11/02/2010

அமெரிக்காவில் கழுதையா? யானையா??
இன்றைய இரவின் நாயகன்

வேழம்
களிறு
பிடி
களபம்
மாதங்கம்
கைம்மா
உம்பர்
வாரணம்
அஞ்சனாவதி
அத்தி
அத்தினி
அரசுவா
அல்லியன்
அறுபடை
ஆம்பல்
ஆனை
இபம்
இரதி
குஞ்சரம்
இருள்
தும்பு
வல்விலங்கு
எனும்
யானையா?

இராடம்
கத்தை
கர்த்தபம்
பெருவாயன்
எருவை
எனும்
கழுதையா??


அமெரிக்காவின் நாளைய கதாநாயகன் மார்க் ரூபியோ!

24 comments:

philosophy prabhakaran said...

உங்கள் வலைப்பூவிற்கு இன்றுதான் முதல் வருகை தருகிறேன்... சிறப்பாக இருக்கிறது... இனி பின்தொடர்கிறேன்... ஆனால் இப்போது எழுதிய இது... பதிவா... கவிதையா... என்று ஒன்றும் புரியவில்லை... ஒருவேளை அமெரிக்காவின் உள்ளூர் அரசியலை பற்றி எதோ எழுதியிருக்கிறீர்களோ...

பழமைபேசி said...

வாங்க நண்பரே, வணக்கம்.

அமெரிக்காவில் இன்று தேர்தல் நாள். நடுவண் அரசின் இரு அவைகளையும் எந்தக் கட்சி கைப்பற்றப் போகிறது என்பதில் கடும் இழுபறி!

அரசூரான் said...

அமெரிக்காவுல எது வருதுன்னு தெரியாது. உங்க பதிவில் ஜெயித்தது யானைதான், பின்ன 23 பேரு இருக்கே. பஞ்ச கல்யாணிக்கு (பழமை இது லிஸ்ட்ல வரல... ஏன்?) ஆறு பேருதான் இருக்கு. ஆக யானைதான்... :)

பழமைபேசி said...

@@அரசூரான்

கழுதை ஓடோடி வருதே....

Creations,Kitchen said...

நாங்க ஓட்டு போட்டாச்சு அப்ப நிங்க?

Sethu said...

யானை உருவத்தில பெருசுன்னு இவ்வளவு பெயரா? இதிலேர்ந்தே தெரியுது நீங்க யானை பக்கம்ன்னு.

தாராபுரத்தான் said...

வணக்கமுங்க.

பட்டினத்துப்பிள்ளை said...

>>பெலோசி அம்மாவுக்கு ஆப்பு!
இதைதான் எதிர்பார்த்தேன்.
ராமதாசுக்கு (பா.மா.கா) பிறகு எனக்கு பிடிக்காத ஒரே அரசியல்வாதி.

பட்டினத்துப்பிள்ளை

பழமைபேசி said...

ஒபாமா அண்ணனுக்குத் தலைவலி ஆரம்பம்; பெலோசி அம்மாவுக்கு வழி அனுப்புதல்!

ங்கொய்யால... பிரச்சினை எல்லாம் தீர்ந்திடுமா? மக்கா... மக்கா!!

பழமைபேசி said...

@@பட்டினத்துப்பிள்ளை

ஆகா!

பழமைபேசி said...

க்கும்.... இடியாப்பச் சிக்கல்ல கொண்டாந்து வுட்டுட்டாய்ங்க.... கீழ்சபையில யானையாம்.... மேல்சபையில கழுதையாம்... இந்த இரண்டுக்கும் ஒரு பாகனாம்.... ஏன்யா, அந்தாள் கழுதை சவாரி செய்வாரா? யானை சவாரி செய்வாரா??

போங்யா.... நீங்களும், உங்க ஓட்டும்... நான் நித்திரை கொள்ளப் போறேன்....

யாதவன் said...

என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

வழிப்போக்கன் - யோகேஷ் said...

அத்த செய்ங்க்ண்னே........

வானம்பாடிகள் said...

யானை குட்டி போடும் போடும்னு பார்த்துட்டிருந்தா லத்தி போட்டுச்சாம்..சொலவடை:))

சங்கவி said...

என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

பழமைபேசி said...

ஆண்டு இறுதி நெருங்குது.... வாசிங்டன்ல இனி எல்லாமே தலைகீழ்... பங்குச் சந்தையில கோலாகலமா? அலங்கோலமா??

எனக்கென்னவோ நம்பிக்கை இல்லை... இன்னைக்கே பார்க்கலாம் கூத்தை...

ராஜ நடராஜன் said...

உங்களுக்கெல்லாம் கதாநாயகன்கள் எப்படித்தான் மாட்டுறாங்களோ?

பாரதிராஜா கிராமத்தைக் காட்டுறேன்ல துவங்கியது இப்ப தமிழ் கதாநாயகன்கள் கட்டெறும்பு மாதிரி தெரியறாங்க.

சரி அதுதான் அப்படின்னா டெல்லி கதாநாயகன்கள்.....சொல்லவே வேண்டாம்:)

ராஜ நடராஜன் said...

//உங்கள் வலைப்பூவிற்கு இன்றுதான் முதல் வருகை தருகிறேன்... //

விடாதீங்க!விடாதீங்க!புடிங்க இவரை.

ராஜ நடராஜன் said...

//ங்கொய்யால... பிரச்சினை எல்லாம் தீர்ந்திடுமா? மக்கா... மக்கா!!//

என்னாதிது? எந்தூரு பழம?

பழமைபேசி said...

அண்ணா, நடராசு அண்ணா, நல்லா இருக்கீங்ளா??

வருண் said...

Senate is barely belongs to "kicking donkey". But house is captured by GOP. Well, no surprises!

ILA(@)இளா said...

Well, no surprise//?
wth, senate is still with Dem's. I did n't expect that. i thought it would be a clean sweep.

dondu(#11168674346665545885) said...

டோண்டு ராகவனுக்கு ரிபப்ளிக்கன் கட்சிதான் பிடிக்கும் என்பதை லோகமே அறியுமே, பார்க்க: http://dondu.blogspot.com/2008/06/blog-post_5665.html

அன்புட்அன்,
டோண்டு ராகவன்

கறூக்கருவா said...

எந்த நாயி எங்க போன என்ன கொங்க நாயி குட்டி போட்ட என்னங்கறது மாதிரி தேர்தல்ல வந்தா என்ன போனா என்ன இன்னுமொரு 2 வருசத்துக்கு நம்ம யாரும் அசச்சுக்க முடியதுனுட்டு ஒபாமா நேரா கெளம்பி இங்க வந்ததுமில்லம ஒரு 43 ஆயிரம் கோடிக்கு நம்ம தலையில கட்டிட்டு பஹுத் தன்யவாத்துனுட்டு கெளம்பி போயிட்டாரு இதுல கழுதையவது யானையவது ஜனநாயகமாவது குடியரசாவது நம்ம பொருத்தவரை எல்லாம் ஒன்னுதான்.