இனிமைத் தமிழ்மொழி எமது - எமக்
கின்பந் தரும்படி வாய்த்தநல் அமுது!
கனியைப் பிழிந்திட்ட சாறு - எங்கள்
கதியில் உயர்ந்திட யாம்பெற்ற பேறு!
தனிமைச் சுவையுள்ள சொல்லை - எங்கள்
தமிழினும் வேறெங்கும் யாங்கண்டதில்லை!
நனியுண்டு நனியுண்டு காதல் - தமிழ்
நாட்டினர் யாவர்க்குமே தமிழ் மீதில்
தமிழுண்டு தமிழ் மக்க ளுண்டு - இன்பத்
தமிழுக்கு நாளும் செய்வோம் நல்ல தொண்டு
தமிழ் என்று தோள் தட்டி ஆடு! நல்ல
தமிழ் வெல்க வெல்க என்றே தினம் பாடு!
--பாவேந்தர் பாரதிதாசன்
--பாவேந்தர் பாரதிதாசன்
இப்படிதாங்க எங்க வீட்ல, ஞாயிறுதோறும் தமிழ் வகுப்பு நடக்கு!! இஃகி இஃகி!!
7 comments:
ஆகா!
தமிழமுது பருகினேன் நண்பரே..
என்ன பாடம் இது?
அப்படிங்கறது பாட்டா பாடமான்னு கேட்கறேன்..,
என்னதான் முயற்சி செய்தாலும் மண்ணின் மனம் தெரிகிறது தல வாழ்த்துக்கள்
தேவியர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்க்ள. இன்று மூவருக்கும் விடுமுறை.
நன்றி.
எப்படி இதெல்லாம். ஆச்சரியப்பட வைக்கிறாள். வெல்க . As she says " Long live "
சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர் நன்றாகவே சொல்லிக் கொடுக்கின்றார். ஆனால் ஓரிடத்தில்(3:34), விலங்கின் உறுப்பு என்பதை விளங்கின் உறுப்பு என்று உச்சரிக்கின்றார். அதைத் தொடர்ந்து வால், வாள் மற்றும் வெல்லம், வெள்ளம் என்பதின் வித்தியாசத்தைக் கேட்கிறார். சொல்லிக் கொடுப்பவர்கள், தமது உச்சரிப்பில் கவனமாக இருந்தால்தான், கேட்பவர்களுக்கு சரியாக சென்றடையும். இது குற்றம் சொல்ல அல்ல, ஓர் அபிப்பிராயமே.
By: vashishtarthamizhl
மிக எழிலாய் இருந்தது பழகுத்தமிழ்.
Post a Comment