பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்கன்னு வாழ்த்திக் கேள்விப்பட்டு இருப்போம். அதுபத்திக் கவி காளமேகம் பாடினது, திருநள்ளாறு கோவில் வரைவுன்னு இரு வேறு பதிவுகள கடந்த காலங்கள்ல பதிஞ்சு இருந்தோம். இப்ப, இது மூனாவது பதிவு இது குறிச்சு.
சகல செல்வங்களும் தரும் இமயகிரிராஜ
தனயை மாதேவி! நின்னைச்
சத்யமாய் நித்ய முள்ளத்தில் துதிக்கும் உத்
தமருக்கு இரங்கி மிகவும்
அகில மதில் நோயின்மை கல்வி தன தானியம்
அழகு புகழ் பெருமை இளமை
அறிவுசந்தானம் வலிதுணிவு வாழ்நாள் வெற்றி
ஆகுநல்லூழ் நுகர்ச்சி
தொகைதரும் பதினாறு பேறும் தந்தருளி நீ
சுகானந்த வாழ்வளிப்பாய்.
சுகிர்த குணசாலி! பரிபாலி! அனுகூலி! திரி
சூலி! மங்கள விசாலி!
மகவுநான் நீதாய் அளிக்கொணாதோ? மகிமை
வளர்திருக் கடவூரில் வாழ்
வாமி! சுபநேமி! புகழ்நாமி! சிவசாமிமகிழ்
வாமி! அபிராமி உமையே!
--அபிராமிப் பட்டர்.
- நோயற்ற வாழ்வு
- கல்வி
- தானியங்கள் (உணவுக்கு மூலாதாரம்)
- தனம்
- அழகு
- புகழ்
- பெருமை
- இளமை
- அறிவு
- சந்தானம் (குழந்தைச் செல்வம்)
- வலிமை
- துணிவு
- வெற்றி
- ஆயுள்
- ஆகுநல்லூழ் (நல்வாய்ப்பு/அதிர்ஷ்டம்)
- நுகர்ச்சி
