11/27/2022

நன்றி நவிலல்நாள் 2022

நன்றி நவிலல்நாள் விடுமுறை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்து விட்டது. கல்லூரியில் இருக்கும் மகர் வீட்டுக்கு வந்திருந்தார். வீட்டிலிருக்கும் இரு உடன்பிறந்தாருடன் நாட்களைப் பங்கு போட்டுக் கொண்டார். இடையில் அன்றாடமும் மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் இயந்திரவியற்பாசறை (robotics project sessions), உடன் படிக்கும் மற்ற மாணவர்கள் 8 பேருடன் வீட்டில் இடம் பெற்றது. கலகலப்பாய் வீடு குதூகலித்துக் கொண்டிருந்தது.

உலகின் ஏனைய பகுதிகளில் இருக்கும் ஆழ்விகள்(cousins), நண்பர்களுடன் மொக்கை போடுவதாக நான் இருந்தேன். சக கசின் ஒருவரை வாட்சாப் குரூப்பில் வம்புக்கு இழுத்தேன். ’நாம்தான் அன்றாடமும் பேசிக் கொண்டிருக்கின்றோமே? அடுத்த தலைமுறையினருக்கு இடைஞ்சலாக இருக்குமோ என்னமோ?’ என்றார். உடனே சக மாப்பிள்ளை ஒருவர், ‘நாம் இருக்கின்றோம். பேசிக் கொள்கின்றோம்’ என்றார். சிந்தனைக்குள்ளாக்கியது.

ஒருவிதமான காலகட்டம். பெருந்தொற்று இன்னமும் கூட ஓயவில்லை. நிறைய இழப்புகளைப் பார்த்து வருகின்றோம். பரிச்சியமான, அணுக்கமானவர்களின் எண்ணிக்கை குறையக் குறைய பற்றக்கூடிய கொழுகொம்புகள் இல்லாமற்போவதான உணர்வும் தலையெடுக்கத்தானே செய்யும்? மகர்களை எண்ணிப் பார்த்தேன். மூவர் இருக்கின்றனர். காலத்துக்கும் உடன் பயணிப்பர். மனம் தணிந்தது. ஒரே ஒரு பிள்ளையாக இருப்போருக்கு? இந்த இடத்தில்தாம் மாப்பிள்ளையின் கூற்று மேலோங்குகின்றது. ‘இருக்கின்றோம்; பேசிக் கொள்கின்றோம்’.

அம்மாவுடன் பிறந்தோர் மொத்தம் எட்டுப் பேர். அப்பாவுடன் பிறந்தோர் ஆறு பேர். அம்மாவின் பெற்றோருடன் பிறந்தோர் பத்துப் பேர். அப்பாவின் பெற்றோருடன் பிறந்தோர் எட்டுப் பேர். இப்படியாகக் கிடைத்திருக்கும் உடன்பிறவாப் பிறப்புகள் கிட்டத்தட்ட 100+ பேர். அஞ்சுக்கு மூன்று பழுதில்லை என்பார்கள். எல்லா 100+ பேருடனும் அணுக்கத்தில் இல்லாவிட்டாலும் கூட, இயன்றமட்டிலும் இருக்கின்றோம். இத்தகு நிலை அடுத்த தலைமுறையினருக்கு உண்டா என்றால், நிச்சயமாக இல்லை. வீட்டுக்கு ஒன்று அல்லது இரண்டு பிள்ளை என்பது முதற்காரணம். அடுத்தது வாழ்வியற்சூழல். கூட்டமாக வாழ்ந்திருந்த நிலை போய், தனித்திருப்பதான வாழ்வியற்கூறுகள். என்ன செய்யலாம்? இத்தகு தலைமுறையினர், உடன்பிறவாப் பிறப்புகளோடும் நண்பர்களோடும் அணுக்கம் பேணியே ஆகுதல் நலம்.

வீட்டுக்கு ஒரு பிள்ளை, இரு பிள்ளை என்போர், சக உடன்பிறவாப் பிறப்புகளை(cousins)ப் பேணியே ஆக வேண்டும்.

1. உடன்பிறந்தோர் இடத்தை இவர்கள் நிரப்புவர். Not everyone is lucky enough to have siblings. So when that is the case, cousins can be essential to the family dynamic. For those who do already have siblings, cousins can be the extra brother or sister they always wished they had.

2.எல்லா நேரமும் எல்லாவற்றையும் பெற்றோரிடமோ, நண்பர்களிடமோ சொல்லிக் கொண்டிருக்க இயலாது. ஆனால் பங்கு போட்டுக் கொள்ள வேண்டிய சூழலில் இவர்கள் கைக்கொள்வர். Cousins will be there to talk with you, laugh with you and shade you when you need it most.

3. என்னதான் பொருளாதாரத்தில் மேம்பட்டிருந்தாலும், 40/50 வயதென வரும் போது பெற்றோர், சித்தப்பா, பெரியப்பா, பெரியம்மா, சின்னம்மா, மாமா, அத்தை போன்றோர் இழப்பானது பெரும் அச்சத்தைத் தோற்றுவிப்பது இயல்பு. அத்தகு இழப்புக்கு மாற்றாக இவர்கள் இருப்பர்.  Cousins help to fill in the gap and remind you that you have not lost all of your family because they still got you. Cousins can be that extra love and support you need.

4. வாழ்க்கைப் பயணத்தின் சமகாலப்பயணி என்கின்ற வகையில், சுக துக்கங்களைப் பங்கு போட்டுக் கொள்ளவும்  நினைவுகளை, விருப்பு வெறுப்புகளைக் கையாளவும் உற்ற தோழர்களாய் இவர்கள் இருப்பர். Cousins will make you laugh, cry, cry from laughing and so much more. They keep you on your toes.

மேலைநாட்டுப் பண்பாட்டில் சமயக்கூடங்கள் வாழ்வியற்பயணத்துக்கு உதவுவனவாக உள்ளன. அந்தக் கூடத்திலே சென்று சேர்ந்ததும், ஓர் அணியில்(குரூப்/டீம்) கோர்த்து விடுவர். அந்த அணியினர் அணுக்கத்தோடு வாழ்வியலில் சகபயணியாகப் பயணிப்பர். நமக்கோ அத்தகு பண்பாட்டுக் கூறும் இல்லாத நிலையில், Other things may change us, but we start and end with family. And we need such family.

Never underestimate the power of a cousin.

No comments: