2/06/2013

Dondu Raghavan Sir, We miss you!!


தற்போது நான் வெளியூரில் இருக்கிறேன். நேற்று மாலை நான்கு மணிக்கு கூகுள்+ பார்த்ததோடு சரி. இப்போதுதான், கிட்டத்தட்ட 16 மணி நேரம் கழித்து மின்தமிழ் குழுமத்துக்குள் நுழைந்தேன். நுழைந்ததுமே பெரும் அதிர்ச்சி.

என்னுடைய சிறுகதைகளை வெகுவாகப் புகழ்ந்து பேசுவார். தன் மனைவிக்கு படித்துக் காண்பிப்பார். உரிமையோடு என் மனைவியை மகளே என விளித்துப் பேசி, வாழ்த்துவார். தன்னுடைய வலைதளத்தில் என்னுடைய வலைப்பதிவையும் முகப்பில் காண்பித்து, கிராமிய விழுமியங்களைப் பற்றிப் பலரும் அறிந்து கொள்ள வேண்டுமென ஆவல் கொண்டார். அண்மையில் கூட, தென்றல் இதழில் வெளியான எனது கவிதையைத் தன் வலைப்பதிவில் குறிப்பிட்டு வெகுவாகப் பாராட்டி இருந்தார். எதிர்வரும் மே மாதத்தில் எப்படியும் அவரைச் சந்தித்து விட வேண்டும் என ஆசையுற்றிருந்தேன். ஏமாற்றமாக இருக்கிறது.

அன்னாரது ஆத்மா சாந்தியுறும் என்பதில் ஐயமில்லை. அடுத்த பிறவி என்றிருப்பின், அதிலாவது அன்னாரை நேர்கொள்ளும் வாய்ப்பு எமக்கு அமைய வேண்டும். Dondu Raghavan Sir, We miss you!! We love you!!

வருத்தமுடன்,
பழமைபேசி.

7 comments:

Shakthiprabha (Prabha Sridhar) said...

Blogger world Would miss you sir!
Rest in peace.

பட்டிகாட்டான் Jey said...

எனது கண்ணீர் அஞ்சலி!

அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

கோமதி அரசு said...

திரு. இராகவன் அவர்களுக்கு அஞ்சலி.
அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலை கடவுள் அருள வேண்டும்.

enRenRum-anbudan.BALA said...

டோண்டு சார் அவர்கள் குறித்த என் இடுகையில் இந்த உங்கள் இடுகையின் இணைப்பை அளித்துள்ளேன். என் நீண்ட நாள் நண்பர் அவர்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

இன்னா லில்லாஹி வயின்னா இலைஹி ராஜிவூன்.. எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு.. சே நல்ல மனுசன். அவரது இழப்பு ஈடுகட்ட முடியாத ஒன்று. அவரது ஆத்மா சாந்திடையவும் அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு மனநிம்மதியையும் இறைவன் தந்தருள்வானாக.

Krishnan said...

Along with you, we too will miss him.

Krishnan said...

Along with you, we too will miss him.