4/14/2013

தள்ளாட்டம்

டாஸ்மாக்கிலிருந்து
வெளியேறும்
கனவானைப் போல,
நான்
செல்வழி களங்கி
தட்டுத் தடுமாறுவதற்கு
இதுதான் காரணம்!
ஒரு ஊர்ல...
எனத் துவங்கியதுமே
இடைமறித்துச்
சொல்லிவிட்டாள்!
ஒரு ஊர்ல ஒரு ராஜா
வேணாம்ப்பா,
ராஜா இல்லாத ஊர்க்கதையா
ஒன்னு சொல்லுங்க!!

No comments: