தற்போது தங்கி இருக்குமிடமும் சரி; அலுவலகமும் சரி, சரியான மலையும் மலைப்படுகையும் சார்ந்த இடம். இரவு உண்டி ஆனதன் பிறகு என்ன செய்வாய் எனக் கேட்டான் அன்றாடம் நாளிதழ் போடுவார்கள். வாசித்துக் கொண்டிருப்பேன் அல்லது இணையத்தில் உசாவிக் கொண்டிருப்பேன் எனக் கூறினேன். என் விடுதியில் இருந்து சரியாக உன் விடுதிக்கு ஏழு மணிக்கு வந்து விடுகிறேன். இருவருமாக அந்த அடிவாரம் வரை நடந்து விட்டு வருவோம் எனச் சொன்னான். இங்கு பாம்புகள் நடமாட்டம் வெகுவாக இருக்குமென்று சொல்கிறார்களே என வினவியதற்கு, நாம் சாலையோர நடைபாதையிலேயே போய்விட்டு வந்து விடுவோம் எனச் சொன்னான்.
அதன்படியே நானும் ஏழுமணிக்கெல்லாம் விடுதி முன்பு போய் நிற்க அவனும் வந்து சேரச் சரியாக இருந்தது. அவன், அவனுடைய அலைபேசியினூடகப் படங்கள் எடுத்து வந்தான். நான் எனது அலைபேசியினூடாகப் படங்கள் எடுத்து வந்தேன். இடையில், ஊருக்கு அழைத்து மனைவி மக்களோடும் ஒரு முறை சுருக்கமாகப் பேசினேன். பேசிவிட்டுப் பார்க்கும் போதுதான் அது நடந்தது.
திருப்பதி லட்டு அளவிலான கல்லொன்று உருண்டோடி வந்து மற்றொரு கல்லின் மீது மோதியதில், உருண்டு வந்த கல் அங்கேயே நின்றுவிட்டது. மோதப்பட்ட கல் உருளத் துவங்கியிருந்தது. நான் அவனைப் பார்க்க, ஏற்கனவே அவன் என்னைப் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறான். சிக்கினான் சிங்காரம் என்கிற தொனியில் விரிக்கத் துவங்கினான். ஓடி வந்த கல்லின் எடையும், உருண்டு போன கல்லின் எடையும் தெரிந்தால் உருண்டு வந்த வேகத்தையும் உருண்டு போன வேகத்தையும் கணக்கிட்டுச் சொல்ல முடியும். அல்லது, உருண்டு வந்த தூரமும் வேகமும் தெரிந்தால் இரண்டு கற்களின் எடையையும் கணக்கிட முடியும் என விரித்துரை ஆற்றிப் பெருமைப்பாடு அடைந்து கொண்டிருந்தான். அதற்குள் சில பல அடிகள் முன்னேறியும் வந்து விட்டோம். திடீரென என்ன நினைத்தேனோ தெரியவில்லை; வா, போய்ப் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு அவனது பதிலுக்கும் காத்திராமால் நான் திரும்பி நடக்க ஆரம்பித்தேன். ஓடுவதற்கும் சற்று இளம்புள்ளியான வீச்சுநடையுடன் வந்து என்னைப் பிடித்து விட்டான். இருவருமாக அந்தப் பக்கம் பார்வையை வீசி எறிந்தோம். மோதிவிட்டு நின்ற அந்தக் கல்லையும் இப்போது காணவில்லை. அதுவும் கீழே உருண்டு போய்விட்டது என நினைக்க வேண்டியிருக்கிறது. திரும்பிப் பார்க்கிறேன், முகத்தில் எப்படி ஈஈஈ ஆடும்? ’ஒ’தான் ஒடுங்கி இருந்தது. அதற்கு மேலும் நான் அவனைக் கட்டாயப்படுத்தி அதை அலசி ஆய்ந்தெடுக்க விரும்பவில்லை. நடையை முன்னயபடியே தொடர்ந்தோம்.
கடைசி வரைக்கும் அந்த பழைய கெழுத்தி மீளப் பெறவே இல்லை. நான்தான் எஞ்சிய நடைநேரத்தையும் சொற்கள் பலவற்றால் நிரப்பி வேண்டி இருந்தது. நன்றாகவே விடை பெற்றுக் கொண்டோம். அடுத்து வருகிற கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்த வரைவு(RFP)க்கான வேலைகள்தான் நடந்து கொண்டிருக்கின்றன. இதை வைத்தே ஒப்பந்த ஒப்புதலுக்கான கைச்சாத்தும் அவனிடமிருந்து பெற்றுவிடலாம் எனும் நம்பிக்கை இருக்கிறது. அந்தக் கல்லைக் கண்டுபிடித்து ஆரத்தழுவிக் கொள்ள வேண்டும் போல இருக்கிறது. வல்லவனுக்குப் புல் மட்டுமல்ல, கல்லும் ஆயுதம்தான்!!
Showing posts with label புனைவு அல்ல. Show all posts

6/20/2013
5/18/2011
கொசு!!
கொசு என்கிற நுளம்புவைத் தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. அதிலும் குறிப்பாக, ஆசிய நாடுகளில் வாழ்பவர்களுக்கு நுளம்புகளுடனான நெருக்கம் மிக அதிகம். இவற்றால் பெருந்தொல்லைக்கு ஆட்பட்டு, எரிச்சல் உறாதவர்களே இல்லை எனும் அளவுக்கு அதனால் பாதிக்கப்பட்டோர் ஏராளம்.
இவர்களுக்கு இடையே சற்று மாறுபட்டவர் இவர். பரிகோஷ் எனும் பெயரை, நுளம்புநாதன் என மாற்றி வைத்துக் கொண்டவர். நுளம்பண்ணா, நுளம்பண்ணா என, அப்பகுதி மக்களால் அன்பாக விளிக்கப்படுபவர்.
இதோ, நுளம்பண்ணன் பழமை பேச வருகிறார் நம் வாசகர்களுக்காக!
“அண்ணா, வணக்கங்ணா!”
“வணக்கங் தம்பி! நலந்தானே?”
“எங்கீங்ணா... ஒரே கொசுத் தொல்லை!”
“தொல்லைன்னா தொல்லை. இல்லைன்னா இல்லை. எல்லாம், மனசுதான் காரணம்!”
“சரி, அதைவுடுங்க. உங்களுக்கும் கொசுக்கும் என்ன தொடர்பு? உங்க பெயரை மாத்தி வெச்சிகிட்டதுக்கு என்ன காரணம்? அதைக் கொஞ்சம், எங்க எழிலாய்ப் பழமை பேசும் வாசகர்களுக்கு எடுத்துச் சொல்லுங்களேன்!”
”தூயதமிழ்ல இருக்குற பெயர்களைக் கேள்விப்படும் போதெல்லாம், என்னைய யாரோ கிள்ளுற மாதிரியே இருக்கும். இதை நான் எங்க தமிழ்ப் புலவர் கோணகிரி ஐயாகிட்டச் சொன்னப்ப, அவர்தான் இந்தப் பெயரை எனக்குத் தெரிவு செய்து கொடுத்தாரு. அன்றைய தினத்தில இருந்து, நான் நுளம்புநாதன்ங்ற பேருக்கு மாறிட்டேன்.”
“கிள்ளுற மாதிரி இருந்த உணர்வுக்கும், இந்தப் பெயருக்கும் என்ன தொடர்பு? ஒன்னும் புரியலையே?”
“கிள்ளலை, நுள்ளல்ன்னும் சொல்லலாம். எந்தவொரு பற்றியத்தையும், அதுக்குள்ள ஆழமாப் போயி அறிஞ்சுக்கும் ஆற்றல் நுளம்பம்னு சொல்றது. அதையொட்டித்தான் நுளம்புநாதன்ங்ற பேரு எனக்கு அமைஞ்சது!”
”முடியலை. நீங்களா சொல்வீங்க... அதையும் நாங்க நம்பணும். எப்படி இது?”
”நாங்களா சொல்றது கெடையாது. குறுந்தொகையில கூட வருதே?
சிறைபனி உடைந்த சேயரி மழைக்கண்
பொறையரு நோயொடு புலம்பலைக் கலங்கிப்
பிறருங் கேட்குநர் உளர்கொல் உறைசிறந்து
ஊதை தூற்றம் கூதிர் யாமத்து
ஆன் நுளம்பு உலம்புதொறு உளம்பும்
நாநவில் கொடுமணி நல்கூர் குரலே!
கடுங்குளிர்காலமதில், ஊதக்காற்று பெரும் வேகமெடுத்து வீசும் நள்ளிரவு நேரம். புறக்கொல்லையில் இருக்கும் பசு, வேகமெடுத்து வீசும் ஊதக்காற்று தன் மேல் படுவதால் நடுநடுங்கிக் கொண்டிருக்கிறது. அந்நடுக்கத்தின் ஊடாக நுளம்பு ஒன்று அப்பசுவினைக் கடிக்க, அப்பசுவோ தன் தலையைத் திருப்பி வாலால் வீசியடித்து அந்நுளம்பினைத் தூரத் துரத்தி விடுகிறது.
அப்படியாகத் தன் தலையைத் திருப்பும் போது, கழுத்து மணியின் ஓசையானது தலைவியின் காதில் விழுந்து நித்திரையைக் கலைத்துவிடுகிறது.
’கார்காலத்துப் பனியானது எம்மைக் குளிர்ச் சிறையில் ஆழ்த்துகிறது. அச்சிறையினை உடைத்துக் கொண்டு, என் கண்கள் மழை பொழிகிறது. என் தலைவன் உடன் இருப்பின், இந்நிலை வருமா எனக்கு?’ எனப் பசலை நோய் கண்டவளாய்த் தன் தோழியிடம் தலைவி கூறுவதாக அமைந்த பாடல்தான் இது.
இதிலே நுளம்பு எனும் சொல் வருகிறது கண்டாயா?”
“ஆகா! அருமையான தகவலுங்க நுளம்பண்ணே! அப்புறம் ஏன் நுளம்பைக் ’கொசு’ங்றாய்ங்க?”
“கொசு அப்படின்னா, சின்னது அப்படிங்ற அர்த்தம் வரும். கொசுவம், கொசுறு மாதிரியான சொற்கள் எல்லாம் அதனோட நீட்சிதான். சின்னதான தொங்கல், கொசுவம். சின்ன சின்ன சில்மிசம், கொசுறு! இப்படி நிறைய கொசுங்ற வேர்ச்சொல்லுல இருந்து வரும்.”
“நுளம்புன்னே சொல்ல வேண்டியதுதானே? அப்புறம் எதுக்கு கொசுன்னு இனியொரு சொல்?”
“தமிழறியா அரைகுறைகள் செய்யுற வேலைதான் இது. Mosquito அப்படிங்ற நுளம்பம், Culicidaeங்ற குடும்பத்தைச் சார்ந்த ஒரு பூச்சி. Culicidaeங்ற இலத்தீன் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் கொசு. ஆக, கொசுக் குடும்பத்தைச் சார்ந்த நுளம்பம் அப்படின்னு வரணும். ஆனா, Mosquito அப்படிங்றதுக்கே கொசுன்னு சொல்லாக்கம் செய்துட்டாங்க யாரோ!”
“கேட்கிறேன்னு கோவிச்சுக்க கூடாது நீங்க. ’குசு’வுக்கும், ’கொசு’வுக்கும் எதனா தொடர்பு இருக்கா?”
“இருக்கு. ஆனா, இல்லை. குசு அப்படின்னா, மறைபொருளா ஊடுவது. ஆசனவாயில்ல இருந்து வெளியில் ஊடுவதும் குசுதான்.
காதும் காதும் வெச்ச மாதிரி, ஒரு பற்றியத்தை ஊடால விடுவதும் குசுதான். இதைத்தான் குசுகுசுன்னு சொல்றதுன்னும் சொல்றோம். குசுன்னு சொல்லத் தயங்கறவங்க கிசு கிசு ஆக்கிப்புட்டாங்க. தெலுங்குலயும் குசு குசுதான்; சப்பானிய மொழியிலயும் குசு குசுதான். வட மொழியில, உசிர் குசுர்ங்றாங்க.
குசு நாற்றம் கொசுவுக்கு ரொம்பப் பிடிக்கும். குசுன்னு மட்டும் அல்ல, கரியுமில வாயு அடங்கிய எதுவும் அதற்குப் பிடித்தமான ஒன்னு. ஆக, தூய்மையா இருக்கும் போது நுளம்பத்தின் இடைஞ்சல் குறைவா இருக்கும்.”
”நுளம்பண்ணே, குசுவுக்கும் கொசுவுக்கும் உண்டான வேறுபாட்டை நல்லாச் சொன்னீங்க. பொதுவா, கொசுங்ற நுளம்பு ஏன் நம்மைக் கடிக்குது?”
“ஆண் நுளம்பு நம்மைக் கடிக்காது. கடிப்பது எல்லாமே பெண்தான். நான் கொசு குடும்பத்தைப் பத்தி சொல்றேன். ஆண் நுளம்புகள் பொதுவா, தாவர அமிழ்தம்(nector) மற்றும் தாவர இரசங்களைத்தான் பருகும்.
பெண் கொசுக்களுக்கு, முட்டை வைப்பதற்காக, proteinங்ற புரதச் சத்து தேவைப்படுது. அதனால, இரத்தத்தை உறிஞ்சுகுழலால உறிஞ்சிக் குடிக்குது அது. அப்படி உறிஞ்சிக் குடிக்கும் போது என்ன ஆகுதுன்னா, அந்த பெண் கொசுவோட உமிழ்நீர், எச்சில், நம்மை உடம்புல இறங்கிடுது. அது, பல நோய் மற்றும் அசெளகரியங்களுக்குக் காரணமாப் போய்டுது.”
”சரிங்ணே, உங்களுக்கு கொசுனால எந்தத் தொல்லையுமே இல்லையா? நீங்க எப்படி அதை, எதிர் கொள்றீங்க?”
“நான் பொதுவா, தூய்மையாகவும் சுகாதாரமாவும் இருக்குறதை விரும்புறவன். அதனால அவ்வளவா என்னை அதுக கடிக்காது. ஆனா, நித்திரையில இருக்கும் போது காதுல புகுந்துட்டு, உர்ர்ர்ர்ன்னு சத்தம்வுட்டு மனுசனுக்கு எரிச்சலூட்டும்”
“அப்ப, அதை எப்படி சமாளிப்பீங்க?”
“பெண் கொசுக்கள்தான நம்மகிட்ட வருது? அதனால, பக்கத்துல படுத்துட்டு இருக்குற பொண்டாட்டிக்கு நல்லா நாலு அறை, ரய்ய்ய்யுன்னு உடுவேன். எனக்கு இருக்குற கோவம் எல்லாம் தாழ்ந்து போயிரும்.”
“என்னண்ணே சொல்றீங்க? அப்புறம் உங்களுக்கு எதும் நடந்துறாதா?”
“அதையெல்லாம் வெளில சொல்ல முடியுமா?”
“சரி விடுங்கண்ணே! அப்புறம் இந்த நுளம்பு, கொசு, தினாசு எல்லாம் ஒன்னுதானா?”
“கெடையாது, கெடையாது! கொசுக் குடும்பத்துல வர்றது நுளம்பும், தினாசும். தினாசுன்னா, நாய், ஆடு, மாடுகள்ள இருக்குற சிறு பூச்சி.”
“ஓ, ஆடு, மாடுகள்ல இருக்குறது? அப்ப, தினாசும் உன்னியும் ஒன்னா?”
“வேற, வேற!”
"சரிங்ணா. அப்புறம் கொசுவைப் பத்தின வேற தகவல்கள்?”
“கொசுக்கள் ஒரு அபூர்வமான பிறவின்னுதான் சொல்லணும். ஐந்து மாதங்கள் வரை வாழக் கூடியது. ஒரு வினாடிக்கு, முந்நூறுல இருந்து அறுநூறு முறை தன் சிறகுகளை வேகமா அடிக்கும் வல்லமை கொண்டது. ஒரு மணி நேரத்துல கிட்டத்தட்ட இரண்டு மைல் தூரம் பறக்க வல்லது.
ஒருவனுக்கு ஒருத்திங்ற முறைப்படிதான் கொசுக்கள் வாழ்க்கை நடத்தும். தன்னுடைய இணை எங்க இருக்குன்னு, அந்த பெண் கொசுவினுடைய சிறகடிப்பின் அதிர்வை வெச்சே கண்டுபிடிக்கும் தன்மை கொண்டவை ஆண் கொசுக்கள்.
ஒரு மனிதனின் சஞ்சாரத்தை, அம்மனிதன் வெளியேற்றும் கரியுமில வாயுவை மோப்பம் கொண்டு, எழுபத்தி அஞ்சு அடி தூரத்திலிருந்தே கண்டுபிடிச்சிடும் பெண் கொசுக்கள். பொதுவா, கொசுக்கள் பெண்களைத்தான் அதிகம் விரும்பிக் கடிக்கும்”
“நுளம்பண்ணே, நல்ல தகவல்களை அறியக் கொடுத்தீங்க. மிக்க நன்றி!”
”குசுவும், கொசுவும் இல்லாம நல்ல வாழ்க்கை வாழ வாழ்த்துகள்! நன்றி!!

Subscribe to:
Posts (Atom)