ணும் மனமும் நிறைந்து போயிற்று. நிறைவான குருதட்சிணை.

அது சரி(18185106603874041862) said...

//
இவை இரண்டுமன்றி, எங்கோ, எவரோ விமர்சனம் செய்வது குறித்தும், எள்ளி நகையாடுவது குறித்தும் யாதொரு பற்றியமும் எமக்கு இல!
//

என்னனு ஒண்ணும் புரியலைண்ணே...என்ன நடக்குது இங்க??

பழமைபேசி said...

//அது சரி said...
//
இவை இரண்டுமன்றி, எங்கோ, எவரோ விமர்சனம் செய்வது குறித்தும், எள்ளி நகையாடுவது குறித்தும் யாதொரு பற்றியமும் எமக்கு இல!
//

என்னனு ஒண்ணும் புரியலைண்ணே...என்ன நடக்குது இங்க??

March 30, 2010 6:27 PM//

பொதுவா சொன்னேன்ங்க அது சரி அண்ணாச்சி!

குறும்பன் said...

என்னமோ நடக்குது மர்மமா இருக்குது.

பழமைபேசி said...

@@அது சரி
@@குறும்பன்

அய்ய... அப்படியெல்லாம் ஒன்னுமே இல்லங்க...பொதுவா எழுதினதுதான் இது....இன்னும் சொல்லப் போனால், தம்பி செந்தில் எழுதின நல்லதொரு இடுகையின் பாதிப்பு....

http://senthilinpakkangal.blogspot.com/2010/03/blog-post_30.html

Unknown said...

ஏண்ணே? யாரும் எதுவும் எதிர்வினை எழுதிட்டாகளா?

தாராபுரத்தான் said...

பற்றியமும் எமக்கு இல!

பழமைபேசி said...

மக்களே, நான் பொதுப்படையாத்தான் எழுதி இருக்கேன்....

http://senthilinpakkangal.blogspot.com/2010/03/blog-post_30.html

Anonymous said...

மக்களே, கூகுள் சொதப்புது.... என்னோட பின்னூட்டம் எதும் தெரிய மாட்டேங்குது....

இது பொதுப்படையா எழுதினதுதான்... இந்த நல்ல இடுகையோட பாதிப்பு... இஃகிஃகி!!

http://senthilinpakkangal.blogspot.com/2010/03/blog-post_30.html

--பழமைபேசி.

சீமாச்சு.. said...

ஐயா, பள்ளிக்கூட பதிவுக்கு அறிமுகம் கொடுத்ததுக்கு நன்றி..

எங்க தமிழ் வாத்தியார் ஒரு உதாரணம் சொல்லுவார். மயிலாடுதுறை கோவில் தேர்த் திருவிழாவைக்காண நடிகை குஷ்பூ வந்தார் என்று செய்தி வந்தால் எல்லாரும் மயிலாடுதுறையயும், கோவிலையும் தேரையும் விட்டுவிடுவார்களாம்.. குஷ்பூ என்ன கலர் ட்ரெஸ் போட்டிருந்தார்கள் என்று ஆரம்பித்து விடுவார்களாம்..

இருந்தாலும் நன்றி !! உங்க பக்கத்திலேருந்து நிறைய பேர் வந்ததாக FeedJit சொல்லுது !!

தமிழ் மதுரம் said...

நண்பா இது தான் கட், கொப்பி, பேஸ்ற் விளையாட்டோ?

Anonymous said...

http://www.dinamani.com/edition/print.aspx?artid=216838

Anonymous said...

Seemachu has left a new comment on your post "செய்யும்படி!":

ஐயா, பள்ளிக்கூட பதிவுக்கு அறிமுகம் கொடுத்ததுக்கு நன்றி..

எங்க தமிழ் வாத்தியார் ஒரு உதாரணம் சொல்லுவார். மயிலாடுதுறை கோவில் தேர்த் திருவிழாவைக்காண நடிகை குஷ்பூ வந்தார் என்று செய்தி வந்தால் எல்லாரும் மயிலாடுதுறையயும், கோவிலையும் தேரையும் விட்டுவிடுவார்களாம்.. குஷ்பூ என்ன கலர் ட்ரெஸ் போட்டிருந்தார்கள் என்று ஆரம்பித்து விடுவார்களாம்..

இருந்தாலும் நன்றி !! உங்க பக்கத்திலேருந்து நிறைய பேர் வந்ததாக FeedJit சொல்லுது !!

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

பாதி புரியல :)

நெகிழ வைத்த நிகழ்வு அது..

Unknown said...

இறவாப் புகழைப் பெருகின்ற ஆசிரியரும் மாணாக்கரும்.

இது போன்ற நிகழ்வுகளை பதியும்போது மற்றவர்களுக்கும் அது ஒரு உந்துதலாக அமையும்.

க.பாலாசி said...

//(எனக்கு எந்தவிதமான அக்கப்போரும் இப்போதைக்கு இல்லைங்க.... பொதுவான நடைமுறையச் சொல்லிக்கிறேன்... நீங்களா, எதுவும் யூகிச்சிக்காதீங்க இராசா!)//

இதுக்கு பெறவுதான் யூகிச்சிக்கத்தோணுதுங்க... ரெண்டையும் படிச்சேன்... எங்கூருதாங்க அந்த பள்ளிக்கூடம்.. ஆனா நானங்க படிக்கல...

சிநேகிதன் அக்பர் said...

என்னாச்சு அண்ணே. புரியலை.