11/07/2011

அமெரிக்கா:நாடளாவிய அறுந்தருண(emergency) அறிவிப்புச் சோதனை

அறுந்தருணத்தின் போது நாட்டின் பாதுகாப்புக்கு வலுச்சேர்க்கும் வகையில், அமெரிக்க தகவல் ஒலிபரப்புத் துறையானது இதர சில துறையினருடன் ஒருங்கிணைந்து அறிவிப்பு வெள்ளோட்டம் ஒன்றினை நடத்த உள்ளது.

குறிப்பிட்ட நேரத்தில் தொலைதொடர்புத் துறை மற்றுமுள்ள ஊடகங்கள் வாயிலாக வெளியிடப்படும் அறிவிப்பானது, குறுகிய நேரத்தில் நாட்டு மக்களைச் சென்றடைகிறதா எனப் பரிசோதிக்கும் பொருட்டும், தகவற்கட்டுறுத்தல் குறித்த ஆய்வுக்காகவும் இச்சோதனை நடத்தப்படுகிறது.

எதிர்வரும் நவம்பர் ஒன்பதாம் நாள், கிழக்கு அளவீடு பிற்பகல் இரண்டு மணிக்கு இச்சோதனை நடத்தப்பட உள்ளது. அதன் போழ்து, வானொலி மற்றும் தொலைக்காட்சி ஒலிபரப்பில் இடையூடாக செய்தி வெளியிடப்படும். எனவே, இவ்விபரத்தை உற்றார், உறவினர், அக்கம் பக்கம் என அனைவருக்கும் எடுத்துச் செல்ல வேண்டுகிறது மத்திய அறுந்தருண மேலாண் முகமை(FEMA).

Here are specific items we want everyone to know about the test:

  • It will be conducted Wednesday, November 9 at 2:00 PM EST.
  • It will be transmitted via television and radio stations within the U.S., including Alaska, Hawaii, the territories of Puerto Rico, the U.S. Virgin Islands, and American Samoa.

Similar to local emergency alert system tests, an audio message will interrupt television and radio programming indicating: “This is a test.” When the test is over, regular programming will resume.


http://www.fema.gov/eastest/

4 comments:

சின்னப் பையன் said...

ஓ. அப்படியா.

நன்றி.

இப்பவே ட்விட்டரில் இணைப்பு கொடுத்துடறேன்.

R.DEVARAJAN said...

அருந்தருணம் - சரியான சொல்;
அருமையான தமிழாக்கம்.
'தருணம்' வடசொல் என்பரோ ?


தேவ்

பழமைபேசி said...

@@R.DEVARAJAN

வணக்கமுங்க ஐயா. ஆய்ந்து சொல்லுங்க நீங்களே.

நன்றியுடன்,
பழமைபேசி.

இராஜராஜேஸ்வரி said...

குறுகிய நேரத்தில் நாட்டு மக்களைச் சென்றடைகிறதா எனப் பரிசோதிக்கும் பொருட்டும், தகவற்கட்டுறுத்தல் குறித்த ஆய்வுக்காகவும் இச்சோதனை நடத்தப்படுகிறது.

nice information..