11/02/2009

நீராடாதிருந்தால் பிறர் பொறுப்பரோ?

ஒரு ஆறு ஏழு மாசத்துக்கு முன்னாடி, ஒரு நாள் அப்படியே சித்த பெரியவங்களோட ஊர்ப் பழமை பேசலாமுன்னு அவங்க கச்சேரியில நானும் கலந்துகிட்டேன். அப்ப நடந்த அளவளாவுதலைப் படிங்க மேல நீங்களும்!

“பழைய நடிகர்கள் போல அல்லாமல், புது நடிகர்கள் அனைவரும் ஜிம்முக்கு சென்று ஜம் என்று இருக்கிறார்கள் என்று அய்யா சொன்னது ரசிக்கும்படி இருந்தது!”

“இந்த சிக்ஸ் பேக், எய்ட் பேக்னு சொல்லறாங்களே அது இன்னா சாமி?”

“தேகப்பயிற்சி செய்பவனுக்கு, உடற்தசையெல்லாம் இறுகி, இடது மார்பிலும் வலது மார்பிலும் திட்டுகள் வெளிப்படும். இடது பக்கம் மூன்றும் வலது பக்கம் மூன்றும் வெளிப்படுகையில், அவன் அறுதிட்டு ஆடவன் ஆகிறான்!”

“ஓ சரி. அப்ப நான் போய் ஆடியில் நோக்கிட்டு வருகிறேன்!”

“ஆடி ஏன்? மாசியிலும் நோக்கலாமே?!”

“ஆடி ஒரு பளிங்கு, மாசியும் பளிங்கா?”

“ஆடும் நீர் ஆடாது இருந்தாலும் நோக்கலாமே?”

”ஆமாம், ஆமாம், நீர் ஆடினாலும் அழகு; ஆடாதிருந்தாலும் அழகு!”

“ஆடும் நீரே அன்றி, அலைகிற நீர், பாய்கிற நீர், இழிகிற நீர் எல்லாமும் நோக்கலாம்!”

”நீராடாதிருந்தால் பிறர் பொறுப்பரோ?”

“நான் ஆடினால் யார் பொறுப்பார்? அம்பலவாணன் ஆடலே ஆடல்!”

“நீராடாதிருக்க மூக்கில் விரல் வைப்பர்!”

“நீராடும் வைகையிலே நின்றாடும் மீனே...... இந்த பாடலில் மீன் எப்படி நின்றாடுகிறது?”

“நீரோடும் வைகை நதியில், எப்பொழுதும் ஆடிக்கொண்டிருக்கும் மீனைப் போன்றவளே..... இங்கு நின்று என்றால் எப்பொழுதும் என்பதும் பொருள்!”

“நதி வேகமாய் ஓடிக் கொண்டிருக்கிறது. மீன் அந்த பகுதியிலேயே இருக்க வேண்டும் என்றால் நிரோட்டத்தை எதிர்த்து நிற்க வேண்டும். பார்ப்பதற்கு மீன் அசையாமல், நீந்தாமல் இருப்பது போல் தெரிந்தாலும் அது நீரோட்டத்தை எதிர்த்து நீந்திக் கொண்டுதான் இருக்கிறது. அதனாலேயே அவ்விடத்தை விட்டு அகலாமல் இருக்க இயலுகிறது!”

”ஃக, இது!”

சரி, அப்படியே அந்த பாட்டும் படிங்க, கேளுங்க!



பார் மகளே பார்
விசுவநாதன், ராமமூர்த்தி


நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே
நெய்யூறும் கானகத்தில் கைகாட்டும் மானே
தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே
தெம்மாங்கு பூந்தமிழே தென்னாடன் குலமகளே.....

நீரோடும்....

மகளே உன்னை தேடி நின்றாளே மங்கை
இந்த மங்கல மங்கை

வருவாய் என்று
வாழ்த்தி நின்றாரே தந்தை
உன் மழலையில் தந்தை
நான் காதல் என்னும் கவிதை சொன்னேன்
கட்டிலின் மேலே!
அந்த கருணைக்கு நான் பரிசு தந்தேன்
தொட்டிலில் மேலே ....
ஆராரோ... ஆரிரரோ... ஆராரோ... ஆரிரரோ

நீரோடும்....

குயிலே என்று கூவி நின்றேனே உன்னை
என் குலக்கொடி உன்னை
துணையே ஒன்று தூக்கி வந்தாயே எங்கே
உன் தோள்களில் இங்கே
உன் ஒரு முகமும் திருமகளின்
உள்ளமல்லவா
உங்கள் இருமுகமும் ஒருமுகத்தின்
வெல்லமல்லவா
ஆராரோ... ஆரிரரோ... ஆராரோ... ஆரிரரோ

நீரோடும்....

22 comments:

ஆ.ஞானசேகரன் said...

பகிர்வு அருமை நண்பா...

அப்பாவி முரு said...

புரிஞ்சது ஆனா புரியலை.

ஆனாலும், நான் சனி நீராடுவது உண்மை.

பழமைபேசி said...

//அப்பாவி முரு said...
புரிஞ்சது ஆனா புரியலை.
//

நீல வண்ணத்துல பேசுறவரை, மத்தவங்க எல்லாம் சிலேடைல கலாய்க்குறாங்க... அவ்வளவுதான்! இஃகி!!

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//வாழ்த்தி நின்றாரே தந்தை
உன் மழலையில் தந்தை//

???

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//உங்கள் இருமுகமும் ஒருமுகத்தின்
வெல்லமல்லவா//

ஆனால் இரண்டு குழந்தைகளும் வெவ்வேறு ஆட்களில் வாரிசு (கதைப்படி)

vasu balaji said...

சிலேடையும் பாட்டும் அருமை. அப்புறம் மாப்பு தலைப்பு வைக்கிறப்ப இனிமே கவனம். நேத்து இடுகைக்கு மகுடம் தமிழ்மணத்துல. ஆனா தலைப்பால ஒரே சிரிப்பு.இஃகி இஃகி.கேள்வி, பதில், ஓட்டுன்னு என்னா வில்லத்தனம்.:))

நான் said...

அப்பாவி முரு said...

புரிஞ்சது ஆனா புரியலை.

same pinch

க.பாலாசி said...

இந்த சிக்ஸ் பேக்னா என்னன்னு இப்பத்தான் தெரியுது. விளக்கம் நன்று.

ஆடலுக்கான விளக்கங்கள் அருமை....

தாங்கள் குறிப்பிட்ட பாடலும் மிகவும் இனிமையான பாடலே....

நல்ல இடுகை...

நாகா said...

”ஃக, இது!”

எம்.எம்.அப்துல்லா said...

நெஞ்சை நனைச்சுட்டீங்க :)

Mahesh said...

//அறுதிட்டு ஆடவன்// அறுகட்டு ஆடவன்னும் சொல்லலாமோ??

தமிழ் நின்றாடுது !!

வெண்ணிற இரவுகள்....! said...

//நதி வேகமாய் ஓடிக் கொண்டிருக்கிறது. மீன் அந்த பகுதியிலேயே இருக்க வேண்டும் என்றால் நிரோட்டத்தை எதிர்த்து நிற்க வேண்டும். பார்ப்பதற்கு மீன் அசையாமல், நீந்தாமல் இருப்பது போல் தெரிந்தாலும் அது நீரோட்டத்தை எதிர்த்து நீந்திக் கொண்டுதான் இருக்கிறது. அதனாலேயே அவ்விடத்தை விட்டு அகலாமல் இருக்க இயலுகிறது!”

//
அற்புதமான பதிவு பகிர்வு

ஆரூரன் விசுவநாதன் said...

ரசனையான பதிவு......பகிர்விற்கு நன்றி

பழமைபேசி said...

@@ஆ.ஞானசேகரன்

நன்றிங்க ஞானியார்!

@@SUREஷ் (பழனியிலிருந்து)

மேலதிகத் தகவலுக்கு நன்றிங்க!

@@வானம்பாடிகள்

வாங்க பாலாண்ணே! மாப்பு தலைப்பா? அய்ய, நான் மாப்புவைச் சொல்லலை, இஃகி!!

@@கிறுக்கன்
நன்றிங்க!

@@க.பாலாசி
நன்றிங்க

@@நாகா
நன்றிங்க தம்பி!

@@எம்.எம்.அப்துல்லா
அண்ணே, வாங்க, நல்லா இருக்கீயளா?

@@Mahesh
சரியாச் சொன்னீங்கண்ணே, அப்படியுஞ் சொல்லலாம்.

@@வெண்ணிற இரவுகள்....!

நன்றிங்க

@@ஆரூரன் விசுவநாதன்
நெம்ப நாளா காணமுங்களே? நன்றிங்க!

vasu balaji said...

பழமைபேசி said...

/வாங்க பாலாண்ணே! மாப்பு தலைப்பா? அய்ய, நான் மாப்புவைச் சொல்லலை, இஃகி!!/

நானுமே மாப்புவ சொல்லலையே. தமிழ்மணம்தான் யார சொல்றாங்கன்னு பாருங்க சித்த இஃகி

பழமைபேசி said...

//வானம்பாடிகள் //

பாலான்ணே, இஃகிஃகி! அதுவும் உண்மைதானே? அவங்ககிட்ட நீதிய எதிர்பாத்து ஏமாந்து போற அரைலூசு நானும்தானே?!

Naanjil Peter said...

"நெய்யூறும் கானகத்தில் கைகாட்டும் மானே..."

தம்பி மணி
இதற்கு விளக்கம் கொடுத்தால் மகிழ்ச்சி.
நன்றி

பிரபாகர் said...

என்னை மிக மிக கவர்ந்த ஒரு பாடலை அழகிய விளக்கத்துடனும், காணொளியுடனும்... நீங்கள் அளித்த பாங்கு அருமைங்க.

பிரபாகர்.

பழமைபேசி said...

//naanjil said...
"நெய்யூறும் கானகத்தில் கைகாட்டும் மானே..."

தம்பி மணி
இதற்கு விளக்கம் கொடுத்தால் மகிழ்ச்சி.
நன்றி
//

கல்நெய் - Petrol
மண்நெய் - Tar

அதுபோல கானகத்துச் சதுப்பினால் நிலத்தில் ஊறும் நெய்... நெய்யூறும் கானகத்தில் இருக்கும் மான் போன்றவளே....


@@பிரபாகர்

நன்றிங்க பிரபாகர்!

தாராபுரத்தான் said...

வெல்லமல்லவா
ஆராரோ... ஆரிரரோ... ஆராரோ... ஆரிரரோ

ஜோதிஜி said...

நீரோட்டத்தை எதிர்த்து நிற்கும்

புதிய இசைக்கோர்வைகள் சில சமயம் உள்ளுற உற வைக்கும்.

பழைய பாடல் வரிகள் பல சமயம் உணர்வுகளை சமாதானப்படுத்தும்.

வரிகள் இரண்டு சமயத்தில் மட்டுமல்ல எப்போதும் சொறிந்து விட்டுக்கொண்டே இருக்கும்.

காரணம் அதிகம் ஊன்றி கவனிக்காத குறை.

ஒவ்வொரு முறையும் எவரோ ஒரு எழுத்தின் மூலம் இந்த வரிகளையும் அதன் உணர்ந்த உள்வாங்கியவைகளை படிக்கும் போது

இது போல எத்தனை தான் வாழ்க்கை அவசர ஓட்டத்தில் கவனிக்காமல் தவற விட்டு எதிர்நீச்சல் போட முடியாமல் அழுது தொலைத்து இருக்கிறோம் என்று உணர வைத்து விடுகிறது.

பழமைபேசி said...

// அப்பன் said...
வெல்லமல்லவா
ஆராரோ... ஆரிரரோ... ஆராரோ... ஆரிரரோ
//

நல்லாத்தான் பாடுறீங்க...இஃகி!

@@ஜோதிஜி. தேவியர் இல்லம்.

ப்ச், ஆமாங்க!