10/13/2013

ஏளனக்குருவி

Tennessee Mockingbird

ஞாயிற்றுக் கிழமை
காலை ஏழுமணி
தெருவில் யாருமே இல்லை
கடைக்கோடி மரங்கள் கூட அசையவில்லை
எப்போதும் கீச்சிடும் அந்த
சில்வண்டுகள் எங்கு போயின?
கிழ் வானத்து வெளுப்பு
கதிரவன் ஆகும் வித்தை இன்னும்
கொஞ்ச நேரத்தில் நிகழப் போகிறது!
பனித்துளிகள் வெடிப்பதைக் கூட
யாரோ நிறுத்தி வைத்திருக்கிறார்கள்!
அப்படியானதொரு மெளனம் ஏகாந்தம்!
சகவுயிரினங்கள் சொப்பனந்தரித்திருக்க
அந்த ஒற்றை ஏளனக்குருவி மட்டும்
கிடைகொள்ளாமல் இங்குமங்குமாய்
இப்பேரமைதியில் விருப்பின்றி
அல்லாடிக் கொண்டிருக்கிறது
என்னைப் போலவே!!


3 comments:

Anonymous said...

வணக்கம்
கவிதையின் வரிகள் ரசிக்கும் படி அழாகாக உள்ளது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கரந்தை ஜெயக்குமார் said...

அழகிய கவிதை. வாழ்த்துக்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

ரசித்தேன்... வாழ்த்துக்கள்...