6/18/2010

பிறகென்ன?

விடியவிடிய கிளிப்பிள்ளைக்கான பாடம்
தனிக்குடித்தனக் கனவு மிதப்பில்
விடிந்ததும் மூழ்கிய படகு
தன்தாயின் மடியில் கணவன்!

*****

வாழ்க்கைச் சுவரில் தீட்டிய
நியதியின் சித்திரத்தில்
முகமாய் மிளிர்கிறது நம்பிக்கை!

*****


மணல் வடிவங்களை மாற்றியபடியே
இருக்கிறது பாலைக் காற்று;

அதற்குக் கொள்ளை ஆசை
எல்லா வடிவங்களின் மேலும்!

*****

வீசியடித்த காற்றைப் புணர்ந்து
பின் அதில் கரைகிறது முகில்
அர்ப்பணிப்பின் குழந்தை மழை!

*****

இது எதிர் மாதிரி... கதிர் இங்கே!

33 comments:

க.பாலாசி said...

ஆகா.....

vasu balaji said...

பாட்டுக்கு பாட்டு மாதிரி மாப்புக்கு மாப்பு:)) அருமை

VELU.G said...

என்னங்கய்யா இப்படி போட்டுத்தள்ளறீங்க

க.பாலாசி said...

கடைசியொன்றும் நெஞ்சில் நிலைக்கிறது சிறந்த வடிவமாய்...

ஈரோடு கதிர் said...

வேறென்ன?

ஈரோடு கதிர் said...

எல்லாமே நல்லாயிருக்கே..

இதுக்கு ஒரு எதிர் எழுதலாம் போல் இருக்கே

ஈரோடு கதிர் said...

எப்படியோ போகட்டும்

இன்னிக்கு மட்டும் அமெரிக்க சந்தை விழுகாட்டி... இனிமே அன்னந்தண்ணி கெடையாது ஆமா...

போங்க...போய் பொறுப்பா எதுனாச்சும் பண்ணுங்க

நேசமித்ரன் said...

அருமை! மிகுந்த அர்த்தங்கள் பொதிந்து கிடக்கின்றன சொற்கள் இடையே

கலக்குங்க சார்

பனித்துளி சங்கர் said...

அனைத்தும் அருமை

சின்னப்பயல் said...

இதுக்குப் பெயர் தான் எதிர்"வென"..:-)

Thekkikattan|தெகா said...

நன்றாக வந்துள்ளது, பழம...

RAMYA said...

ம்ம்ம் பாட்டுக்கு பாட்டெடுத்து அப்படி யோசிச்சு ரெண்டு பெரும் எழுதறீங்களோ :)

நல்லா இருக்கு :)

மாதேவி said...

நன்றாக இருக்கிறது.

Sabarinathan Arthanari said...

இது எதிர் மாதிரி...

:)

நசரேயன் said...

அண்ணே நீங்களுமா?

priyamudanprabu said...

விடியவிடிய கிளிப்பிள்ளைக்கான பாடம்
தனிக்குடித்தனக் கனவு மிதப்பில்
விடிந்ததும் மூழ்கிய படகு
தன்தாயின் மடியில் கணவன்!
////////////

ஹ ஹா

நடத்துங்க நடத்துங்ஜ

ராஜ நடராஜன் said...

இதுதான் விசயமா?வானம்பாடிகள் வீட்டுக்கு போகும் போது ஒரே மப்பு!

ராஜ நடராஜன் said...

//அண்ணே நீங்களுமா?//

அப்படின்னா?

Jerry Eshananda said...

நடத்துங்கப்பு...நடத்துங்க...

Paleo God said...

"பிறகென்ன?"//

ஓட்டப்போட்டுட்டு போய்கிட்டே இருக்கவேண்டியதுதான்! :))

//வேறென்ன?

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

முதல் கவிதை கலக்கல்..

மற்ற மூன்றும்.. வெவ்வேறு கோணத்தில் அழகாக..

பழமைபேசி said...

@@ க.பாலாசி

வாங்க பாலாசி!

@@வானம்பாடிகள்

அண்ணன் எவ்வழியோ, தம்பி அவ்வழி!

@@VELU.G

மாப்பு கூட ஒரு விளையாட்டுங்க... விளையாட்டு!!


// ஈரோடு கதிர் said...
இன்னிக்கு மட்டும் அமெரிக்க சந்தை விழுகாட்டி... //

மாப்பு இன்னைக்கி இல்லாட்டி, நாளைக்கி அது கீழ வந்துதான ஆவணும்??

//போங்க...போய் பொறுப்பா எதுனாச்சும் பண்ணுங்க
//

பொறுப்பா பரிப்பிதான் செய்யணும் இனி....இஃகி!


@@நேசமித்ரன்

நன்றிங்க கவிஞரே!

@@!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫

வணக்கங்க சங்கர்!


@@Thekkikattan|தெகா

நன்றியோ நன்றி!

@@சின்னப்பயல்

எதிர் இடுகை மட்டுமே!! இஃகி!!!

@@RAMYA

ரெண்டு பேர் மட்டும் அல்லங்க!


@@மாதேவி

நன்றிங்க!

@@Sabarinathan Arthanari

நீங்கதான் சரியாப் புரிஞ்சுகிட்டீங்க!

@@நசரேயன்

அண்ணே, நீங்களுமா??

@@பிரியமுடன் பிரபு

இஃகிஃகி!

//ராஜ நடராஜன் said...
//அண்ணே நீங்களுமா?//

அப்படின்னா?
//

இதெல்லாம் அரசியல்ல....??

@@ஜெரி ஈசானந்தன்.

தலைமையார், எங்க ஆளே காணோம்??

@@【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║

நன்றிங்க!

//இராமசாமி கண்ணண் //

சிரிப்பு...இஃகி!

@@ச.செந்தில்வேலன்

நன்றிங்க தம்பி!

நிலாமதி said...

அழகான் கவிதைகள். கடைசி வரிகள் அருமை. நல்ல கற்பனை வளம். என் பாராடுக்கள்.

Anonymous said...

அத்தனையும் அருமை. அழகு.
ஒரிஜினல் இன்னும் படிக்கலை.

தாராபுரத்தான் said...

எல்லோரும் ஒரு முடிவு பண்ணி கலக்கறீங்களே..

Thamira said...

அழகழகான கவிதைகள்.

(ஆனால் எதிர்கவிதைன்னெல்லாம் ஏத்துக்கமுடியாது. ஒழுக்கமாக எழுதி எதிர் இலக்கணத்தை மீறியிருக்கிறீர்கள். :-))

விக்னேஷ்வரி said...

அழகான, தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகள்.

goma said...

விடியவிடிய கிளிப்பிள்ளைக்கான பாடம்
தனிக்குடித்தனக் கனவு மிதப்பில்
விடிந்ததும் மூழ்கிய படகு
தன்தாயின் மடியில் கணவன்!

அருமை.ஒரு நாவலே இரண்டு வரியில் எழுதிவிட்டீர்கள்

அவளுக்கும்
இதே போல் ,தன் மடியில், தன் மகன் விழும்போது, பாசம் புரியும்

Thenammai Lakshmanan said...

மணல் வடிவங்களை மாற்றியபடியே
இருக்கிறது பாலைக் காற்று;
அதற்குக் கொள்ளை ஆசை
எல்லா வடிவங்களின் மேலும்!//

அருமை அருமை பழமை பேசி..:))

அன்புடன் அருணா said...

இந்த எதிர் மாதிரி நல்லாருக்கே!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

அருமை!


வீசியடித்த காற்றைப் புணர்ந்து
பின் அதில் கரைகிறது முகில்
அர்ப்பணிப்பின் குழந்தை மழை!
//

புணர்ந்த உடனேயே குழந்தை மழையா?
அவ்வ்வ்வ்!

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

அவரோட கவிதை, பிடிச்சிருந்தாலும், ஒரு மாதிரி வெறுமை உணர்வக் கொண்டாந்தது.. உங்களோடது அப்படியே எதிர்மறை.. வெறுமைய நிரப்பிட்டீங்க.. தலைப்பு கூட அப்படியே அந்த வெறுமைக்கு எதிர்மறையா இருக்குதுன்னு நினைக்கறேன்.. இவ்வளவு இருக்கும் போது பிறகென்னன்னு கேக்கற மாதிரி :))

பழமைபேசி said...

//எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...
அவரோட கவிதை, பிடிச்சிருந்தாலும், ஒரு மாதிரி வெறுமை உணர்வக் கொண்டாந்தது.. உங்களோடது அப்படியே எதிர்மறை.. வெறுமைய நிரப்பிட்டீங்க.. தலைப்பு கூட அப்படியே அந்த வெறுமைக்கு எதிர்மறையா இருக்குதுன்னு நினைக்கறேன்.. இவ்வளவு இருக்கும் போது பிறகென்னன்னு கேக்கற மாதிரி :))//

அழகா சொன்னீங்க.... இதேதான் என் மனசிலயும் இருந்தது.... எதிர் இடுகை என்பது, எதிரான கருத்துகளைச் சொல்வதே அன்றி, ஒன்றை நையாண்டி செய்வதும், எள்ளல் செய்வதும், பகடியாக்குவதும் அல்ல....

வேறேன்ன? X இதுதான், பிறகென்ன?

ஏமாற்றம்(ஏமம்+ஆற்றுகை) X எய்தாற்றுகை(எய்து + ஆற்றுகை)

நிராசை X ஆசை

ஆயாசகம் X அர்ப்பணிப்பு

சுருக்கமாச் சொன்னா, அரைக் கோப்பை குறைவு X அரைக் கோப்பை நிறைவு