6/25/2010

தமிழுக்கில்லை தட்டுப்பாடு!

இவ்வாண்டுக்கான விருந்தினர் சென்றாண்டு விருந்தினருடன்!

தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு

எத்தனை சபைகள் கண்டோம்
எத்தனை எத்தனை பகையும் கண்டோம்
அத்தனையும் சூடங்காட்டிச் சுட்டுப் போடு

மெட்டுப் போடு மெட்டுப் போடு
என் தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு
மெட்டுப் போடு மெட்டுப் போடு
அட கடலுக்குண்டு கற்பனைக்கில்லை கட்டுப்பாடு

தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு
ஒரு சரக்கிருக்குது முறுக்கிருக்குது மெட்டுப் போடு

இது மக்கள் பாட்டு தன்மானப் பாட்டு
இது போராடும் உங்கள் வாழ்க்கைப் பாட்டு
கல்லூரிப் பெண்கள் பாடும் கன்னிப்பாட்டு
சபைகளை வென்று வரும் சபதம் போட்டு
நாம் கட்டும் பாட்டு ஈரம் தட்டும் பாட்டு
கட்டிச் செந்தேனாய் நெஞ்சில் சொட்டும் பாட்டு
தாய்ப்பாலைப் போல் ரத்தத்தில் ஒட்டும் பாட்டு
தமிழ் மக்கள் வீட்டைச் சென்று தட்டும் பாட்டு

மெட்டுப் போடு மெட்டுப் போடு
என் தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு
மெட்டுப் போடு மெட்டுப் போடு
அட கடலுக்குண்டு கற்பனைக்கில்லை கட்டுப்பாடு

இனி கண்ணீர் வேண்டாம் ஒரு கவிதை செய்க
எங்கள் கானங்கள் கேட்டுக் காதல் செய்க
நம் மண்ணுக்கும் விண்ணுக்கும் பாலம் செய்க
நலம் பெற வேண்டும் என்றால் நன்மை செய்க
நம் பூமி மேலே புது பார்வை கொள்க
நம் இயற்கை மேல் இன்னும் இச்சை கொள்க
கொஞ்சம் நிலவுக்கு நேரம் வைத்து தூக்கம் கொள்க
பாறைக்குள் வேரைப் போலே வெற்றி கொள்க

மெட்டுப் போடு மெட்டுப் போடு
என் தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு
மெட்டுப் போடு மெட்டுப் போடு
அட கடலுக்குண்டு கற்பனைக்கில்லை கட்டுப்பாடு

தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு
ஒரு சரக்கிருக்குது முறுக்கிருக்குது மெட்டுப் போடு
எத்தனை சபைகள் கண்டோம்
எத்தனை எத்தனை பகையும் கண்டோம்
அத்தனையும் சூடங்காட்டிச் சுட்டுப் போடு

மெட்டுப் போடு மெட்டுப் போடு
என் தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு
மெட்டுப் போடு மெட்டுப் போடு
அட கடலுக்குண்டு கற்பனைக்கில்லை கட்டுப்பாடு
--கவியரசு வைரமுத்து

5 comments:

கயல் said...

அழகான பாட்டு. மிகவும் பிடிக்கும் எமக்கு. நன்றி பகிர்ந்தமைக்கு!
:)

நிலாமதி said...

இது மக்கள் பாட்டு தன்மானப் பாட்டு
இது போராடும் உங்கள் வாழ்க்கைப் பாட்டு
கல்லூரிப் பெண்கள் பாடும் கன்னிப்பாட்டு
சபைகளை வென்று வரும் சபதம் போட்டு
நாம் கட்டும் பாட்டு ஈரம் தட்டும் பாட்டு
கட்டிச் செந்தேனாய் நெஞ்சில் சொட்டும் பாட்டு
தாய்ப்பாலைப் போல் ரத்தத்தில் ஒட்டும் பாட்டு
தமிழ் மக்கள் வீட்டைச் சென்று தட்டும் பாட்டு...................

....அழகான வரிகள். பகிர்வுக்கு நன்றி .

a said...

இப்பாடலில் வரும் சாக்ஸபோன் இசை எனக்கு மிகவும் பிடிக்கும்...

vasu balaji said...

எனக்கு ரொம்பப் பிடித்த பாட்டு இது. கத்ரி கோபால்நாத்தின் சாக்ஸஃபோன் ஆஹா!!

க.பாலாசி said...

//நம் மண்ணுக்கும் விண்ணுக்கும் பாலம் செய்க
நலம் பெற வேண்டும் என்றால் நன்மை செய்க//

அடடா....