11/04/2009

கொழுத்தவனுக்குக் கொள்ளு! எளைச்சவனுக்கு எள்ளு!!

”ஆறை நாட்டானின் அலம்பல்கள் எழுத கால அவகாசம் இல்லை; புத்தகம் படிக்க நேரம் இல்லை; கடுமையான களைப்பு, ஆமாங்க பனிரெண்டு மணி நேர வேலை இன்னைக்கு! ஆமா, காலம் அப்படின்னா என்ன? நேரம் அப்படின்னா என்ன?? இஃகிஃகி, அதை நீங்க சித்த, பின்னூட்டத்துல சொல்லிட்டுப் போங்க மாப்பு!”

“மழை பேயுது மழை பேயுது நெல்லை வாருங்கோ,
முக்காப்படி அரிசி போட்டு முறுக்கு சுத்துங்கோ,
ஏரு ஓட்டுற மாமனுக்கு எண்ணி வையுங்கோ,
சும்மா இருக்குற மாமனுக்குச் சூடு போடுங்கோ!”


“பாத்தீகளா? நாந்தேன் வேலையால இருந்து இப்பத்தான் வர்றேன்னு சொல்லுறேன். கேட்காமக் கொள்ளாம, சூடுகீடுன்னு சொல்லிகிட்டு? இதுக்கு எல்லாம் என்னான்னு சொல்லுங்க பாக்குலாம்?!”

“என்ன, பவானி சம்பைன்னா உங்களுக்கு இளக்காரமா? எதுக்கு என்னான்னு சொல்லோணும்??”

“நண்டுக்கு?”

“குஞ்சு”

“கிளிக்கும் கீரிக்கும்?”

“பிள்ளை”

“அணிலுக்கும் முயலுக்கும்?”

”குட்டி”

“யானைக்கு?”

“களபம்”

“பேனுக்கு?”

“செள்”


”அட, மனுசனுக்கு?”

”மகவு!”

“பயிருக்கு?”

“நாற்று”

“மரத்துக்கு?”

“கன்று”

“தென்னைக்கு?”

“பிள்ளை”

“தேங்காய்க்கு?”

“குரும்பை”

“மாங்காய்க்கு?”

“வடு”

“அவரைக் காய்க்கு?”

“பிஞ்சு”

“வாழைக்கு?”

“கச்சல்”

“அட, நயமாத்தேன் சொல்லிப்புட்டீங்களே மாப்பு?”

”நித்திரை நேரத்துல, உங்க குணஞ் சித்தங்கூட ஓயுலியா?”

“அது ஓயுறதெல்லாம் இருக்கட்டு;

வெட்டினதால் த்ப்பி விட்டேன்,
வெட்டாவிட்டால் செத்திருப்பேன்!

செத்ததனால் தப்பிவிட்டேன்
சாகாவிட்டால் செத்திருப்பேன்!

வந்ததனால் வரவில்லை
வராவிட்டால் வந்திருப்பேன்!
நான் யாரு?”

கோயமுத்தூர் வந்த மாப்புளை, நான் யாருன்னு சொல்லாமக் கொள்ளாம ஈரோட்டுக்கு ஓடுறதைப் பாருங்க...இஃகிஃகி!!

20 comments:

யாசவி said...

//“மழை பேயுது மழை பேயுது நெல்லை வாருங்கோ,
முக்காப்படி அரிசி போட்டு முறுக்கு சுத்துங்கோ,
ஏரு ஓட்டுற மாமனுக்கு எண்ணி வையுங்கோ,
சும்மா இருக்குற மாமனுக்குச் சூடு போடுங்கோ!” //

popular when I was kid

nice:)

vasu balaji said...

மாப்பு மழையின்னு முடங்கி தூங்கிடுறாரு போல.

சொல்றதுக்கு
பழமை
படிச்சிக்கிட
நாம

நான் யாரா. சொல்லமாட்டம்ல! இஃகி இஃகி. எல்லாரும் சொன்னப்புறம் சொல்றோம்.

அப்பாவி முரு said...

//நான் யாரு?”//

இளநீர்?

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//“மழை பேயுது மழை பேயுது நெல்லை வாருங்கோ,
முக்காப்படி அரிசி போட்டு முறுக்கு சுத்துங்கோ,
ஏரு ஓட்டுற மாமனுக்கு எண்ணி வையுங்கோ,
சும்மா இருக்குற மாமனுக்குச் சூடு போடுங்கோ!” //

மறந்து போன பல பாடல்களை நினைவுபடுத்துகிறீர்கள். நன்றி.

ஆ.ஞானசேகரன் said...

//காலம் அப்படின்னா என்ன? நேரம் அப்படின்னா என்ன?? இஃகிஃகி, அதை நீங்க சித்த, பின்னூட்டத்துல சொல்லிட்டுப் போங்க //


காலமுனா என்னா?

வெண்ணிற இரவுகள்....! said...

//வெட்டினதால் த்ப்பி விட்டேன்,
வெட்டாவிட்டால் செத்திருப்பேன்!

செத்ததனால் தப்பிவிட்டேன்
சாகாவிட்டால் செத்திருப்பேன்//
நன்றாய் இருந்தது எப்படியும் sangu

ஆ.ஞானசேகரன் said...

வழக்கம் போலவே........ அருமை

பிரபாகர் said...

நல்லா குழப்பிட்டீங்க... ஏதோ நம்மால முடிஞ்சது. சரியா பாருங்க...

//வெட்டினதால் த்ப்பி விட்டேன்,
வெட்டாவிட்டால் செத்திருப்பேன்!

களை, பயிர்?

செத்ததனால் தப்பிவிட்டேன்
சாகாவிட்டால் செத்திருப்பேன்!

சாவு?

வந்ததனால் வரவில்லை
வராவிட்டால் வந்திருப்பேன்!
நான் யாரு?”//

இரவு?

பிரபாகர்.

ஈரோடு கதிர் said...

ஈரோடு..
பவானி....
சம்பை......
எங்க ஊருக்கு வழி சொல்றாரே..


என்ன ஆப்பு காத்துக்கிட்டிருக்குனு தெரியலியே.....

எறும்பு said...

////வெட்டினதால் த்ப்பி விட்டேன்,
வெட்டாவிட்டால் செத்திருப்பேன்!

செத்ததனால் தப்பிவிட்டேன்
சாகாவிட்டால் செத்திருப்பேன்//

இரவில் சந்திக்க வரச் சொன்னான் காதலன்; மழை பிடித்துக்கொண்டது. இருட்டில் வழி தெரியவில்லை. நல்லவேளை; மின்னல் வெட்டியது. அந்த வெளிச்சத்தில் கிணற்றில் விழாமல் தப்பித்தாள். பாம்பை மிதித்துவிட்டாள்; நல்ல காலம், அது செத்துக்கிடந்தது; அதனால் பிழைத்தாள். பாதிவழியில் திரும்பிவிட்டாள்; மாதவிலக்கு வந்துவிட்டது.

எறும்பு said...

காதலி காதலனுக்குச் சொன்ன விடுகதை இது

Unknown said...

//.. “மழை பேயுது மழை பேயுது நெல்லை வாருங்கோ,
முக்காப்படி அரிசி போட்டு முறுக்கு சுத்துங்கோ,
ஏரு ஓட்டுற மாமனுக்கு எண்ணி வையுங்கோ,
சும்மா இருக்குற மாமனுக்குச் சூடு போடுங்கோ!” ..//

ஒவ்வொருமுறை மழை பெய்யும் போதும் இந்த பாட்ட பாடி இருக்கேன்.. :-)

நசரேயன் said...

அண்ணே ஊரிலே மழை எப்படி ?

Anonymous said...

//யானைக்கு?”

“களபம்”
//

அப்ப யானைக்கு குட்டியில்லியா

அரசூரான் said...

எண்ணிய காரியம் முடிக்க திட்டமிட்ட நேரம் 'காலம்'. அதை நேர்த்தியுடன் செலவிட்ட (வெட்டி பொழுதாய் போக்காமல்) காலம் 'நேரம்'. அதனால்தான் அதை 'காலம் நேரம்' பார்த்து செய்தல் என்பது வழக்கு...

கண்ணுக்கு மை அழகு,
அவரைக்கு பூ அழகு
பழமைக்கு...
அவரெழுதும் தமிழழகு

தாராபுரத்தான் said...

சொல்லாமக் கொள்ளாம ஈரோட்டுக்கு ஓடுறதைப் பாருங்க...இஃகிஃகி!!

பழமைபேசி said...

@@யாசவி

நன்றிங்க யாசவி!

@@வானம்பாடிகள்

எறும்பு பட்டையக் கிளப்பி என்னை ஏமாற வெச்சிட்டாங்க பாருங்க....அவ்வ்வ்... நான் யாரும் சொல்ல மாட்டாங்கன்னு இருந்தனே?!

@@அப்பாவி முரு

அடுத்த முறை வெற்றி பெற வாழ்த்துகள்!

@@ச.செந்தில்வேலன்(09021262991581433028)

நன்றிங்க தம்பி!.

@@ஆ.ஞானசேகரன்

மேலதிகத் தகவலுக்கு நன்றிங்க!

@@வெண்ணிற இரவுகள்....!

இஃகிஃகி, நன்றிங்க!

@@பிரபாகர்

முயற்சிக்கு நன்றிங்க!

@@கதிர் - ஈரோடு

படுவா மாப்பு, ஒரு முயற்சியும் எடுத்த மாதிரி தெரியலையே? :-(

@@எறும்பு
வாழ்த்துகள், அதிர்ந்து போய்ட்டேன்! மிக்க நன்றிங்க!!

@@பட்டிக்காட்டான்..
நன்றிங்க!

//நசரேயன் said...
அண்ணே ஊரிலே மழை எப்படி ?
//

வாங்க தளபதி, கூதல்தான் கொல்லுது!

@@சின்ன அம்மிணி

ஆமாங்கோ, பலாவுக்கு மூசு!

@@அரசூரான்

போட்டுத்தாக்குங்க, மாப்பு நல்லாப் படிங்க நம்ம இராசா சொன்னதை!

@@அப்பன்

வாங்கோ வாங்கோ நம்மூர்!

vasu balaji said...

/படுவா மாப்பு, ஒரு முயற்சியும் எடுத்த மாதிரி தெரியலையே? :-(/

இல்லிங்க அவரும் பிரபாகரும் 23 x 7 யோசிக்கிறாங்க

குறும்பன் said...

இப்பவும் எனக்கு நினைவில் இருக்கும் பாட்டில் ஒன்னு \\மழை பேயுது மழை பேயுது நெல்லை வாருங்கோ,\\

\\“யானைக்கு?” “களபம்”, “வாழைக்கு?” “கச்சல்” \\ புதிதாக தெரிந்து கொண்டேன்.

மரத்துக்கு செடி என்பதையும் சொல்லாமில்லையா??

பசு\எருமைக்கு கன்று, கோழிக்கு குஞ்சு என்பதை சொல்லாம விட்டுட்டீங்களே. ஞாயமா???

எறும்பு சொன்ன பதிலை எங்கயோ படித்த\கேட்ட நினைவு வருது ஆனா எறும்போட பதிலை படிக்கும் வரை நினைவுக்கு வரவில்லை.

பழமைபேசி said...

//பசு\எருமைக்கு கன்று, கோழிக்கு குஞ்சு என்பதை சொல்லாம விட்டுட்டீங்களே. ஞாயமா???//

க்கும்...கன்றுக் குட்டின்னு சொல்லி வழக்கை மாத்துறீங்களே...அப்ப, அதையும் சொல்ல வேண்டி வரும்...ஒன்னு கன்னுன்னு சொல்லணும்...இல்ல, குட்டின்னு சொல்லணும்...அதென்ன கன்னுக் குட்டி?