3/21/2010

பூலவாக்கு!

நிமிர்ந்து மிடுக்காய் அமர்ந்தான். ’இம்’மெனச் செருமினான். என்ன இருக்கிறது எழுத? சொல்வதற்கு என்ன கிடக்கிறது இங்கே?? எனக்குள் எதுவுமே சொல்லத் தோணவில்லையே?? அதை எழுதலாமோ? அதிலே என்ன சுவராசியம் இருக்கிறது???

தினமும் எழுகிறோம். அடிப்படைக் காரியங்களை விரும்பியோ விரும்பாமலோ செய்து தொலைக்கிறோம். நாளும் கழிகிறது. இந்தக் கழிவுகளின் எச்சங்களை எழுதுவதிலே என்ன கிடக்கிறது??

புதுமையாய் எழுத வேண்டுமாம்! என்ன புதுமை வேண்டிக் கிடக்கிறது?? எப்படியும் எதையோ செய்யப்போய் அதிலே வழுக்கள் பல கண்டு அல்லலுறத்தான் போகிறோம். இதிலே என்ன புதுமை?? அதற்கான விதைகள் எழுத்திலே வர வேண்டுமாம். அப்படி எழுதி என்ன செய்து விடமுடியும் நம்மால்?

மலர் என்றால் அதன் வாசத்தை நுகர்ந்துதான் அறிந்து கொள்ள வேண்டும். அதை எழுத்தில் சொல்வதால் நுகர முடியுமா? அதையும் எழுத்தால் நுகர வைக்க முடியும் என்கிறார்கள் பைத்தியங்கள். அது எப்படி முடியும்??

எழுகதிரவன் எழ, அதன் பிம்பம் அருணவத்தில் பட்டுத் தெரியும் அழகை எழுத்திலே விரியச் செய்து காட்சிப்படுத்த முடியுமா என்ன? அதை நிர்வாணக் கண்களால் கண்டு மகிழ்வதை எப்படி எழுத்தால் காட்சிப்படுத்த முடியும்? அப்படி என்ன எழுதிக் கிழித்துவிட முடியும்??

கற்பனை வளம் பெருகினால் எழுதி விடலாமா? கற்பனை என்பதே ஒரு சோடிப்புதானே? சோடித்துச் சோடித்துச் செய்வதென்ன கண்டோம்? சோடித்து எழுத வேண்டுமாம். சோடிப்பது எதுவும் தோற்பதற்குக் கைச்சாத்திடுவது அன்றோ? இதைப்போய் எழுதி, என்ன கிழித்து விட முடியும்??

சுயசிந்தனை இருந்தால் எழுதலாமாம். சுயசிந்தனை? சிந்தனையில் எழுத்தைத் தருவிக்க இயலுமா? அப்படியானால் எழுதியே உண்ணுவதும், உறங்குவதும், உய்ப்பதுமென இருக்க வேண்டியதுதானே? உழைப்பது எதற்கு?? ஆக உழைப்பது இருக்க, இந்த எழுத்து எதற்கு??

ங்கொய்யால, யார்றா இவன்? இவனுக்கு எழுத்தூறு (writer's block) முத்திப் போச்சு போல.... அந்தப்பக்கமா இழுத்துட்டுப் போயி சரக்கு கிரக்கு வாங்கிக் கொடுத்து தேத்தி விடுங்க... இஃகிஃகி!!

ஆனால் அச்சில்; ஆகாவிட்டால் கொப்பரையில்!

28 comments:

பழமைபேசி said...

பூலவாக்கு - மறைபொருள்
அருணவம் - நுரைசூழந்த கடல்

பத்மா said...

வெறும் கொப்பரை இல்ல .கொதிக்கிற எண்ணெய் உள்ள கொப்பரை .

குறும்பன் said...

எங்கடா ரெண்டு நாளா புது இடுகையை காணாமேன்னு நினைச்சேன், பலரும் நினைச்சு இருப்பாங்க. இப்ப தான் புரியுது நீங்க ஏன் ரெண்டு நாளா எழுதலைன்னு. சுவாமி மல்லையாவிடம் சரண் அடைந்தால் வேண்டிய அனைத்தும் கிடைக்கும் இஃகிஃகி.

கபீஷ் said...

//(writer's block)//

writer க்கு தான வரும். சேட்டனுக்கு எப்படி?:-):-)

இராகவன் நைஜிரியா said...

ஐயா... என்னமோ நடக்குது.. மர்மமா இருக்குது..

ஒன்னுமே பிரியலை..

தனிமடலில் விளக்கம் ப்ளீஸ்.

vasu balaji said...

அங்கையுமா? ரைட்ட்டு:))

பழமைபேசி said...

// padma said...
வெறும் கொப்பரை இல்ல .கொதிக்கிற எண்ணெய் உள்ள கொப்பரை //


ஆகா... பதமா இருந்தா அச்சுல ஊத்துறதுங்க.... அல்லாட்டி, கொப்பரையிலயே கொதிக்க வுடுறதுங்க இது.... நீங்க எழுத்தாளனை எண்ணெய்க் கொப்பரையில போடுவீங்க போல இருக்கே.... இஃகிஃகி!!

@@குறும்பன்

மல்லையானந்தாவே சரணம்! இஃகிஃகி!!

@@கபீஷ்

மீ? சேட்டன்?? சும்மா விளையாட்டு!

//இராகவன் நைஜிரியா said...
ஐயா... என்னமோ நடக்குது.. மர்மமா இருக்குது..
//

அண்ணே... என்னாதிது? எனக்கு ரெண்டு நாளா எழுத்தூறுன்னு சொல்ல வந்தா, நீங்க எதோ நினைச்சிட்டீங்க போல....

//வானம்பாடிகள் said...
அங்கையுமா? ரைட்ட்டு:))

March 21, 2010 2:01 PM//

அப்ப, அங்கயுமா பாலாண்ணே? அப்பச் சரி....

நல்லாக் கேட்டுக்குங்க, நான் தனியாள் அல்ல; தனியாள் அல்ல!!

சிநேகிதன் அக்பர் said...

நானும் ஏதோ கெட்ட வார்த்தைன்னு நெனைச்சேன். இதுதான் அர்த்தமா.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

கெளம்பிப் போயி யாரயாச்சும் சந்திச்சிட்டு வாங்கண்ணே.. :))

தாராபுரத்தான் said...

பூலவாக்கை புரிஞ்சுக்கிட்டீங்களா...புத்தியா பொளைச்சுங்கோ..

பழமைபேசி said...

சீமாச்சு அண்ணாவுக்கு ஒரு ஆப்பு!

அருணவம் aruṇavam : (page 132)
aruṇa-maṇi
, n. < aruṇa

*அருணவம் aruṇavam
, n. < arṇava. Foaming sea, ocean; கடல். (W.)

Unknown said...

ரைட்டு..

Unknown said...

//நிர்வாணக் கண்களால்//

ஏண்ணே naked-eyeஐ நிர்வாணக் கண்கள்னு தமிழ்ப்படுத்துறது கொஞ்சம் விகாரமா இல்லை? வெறும் கண்களால்னே சொல்லிட்டுப் போலாமே?

பழமைபேசி said...

//முகிலன் said...
//நிர்வாணக் கண்களால்//

ஏண்ணே naked-eyeஐ நிர்வாணக் கண்கள்னு தமிழ்ப்படுத்துறது கொஞ்சம் விகாரமா இல்லை? வெறும் கண்களால்னே சொல்லிட்டுப் போலாமே?

March 21, 2010 9:48 PM//

நிர்வாண தீட்சை, நிர்வாண பூசை...அந்த வரிசையில வர்ற நிர்வாணக் கண்கள்....

நிர்வாண... அப்படின்னா, ஒன்றில் ஒன்றிய அதிதீவிர அப்படின்னு பொருள் இங்க....

Anonymous said...

அண்ணே,,,நான் blogskku கொஞ்சம் புதுசு... இருந்தாலும் உங்க எல்லா பதிவையும் படிப்பேன்....இந்த பதிவு மாதிரி எழுதி என்னைய ப்ளொக்ஸ்' a விட்டே தொரத்திடதீங்க,,,,,,, :)

Unknown said...

//நிர்வாண தீட்சை, நிர்வாண பூசை...அந்த வரிசையில வர்ற நிர்வாணக் கண்கள்....

நிர்வாண... அப்படின்னா, ஒன்றில் ஒன்றிய அதிதீவிர அப்படின்னு பொருள் இங்க....//

அப்ப சாமியாருங்க தான் நம்மள ஏமாத்திட்டு இருந்திருக்காங்களா.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

க.பாலாசி said...

//பூலவாக்கு - மறைபொருள்//

இந்த மறைபொருள்ல யாரை மறைச்சி வச்சிருக்கீங்க... என்ன உள்குத்து... ஒண்ணுமே வௌங்கல....

Unknown said...

உங்க பூலவாக்கு தெரிஞ்சு போச்சு..

//.. ஆனால் அச்சில்; ஆகாவிட்டால் கொப்பரையில்..//

வாய்ல கூட போட்டுக்கலாம்ங்க..

பழமைபேசி said...

@@அக்பர்

நன்றிங்க தம்பி!

@@எல் போர்ட்.. பீ சீரியஸ்..

நீங்க எங்க இருக்கீங்க தம்பி?

@@தாராபுரத்தான்

சரிங்க அண்ணா!

@@நல்லவன் கருப்பு...

ச்சும்மா சும்மாங்க!

@@க.பாலாசி

ஒன்னும் இல்லங்க!

@@திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்)

இஃகிஃகி!!

பழமைபேசி said...

//முகிலன் said...
//நிர்வாண தீட்சை, நிர்வாண பூசை...அந்த வரிசையில வர்ற நிர்வாணக் கண்கள்....

நிர்வாண... அப்படின்னா, ஒன்றில் ஒன்றிய அதிதீவிர அப்படின்னு பொருள் இங்க....//

அப்ப சாமியாருங்க தான் நம்மள ஏமாத்திட்டு இருந்திருக்காங்களா.. அவ்வ்வ்வ்வ்//

இங்க சார்லட்ல, Hotel Nirvaana அப்படின்னு ஒரு இந்திய சாப்பாட்டுக் கடை இருக்கு... இங்க வரும்போது அந்த நினைப்புல போயி ஏமாறாதீங்க என்ன?!

முகுந்த்; Amma said...

அய்யா! பூலவாக்கு, அருணவம், writer's block எனக்கும் ஒண்ணுமே பிரியலங்கோ. ஆனா நல்லாந்திருச்சு :))

வால்பையன் said...

//பூலவாக்கு - மறைபொருள்//

இத்தனை நாளா, அது எதோ கெட்டவார்த்தை போலன்னு நினைச்சிகிட்டு இருக்கேன்!

வில்லன் said...

/அதையும் எழுத்தால் நுகர வைக்க முடியும் என்கிறார்கள் பைத்தியங்கள். அது எப்படி முடியும்??//

புரிஞ்சா சரி.... சரக்கு பாட்டில தொறந்து வச்சா வேணா பைத்தியங்கள கூட நுகர வைக்க முடியும்.... ஹி ஹி ஹி

வில்லன் said...

/ஆனால் அச்சில்; ஆகாவிட்டால் கொப்பரையில்! //

"எச்சில்" ஆகாவிட்டால் கொப்பரையில்??????? அப்படின்னா என்ன அப்பச்சி????????????????

வில்லன் said...

/// முகிலன் said...

//நிர்வாணக் கண்களால்//

ஏண்ணே naked-eyeஐ நிர்வாணக் கண்கள்னு தமிழ்ப்படுத்துறது கொஞ்சம் விகாரமா இல்லை? வெறும் கண்களால்னே சொல்லிட்டுப் போலாமே?//

வந்துட்டாரையா வெளக்கம் சொல்ல......படிச்சமா பின்னுட்டம் போட்டமான்னு இருக்கணும்..... சும்மா suggestion எல்லாம் குடுக்க கூடாது.... புரிஞ்சுதா....அதுவும்ம் நம்மோட நக்கீரர் கவிதைக்கேவா?????? கண்டிக்கப்பட வேண்டிய விஷயம்.,...

வில்லன் said...

//

பழமைபேசி said...

//முகிலன் said...
//நிர்வாண தீட்சை, நிர்வாண பூசை...அந்த வரிசையில வர்ற நிர்வாணக் கண்கள்....

நிர்வாண... அப்படின்னா, ஒன்றில் ஒன்றிய அதிதீவிர அப்படின்னு பொருள் இங்க....//

அப்ப சாமியாருங்க தான் நம்மள ஏமாத்திட்டு இருந்திருக்காங்களா.. அவ்வ்வ்வ்வ்//

இங்க சார்லட்ல, Hotel Nirvaana அப்படின்னு ஒரு இந்திய சாப்பாட்டுக் கடை இருக்கு... இங்க வரும்போது அந்த நினைப்புல போயி ஏமாறாதீங்க என்ன?!///

அங்க சாப்பிட வர்றவங்க எல்லாம் நிர்வாணமா வருவாங்களா..... இல்ல செர்வ் பண்ணுறவங்க எல்லாம் நிர்வாணமா பண்ணுவாங்களா????? ஐயோ இப்பவே அங்க போனும் போல இருக்கே!!!!!!!!!!!!!!!!!!! யு குடுகுடுப்பை ஒரு ட்ரிப் போட்டுறலாமா சார்லட்க்கு?????????????? என்ன சொல்லுறீரு.... ஒரு bachlor ட்ரிப் போட்டுருவோம்.... தங்கமணிங்கள கூட்டிட்டு போயி அடி வாங்க முடியாது.....

பழமைபேசி said...

//Ramachandran has left a new comment on your post "பூலவாக்கு!":

வளர வளர நீ மட்டும் புதுசு உன்னால் வலை பதிவுக்கு மவுசு

பூலாங்கினறு பூலவாக்கு பூ விட்ட கொட்ட பாக்கு பூக்காரன் ஜலாக்கு
போடாதே லோலாக்கு

....சித்ரம் ..// //

ஆகா.... அழகாப் பாடுறீங்களே....நன்றிங்க; நன்றிங்க!!

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

தங்கச்சி :))) உங்கூர்லயிருந்து வடகிழக்கா ஒரு அறுனூறு மைல்த் தூரம் காரோட்டியாந்தீங்கன்னா எங்கூரு வரும்.. ஊரக் கண்டுபிடிச்சு வந்துட்டு போன்ல அழச்சீங்கன்னா வந்து கூட்டிட்டுப் போயிடுறம் :))