6/13/2026

ஓடைகளினூடே அடையாளத்தின் கதை




வட கரொலைனாவின் சார்லட் பெருநகரம், அதைச் சுற்றியுள்ள மெக்லென்பர்க் ஊரகம் முழுவதும் ஒரு பெரிய நீரோடை வலைப்பின்னல் போல அமைந்துள்ளது. இதனாலேயே இது "நீரோடைகளின் நகரம்" என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பகுதியில் மொத்தம் 81 தனிப்பெயர்கள் கொண்ட நீரோடைகள் உள்ளன. அவற்றின் கிளை நதிகளையும் சேர்த்தால், அதிகாரப்பூர்வமாக 126 பெயரிடப்பட்ட நீரோடைகள் ஓடுகின்றன. இந்தச் சரகம் முழுவதும் சுமார் 3,000 மைல் நீளத்திற்கு நீரோடைகள் பரவியுள்ளன. இதில் சுமார் 1,000 மைல் நீளமுள்ள நீரோடைகளில் வருடம் முழுவதும் தண்ணீர் ஓடுகிறது. சார்லட் நகரம் ஒரு மலைமுகடு பகுதியில் அமைந்துள்ளதால், இந்த நீரோடைகள் அனைத்தும் நகரின் மையப்பகுதியிலிருந்து வெளிநோக்கி பாய்கின்றன.

சார்லட்டின் மேலைநகர்ப் பகுதியில் பெரிய ஆறுகளை ஏன் பார்க்க முடிவதில்லை என்று நீங்கள் யோசித்தால், அதற்குக் காரணம் நகர்ப்புற வளர்ச்சியின் போது நகரின் மையத்தில் இருந்த பல சிறிய நீரோடைகள் நிலத்தடி குழாய்கள், மதகுகள் மூலம் மாற்றி அமைக்கப்பட்டன. அவை இன்றும் நகரின் சாலைகளுக்கு அடியில் ஓடிக்கொண்டிருக்கின்றன!

நகரின் குறுக்கிலும் நெடுகிலும் ஓடைகள் ஓடுகின்றன. இதற்குப் பின்னால் திட்டமிடப்பட்ட வேலைப்பாடுகள் உண்டு. ஒவ்வொரு வளவு கட்டமைக்கப்படும் போதும், அதனருகில் ஒரு கண்மாய், நீர்நிலையும் கட்டமைக்கப்படும். மழைநீர் வடிந்தோடும் போது பெருக்கில் வெள்ளம் ஏற்பட்டுவிடாமலிருக்க இவை உதவும். இப்படியான நீர்நிலைகள் நிறைந்து அருகில் இருக்கும் சிற்றோடை, ஓடை, பேரோடை, ஆறு எனச் சென்று சேர்ந்து கடைசியாக, கட்டாபா பேராறு உள்வாங்கிக் கொள்ளும்.

காலையில் வழக்கம் போல, சிக்ஸ் மைல் கிரீக் பசுமைவழிப் பாதையில் நடையோட்டம். 1700-களில் இப்பகுதிக்கு வந்த ஆரம்பகால ஐரோப்பிய குடியேறிகள், வர்த்தகர்கள், தயிர், மோர், காய் கனிகள் விற்கப்படும் ஒரு சந்தைப் பகுதியிலிருந்து இந்த நீரோடை அமைந்திருந்த தூரத்தைக் குறிக்க "சிக்ஸ் மைல்" என்று பெயரிட்டனர். இப்பகுதியில் உள்ள பல நீரோடைகளுக்கு தூரத்தின் அடிப்படையில் பெயரிடுவது வழக்கமாக இருந்தது; எடுத்துக்காட்டாக, ஃபோர் மைல் கிரீக், ட்வெல்வ் மைல் கிரீக்). கரோலினா பிராந்தியத்தில் நிலவும் ஒரு பிரபலமான நாட்டுப்புறக் கதையின்படி, 'இசாகுய்னா' என்ற பூர்வகுடி இளவரசி, ஆங்கிலேய வர்த்தகரான தனது காதலனைப் பழங்குடியினரின் தாக்குதலில் இருந்து காப்பாற்ற குதிரையில் வேகமாகப் பயணித்தாள். அவள் தனது பயணத்தின் போது கடந்த ஒவ்வொரு நீர்நிலையையும் மைல் கணக்கில் பெயரிட்டுக்கொண்டே சென்றாள். இந்த அளவீட்டின் அடிப்படையில் இப்பெயர் வந்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. எப்படியோ இந்தக் காலைப்பொழுதில், சிக்ஸ்மைல் கிரீக்கின் காற்று நம்மைத் தழுவித் தடவியதில் இன்புற்றோம். இந்த பேரோடையானது, கட்டாபா ஆற்றுக்குச் சென்று சேர்கின்றது.

கட்டாபா என்பது ஒரு பழங்குடி இனத்தின் பெயர். கட்டாபா மக்கள் தங்களை தங்களின் சொந்த மொழியான சியூவன் மொழியில் "யெப் ஈ ஸ்வாஹேரே" என அழைத்துக்கொண்டனர். இதன் பொருள் "ஆற்றின் கரையில் வாழும் மக்கள்" என்பதாகும். கட்டாபா மக்கள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக வட, தென் கரோலினாவின் எல்லைப் பகுதிகளில், குறிப்பாக கட்டாபா ஆற்றங்கரையில் வாழ்ந்து வந்தனர். கட்டாபா மக்கள் களிமண்ணால் தனித்துவமான மண்பாண்டங்களைச் செய்வதில் உலகப் புகழ்பெற்றவர்கள். இந்த பாரம்பரிய கலை 4,000 ஆண்டுகளுக்கும் மேலாக இன்றும் அழியாமல் அவர்களது தலைமுறையினரால் தொடரப்படுகிறது.

ஐரோப்பியர்கள் மூலமாக பரவிய அம்மை நோய் போன்ற புதிய நோய்களால் கட்டாபா மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். 1700-களின் தொடக்கத்தில் பல்லாயிரமாக இருந்த இவர்களின் மக்கள் தொகை, 1759-ல் ஏற்பட்ட கொடிய அம்மை நோய்க்குப் பிறகு சில நூறுகளாகக் குறைந்தது. பல தசாப்த கால சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, 1993-ஆம் ஆண்டு அமெரிக்க கூட்டாட்சி அரசாங்கம், கட்டாபா பழங்குடியினருக்கு "அதிகாரப்பூர்வ கூட்டாட்சி அங்கீகாரத்தை" மீண்டும் வழங்கியது. இழந்த தங்களின் நில உரிமைகளுக்காக இவர்களுக்குப் பெருமளவில் இழப்பீடும் வழங்கப்பட்டது.

தென் கரோலினாவின் ராக் ஹில் பகுதிக்கு அருகில், இவர்களுக்காக ஒதுக்கப்பட்ட சிறப்புப்பூர்வகுடி நிலம் (Catawba Indian Nation), தோராயமாக 3500 ஏக்கர் உள்ளது. சுமார் 2800 கட்டாபா மக்கள் இன்று அங்கு வாழ்ந்து வருகின்றனர். தங்களின் கலாச்சாரம், உலகப் புகழ்பெற்ற மண்பாண்டக் கலையை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் முயற்சியில் இந்த "ஆற்றின் மனிதர்கள்" இன்றும் பெருமையுடன் செயல்பட்டு வருகிறார்கள்.

கட்டாபா மொழியைத் தாய்மொழியாகப் பேசிய கடைசி நபரான சாமுவேல் புளூ என்பவர் 1959-ல் மறைந்தார். இருப்பினும், இன்று "லகோட்டா, “டகோட்டா" போன்ற ஒரு சில சியோன் மொழிகள் இரண்டாயிரத்துக்கும் கூடுதலான மக்களால் இன்னும் பேசப்பட்டு வருகின்றன. தற்போது, தென்கரோலினாவில் உள்ள கட்டாபா பழங்குடி அரசு, தங்களின் சியோன் கிளை மொழியான கட்டாபா மொழியை மீண்டும் பேசத் துவங்கி இருக்கின்றது. ஆமாம், காலத்தின் சாம்பலிலிருந்து

மீண்டும் சிலிர்த்து மெல்ல முளைவிட்டுக் கொண்டிருக்கின்றது கட்டாபா!

வெள்ளம் வந்தாலும் வேரறுந்து போகாது ஆற்றின் கரையில் முளைத்த நாணல்; காலப் பெருவெள்ளம் கடந்தும் வாழ்கிறது 'கட்டாபா' எனும் ஆற்றுமனிதர்களின் ஆன்மா!


𝐂𝐡𝐚𝐫𝐥𝐨𝐭𝐭𝐞’𝐬 𝐫𝐡𝐲𝐭𝐡𝐦 𝐟𝐥𝐨𝐰𝐬 𝐭𝐡𝐫𝐨𝐮𝐠𝐡 𝐭𝐡𝐞 𝐂𝐚𝐭𝐚𝐰𝐛𝐚.

-பழமைபேசி.

6/09/2026

வரலாறும் இயற்கையும் பிணைந்திருக்கும் சல்லிவன்தீவு


தென்கரோலினாவின் கீழைப் பகுதியில் (Lowcountry), அட்லாண்டிக் பெருங்கடலும் வரலாற்றுச்சிறப்புமிக்க சார்லஸ்டன் துறைமுகமும் இணையும் இடத்தில் சல்லிவன்தீவு அமைந்துள்ளது. சுமார் மூன்றரை சதுர மைல் பரப்பளவே கொண்ட இந்த சிறிய தீவுக்கடற்கரை, வணிகமயமாக்கப்பட்ட பிற சுற்றுலாத் தலங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, தனித்துவமான அமைதியுடன் திகழ்கிறது. சல்லிவன்தீவு கடற்கரை (Sullivan’s Island Beach) என்பது வெறும் பொழுதுபோக்குத் தலம் மட்டுமல்ல; அது இயற்கை எழில், இலக்கியத் தடம் , அமெரிக்க வரலாற்றின் ஆழமான பக்கங்களை உள்ளடக்கிய ஒரு வாழ்வியல் களமாகும்.

சல்லிவன்தீவு கடற்கரையின் முதன்மை ஈர்ப்பு, அதன் சிதையாத இயற்கை அழகுதான். 3.5 மைல் நீளமுள்ள இந்த கடற்கரையில் உயரமான அடுக்குமாடி விடுதிகளோ, வணிக வளாகங்களோ அல்லது பொழுதுபோக்கு மேடைகளோ கிடையாது. கடற்கரையோர கடல்க்காடுகள் (maritime forest), மணல் மேடுகள் , தாவரங்கள் அப்படியே பாதுகாக்கப்பட வேண்டும் என்ற உள்ளூர் நிர்வாகத்தின் தொலைநோக்கு சட்டங்களே இதற்குக் காரணம்.

இங்கு வரும் பார்வையாளர்கள் "ஸ்டேஷன்ஸ்" என்று அழைக்கப்படும் அழகிய பொதுப்பாதைகள் வழியாகவே கடற்கரையை அடைய முடியும். 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இங்கு இயங்கிய மின்சார டிராம் வண்டியின் நிறுத்தங்களை நினைவூட்டும் விதமாக இப்பெயர்கள் இன்றும் பயன்படுத்தப்படுகின்றன. வணிக இரைச்சல்கள் இல்லாததால், அட்லாண்டிக் கடலின் அலை ஓசைக்கு நடுவே அமைதியான, தனிப்பட்ட கடற்கரையில் இருப்பது போன்ற உணர்வை இது தருகிறது. மேலும், இங்கு வீசும் தொடர்ச்சியான கடல்காற்று கைட்போர்டிங், படகோட்டம் போன்ற நீர்விளையாட்டுகளுக்கு மிகவும் உகந்ததாக உள்ளது.

இயற்கை எழிலைத் தாண்டி, அமெரிக்க வரலாற்றில் சல்லிவன்தீவிற்கு மிக முக்கிய இடமுண்டு. இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக, சார்லஸ்டன் துறைமுகத்தின் முதன்மைப் பாதுகாப்பு அரணாக இத்தீவு விளங்கியது. இக்கடற்கரையின் மேற்கு முனையில் புகழ்பெற்ற 'மவுல்ட்ரி கோட்டை ' அமைந்துள்ளது. 1776-ஆம் ஆண்டு அமெரிக்க புரட்சிப் போரின்போது, பனைமரக் கட்டைகளாலும் மணலாலும் அவசரமாகக் கட்டப்பட்ட இந்தக் கோட்டை, பிரிட்டிஷ் படைகளின் பீரங்கித் தாக்குதல்களைத் தாங்கி நின்று வியக்கத்தக்க வெற்றியைப் பெற்றது. இந்த வரலாற்று நிகழ்வே தென் கரோலினா மாநிலத்திற்கு "பனை மாநிலம்" என்ற பெயரைப் பெற்றுத் தந்தது.

அதே வேளையில், இக்கடற்கரை ஒரு சோகமான வரலாற்றுப் பக்கத்தையும் கொண்டுள்ளது. 18-ஆம் நூற்றாண்டில், ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகளாகக் கொண்டுவரப்பட்ட மனிதர்களுக்கான முதன்மைத் தனிமைப்படுத்தல் முகாம்களாக இத்தீவு செயல்பட்டது. வட அமெரிக்காவிற்குள் நுழைந்த ஆப்பிரிக்க அடிமைகளில் சுமார் 40 சதவீதத்தினர் இத்தீவின் வழியாகவே கொண்டு செல்லப்பட்டனர்ரென வரலாற்று ஆய்வுகள் கூறுகின்றன. இந்தத் துயரத்தை நினைவுகூரும் வகையிலும், முன்னோர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் டோனி மோரிசன் சங்கத்தால் நிறுவப்பட்ட ஒரு நினைவு இருக்கைப்பலகை இன்றும் கடற்கரையின் அருகே அமைந்துள்ளது. அதன் அருகே நின்றபோது, உணர்வுப் பெருக்கின் நிமித்தம் நம் உடலும் சற்று நடுக்கம் கண்டது.

இத்தீவின் தனித்துவமான சூழல், அமெரிக்க இலக்கிய உலகிலும் தடம் பதித்துள்ளது. 1820-களின் பிற்பகுதியில், புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளர் Edgar Allan Poe அவர்கள் இராணுவ வீரராக இக்கோட்டையில் பணியாற்றினார். இத்தீவின் அடர்ந்த காடுகளும் கடற்கரைச் சூழலும் அவரைப் பெரிதும் ஈர்த்தன. இதன் தாக்கத்தால், அவர் எழுதிய புகழ்பெற்ற The Gold Bug என்ற கதையின் பின்னணியாக சல்லிவன் தீவையே அமைத்தார். இன்றும் இத்தீவின் நூலகம் ஒரு பழைய இராணுவக் கிடங்கிற்குள் அமைந்திருப்பதுடன், அவரது இலக்கிய நினைவுகளைத் தாங்கி நிற்கிறது.

மாலை வேளையில் இக்கடற்கரையிலிருந்து பார்க்கும் வானம் ஒரு தூரிகை ஓவியம் போலக் காட்சியளிக்கும். தூரத்தில் தெரியும் வரலாற்றுச் சிறப்புமிக்க Fort Sumter, மாரிஸ்த்தீவு கலங்கரை விளக்கம் , நவீனப் பொறியியலின் சான்றாக விளங்கும் ஆர்தர் ரேவெனல் ஜூனியர் பாலம் ஆகியவை கண்கொள்ளாக் காட்சியாகும். கடற்கரையிலிருந்து சில அடிகள் தள்ளியுள்ள Middle Street பகுதியில் உள்ளூர் உணவகங்களும் கடைகளும் அமைந்துள்ளன.

சல்லிவன்தீவு கடற்கரை என்பது வணிகமயமாக்கலைத் தவிர்த்து, வரலாற்றையும் இயற்கையையும் போற்றிப் பாதுகாக்கும் ஒரு அரிய கடற்கரையாகும். புரட்சிப் போரின் வீரம், அடிமைத்துவத்தின் வலி, இலக்கியவாதிகளின் கற்பனை எனப் பல பரிமாணங்களைக் கொண்ட இந்த கடற்கரை, தன்னை நாடி வரும் பார்வையாளர்களுக்கு வெறும் மனமகிழ்ச்சியைத் தருவதோடு மட்டுமல்லாமல், காலத்தைக் கடந்த ஒரு வரலாற்றுப் பயணத்தையும் வழங்குகிறது.

𝑺𝒐𝒎𝒆 𝒑𝒍𝒂𝒄𝒆𝒔 𝒅𝒐𝒏'𝒕 𝒋𝒖𝒔𝒕 𝒕𝒂𝒌𝒆 𝒚𝒐𝒖𝒓 𝒃𝒓𝒆𝒂𝒕𝒉 𝒂𝒘𝒂𝒚; 𝒕𝒉𝒆𝒚 𝒈𝒊𝒗𝒆 𝒊𝒕 𝒃𝒂𝒄𝒌. 𝑺𝒖𝒍𝒍𝒊𝒗𝒂𝒏'𝒔 𝑰𝒔𝒍𝒂𝒏𝒅 .

-பழமைபேசி.


6/08/2026

சால்ஸ்டனில் மூன்று நாள்கள்







தென்கரோலினா மாநிலத்தின் மிக முக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க கடற்கரை நகரமான சார்லஸ்டனுக்குமேற்கொண்ட மூன்று நாள் பயண அனுபவங்கள். அமெரிக்காவின் தென்பகுதிக் கலாச்சாரம், அட்லாண்டிக் பெருங்கடலின் எழில் கொஞ்சும் கடற்கரைகள் , பல நூற்றாண்டுகள் பழமையான கட்டிடக் கலைக்குச் சான்றாகத் திகழும் நகரம் சார்லஸ்டன். மூன்று நாள்கள் கொண்ட இப்பயணத்தில் வரலாற்றுத் தளங்கள், கண்கவர் வீதிகள், சுவையான உணவு விடுதிகள் என ஒவ்வொரு நாளும் ஒரு புதிய அனுபவத்தைத் தந்தது.

1. முதல் நாள்: அமைதியான மாலைப்பொழுதும் சுவையான விருந்தும் (Friday)

𝐖𝐡𝐢𝐭𝐞 𝐏𝐨𝐢𝐧𝐭 𝐆𝐚𝐫𝐝𝐞𝐧
சார்லஸ்டன் தீபகற்பத்தின் தெற்கு முனையில் அமைந்துள்ள ஒயிட் பாயிண்ட் கார்டன் பூங்காவிற்குச் சென்றதோடு எங்களது பயணம் இனிதே தொடங்கியது. அட்லாண்டிக் கடலும் ஆஷ்லி, கூப்பர் ஆறுகளும் சங்கமிக்கும் இடத்தில் இப்பூங்கா அமைந்துள்ளது. பழமையான ஓக் மரங்களின் நிழலிலும், கடலில் இருந்து வீசும் குளிர்ந்த காற்றிலும் உலா வருவது மனதிற்குப் பெருமகிழ்ச்சியைத் தந்தது. அமெரிக்க உள்நாட்டுப் போர்க் காலத்தின் வரலாற்றுச் சின்னங்களான பீரங்கிகளும், நினைவுச் சின்னங்களும் இங்கு வரிசையாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மாலையில் சூரியன் மறையும் அழகைக் கரையில் அமர்ந்து ரசிப்பதற்கு இது மிக உகந்த இடமாகும். கதிரவன் காட்சி மறைந்ததும் இந்நேரமும் இருந்தவன் காணமல்போனதான ஓர் உணர்வு நெஞ்சைத் தைத்தது.

𝐃𝐢𝐧𝐧𝐞𝐫: 𝐌𝐚𝐭𝐚𝐝𝐨𝐫
மாலையில் உலாவி முடித்த பின், இரவு உணவிற்காக 'மடடோர்' உணவகத்திற்குச் சென்றோம். மெக்சிகன்பாணி உணவுகளுக்குப் புகழ்பெற்ற இந்த உணவகத்தின் உட்புறக் கட்டமைப்பு , விளக்கு அலங்காரங்கள் தனித்துவமான சூழலை உருவாக்கின. அங்கு பரிமாறப்பட்ட சுவையான டேகோஸ், மெக்சிகன் பாரம்பரிய உணவுகள் முதல் நாளின் பயணக் களைப்பை நீக்கி, நாவிற்குச் சிறந்த விருந்தாக அமைந்தன.

2. இரண்டாம் நாள்: வரலாற்று வீதிகளும் கடற்கரை உலாவும் (Saturday)

𝐏𝐚𝐫𝐤 𝐚𝐭 𝐌𝐚𝐣𝐞𝐬𝐭𝐢𝐜 𝐒𝐪𝐮𝐚𝐫𝐞 𝐃𝐞𝐜𝐤 & 𝐌𝐢𝐥𝐥𝐞𝐫𝐬 𝐀𝐥𝐥 𝐃𝐚𝐲
இரண்டாம் நாள் நகரின் மையப் பகுதியைச் சுற்றிப் பார்க்கத் திட்டமிட்டோம். போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க 'மெஜஸ்டிக் ஸ்கொயர் டெக்' கட்டண வாகன நிறுத்தத்தில் காரை நிறுத்திவிட்டு, 'மில்லர்ஸ் ஆல் டே' உணவகத்தில் காலை உணவை முடித்தோம். அங்குள்ள பாரம்பரியத் தென்பகுதி பிஸ்கட்டுகள் , காபி எங்களை அடுத்தடுத்த இடங்களுக்குச் செல்ல உற்சாகப்படுத்தின.

𝐑𝐚𝐢𝐧𝐛𝐨𝐰 𝐑𝐨𝐰 & 𝐍𝐚𝐭𝐡𝐚𝐧𝐢𝐞𝐥 𝐑𝐮𝐬𝐬𝐞𝐥𝐥 𝐇𝐨𝐮𝐬𝐞
அங்கிருந்து சார்லஸ்டனின் உலகப் புகழ்பெற்ற அடையாளமான 'ரெயின்போ ரோ' பகுதிக்குச் சென்றோம். 18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, வரிசையாக அமைந்த 13 ஜார்ஜியன் பாணி வீடுகள் வெவ்வேறு வண்ணங்களில் (வானவில் போல) பூசப்பட்டு பார்ப்போரைக் கவரும் வகையில் காட்சியளிக்கின்றன. புகைப்படங்கள் எடுக்க இது ஒரு அருமையான இடம். அதன் தொடர்ச்சியாக, வரலாற்றுச் சின்னமான 'நதானியேல் ரஸ்ஸல் ஹவுஸ்' (Nathaniel Russell House) மாளிகையைப் பார்வையிட்டோம். 1808-இல் கட்டப்பட்ட இந்த மாளிகையின் உள்ளே இருக்கும் மூன்று அடுக்கு சுழல் படிக்கட்டுகளின் கட்டிடக் கலை வியக்கத்தக்கது.

𝐂𝐡𝐚𝐫𝐥𝐞𝐬𝐭𝐨𝐧 𝐂𝐢𝐭𝐲 𝐌𝐚𝐫𝐤𝐞𝐭 & 𝐁𝐥𝐢𝐧𝐝 𝐓𝐢𝐠𝐞𝐫
அடுத்து, 1790-களில் இருந்து இயங்கி வரும் வரலாற்றுச் சிறப்புமிக்க 'சார்லஸ்டன் சிட்டி மார்க்கெட்' சந்தைக்குச் சென்றோம். அங்கு உள்ளூர் கைவினைக் கலைஞர்களின் தனித்துவமான புல்க்கூடைகள் (Sweetgrass Baskets), நினைவுப் பொருட்கள் , உடைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. சந்தையைச் சுற்றிப் பார்த்து, சில பல கொள்வனவு செய்யப்பட்ட பின், மதிய உணவிற்காக 1803-ஆம் ஆண்டின் பழமையான பின்னணியைக் கொண்ட Blind Tiger Pub உணவகத்திற்குச் சென்றோம். அதன் அழகான திறந்தவெளி முற்றத்தில் அமர்ந்து மதிய உணவை அருந்தியது ஒரு நல்ல அனுபவம்.

𝐁𝐫𝐚𝐧𝐝𝐲 𝐌𝐞𝐥𝐯𝐢𝐥𝐥𝐞
நாங்கள் சார்லஸ்டனின் முதன்மையான வணிக வீதியான கிங் ஸ்ட்ரீட்டில் உலா வந்தபோது, அங்குள்ள புகழ்பெற்ற ஆடை அங்காடியான 'பிராண்டி மெல்வில்' (Brandy Melville) குடோனுக்கும் சென்றிருந்தோம். இளம் பெண்களுக்கான நவீன, அழகிய எளிய உடைகளுக்கு (Casual wear) இந்தப் பன்னாட்டு பிராண்ட் மிகவும் பெயர் பெற்றது. தூய்மையான வெள்ளை, மென்மையான வெளிர் வண்ணங்களில் (Aesthetic pastel colors) அமைந்த ஆடைகள், எளிய வடிவமைப்பு கொண்ட டி-சர்ட்டுகள், விதவிதமான ஆடை அணிகலன்கள் என அனைத்தும் அங்கு மிக நேர்த்தியாகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மகளார் வாங்கித் தள்ளினர். சார்ல்ஸ்டன் வந்ததே அதற்குத்தானே? ஒரு கட்டம் வரைக்குத்தான் கணக்கு வழக்கு. தலைக்கு மேலே வெள்ளம் போனால், அது சாணென்ன மொழமென்ன?? சார்லஸ்டன் நகரின் பாரம்பரியக் கட்டிடக் கலைப் பின்னணியோடு, இந்த நவீனக் கடையின் உட்புற அமைப்பும் சூழலும் இணைந்து எங்களை மிகவும் கவர்ந்தது. கிங் ஸ்ட்ரீட் பயணத்தில் இளமையின் துடிப்பையும் தற்கால ஃபேஷன் உலகையும் பிரதிபலிக்கும் ஒரு சுவாரசியமான இடமாக இந்த அங்காடி அமைந்தது. எங்கு பார்த்திடினும் இளம் பெண்கள்!

𝐊𝐢𝐧𝐠 𝐒𝐭𝐫𝐞𝐞𝐭 & 𝐒𝐮𝐥𝐥𝐢𝐯𝐚𝐧'𝐬 𝐈𝐬𝐥𝐚𝐧𝐝
மதிய உணவிற்குப் பிறகு, சார்லஸ்டனின் முதன்மையான வணிக வீதியான 'கிங் ஸ்ட்ரீட்' பகுதியில் மீண்டும் உலா வந்தோம். அங்குள்ள பிபுகழ்பெற்ற கடைகளையும், நவீனக் கடைகளையும் வேடிக்கை பார்த்தபடி நடந்தோம். பின்னர், மாலையில் கடலோரக் காற்றை ரசிப்பதற்காக வண்டியை எடுத்துக்கொண்டு 'சல்லிவன் தீவு' (Sullivan's Island) கடற்கரைக்கு விரைந்தோம். அகலமான மணற்பரப்பும், மிதமான அலைகளும் கொண்ட இந்த அமைதியான கடற்கரை, நகரின் பரபரப்பிலிருந்து தற்காலிக ஓய்வைத் தந்தது.

𝐃𝐢𝐧𝐧𝐞𝐫 𝐓𝐢𝐦𝐞
தீவிலேயே இரவு உணவை முடிக்கத் திட்டமிட்டோம். அங்கு எழுத்தாளர் எட்கர் ஆலன் போ-வின் நினைவாக வடிவமைக்கப்பட்ட 'போஸ் டாவர்ன்' (Poe's Tavern) அல்லது புகழ்பெற்ற இத்தாலிய பாணி உணவுகளை வழங்கும் 'தி ஆப்ஸ்டினேட் டாட்டர்' (The Obstinate Daughter) ஆகிய சிறந்த உணவகங்கள் உள்ளன. அன்றைய இரவை, நிறைவான கடல் உணவு , பீட்சாவுடன் The Obstinate Daughterஇல் சுவையாகக் கழித்தோம்.

3. மூன்றாம் நாள்: வரலாற்றுத் தோட்டமும் மவுண்ட் பிளசன்ட்டும் (Sunday)

𝐕𝐢𝐜𝐢𝐨𝐮𝐬 𝐁𝐢𝐬𝐜𝐮𝐢𝐭 & 𝐁𝐨𝐨𝐧𝐞 𝐇𝐚𝐥𝐥 𝐏𝐥𝐚𝐧𝐭𝐚𝐭𝐢𝐨𝐧
மூன்றாம் நாள் காலையில் மவுண்ட் பிளசன்ட் பகுதியில் உள்ள 'விஷியஸ் பிஸ்கட்' (Vicious Biscuit) உணவகத்தில் பிரம்மாண்டமான , புதுமையான காலை உணவு வகைகளை ருசித்தோம். தொடர்ந்து, அமெரிக்காவின் பழமையான விவசாயப் பண்ணைகளில் ஒன்றான 'பூன் ஹால் பிளான்டேஷன்' (Boone Hall Plantation) பகுதிக்குச் சென்றோம். இதன் நுழைவாயிலில் இருபுறமும் பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கும் நூற்றாண்டு பழமையான ஓக் மரங்களின் வரிசை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. அங்குள்ள வரலாற்று மாளிகை, அடிமைமுறை காலத்து வீடுகள் , Gullah கலாச்சாரக் கதைகளைக் கேட்டு இப்பகுதியின் கடந்த கால வரலாற்றை ஆழமாகத் தெரிந்துகொண்டோம்.

𝐌𝐨𝐮𝐧𝐭 𝐏𝐥𝐞𝐚𝐬𝐚𝐧𝐭 𝐌𝐞𝐦𝐨𝐫𝐢𝐚𝐥 𝐖𝐚𝐭𝐞𝐫𝐟𝐫𝐨𝐧𝐭 𝐏𝐚𝐫𝐤

சார்லஸ்டன், மவுண்ட் பிளசண்ட் நகரங்களை இணைக்கும் புகழ்பெற்ற Arthur Ravenel Jr. Bridge இது ஆகும். கூப்பர் ஆற்றின் குறுக்கே கம்பீரமாக அமைந்துள்ள இந்த கேபிள் பாலம் , வட அமெரிக்காவின் மிக நீளமான கேபிள் பாலங்களில் ஒன்றாகும். கப்பல் வடிவிலான இரண்டு பிரம்மாண்டமான வைர வடிவ கோபுரங்களும், அதிலிருந்து பிரியும் வெள்ளை நிற கேபிள்களும் இந்தப் பாலத்திற்கு தனித்துவமான அழகைத் தருகின்றன. 2005-ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இப்பாலம், இப்பகுதியின் மிக முக்கியமான போக்குவரத்து வழித்தடமாகவும், சுற்றுலாப் பயணிகளையும் உள்ளூர் மக்களையும் கவரும் ஒரு முக்கிய அடையாளமாகவும் திகழ்கிறது. பாலத்தின் அடியில் இருக்கும் பூங்கா, இதன் அழகிய பின்னணியில், கடலின் குளிர்ந்த காற்றை ரசித்தபடி புகைப்படம் எடுக்க இது ஒரு மிகச்சிறந்த இடமாகும்.

𝐌𝐭 𝐏𝐥𝐞𝐚𝐬𝐚𝐧𝐭 𝐏𝐢𝐜𝐧𝐢𝐜
பயணத்தின் இறுதிப் பகுதியாக, Mt Pleasant நகரின் எழில் கொஞ்சும் வீதிகளையும், கடலோரப் பூங்காக்களையும் சுற்றிப் பார்த்தோம். நவீன வசதிகளும், பழமையின் அழகும் ஒருங்கே அமைந்த இப்பகுதி எங்களது மூன்று நாள் சார்லஸ்டன் பயணத்திற்கு ஒரு முத்தாய்ப்பான நிறைவாக அமைந்தது. நான்கு மணி வாக்கில் தாவளம் நோக்கிப் புறப்பட்டு மாலை ஏழு மணிக்கும் சற்றுப் பின்னால் வந்து சேர்ந்தோம்.

சார்லஸ்டன் நகரின் கட்டிடக் கலை, கடலோர எழில் , சுவையான உணவுகள் என இந்த மூன்று நாள் பயணம் என்றும் மறக்க முடியாத இனிய நினைவுகளை நெஞ்சில் ஏந்தித் தந்தது. மீண்டும் ஒருமுறை செல்லத்தூண்டும் வரலாற்று அமைதி இந்நகரத்தின் தனிச்சிறப்பு. கோடைகாலத்தின் தொடக்கத்தில் நாங்கள் அங்கு சென்றிருந்ததால், கிங் ஸ்ட்ரீட் வீதி முழுவதுமே பருவகாலத்திற்குரிய துடிப்புடனும் பொலிவுடனும் காணப்பட்டது. எங்குத் திரும்பிப் பார்த்தாலும் இளம் பெண்கள் தங்களின் இலகுவான, மெல்லிய கோடைகால ஆடைகளுடன் மகிழ்ச்சியோடு உலா வந்து கொண்டிருந்தனர். பிராண்டி மெல்வில் போன்ற புகழ்பெற்ற கடைகளில் இருந்து வாங்கிய நவீன ஆடைகளை அணிந்து, கைகளில் குளிர்பானங்களுடன் அவர்கள் குழுக்களாக நடந்து சென்றது அந்த வரலாற்று வீதிக்கு ஒரு புதிய இளமைத் துடிப்பைத் தந்தது. சார்லஸ்டனின் இதமான வெயிலும், கடலோரக் காற்றும், வண்ணமயமான அந்த உடுப்புகளும் இணைந்து ஒட்டுமொத்தப் பகுதியையுமே ஒரு அழகான கோடைகாலக் திருவிழா போல மாற்றித் தந்தது பார்ப்பதற்கு மிக அழகாக இருந்தது.

-பழமைபேசி.

5/31/2026

அரவணைப்புக் கடமை (duty of care)

 


வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையில் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அதன்நிமித்தம், இலாபநோக்கற்ற நிறுவனங்களின் நிர்வாகிகளுக்கான சான்றிதழ்ப் படிப்பு குறித்த விழிப்புணர்வுக்காக நானும் ஒரு வகுப்பில் சேர்ந்து சான்றிதழ் பெற்றேன். அதில் ஒரு பாடம்தான் அரவணைப்புக் கடமை. பேரவையில் இப்பொறுப்பானது கடைபிடிக்கப்பட வேண்டுமென்பதற்காக, இடம் பெற்ற ஒரு நிகழ்வினைச் சுட்டிக்காட்டினேன். அதன் தொடர்ச்சியாகத்தான் இதுவும்.

ரிக் ரெஸ்கோர்லா, Morgan Stanley Dean Witter என்ற பெரிய நிதி நிறுவனத்தின் பாதுகாப்புப் பிரிவின் துணைத் தலைவராகப் பணியாற்றினார். அவருடைய அலுவலகம் உலக வர்த்தக மையத்தின் தெற்கு கோபுரத்தில் இருந்தது. வியட்நாம் போரில் பங்கேற்ற அமெரிக்க ராணுவ அதிகாரியான ரிக், பாதுகாப்பை வெறும் ஒரு மேஜை பணியாகப் பார்க்கவில்லை. தன் பொறுப்பில் இருந்த 2,700 ஊழியர்களின் பாதுகாப்பைத் தன் சொந்தப் பொறுப்பாகக் கருதினார். 1993-ஆம் ஆண்டு உலக வர்த்தக மையத்தில் நடந்த குண்டுவெடிப்புக்குத் பிறகு, இந்தக் கட்டடங்கள் மீண்டும் வான்வெளித் தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயம் இருப்பதாக ரிக் தீர்க்கமாக நம்பினார். அங்கிருந்து அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்றுமாறு அவர் நிறுவனத்திற்குப் பரிந்துரைத்தார். ஆனால் நிறுவனம் அங்கேயே இருக்க முடிவு செய்தபோது, ரிக் ஒரு தீர்க்கமான முடிவை எடுத்தார்: "அவர்களை இந்த இடத்தை விட்டு மாற்ற முடியாவிட்டால் என்ன, ஆபத்திலிருந்து எப்படித் தப்பிப்பது என்பதை அவர்களுக்குக் கற்றுக்கொடுப்பேன்!"

ரிக் ஒரு கடுமையான அவசரக்கால வெளியேற்றத் திட்டத்தை அமல்படுத்தினார். ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒருமுறை, அங்கு பணிபுரிந்த ஆயிரக்கணக்கான ஊழியர்களை அவர்களின் வேலைகளை நிறுத்தச் செய்து கட்டாயப் பயிற்சி அளித்தார். இருண்ட, குறுகலான அவசரக்காலப் படிக்கட்டுகளில் அவர்களைக் கீழே இறங்கி நடக்க வைத்தார். Stopwatch மூலம் அவர்கள் இறங்கும் நேரத்தைக் கணித்தார். ஒரு ஒலிபெருக்கி மூலம் கட்டளைகளைக் கூவி, பதற்றமின்றி எப்படி வெளியேற வேண்டும் என்று பயிற்சி அளித்தார்.

பல ஊழியர்கள் இதைப் பார்த்து சலிப்படைந்தனர். தங்களின் விலைமதிப்பற்ற வேலை நேரம் வீணாவதாகக் கூறினர். "இந்த ராணுவக்காரருக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது" என்று கேலி செய்தனர். ஆனால் ரிக் யாரிடமும் நல்ல பெயர் வாங்க விரும்பவில்லை; அவர்களின் உயிரைக் காப்பாற்ற மட்டுமே விரும்பினார்.

செப்டம்பர் 11 காலை, ஒரு விமானம் வடக்கே இருந்த முதல் கோபுரத்தைத் தாக்கியது. உடனே, ரிக் இருந்த தெற்கு கோபுரத்தின் பொது அறிவிப்பு அமைப்பில், "இந்தக் கட்டடம் பாதுகாப்பாக உள்ளது, ஊழியர்கள் யாரும் வெளியேற வேண்டாம், தத்தமது இருக்கைகளில் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது" என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், ஜன்னல் வழியே வெளியே தெரிந்த நெருப்பையும் புகையையும் பார்த்த ரிக், அந்த அரசு அறிவிப்பை முற்றிலும் புறக்கணித்தார். அவருடைய பொறுப்பு அந்தக் கட்டடத்தின் நிர்வாகத்திற்கு அல்ல, அங்கு பணிபுரியும் மனிதர்களுக்கு மட்டுமே! உடனே தன் மெகாஃபோனை கையில் எடுத்து உரத்த குரலில் கட்டளையிட்டார்: "உடனே அனைவரும் வெளியேறுங்கள்!"

ரிக் கொடுத்த இடைவிடாத பயிற்சிகளின் காரணமாக, அந்த 2,700 ஊழியர்களும் எவ்வித பதற்றமும் இன்றி, வரிசையாக அவசரக்காலப் படிக்கட்டுகளில் கீழே இறங்கத் தொடங்கினர்.

அவர்கள் இறங்கிக் கொண்டிருக்கும் போதே, இரண்டாவது விமானம் அவர்கள் இருந்த தெற்கு கோபுரத்தின் மேல் பகுதியில் பயங்கரமாக மோதியது. கட்டடமே பலத்த சத்தத்துடன் அதிர்ந்தது, மின்சாரம் துண்டிக்கப்பட்டது, எங்கும் பயமும் மரண ஓலமும் சூழத் தொடங்கியது. அந்த இக்கட்டான நொடியில் ரிக் முன்னால் நின்றார். தன் மெகாஃபோன் மூலம் வழிகாட்டியதோடு மட்டுமல்லாமல், மக்களின் பயத்தைப் போக்கத் தொடங்கினார். அவர்களின் கவனத்தைத் திசைதிருப்ப, தன் சிறுவயதில் கற்ற நாட்டுப்புறப் பாடல்களையும், அமெரிக்க தேசியப் பாடல்களையும் அந்தப் புகையார்ந்த படிக்கட்டுகளில் உரக்கப் பாடத் தொடங்கினார்.

"கடவுள் அமெரிக்காவை ஆசீர்வதிப்பாராக..." என்று அவருடைய கம்பீரமான குரல் அந்தப் படிக்கட்டுகளில் எதிரொலித்தது.

அவருடைய தைரியமான குரலைக் கேட்ட ஊழியர்கள், தங்களுக்குள் ஒரு பாதுகாப்பை உணர்ந்ததாகப் பின்னாளில் கண்ணீருடன் கூறினர். அது அவர்களுக்குப் பயமின்றி முன்னோக்கி நடக்கும் சக்தியைக் கொடுத்தது.

ரிக், தன் நிறுவனத்தைச் சேர்ந்த கிட்டத்தட்ட 2,700 ஊழியர்களையும் பாதுகாப்பாகக் கட்டடத்தை விட்டு வெளியேற்றினார். ஆனால், அவருடைய கடமை அத்துடன் முடிந்துவிடவில்லை. மேல் தளங்களில் யாராவது காயமடைந்து அல்லது வழியறியாமல் சிக்கியிருக்கலாம் என்பதை உணர்ந்த ரிக், மீண்டும் கட்டடத்திற்குள் செல்லத் திரும்பினார். அவருடைய சக ஊழியர் ஒருவர், "ரிக், எல்லோரும் வெளியே வந்துவிட்டார்கள், நீங்களும் எங்களுடன் வந்துவிடுங்கள்" என்று கெஞ்சினார்.

அதற்கு ரிக் அமைதியாகப் பதிலளித்தார்: "கடைசி மனிதனும் வெளியேறிவிட்டான் என்பதை நான் உறுதி செய்யும் வரை என்னால் வர முடியாது." புகை சூழ்ந்த அந்தத் தெற்கு கோபுரத்தின் படிக்கட்டுகளில், எஞ்சியவர்களைத் தேடி மேலே நோக்கிச் சென்றுகொண்டிருந்த ரிக் ரெஸ்கோர்லாவைத்தான் அங்கிருந்தவர்கள் கடைசியாகப் பார்த்தனர். அடுத்த சில நிமிடங்களில் அந்தக் கோபுரம் மொத்தமாக இடிந்து விழுந்து தரைமட்டமானது.

அந்தப் பேரழிவின் நாளில், மோர்கன் ஸ்டான்லி நிறுவனம், பாதுகாப்புப் படையினர் உட்பட வெறும் 13 ஊழியர்களை மட்டுமே இழந்தது. 2,680-க்கும் மேற்பட்ட மனிதர்கள் அன்று மாலை பாதுகாப்பாகத் தங்கள் குடும்பத்தாரிடம் சென்று சேர்ந்தனர் என்றால், அதற்கு ஒரே ஒரு மனிதனின் "பாதுகாப்புப் பொறுப்புணர்வும் கடமையும்தான்" காரணம். வீடு வந்து சேராத ரிக், நமக்குப் பாடமாகி சாகாவரம் பெற்று, இன்றும் நம்மில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்!

-பழமைபேசி.

5/30/2026

பேரவையும், மில்லியன் டாலர் நிதியும்

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவைக்கென்று உடன்பயணிக்கும் தன்னார்வலர்கள் நிறைய உண்டு. கூட்டங்களுக்கு வராமல் இருக்கலாம், விழாக்களுக்கு வராமல் இருக்கலாம், ஆனால் பேரவையில் நடக்கும் ஒவ்வொன்றையும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்பர்; பேரவை ஆர்வலர்களுடன் தொடர்பில் இருப்பர். பேரவையின் மீதான பற்று என்றால் பற்று. போதை என்றால் போதை. அது விவாதத்துக்கு உட்பட்டது.

பேரவையிடம் இருக்கும் தரவுகளைக் காட்டிலும், தன்னார்வலர்கள் சிலரிடம் இருக்கும் தரவுகள் நிரம்ப. பேரவையின் செயற்குழுவுக்கு வருவர் போவர். ஆனால் இந்தத் தன்னார்வலர்கள் எப்போதும் போல இருந்து கொண்டே இருப்பர். வரும் செயற்குழு, ஆவணங்களைப் பேணுவதில் அவ்வளவு நாட்டம் கொண்டிருக்க மாட்டார்கள்; காரணம், அவர்கள் தற்காலிகர்கள். மேற்கூறப்பட்ட தன்னார்வலர்கள் நிலையானவர்கள்.

மில்லியன் டாலருக்கான அத்தனை நிகழ்தேதிகள், அதற்கான ஆவணங்கள் எங்களிடம் உண்டு. அந்த ஆவணங்களின் அடிப்படையில்தான், 2024 தேர்தலில் மில்லியன் டாலர் காலவரிசைப்படம் உருவாக்கப்பட்டு, பரப்புரைக்காகப் பயன்படுத்தப்பட்டது. முந்தைய செயற்குழுக்களின் நோக்கம் நல்லதாக இருந்திருக்கலாம். ஆனால், வெளிப்படைத்தன்மையில், ஆவணப்படுத்துதலில் பெரும் ஓட்டை. அதை இலாகவமாகப் பயன்படுத்திக் கொண்டோம். தேர்தலில் ஒட்டுமொத்த அணியும் வெற்றி பெற்றது வரலாறு.

பேரவையின் தன்னார்வலர் ஒருவர் பேரவைக்குப் பெயர் கிடைக்க வேண்டுமெனச் செய்த செயற்பாடுதான் அது. எவரும் மாற்றுக்கருத்துக் கொள்ளவே முடியாது. இல்லையானால், அப்பணத்தைப் பெற்று அப்படியே தமிழ்நாட்டு அரசிடம் கொடுத்து விளம்பரங்களைப் பெற்றிருந்திருக்கலாம் வெகுசுலபமாக. ஆனால் அவர்கள் அப்படிச் செய்யவில்லை. காரணம் பேரவையின் மீதான அக்கறை.

கொடைப்பணம், ”கோவிட் தொற்றுநிதி” எனும் சிட்டைப்பெயருடன் கையளிக்கப்பட்ட பணம். அப்படியான சிட்டைப் பெயர் கொண்டிருப்பதால், அதற்கு மட்டுமேதான் செலவிடப்பட்டாக வேண்டுமாயென்றால் இல்லை. அதற்காகச் செலவிடப்பட்டு, எஞ்சியதை எந்தவொரு இலாபநோக்கற்ற நிறுவனமும் பிறிதொரு அறச்செயலுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். சட்டம் அதனை அனுமதிக்கின்றது. இவர்களின் நோக்கம், கொஞ்சத்தைத் தமிழ்நாட்டுக்குக் கொடுத்துவிட்டு எஞ்சியதைப் பேரவைப் பணிகளுக்கு என்பதாக இருந்திருக்கின்றது. அதற்கான ஒப்புதல்மடலும் பெறப்பட்டிருக்கின்றது.

தமிழ்நாட்டுப் பணத்தை நீங்கள் எப்படிக் கைக்கொள்ளலாமென்பதான விமர்சனம். தவறில்லை. அதிலும் ஒரு தர்க்கம் இருக்கின்றது. முறைப்படி மறுமொழியலாம். அல்லது, தமிழ்நாட்டுக்குக் கொடுத்துவிடலாம். அதற்கு யார் பொறுப்பு? அடுத்து வந்த செயற்குழுதான் பொறுப்பு. விடுத்து, பணத்தைப் பெற்றுக் கொடுத்தவரைத் தொடர்ந்து கிண்டிக்கொண்டிருப்பது அநீதி.

பெற்றுக்கொடுத்தவர் குறித்து நாங்கள் செய்யாத கிண்டலில்லை. கேலியில்லை. பேசாத பேச்சில்லை. காரணம், அமைந்த செயற்பாடுகள். “எங்களுக்கு ஒரு ஃபோன் செய்திருந்தால் போதும், கொண்டாடப்பட்டு உயர்ந்த நிலைக்கு எடுத்துச் சென்றிருப்போம். சேர்க்கை சரியில்லை போல. தவறாக வழிநடத்தப்படுகின்றார்” என, கேலி கிண்டல் விமர்சனம் செய்த அளவுக்கு நிகராக, அக்கறையின்பாற்பட்டும் பேசியிருக்கின்றோம். பரிவும் கொண்டிருந்திருக்கின்றோம்.

காய்ச்சலும் தலைவலியும் அவரவர்க்கு வந்தால்தான் தெரியும். ஒரு பெரும்பணத்தை ஈட்டியும் கொடுத்துவிட்டு, சமூகத்திடம் நொம்பலமும் பெற்றுக் கொள்வதெல்லாம் முதிர்ந்த சமூகத்தின் அழகாக இருக்க முடியாது. எனக்கு அவருக்குமான உறவென்பது இதுதான். இதை நான் தமிழின்மீது ஆணையிட்டு என் பிள்ளைகளின்மீது ஆணையிட்டுச் சொல்கின்றேன். 15 விநாடிகள். 2025 விழாவில் பேசியதுதான் முதன்முறை. தொழில்முனைவோர் மாநாட்டு நாள் அது. “என்ன கோட் சூட் போடலையா?” “வணக்கங்க. வர்ற அவசரத்துல ஒரு சூட்கேசையே தவறவிட்டுட்டு வந்துட்டன்”. சிரித்துக் கொண்டார். அவ்வளவுதான், இந்த மணித்துளி வரையிலும் எங்களுக்குள்ளான உறவென்பது தொடர்பென்பது இவ்வளவுதான்!

பேரவையின் வசம் இருக்கும் அந்த வைப்புநிதிக்கு, அவர் பெயரை வைக்க வேண்டும். அல்லது அவர் பரிந்துரைக்கும் பெயரைச் சூட்டிக் கொள்ள வேண்டும். தற்போது அவர் செயற்குழுவிலும் இருக்கின்றார். விரைவில் பொறுப்புக்காலம் முடிவுக்கு வரவிருக்கின்றது. சிறப்புகள் செய்யப்பட்ட விடைபெறலாக அது அமைந்தால் அது நமக்குப் பெருமை!

𝐀 𝐬𝐢𝐧𝐠𝐥𝐞 𝐯𝐨𝐢𝐜𝐞 𝐫𝐚𝐢𝐬𝐞𝐝 𝐟𝐨𝐫 𝐣𝐮𝐬𝐭𝐢𝐜𝐞 𝐜𝐚𝐧 𝐞𝐜𝐡𝐨 𝐟𝐚𝐫𝐭𝐡𝐞𝐫 𝐭𝐡𝐚𝐧 𝐚 𝐭𝐡𝐨𝐮𝐬𝐚𝐧𝐝 𝐰𝐡𝐢𝐬𝐩𝐞𝐫𝐬 𝐨𝐟 𝐚𝐠𝐫𝐞𝐞𝐦𝐞𝐧𝐭.

-பழமைபேசி.

5/26/2026

𝐅𝐞𝐓𝐍𝐀: 𝐅𝐢𝐝𝐮𝐜𝐢𝐚𝐫𝐲 𝐃𝐮𝐭𝐢𝐞𝐬

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை போன்ற ஒரு முக்கிய இலாப நோக்கற்ற அமைப்பின் இயக்குநராகவோ  அல்லது பொறுப்பாளராகவோ செயல்படும்போது, சட்டப்பூர்வ, அறநெறி சார்ந்த கடமைகள் மிக அதிகம். இதனை ஆங்கிலத்தில் Fiduciary Duties (நம்பிக்கைப் பொறுப்புக் கடமைகள்) என்று அழைப்போம். இந்தக் கடமைகளின்படி, ஒரு இயக்குநர் (Board Member) முக்கியமாக என்ன செய்யக்கூடாது என்பதை மூன்று முதன்மைக் கோட்பாடுகளின் கீழ் பின்வருமாறு பிரிக்கலாம்:

தன்முனைப்பு, தன்விளம்பரமின்மை

அமைப்பின் நலனைத் தவிர்த்து, தனது சொந்த அல்லது ஒரு குறிப்பிட்ட குழுவின் நலனுக்காகச் செயல்படக் கூடாது. தன்னல முரண்பாடுகளை (Conflicts of Interest) மறைக்கக் கூடாது: உங்களுக்கோ, உங்கள் நண்பர்களுக்கோ அல்லது உங்களுக்கு நெருக்கமானவர்களுக்கோ நிதி ரீதியாகவோ அல்லது தகுதி ரீதியாகவோ நன்மைதரும் எந்தவொரு ஒப்பந்தம், வாக்கெடுப்பு  தேர்விலும் நீங்கள் தலையிடவோ அல்லது அதை மறைக்கவோ கூடாது. (எகா: தன் சங்கத்துக்கு நிதி ஒதுக்கீடு, பொறுப்பளித்தல் போன்ற வாக்கெடுப்பில் கலந்து கொள்ளக் கூடாது)

தன்-வணிகம் செய்யக்கூடாது. உங்கள் பொறுப்பினைப் பயன்படுத்தி முறையற்ற பயணப் படிகள், கட்டணத் திருப்பிச் செலுத்தல்கள் அல்லது அமைப்பின் வளங்களை தனிப்பட்ட தேவைக்கு பயன்படுத்தக் கூடாது. (எகா: பேரவையின் மின்னஞ்சல்களைத் தன்னலத்துக்குப் பயன்படுத்துவது குற்றம்)

அமைப்பின் இணையதளங்கள், சமூக ஊடகப் பக்கங்கள், வர்த்தக முத்திரைகள், துணைக்குழுக்கள் அனைத்தும் ஒட்டுமொத்த அமைப்புக்குச் சொந்தமானவை. அதை ஒரு தனிநபரோ அல்லது ஒரு குறிப்பிட்ட அணியினரோ தங்களுக்கு மட்டும் சிறப்பு உரிமை உடையது எனக் கோரக் கூடாது. (எகா: வாட்சாப் குழுக்கள் அமைப்பின் வசம் ஒப்படைக்காமல் இருப்பது, TamilER முதலானவற்றை தம் அணிக்கு மட்டும் ஏதுவாகப் பயன்படுத்துதல் முதலானவை குற்றம்)

பொறுப்புக் கண்காணிப்பு

அமைப்பின் செயல்பாடுகளைக் கவனத்துடனும், விழிப்புடனும் கண்காணிக்க வேண்டும். அதில் கவனக்குறைவு இருத்தல் கூடாது. கூட்டங்களில் பங்கேற்காமல் இருப்பது, நிதிநிலை அறிக்கைகளை முறையாகப் படித்துப் பார்க்காமல் இருப்பது, அல்லது பெரிய திட்டங்களுக்குக் கண்மூடித்தனமாக "ஆம்" என்று வாக்களிப்பது கடமைத் தவறுதலாகும். அலட்சியமாக இருப்பதும் சட்டப்படி குற்றமே. (எகா: கூட்டத்தில் கலந்து கொள்ளாமலே, கூட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளிப்பது குற்றம்)

அமைப்பின் நிதி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இல்லாமலோ, கணக்குகளில் குளறுபடிகளோ, அல்லது நிர்வாகத்தில் சர்வாதிகாரப் போக்கோ தெரிந்தால், அதைத் தட்டிக்கேட்காமல் மௌனம் காக்கக் கூடாது. (எகா: தான் செயலாற்றும் குழு தாக்கல் செய்திருக்கும் வருமான வடிப் படிவத்தில் என்ன இருக்கின்றதெனக் கூட தெரியாத நிலையில் இருப்பது குற்றம்)

அமைப்பின் நிதியைத் தனிப்பட்ட கணக்குகளுடன் இணைப்பதோ அல்லது பெரிய செலவுகளுக்கு இருவர் கையொப்பமிட வேண்டும், வழங்குநர், வணிகர் தகவலைப் பகிர்தல் போன்ற உள்முகக் கட்டுப்பாட்டு விதிகளை மீறுவதோ பெரும் தவறாகும். (எகா: வெண்டர் தகவலைப் பகிராமல் இருப்பது குற்றம்)

சட்ட விதிமுறைப் பாதுகாப்பு

அமைப்பின் நோக்கங்களுக்கும், அதன் சட்ட விதிகளுக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். தேர்தல் நடைமுறைகள், உறுப்பினர்களின் குறைகளைத் தீர்க்கும் வழிமுறைகள் (Grievance procedures) ஆகியவை விருப்பத்தின் பேரில் பின்பற்றுபவை அல்ல; அவை சட்டப்பூர்வமாகக் கட்டுப்படுத்தக் கூடியவை. தங்களுக்குச் சாதகமான முடிவுகளைப் பெற விதிகளையும் நடைமுறைகளையும் மாற்றுவதோ அல்லது புறக்கணிப்பதோ கூடாது. (எகா: திட்டமிட்டே விண்ணப்பத்தைக் கிரீவன்சு கமிட்டிக்குக் கடைசி நாளான 15ஆம் நாளில் அனுப்பி இருந்தால் அது குற்றம்)

ஒரு குறிப்பிட்ட மாநாட்டிற்காகவோ (Convention) அல்லது கலைத் திட்டத்திற்காகவோ திரட்டப்பட்ட நிதியை, முறையான வெளிப்படையான ஒப்புதல், மறுசீரமைப்பு இல்லாமல் மற்ற பொதுவான செலவுகளுக்குப் பயன்படுத்தக் கூடாது. (எகா: மாநாட்டுச் செலவினைப் பொதுக்கணக்கில் எழுதுவது குற்றம்)

501(c)(3) வரிவிலக்கு பெற்ற ஓர் அமைப்பு, அதன் பண்பாட்டு, கல்வி நோக்கங்களிலிருந்து விலகி, ஒரு தரப்புக்கு ஆதரவளிப்பதோ அல்லது விளம்பரம், பரப்புரையில் ஈடுபடுவதோ கூடாது. (எகா: அரசியல், திரைப்பட வணிகம் முதலானவற்றுக்கு அமைப்பினர் அமைப்பினைப் பயன்படுத்துவது குற்றம்)

ஒரு நிர்வாகி எப்போது வெளிப்படைத்தன்மையைக் குறைத்து, பொதுவான உறுப்பினர்களின் குரலை நசுக்கி, தனது சொந்த அல்லது ஒரு குறிப்பிட்ட குழுவின் நிகழ்ச்சி நிரலுக்கு  முக்கியத்துவம் கொடுக்கிறாரோ, அப்போதே அவர் தனது நம்பிக்கைப் பொறுப்புக் கடமையிலிருந்து தவறிவிடுகிறார். (எகா: கடைசி நேரத்தில் நிர்வாகிகள் அஜண்டாவைத் தனதாக்கிக் கொள்வது மாபெரும் குற்றம்)

அமைப்பு நாளுக்கு நாள் வளர்கின்றது, விரிவடைகின்றது. பேரவை என்பது மட்டுமன்று; தமிழ்ச்சங்கங்களும்தான். ஆகவே, அமெரிக்காவில் அமெரிக்கராக வாழ்வது காலத்தின் கட்டாயம். செயற்குழுவில் பங்கேற்கு முன், விழிப்புணர்வு கொள்ள வேண்டும். புகழ்போதைக்கும் தன்விளம்பரத்துக்கும் ஆசைப்பட்டு, வணிக சக்திகளுக்கும் ஆதிக்க சக்திகளுக்கும் சோரம் போதல் கூடாது. உறக்கத்தினூடே எழுப்பிக் கேட்டாலும், சட்டவிதிமுறைகளைச்(bylaws) சரியாகச் சொல்லும்படியாகப் புரிந்து வைத்திருக்க வேண்டும்.


-பழமைபேசி, 05/26/2026.

5/10/2026

அன்னையர் நாள்

அன்னையர் நாளைக் கொண்டாடுவது அல்லது அன்னையரைப் போற்றுவது என்பது வெறும் ஒரு நாள் சடங்கு மட்டுமன்று; அது நம் வாழ்வின் வேரான அன்பிற்கும் ஈகத்திற்கும் நாம் செலுத்தும் நன்றிக்கடன்.  கருவிலே உருவானது முதல், அதை வளர்த்து ஆளாக்கி, தான் உள்ளவரையிலும் அன்னை செய்யும் உழைப்புடன் கூடிய உணர்வுப்புல ஈகங்கள் ஈடு இணையற்றவை. தன் நலனை விடக் குழந்தையின் நலனே பெரிதென வாழும் அந்தப் பேரன்பிற்கு நன்றி செலுத்தி, அவர்களின் இருப்பை உளப்பூர்வமாக உணர்ந்து செப்பனிட்டுக் கொள்ள வேண்டிய நாள், அன்னையர் நாள்!

குடும்பம் என்னும் அமைப்பை வலுவாக வைத்திருப்பதில் தாயின் பங்கு மிக முக்கியமானது. ஒரு வளமான சமுதாயம் உருவாக அடித்தளமாக இருக்கும் அன்னையர்களின் உழைப்பையும், சமூகப் பங்களிப்பையும் உணர்ந்து சிறப்பிக்க வேண்டியது கட்டாயம்.

இன்றைய வேகமான இயந்திர விரைவு உலகில், நாம் பல நேரங்களில் நெருக்கமான உறவுகளுக்கு நேரம் ஒதுக்கத் தவறிவிடுகிறோம். இது போன்ற ஒரு குறிப்பிட்ட நாள், நம் தாயுடன் நேரத்தைச் செலவிட, நம் அன்பை வெளிப்படுத்த, அவர்களின் உளநலம், உடல்நலம் பேணயென பல்வேறு விழுமியங்களுக்கான விழிப்புணர்வுத் தூண்டுதலாக அமைகிறது அன்னையார் நாள்.

நம் தமிழ்மரபில் அன்னைக்கு மிக உயரிய இடம் அளிக்கப்பட்டுள்ளது. "ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும்" என்ற வள்ளுவரின் வாக்கு, ஒரு தாய் தன் பிள்ளையின் வளர்ச்சியில் அடையும் மகிழ்ச்சியைப் படம் பிடித்துக் காட்டுகிறது. பண்டைய சங்க இலக்கியங்கள் துவக்கம், பாரதியாரின் கவிதைகள் வரை, தாயைப் போற்றுதலென்பது அறமாகவும் பண்பாடாகவும் பார்க்கப்படுகிறது.

உலக அளவில், 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அன்னா ஜார்விஸ் என்பவரால் தன் தாயின் நினைவாகத் தொடங்கப்பட்ட இந்த முயற்சி, இன்று உலகளாவிய கவனத்தைப் பெற்றுள்ளது. நாம் செய்ய வேண்டியது என்ன? விலையுயர்ந்த பரிசுகளை விட, அவர்களுடன் செலவிடும் நேரம், அவர்கள் மீது காட்டும் பரிவும் கவனமும், அவர்களின் உழைப்பைப் பாராட்டிச் சொல்லும் சில அன்பான வார்த்தைகள், அவர்களின் வாழ்வியலை ஆய்வு செய்து கொள்வது, நாட்டம் கொண்டு எதிர்வரும் காலத்தினைத் திட்டமிடுவது போன்றவை பயனளிக்கக் கூடியவை.

அன்னையரைப் போற்றுவது என்பது ஒரு நாளைக்குரியது மட்டுமன்று, அது வாழ்நாள் முழுவதும் நம் செயல்களில் வெளிப்பட வேண்டியவொன்று. அன்னையென்பவள், குழந்தைப் பேறு முதல் எதிர்கொள்ளும் உடல்ரீதியான மாற்றங்களுக்கு உட்பட்டவள். அதே கூறுகள், அத்தை, சின்னம்மா, பெரியம்மா, மனைவி, உடன்பிறந்தாள், தோழியென அனைத்து மகளிருக்கும் பொருந்தும்.

அண்மைக்காலமாக, எனக்கு அடிக்கடி மனத்துள் தோன்றுவதெல்லாம் இதுதான். அம்மா இருக்கின்றார். அம்மாவுடன் பிறந்தவர்கள் அம்மாவையும் சேர்த்து எட்டுப் பேர். அம்மாவின் தந்தையார், தாயாருடன் பிறந்தவர்களுக்குப் பிறந்த், அம்மாவின் இரண்டாம் நிலைச் சகோதரங்கள் 22 பேர், ஆக 30 பேரின் குழந்தைகள், எம் தலைமுறையினர் 71 பேர். இந்த 71 பேருக்குமான பிணைப்பை இன்றளவும் தன்னகத்தே கொண்டிருப்பவர் அம்மா. பேராலமரமாக மனக்கண்களில் உருக்கொள்கின்றார்.

அன்றாடமும் அழைத்துப் பேசுவது வாடிக்கை. சற்றுமுன்பும் அழைத்திருந்தேன். காளியம்மன் கோவில் முன்பு கும்மியாட்டம், நான் அங்கிருக்கின்றேனெனச் சொல்லிச் சற்றுப் பேசினார். அவர் கேட்ட முதல் கேள்வி, சாப்பிட்டாயா? “சாப்பிட்டாயா?”, அந்த ஒற்றைவினாவில் அடங்கி இருக்கின்றது எல்லாமும். இதற்கு மேல், அன்னையர் நாளில், அன்னையர் குறித்துச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஒன்றுமேயில்லை.

𝐋𝐢𝐟𝐞 𝐝𝐨𝐞𝐬𝐧’𝐭 𝐜𝐨𝐦𝐞 𝐰𝐢𝐭𝐡 𝐚 𝐦𝐚𝐧𝐮𝐚𝐥; 𝐢𝐭 𝐜𝐨𝐦𝐞𝐬 𝐰𝐢𝐭𝐡 𝐚 𝐦𝐨𝐭𝐡𝐞𝐫.


5/08/2026

இன்றைய இளையோர் இயக்கங்களும் தோல்விகளும்

தலைமுறை இடைவெளிகளும் தொழில்நுட்ப வளர்ச்சியின் பின்னணியும் கூடிய இன்றைய இளைஞர்கள் சமூக மாற்றத்திற்காக முன்னெடுக்கும் முன்னெடுப்புகள், பெரும் எதிர்பார்ப்புடன் தொடங்கி, பெரும்பாலும் ஏமாற்றத்திலேயே முடிகின்றனயென்பதை உலகெங்கும் பார்த்து வருகின்றோம்.

முந்தைய கால போராட்டங்களில் ஒரு வலுவான கட்டமைப்புடன் இடம் பெறும். ஆனால், Gen-Z இயக்கங்கள் பெரும்பாலும் முறைசார் இயக்கமும் முறையான தலைமையும் அற்ற முறையில் நடக்கின்றன, அல்லது ஒரு தனிமனிதரின் பிம்பத்தின்மீது இடம் பெறுகின்றன. இது துவக்கத்தில் ஜனநாயகமாகத் தெரிந்தாலும், நீண்ட கால திட்டங்களை வகுக்கவும் தொலைநோக்குக் கொள்கைகள் இல்லாமல் போகும்போதும், திசைமாறிச் சிதறிவிடுகிறது. 2020இல் அமெரிக்காவில் நடந்த 'Black Lives Matter' முன்னெடுப்புகள் உலகையே உலுக்கின. ஆனால், தெளிவான தலைமை இல்லாததால், நிதி கையாளுதல், அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளில் பெரும் குழப்பம் ஏற்பட்டு, அதன் தாக்கம் குறைந்தது.

இன்றைய புரட்சிகள் பெரும்பாலும் ஹேஷ்டேக்குகள் மூலம் தொடங்குகின்றன. இணையத்தில் ஒரு பதிவினைப் பகிரும்போது கிடைக்கும் ஒருவித "போலி மனநிறைவு", களத்தில் இறங்கி உழைக்கும் வீரியத்தைக் குறைத்துவிடுகிறது. சமூக ஊடகங்கள் ஒரு முன்னெடுப்பினை விரைவாகப் பிரபலப்படுத்தினாலும், அதே வேகத்தில் மக்கள் அடுத்த ட்ரெண்டிற்கு மாறிவிடுகிறார்கள். இதனால் இயக்கத்தின் ஆழம் நீர்த்துப்போகிறது.

டிஜிட்டல் யுகத்தில் வளர்ந்த தலைமுறை என்பதால், எல்லாவற்றிலும் உடனடி முடிவுகளை எதிர்பார்க்கும் போக்கு காணப்படுகிறது. ஒரு புரட்சி என்பது பல ஆண்டுகள் நீடிக்க வேண்டிய ஒரு நீண்ட பயணம். ஆனால், சில வாரங்களிலேயே மாற்றம் நிகழவில்லை என்றால், இளைஞர்கள் சோர்வடைந்து பின்வாங்குகின்றனர். இந்த பொறுமையின்மையை ஆளும் வர்க்கம் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறது. இலங்கையின் 'Aragalaya' போராட்டம். அதிபரை விரட்டியடித்த வேகத்தில் இளைஞர்கள் ஒரு புதிய அரசியல் மாற்றத்தைக் கொண்டுவருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முறையான அரசியல் மாற்றுத் திட்டம்  இல்லாததால், மீண்டும் பழைய அரசியல் சக்திகளிடமே அதிகாரம் சென்றடைந்தது.

பல Gen-Z இயக்கங்கள் "எதை எதிர்க்கிறோம்" என்பதில் தெளிவாக இருக்கின்றன, ஆனால் "எதை உருவாக்கப் போகிறோம்" என்பதில் தெளிவில்லாமல் இருக்கின்றன. வெறும் எதிர்ப்பை மட்டும் மூலதனமாகக் கொண்டு ஒரு நிலையான ஆட்சியை அல்லது மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. சமீபத்திய வங்கதேச மாணவர்கள் போராட்டம். ஷேக் ஹசீனாவை பதவியிறக்கம் செய்வதில் வெற்றி கண்டாலும், அதற்குப் பின் வந்த வன்முறைகள் மற்றும் மதவாத ஊடுருவல்கள் அந்தப் புரட்சியின் நோக்கத்தையே கேள்விக்குறியாக்கின.

இளைஞர்கள் ஒரு கொள்கைக்காகப் போராடினாலும், பிலிப்பைன்ஸ் அரசியல் இன்றும்  'ஆளுமை வழிபாடு' என்பதிலேயே சுழல்கிறது. ஜனநாயக விழுமியங்களை விட, "ஆராதிக்கும் இவரால்தான் நாடு முன்னேறும்" என்ற பழைய காலத்து எண்ணம் இளைஞர்களிட, ஆழமாக இருப்பதால் அவர்களது முன்னெடுப்புகள் தேக்கநிலையையே கண்டன.

Gen-Z இயக்கங்கள் தோல்வியடையக் காரணம் அவர்களின் நோக்கத்தில் இருக்கும் பிழையல்ல, மாறாக அந்த நோக்கத்தைச் செயல்படுத்தத் தேவையான நிறுவன ரீதியான கட்டமைப்பு  இல்லாததே ஆகும். உணர்ச்சிகரமான போராட்டங்களுடன், அறிவுப்பூர்வமான அரசியல் திட்டமிடலும் இணையும்போது மட்டுமே எதிர்காலப் புரட்சிகள் வெற்றியைத் தழுவும். 

தமிழ்நாட்டின் அடுத்தடுத்த காட்சிகள், இன்றைய இளையோரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுமா அல்லது உலகின் ஏனைய நிகழ்வுகளைப் போலவே அமையுமா? முடிவு, காலத்தின் கைகளில்!


-பழமைபேசி.

5/05/2026

தேர்தலில் பங்களிப்பு

"யாதும் ஊரே யாவரும் கேளிர்"
— கணியன் பூங்குன்றனார்

உலக நாகரிகத்தின் தொட்டிலென்று போற்றப்படும் தமிழும், அதன் மக்களும் உலக வரலாற்றின் மிகத் தொன்மையான அடையாளங்கள். காலங்காலமாகக் கடல் கடந்து வாழும் ஆற்றல் கொண்ட தமிழர்கள், இன்று உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவிலும் தங்களின் ஆழமான முத்திரையைப் பதித்துள்ளனர். அப்படிப்பட்ட அமெரிக்க மண்ணில் வாழும் லட்சக்கணக்கான தமிழர்களின் ஒட்டுமொத்தக் குரலாகவும் அவர்களின் பண்பாட்டு முகமாகவும் விளங்குவதுதான் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையாகும். இப்பேரவையின் தரத்தையும், நயத்தையும், மாண்பினையும் காத்து மேம்படுத்துவது ஒவ்வொரு தமிழரின் கடமையாகும்.

தமிழ்மொழி வெறும் பேச்சல்ல; அது ஒரு பண்பாடு, வாழ்வியல் நெறி. உலகின் மிக மூத்தகுடியான தமிழ் மக்கள், தங்களின் உழைப்பாலும் அறிவுத்திறனாலும் அமெரிக்கா போன்ற உலகின் முதன்மை வாய்ந்த, நவீன தொழில்நுட்பம் மிக்க நாட்டில் தங்களை நிலைநிறுத்திக் கொண்டுள்ளனர். பல்வேறு மாநிலங்களில் பரவிவாழும் தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு மாபெரும் பாலமாக வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை செயல்படுகிறது.

அமெரிக்கா போன்ற ஒரு முற்போக்கு நாட்டில், தமிழர்களின் உயரிய விழுமியங்களைப் போற்றப்பணித்திருக்கும் பேரவை எப்போதும் தன் தரத்திலும் மாண்பிலும் விட்டுக்கொடுத்தல் செய்து கொள்ளக் கூடாது. உலக அரங்கில் தமிழின் பெருமையைப் பறைசாற்ற வேண்டுமானால், பேரவையின் செயல்பாடுகள் மிக உன்னதமானவையாக அமைய வேண்டும். ஒவ்வொருவரும் பேரவையைத் தம்வீடாக எண்ணி, இதன் வளர்ச்சிக்கும் நெறிமுறை சார்ந்த செயல்பாட்டிற்கும் தமக்கும் பங்குண்டு என்பதை நாம் உணர வேண்டும்.

ஒரு மாபெரும் அமைப்பு இன்னும் உயரங்களை எட்ட வேண்டுமானால், அதற்குள் இருக்கும் தேக்க நிலைகளையும், எதிர்மறையான காரணிகளையும் அடியோடு ஒழிக்க வேண்டும். பேரவை முழுமையான மாண்பை அடைய நாம் பின்வருவனவற்றைத் தவிர்க்க வேண்டும்:

குறுங்குழுச் சார்பு 

அமைப்புகளுக்குள் உருவாகும் சிறிய குழுக்களின் ஆதிக்கம், ஒட்டுமொத்தப் பேரவையின் நோக்கத்தைச் சிதைத்துவிடும். தனிமனித விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு, பொதுநலனை முன்வைக்க வேண்டும்.

 சாதி, சமயச்சார்பு 

"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" — திருவள்ளுவர்.  தமிழ் என்பது சாதி, சமயங்களைக் கடந்து எல்லோரையும் பிணைக்கும் ஒரு சக்தி. பேரவைக்குள் எந்தக் காரணத்தைக் கொண்டும் சாதிய, சமயரீதியிலான பாகுபாடுகளுக்கோ, முன்னுரிமைகளுக்கோ இடம் தரக் கூடாது. தமிழன் என்ற ஒற்றை அடையாளமே முதன்மையானதாகவும் பொதுவானதாகவும் இருக்க வேண்டும். 

பிற்போக்குத்தனம்

பழமைவாதக் கருத்துக்களையும், மாற்றங்களை ஏற்கமறுக்கும் பிடிவாதத்தையும் கைவிட்டு, காலத்திற்கு ஏற்ற நவீன சிந்தனைகளுடனும் அறிவியல் பார்வையுடனும் பேரவை நகர வேண்டும்.

பேரவையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல, பரந்த மனப்பான்மை கொண்ட தகுதியான தனிமனிதர்களின் பங்களிப்பு மிகவும் அவசியமாகும். தன்னார்வத் தொண்டுகளில் ஈடுபடுபவர்கள் பின்வரும் தகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும். உலகளாவிய பார்வையும், அனைவரையும் உள்ளடக்கும் தன்மையையும் கொண்டிருக்க வேண்டும். தன்முனைப்போ, புகழோ விரும்பாமல், அறநெறி, நேர்மையின் அடிப்படையில் செயலாற்ற வேண்டும். தமிழ்மொழியின் மரபினைப் பேணுவதோடு, புதுமை உலகிற்குத் தக்கவாறு வழிநடத்தும் சிந்தனை கொண்டிருக்க வேண்டும். தகுதியுடைய ஆளுமைகளை அடையாளம் கண்டு, அவர்களைப் பேரவையின் முக்கியப் பொறுப்புகளிலும் தன்னார்வத் தொண்டுகளிலும் ஈடுபடச் செய்வதே பேரவையின் தரத்தை உயர்த்தும் வழியாகும்.

பிளவுவாதம். பிற்போக்குத்தனம், தன்முனைப்பு, புகழ்வெளிச்ச ஆசை, பகைமை பாராட்டுதல், வாசிப்பற்ற மொண்ணைத்தனம் முதலானவை சமூகத்தின் பொதுநீரோட்டத்தில் இருப்பன. பேரவைக்களமும் இவற்றில் விதிவிலக்கல்ல. அவை எங்குமிருக்கும். ஆனால், தன்னார்வத் தொண்டு என்பது மற்றவருக்கான சேவையில் தம்மைக் கரைத்துக் கொள்ளக் கூடிய மெழுகுவர்த்தியைப் போன்றதாகும். பல மணி நேரங்கள் உழைத்திட வேண்டும். மக்களின்பால் பரிவு இருந்திடல் வேண்டும். அக்கறை கொள்ள வேண்டும். அதிகாரத்துக்கும் மேட்டிமைக்கும் ஆனதல்ல இப்பணிகள்.

தன்கருத்து எதுவானாலும் திடமாகச் சொல்லும் மனப்பாங்கு இருந்திடல் வேண்டும். குறுங்குழுவாதத்துக்குள் இருந்துகொண்டு கொந்தளிப்புகளோடு இருப்பதற்கான இடமல்ல பேரவை. ஒவ்வொருவரும் தன் ஆன்மாவுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். அப்படியானவர்களைக் கண்டறிந்து தேர்வு செய்யுங்கள். அவர் சொன்னார், இவர் சொன்னார், அந்தக் கொள்கை, இந்தக் கொள்கை என்பதெல்லாம் வேலைக்காகாது, குறுங்குவாத பகைமை பாராட்டும் சமன்பாடற்ற இடத்திற்கே இட்டுச்செல்லக் கூடியன அவை. உங்கள் ஓட்டு, உங்கள் உரிமை! 

Have the courage to exercise your rights.

-பழமைபேசி.

4/25/2026

கொடுஞ்சுழற்சி

வாழ்வியலில் ஒரு தீயவிளைவு மற்றொன்றற்குக் காரணமாகி, அது மீண்டும் தொடக்கத்திலிருந்த சிக்கலையே இன்னும் வலுப்படுத்துவதை 'கொடுஞ்சுழற்சி' என்கிறோம். இது ஒரு நச்சுச்சுழல் போன்றது. ஒரு சிக்கலில் இருந்து வெளிவர முயலும்போது, அதுவே மற்றொரு சிக்கலை உருவாக்கி, மீண்டும் நம்மைத் தொடக்கப் புள்ளிக்கே கொண்டு வந்து நிறுத்தும் ஒரு முடிவிலித் தொடர்நிகழ்வாக இது அமைகிறது.

தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் பணியாற்றும் தனிநபர்களுக்கிடையே ஏற்படும் பிணக்குகள் ஒரு பெரும்கொடுஞ்சுழற்சியைத் தோற்றுவிக்கக்கூடும். பெரும்பாலும் பொதுநலன் கருதி இயங்கும் இவ்வமைப்புகளில், அதிகாரப் பகிர்வு அல்லது கருத்து மோதல்கள் ஏற்படும்போது அது பலவாறாகச் சுழன்று சுழன்று, சுழலுக்குள் எல்லாரையும் இழுத்துக் கொள்ளும் வல்லமை கொண்டது.

இரு நபர்களுக்கிடையே ஏற்படும் விருப்பு வெறுப்புகளின்பாற்பட்ட சிறு கருத்து வேறுபாடு, முறையான தகவல் தொடர்பின்மை, வெளிப்படைத் தன்மையின்மை, நெறிமுறைகளின்மை முதலானவற்றால், நம்பிக்கையின்மையைத் தோற்றுவிக்கும். அதுவே, அன்றாடப் பணிகளில் எதிரொலித்து, திட்டங்களில் தொய்வை ஏற்படுத்துகின்றது. அதனால் பின்னடைவு நேரும் போது, ஒருவருக்கொருவர் சுட்டிக் கொள்வர். இது மீண்டும் பகையை ஆழமாக்கி, புதிய பிணக்குகளுக்கு வழிவகுக்கிறது. இறுதியில், நிறுவனத்தின் உயரிய நோக்கங்கள் சிதைந்து, உறுப்பினர்களின் வெளியேற்றத்திற்கும் இது காரணமாகிறது.

கொடுஞ்சுழற்சியை உடைப்பது என்பது அச்சுழலின் ஏதேனும் ஒரு கண்ணியைத் தகர்ப்பதில்தான் உள்ளது. குறிப்பாகத் தொண்டு நிறுவனங்களில் ஏற்படும் பிணக்குகளை உடைக்க, வெளிப்படையான உரையாடலும், நடுநிலையான ஒருவரின் தலையீடும் தேவையாகின்றது. 

ஒரு சிக்கலான சுழலில் இருந்து விடுபட, அச்சுழலுக்கு நேர்மாறான ஒரு நற்சுழற்சியை உருவாக்க வேண்டும். 

விழிப்புணர்வுடன் கூடிய திட்டமிடலும், சரியான நேரத்தில் மேற்கொள்ளப்படும் மாற்றங்களும் மட்டுமே, அமைப்பினை இக்கொடுஞ்சுழற்சியில் இருந்து விடுவித்து முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும்.

குற்றம் குறைகளைச் சொல்லிப் பொறுப்புக்கு வந்தபின், அதுசார்ந்த தனிமனிதர்கள் மீது பாய்ந்து குதறிக்கொண்டிருக்கக் கூடாது. மாறாக, தம் செயற்பாட்டில் அவை நிகழாமல் பார்த்துக் கொள்வதோடு, மேன்மை நோக்கிய புதிய பணிகள் பல செய்தாக வேண்டும்.

செயற்குழுவில் இருப்பவர்கள், தங்களுக்குத் தாங்களே லைக்குகள் இட்டுக் கொள்வதெல்லாம் பத்தாம் பசலித்தனம். கொடுஞ்சுழலில் சிக்குண்டு போனவர்கள், அறிவை இழக்கிறார்கள். நிதானத்தை இழக்கிறார்கள். குழுக்களுக்கிடையே சமர்புரிந்து கொள்வதை எவரும் தன்னார்வத் தொண்டு எனச் சொல்லப் போவதில்லை. இல்லவே இல்லை.

𝐁𝐫𝐞𝐚𝐤 𝐭𝐡𝐞 𝐜𝐲𝐜𝐥𝐞, 𝐨𝐫 𝐭𝐡𝐞 𝐜𝐲𝐜𝐥𝐞 𝐛𝐫𝐞𝐚𝐤𝐬 𝐲𝐨𝐮.

-பழமைபேசி.

4/12/2026

தமிழ்நாடு: தேர்தல் 2026

தமிழ்நாடு தேர்தல் அரசியலில், மூன்றாம் தரப்பு ஒன்று 15% வாக்கு வங்கியை எட்டுவது அல்லது எட்டுவதற்கான வாய்ப்புகள் ஏன் ஒரு "அரசியல் புயலாகக்" கருதப்படுகிறது?

"வெற்றி இலக்கு" குறைதல்

பொதுவாக திமுக+ - அதிமுக+ என இருமுனைப் போட்டி நிலவும்போது, ஒரு வேட்பாளர் வெற்றி பெற 45% முதல் 50% வரை வாக்குகள் தேவைப்படும். ஆனால், ஒரு மூன்றாம் தரப்பு 15% வாக்குகளைப் பிரிக்கும்போது, வெற்றி பெறுவதற்கான குறைந்தபட்சத் தேவை 35% ஆகக் குறைகிறது. இதனால் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி-தோல்விகள் தீர்மானிக்கப்படும் சூழல் உருவாகிறது. இந்த 15% வாக்குகள் என்பது வெற்றிக்கும் தோல்விக்கும் இடையிலான இடைவெளியை விட அதிகம் என்பதால், அது பிரதான கட்சிகளின் கோட்டைகளைச் சரிக்கும் வல்லமை கொண்டது.

"வீணாகும் வாக்குகள்" என்ற பிம்பம் உடைதல்

பெரும்பாலான வாக்காளர்கள் தங்கள் வாக்கு வீணாகிவிடக் கூடாது என்பதற்காகவே வலுவான இரண்டு கட்சிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பார்கள். ஆனால், ஒரு புதிய கட்சி 15% வாக்குகளைப் பெறும்போது, அது ஒரு "வெல்லக்கூடிய மாற்று" என்ற இடத்தைப் பெறுகிறது. இந்த உளவியல் மாற்றம், அடுத்தடுத்த தேர்தல்களில் நடுநிலை வாக்காளர்களையும் இளைஞர்களையும் அந்த மூன்றாம் தரப்பை நோக்கிப் பெருமளவில் ஈர்க்கும். இதனால் இருமுனை அரசியல் என்பது முக்கோணப் போட்டியாக மாறி, வாக்குகள் சிதறுவது உறுதி செய்யப்படுகிறது.

"கிங் மேக்கர்" தகுதி

தமிழக சட்டசபையின் மொத்த இடங்கள் 234. ஆட்சியைப் பிடிக்க 118 இடங்கள் தேவை. ஒரு மூன்றாம் தரப்பு 15% வாக்குகளை மாநிலம் தழுவிப் பெற்றால், அது குறைந்தது 20 முதல் 40 தொகுதிகளில் நேரடியாக வெற்றி பெற வாய்ப்புள்ளது. ஒருவேளை திமுக அல்லது அதிமுக கூட்டணிகளால் தனித்துப் பெரும்பான்மையான 118 இடங்களைப் பிடிக்க முடியாவிட்டால், இந்த 20-40 இடங்களை வைத்திருக்கும் மூன்றாம் தரப்பே "யார் முதல்வர்?" என்பதைத் தீர்மானிக்கும் சக்தியாக மாறும்.

கூட்டணி மாற்றங்களும் புதிய அரசியலும்

இந்த 15% வாக்கு வலிமை என்பது பெரிய கட்சிகளைப் பணிய வைக்கும் ஒரு கருவியாகும். ஒரு கட்சி இவ்வளவு வாக்குகளைத் தனித்து வைத்திருந்தால், அதுவரை பெரிய கட்சிகளுடன் இருந்த சிறிய கட்சிகள் (சாதிய மற்றும் சிறிய அமைப்புகள்) தங்கள் லாபத்திற்காக மூன்றாம் தரப்புடன் இணையத் தொடங்கும். இது திராவிடக் கட்சிகளின் பாரம்பரியக் கூட்டணி கட்டமைப்பை உடைத்து, ஒரு புதிய அரசியல் அணிசேர்க்கைக்கு வழிவகுக்கும்.

சுருக்கமாகச் சொன்னால்: 15% வாக்கு என்பது வெறும் எண்கள் அல்ல; அது தமிழகத்தின் 50 ஆண்டுகால இருமுனை அரசியலை முடிவுக்குக் கொண்டு வந்து, ஆட்சியில் பங்கு கேட்கும் அல்லது ஆட்சியைத் தீர்மானிக்கும் ஒரு மாபெரும் அதிகார மாற்றத்தின் தொடக்கப் புள்ளியாக அமையக்கூடும். இதனடிப்படையில்தாம் 2016ஆம் ஆண்டுத் தேர்தலில் மூன்றாம் தரப்புக்கூட்டணி அமையப் பெற்றது. ஆனால், மூன்றாம் தரப்பினால் 15% வாக்குகளோ, அல்லது 20 இடங்களோ அடைய முடியவில்லை.

ஆளும்கட்சிக் கூட்டணியை எதிர்த்து நான்கு வலிமையான கூட்டணிகள் தனித்தனியேப் போட்டியிடும் போது, அது ஒரு "பலமுனைப் போட்டி"  சூழலை உருவாக்குகிறது. அதைத்தான் நாம் 2026 தேர்தலில் காண்கின்றோம். அதன் தாக்கம் எவ்வாறெல்லாம் அமையக் கூடும்?

வாக்குகள் சிதறுதல் 

ஆளும்கட்சிக்கு எதிரான வாக்குகள்  நான்கு வெவ்வேறு கூட்டணிகளிடையேப் பிரிந்துவிடும். இதனால் ஆளும்கட்சிக்குச் சாதகமான சூழல் உருவாக வாய்ப்புள்ளது. ஆளும்கட்சிக்கு எதிரான அதிருப்தி 60% இருந்தாலும், அந்த 60% வாக்குகள் நான்கு கூட்டணிகளுள் அதிகபட்சமாக ஒரு கட்சிக்கு 40%க்கும் குறைவாக இருக்கும்படிப் பிரிந்தால், வெறும் 40% வாக்குகளைப் பெற்றிருக்கும் ஆளும்கட்சி எளிதாக வெற்றி பெற்றுவிடும்.

வெற்றிக்கான இலக்கு குறைதல்

இருமுனைப் போட்டியில் வெற்றி பெற 45% முதல் 50% வாக்குகள் தேவைப்படும். ஆனால் ஐந்து கூட்டணிகள் மோதும்போது, வெறும் 30% முதல் 35% வாக்குகள் பெறும் வேட்பாளர் கூட வெற்றி பெற முடியும். இது மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில்  முடிவுகளை மாற்றும். ஆனால் மாற்றுத் தரப்பில் ஏதோவொரு தரப்பு ஆளும்கட்சிக்கும் மிக அருகில் வந்தாக வேண்டும். கணிசமான தொகுதிகளில் இத்தகு வாய்ப்புக்கு இடம் உள்ளது.

"யார் இரண்டாவது இடம்?" என்ற போட்டி

நான்கு எதிர்க்கட்சிக் கூட்டணிகளில் எது "உண்மையான மாற்று" என்ற போட்டி உருவாகும். இதில் அதிக வாக்குகளைப் பெறும் கூட்டணி, அடுத்த தேர்தலில் ஆளும்கட்சிக்கு நேரடி சவாலாக மாறும். மற்ற மூன்று கூட்டணிகள் அரசியல் ரீதியாகப் பின்னடைவைச் சந்திக்கும்.

உள்ளூர் செல்வாக்கிற்கு முக்கியத்துவம்

கட்சிக் கொள்கைகளை விட, அந்தந்தத் தொகுதிகளில் தனிப்பட்ட செல்வாக்கு கொண்ட வேட்பாளர்கள்  வெற்றி பெற அதிக வாய்ப்பு கிடைக்கும். ஐந்து முனைப் போட்டியில் கட்சிச் சின்னத்தை விட, வேட்பாளரின் முகம் முக்கியப் பங்கு வகிக்கும்.

தேர்தல் வியூக மாற்றம்

இத்தகைய சூழலில் கட்சிகள் "மாநிலம் தழுவிய அலை" என்பதை விட, "ஒவ்வொரு தொகுதியையும்" தனித்தனியாகக் கவனித்து வியூகம் அமைப்பார்கள். குறிப்பிட்ட சாதி, சமய, இனக்குழு, மொழிசார் வாக்குகளைக் குறிவைத்து பிரிக்கும் உத்திகள் அதிகமாகப் பயன்படுத்தப்படும்.

முடிவாக, தமிழ்நாட்டின் 2026 தேர்தலென்பது, வழக்கத்துக்கு மாறாக, மாநிலம் தழுவிய அளவிலான தேர்தலாக அல்லாமல், ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனியாக இடம்பெறுகின்ற தேர்தலாகவே நாம் கருத வேண்டி உள்ளது. அந்தத் தொகுதியில், தொகுதிக்கேற்ற கூட்டணிகளின் உத்தி, வியூகம், களப்பணி முதலானவையே முடிவினைத் தீர்மானிக்கும். அப்படியாக, அதிகத் தொகுதிகளை வெல்வதன் வாயிலாக யார் ஆட்சி என்பது தீர்மானிக்கப்படலாம். அல்லது, ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகள் பிரிவதால், ஆளும்கட்சிக்கான அலையாகவும் அமையலாம்.

When the counting ends, the story begins.


-பழமைபேசி.

4/11/2026

தேர்தல்கணிதமும் நடைமுறை விதிகளும்

அரசியல் களத்தில் ஒரு கட்சியின் வெற்றியையும், தேர்தல் நடைபெறும் முறையையும் தீர்மானிப்பதில் பல கணித விதிகளும் சட்டங்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அவற்றில் குறிப்பாக கியூப் விதி, துவெர்ஜரின் விதி , ஷை டோரி காரணி ஆகியன தேர்தல் முடிவுகளைப் பகுப்பாய்வு செய்யப் பெரிதும் உதவுகின்றன.

கியூப் விதி (Cube Law): வெற்றித்தரப்பின் ஊக்கப்புள்ளிகள்

கியூப் விதி என்பது தேர்தல் முறையில் ஒரு கட்சி பெறும் வாக்கு சதவீதத்தை வைத்து, அக்கட்சி எத்தனை இடங்களைக் கைப்பற்றும் என்பதைக் கணிக்கும் ஒரு நுட்பமான விதியாகும். குறிப்பாக, நேரடித் தேர்தல் முறை  நிலவும் நாடுகளில் இது அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இந்த விதியின்படி, இரு முக்கிய கட்சிகளுக்கு இடையிலான வாக்குகளின் விகிதம் A:B என்றால், அவை வெல்லும் தொகுதிகளின் விகிதம் A^3:B^3 என்ற அளவில் இருக்கும்.இதன் முக்கியத்துவம் என்னவென்றால், ஒரு கட்சி சிறிய அளவு கூடுதல் வாக்கு சதவீதத்தைப் பெற்றாலும், அது இடங்களின் எண்ணிக்கையில் மிகப்பெரிய உயர்வைத் தரும். உதாரணமாக, ஒரு கட்சி 5% கூடுதல் வாக்குகள் பெற்றால், அது "வெற்றியாளருக்கான போனஸ்" என்ற அடிப்படையில் பல மடங்கு அதிகத் தொகுதிகளைக் கைப்பற்ற வழிவகுக்கும். இது தேர்தல் கூட்டணிகளின் அவசியத்தையும், ஒவ்வொரு வாக்கு சதவீதமும் எவ்வளவு முக்கியம் என்பதையும் உணர்த்துகிறது. 

எடுத்துக்காட்டாக, 

வாக்குச்சதவீதத்தில் திமுக+ 45%, அதிமுக+ 35% எனும் போது, கிடைக்கப் பெறும் இடங்கள், 45*45*45 : 35*35*35, 91125:42,875, 729 : 343, சற்றேறக்குறைய திமுக+ 67% இடங்களும், அதிமுக+ 33% இடங்களும் பெறும்.

வாக்குச்சதவீதத்தில் திமுக+ 45%, அதிமுக+ 40% எனும் போது, கிடைக்கப் பெறும் இடங்கள், 45*45*45 : 40*40*40, 91125:64000, 729 : 512, சற்றேறக்குறைய திமுக+ 60%  இடங்களும், அதிமுக+ 40%  இடங்களும் பெறும்.

வாக்குச்சதவீதத்தில் திமுக+ 43%, அதிமுக+ 42% எனும் போது, கிடைக்கப் பெறும் இடங்கள், 43*43*43 : 42*42*42, 79507:74088, சற்றேறக்குறைய திமுக+ 52%  இடங்களும், அதிமுக+ 48%  இடங்களும் பெறும்.

2021 தேர்தல்

திமுக+ வாக்குசதவீதம் 45.38%, 159 இடங்கள்; அதிமுக+ வாக்குசதவீதம் 39.71%, 75 இடங்கள்; கியூப் விதிப்படி: 45.38^3:39.71^3 - 93453:62618 - 60%:40% , ஆனால் திமுக+ 67% இடங்களும் அதிமுக+ 33% இடங்களும் பெற்றன.

துவெர்ஜரின் விதி (Duverger’s Law): கூட்டணி முறையின் உருவாக்கம்

பிரெஞ்சு சமூகவியலாளர் மாரிஸ் துவெர்ஜர் என்பவரால் முன்மொழியப்பட்ட இந்த விதி, ஒரு நாட்டின் தேர்தல் முறை எப்படி அந்த நாட்டின் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கையைத் தீர்மானிக்கிறது என்பதை விளக்குகிறது. "யார் அதிக வாக்குகள் பெறுகிறாரோ அவரே வெற்றி" என்ற ஒற்றை உறுப்பினர் தொகுதி முறை நிலவும் இடங்களில், காலப்போக்கில் பலமுனைப் போட்டிகள் மறைந்து, இரண்டு பெரிய கட்சிகளுக்கு இடையிலான போட்டியாகச் சுருங்கும் என்று இந்த விதி கூறுகிறது.

இதற்குக் காரணம் " வீணாகும் வாக்குகள் "  பற்றிய பயம் ஆகும். சிறிய கட்சிகளுக்கு வாக்களித்தால் அவை வெற்றி பெறாது என்று கருதும் வாக்காளர்கள், தங்கள் வாக்குகள் வீணாகக் கூடாது என்பதற்காகத் தங்களுக்குப் பிடித்தமான அல்லது வெற்றி வாய்ப்புள்ள கூட்டணிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கத் தொடங்குவார்கள். இது இறுதியில் ஒரு வலுவான கூட்டணி முறையை உருவாக்கி, சிறிய அல்லது மூன்றாம் தரப்புக் கட்சிகள் இல்லாமல் போவதினின்று காக்கின்றது.

பென்ஃபோர்ட் விதி 

பென்ஃபோர்ட் விதி என்பது ஒரு பெரிய தரவுத் தொகுப்பில் உள்ள எண்களின் முதல் இலக்கம்  எப்படி அமையும் என்பதைக் கூறும் ஒரு கணித விதியாகும். பொதுவாக 1 முதல் 9 வரையிலான எண்கள் முதல் இலக்கமாக வருவதற்குச் சமமான வாய்ப்பு (அதாவது தலா 11.1%) இருப்பதாக நாம் நினைப்போம். ஆனால், இயற்கையான தரவுகளில் '1' என்ற எண் முதல் இலக்கமாக வர 30.1% வாய்ப்புள்ளது என்றும், எண்களின் மதிப்பு அதிகரிக்க அதிகரிக்க அந்த வாய்ப்பு குறைந்து, '9' என்ற எண் முதல் இலக்கமாக வர வெறும் 4.6% மட்டுமே வாய்ப்புள்ளது என்றும் இந்த விதி நிரூபிக்கிறது.

தேர்தல் ஆய்வியலில் ( Psephology ), வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடந்துள்ளதா என்பதைக் கண்டறிய இந்த விதி ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது. ஒரு நேர்மையான தேர்தலில் பதிவான வாக்குகள் பென்ஃபோர்ட் வரிசையைப் பின்பற்றும். ஆனால், யாராவது திட்டமிட்டுத் தரவுகளை மாற்றியமைத்தாலோ அல்லது போலி எண்களை உருவாக்கினாலோ, அந்த எண்கள் இந்த விதியிலிருந்து விலகிச் செல்லும். இதன் மூலம் எண்களின் பரவலைக் கொண்டே ஒரு தேர்தலில் அல்லது கணக்குத் தணிக்கையில் முறைகேடு நடந்துள்ளதை *அறிவியல்பூர்வமாகச்* சந்தேகிக்க முடியும்.

ஷை டோரி காரணி (Shy Tory Factor)

ஷை டோரி காரணி என்பது தேர்தல் கருத்துக்கணிப்புகள் ஏன் சில நேரங்களில் தோல்வியடைகின்றன என்பதை விளக்கும் ஒரு உளவியல் , அரசியல் கோட்பாடாகும். சில வாக்காளர்கள் சமூக ரீதியாக விமர்சிக்கப்படும் அல்லது "அன்பாப்புலர்"  என்று கருதப்படும் ஒரு கட்சிக்கு வாக்களிக்கத் திட்டமிட்டிருப்பார்கள்; ஆனால், கருத்துக்கணிப்பாளர்கள் கேட்கும்போது தங்களின் உண்மையான விருப்பத்தை வெளியே சொல்லத் தயங்கி, மௌனம் காப்பார்கள் அல்லது நடுநிலையாகப் பேசுவார்கள்.இது வாக்காளர்களின் மனத்தயக்கம் காரணமாக ஏற்படுகிறது, அதாவது தங்களின் அரசியல் தேர்வு பிறரால் கேலிக்கும் வெறுப்புக்கும் உள்ளாக்கப்படுமோயென நினைத்து, அவர்கள் உண்மையை மறைப்பதே இதன் சாராம்சம்.

வாக்களிப்பது செயல், அதை வாசிப்பது ஒரு கலை.

-பழமைபேசி.

4/07/2026

கொண்டாட்டம்

 கொண்டாட்டம்

சற்றேறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இதேகாலகட்டம். தேர்தல் முடிவுகள் வெளியாகி, பத்து பதினைந்து மணித்துளிகள் கடந்திருக்கும். அழைப்பில் கலந்து கொண்டேன். நிறையப் பேர் அழைப்பில் இருந்தனர். வெற்றிக் களிப்புடன் நண்பரொருவர் பேசிக் கொண்டிருந்தார். நாம் சொன்னோம், “அன்புகூர்ந்து நாம் இதை ஒரு வெற்றியாகக் கொள்ள வேண்டாம். இரண்டு ஆண்டுகள் நம் பணிகள் நிறைவடைந்த பின் கொண்டாடுவதே சரியாக இருக்கும்!”.

நமக்கான வாய்ப்புக்கு ஆதரவளிக்காதவரின் மனத்தையும், தணிந்த மனத்தோடு வென்றெடுத்து முடிப்பதுதான் வெற்றியாக இருக்க முடியுமென்பது நம் கணக்கு. கணக்குப் பிழைத்து விட்டது.  தோல்வி அடைந்து விட்டதாக, நான் என்னளவில் தோற்றுவிட்டதாக, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகான இந்தக் காலகட்டத்தில் உணர்கின்றேன்.

நேரிடையாகக் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. ஆறு மணி நேரப் பயணம், வீடு வந்து சேரவே காலத்தாழ்ச்சி ஆகியிருந்தது. குடும்பத்தார் ஊரில். அவர்களுடன் பேசிவிட்டு வரும்போது முக்கால்வாசிக் கூட்டம் முடிந்திருந்தது. பிற்பாடு, கூட்டத்தின் ஒலிப்பதிவு கிடைக்கப் பெற்றுக் கேட்டு முடித்தேன்.

2022 தேர்தலில் வெளியிட்ட காணொலியில் சொல்லி இருப்பேன், மேலாதிக்கமும் மேட்டிமைத்தனமும் களையப்பட தேர்தலில் இன்னாருக்கு வாக்களியுங்களென. குழுவில், பெரும்பான்மை வலு இருந்துவிட்டால், எதுவும் செய்து கொள்ளலாமென்பதுதான் பெரும்பான்மைவாதம், மேட்டிமைத்தனம், மேலாதிக்கமென்பதாகும்.

காலமெல்லாம் எதிர்க்குரலாக இருந்து, இருந்து, சமர்புரிவதே எழுத்தாளனின் அறமாக இருக்கின்றது. அப்படித்தான் இருந்தாக வேண்டும்.

முன்னாள் தலைவர் அவர்கள், 2012ஆம் ஆண்டுக்கால கட்டத்தில் நிகழ்ந்த ஒரு பிணக்கினைக் குறிப்பிட்டுப் பேசி இருந்தார்கள். அதில் நானும் தொடர்புடையவன். 2012-2014 செயற்குழுவில் இடம் பெற்றிருந்தேன். எங்கள் செயற்குழு பொறுப்பேற்கு முன்பேவும், இணையதளத்தில், ”Beware of இன்னார்” எனும் தலைப்பில் ஒரு சுற்றறிக்கை இணையதளத்தில் இடம் பெற்றிருந்தது. அதனை எதிர்த்து, தமக்கு அது மானபங்கத்தை ஏற்படுத்துகின்றதெனச் சொல்லி, ஒட்டுமொத்த செயற்குழுவின் மீதும் 100 மில்லியன் டாலர்கள் ஈடு கேட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாகச் சொல்லி, எங்கள் பெயர்களையெல்லாம் தனித்தனியாகக் குறிப்பிட்டு, தாக்கீது அனுப்பப்பட்டிருந்தது. எண்ணிப்பாருங்கள், தன்னார்வத் தொண்டு புரிய வந்த நாங்கள் மன உளைச்சலை எதிர்கொண்டதோடு, பணமும் செலவு செய்து கொள்ள வேண்டுமா? இல்லை, இல்லவே இல்லை. இல்லினாய் மாகாண அரசின் சட்டம் சொல்கின்றது, நிறுவனமே பொறுப்பு ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்படி இடம் பெற்ற சுற்றறிக்கையென்பது, பழங்குடி ஃபட்வாதான். அப்படிச் செய்வது அமெரிக்க வாழ்வியலன்று!

சிறப்புக்கூட்டத்துக்கான அடிப்படை குறித்து ஏற்கனவே நாம் பேசிவிட்டோம். கூட்டம் நடத்தப்பட்ட விதத்தைத்தான் நாம் தற்போது பேச வேண்டியுள்ளது. நிகழ்ச்சி நிரலில் பேசுவதற்கு வாய்ப்பு இருக்கின்றதென்பதற்காக, 45 மணித்துளிகள் பேச வேண்டியதையெல்லாம் பேசிவிட்டு, இப்படியானவர்கள் பொறுப்புகளுக்கு வர வேண்டுமா, வேண்டாமா என்பதையெல்லாம் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் எனும் பாணியில் பேசிவிட்டு, ஆவணங்களைப் பகிர்வதற்கென  முன்கூட்டியே சொல்லவில்லையென்பதல்லாம் கொடூர நகைச்சுவை. கேள்வி/பதில் நேரமென்பது கூட நிரலில் இல்லைதாம். ஆனால் கேள்வி பதில் நேரம் கடைபிடிக்கப்படுகின்றது. உறுப்பினர் பேசுவது தொடரும் போது, சட்டக்கோப்பில் இல்லையெனச் சொல்லப்படுகின்றது. பெரும்பான்மை இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாமெனும் போக்கு மிகவும் ஆபத்தானது.

கூட்டம் நடத்தப்பட்ட விதமென்பது மிகவும் வருத்தத்தையும் கவலையையும் அளிக்கக் கூடியதாகும். தீர்மானமெனும் சொல்லே, பெரும்பான்மை உறுப்பினர்கள் வாக்கு அளித்தபின்புதான் உச்சரிக்கப்படவே வேண்டும். செயற்குழுவில் நிறைவேறி இருந்தால், செயற்குழுக் கூட்டக்குறிப்பில் இடம் பெற்றிருந்திருக்க வேண்டும். பொதுக்குழுத் தீர்மானமென்றால், பொதுக்குழு உறுப்பினர்கள் ஒப்புதலளித்திருக்க வேண்டும். இப்படி, ஒவ்வொன்றைப் பற்றியும் பேச முற்படுவோமேயானால், அன்பும் அறமும் பெருந்தோல்வி அடைந்திருக்கின்றது. ஒழுங்கில் பெருவீழ்ச்சியென்பதே காலத்தின் கணங்களில் இடம் பெறும் நம் பதிவாக இருக்க முடியும்.

எதுவும் நிரந்தரமில்லை. இதுவும் கடந்து போகும்!



4/05/2026

இலக்கிய மாண்பு

ஓர் இலக்கியவாதியின் மறைவுக்குப்பின் எழுதப்படும் வணக்கக்கட்டுரை என்பது, வெறும் தகவல்களின் தொகுப்பாக இல்லாமல், அந்தப் படைப்பாளி உலாவிய கற்பனை உலகையும் அவர் விதைத்த சிந்தனைகளையும் வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும். கட்டுரையின் தொடக்கத்தில், அந்த ஆளுமையின் மறைவு இலக்கியச் சூழலில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை உணர்வுப்பூர்வமாகப் பதிவு செய்ய வேண்டும். அவர் மறைந்த செய்தியை மட்டும் கூறாமல், ஒரு வாழ்வு அல்லது ஒரு தனித்துவமான குரல் ஓய்ந்துவிட்டதை வாசகர்கள் உணரும் வகையில் முன்னுரை அமைய வேண்டும்.

அடுத்ததாக, அவரது படைப்புலகம் குறித்த ஆழமான பார்வையை முன்வைக்க வேண்டும். அவர் கையாண்ட கருப்பொருள், அவரது மொழிநடை, சமூகத்தில் அவரது எழுத்துக்கள் ஏற்படுத்திய தாக்கம் முதலானவற்றை விவரிக்க வேண்டும். அவர் எந்த இலக்கிய இயக்கத்தைச் சார்ந்தவர் அல்லது எந்தப் புதிய பாணியைத் தொடங்கி வைத்தார் என்பதைச் சுட்டிக்காட்டுவது அவசியம். வெறும் புத்தகப் பட்டியலாக இல்லாமல், அந்தப் புத்தகங்கள் வாசக மனங்களில் எத்தகைய மாற்றத்தை உண்டாக்கின என்பதை ஆய்வு ரீதியாக அணுக வேண்டும்.

தொடர்ந்து, அந்த இலக்கியவாதியின் தனிப்பட்ட ஆளுமை, கொள்கைகளைப் பற்றி எழுதலாம். அவருடன் பழகிய தருணங்கள் அல்லது அவருடைய நேர்காணல்கள் வழி வெளிப்பட்ட அவரது வாழ்க்கைச் சிந்தனைகளை இங்கே பகிரலாம். அவர் சந்தித்த விமர்சனங்கள், அவருக்கு இருந்த இலக்கியப் பிடிவாதம் அல்லது எளிமை போன்ற பண்புநலன்களைச் சுருக்கமாகக் குறிப்பிடுவது, அந்த ஆளுமையை ஒரு முழுமைக் காட்சியாக வாசகர் கண்முன் நிறுத்தும்.

நிறைவாக, அவர் விட்டுச் சென்ற இலக்கிய வாரிசுகள், அவரது படைப்புகள் எதிர்காலத் தலைமுறைக்கு எவ்விதம் வழிகாட்டும் என்பதை வலியுறுத்தி முடிக்க வேண்டும். உடல் மறைந்தாலும் ஒரு கலைஞன் தனது சொற்களின் வழியாக என்றென்றும் வாழ்வான் என்ற உண்மையை உரக்கச் சொல்லி, அவருக்கு உரிய மரியாதையைச் செலுத்தும் விதமாக இறுதியுரை அமைய வேண்டும். அஞ்சலிக் கட்டுரை என்பது ஒருவருக்கு நாம் செய்யும் இறுதிப் புகழஞ்சலி மட்டுமல்ல, அது ஒரு படைப்பாளியின் வாழ்வை ஆவணப்படுத்தும் ஒரு வரலாற்றுச் சான்றும் கூட.

ஊடகங்களில் ஆண்டுக்கணக்கில் ஒரு தனியிடத்தைப் பெற்று வந்த பொருண்மியம் அது. சமூகம் கொந்தளிப்போடும் சினத்தோடும் இருந்தது. ஆட்டோ சங்கர் 1995ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார். உடல் அடக்கத்தின் போது, அவரது தாயின் பிரிவாற்றாமையைக் கண்டு அந்தப் பகுதி மக்களெல்லாம் சோகத்தில் ஆழ்ந்திருந்ததாகவும் அந்தத் தருணங்கள் எப்படிப்பட்டதாக இருந்ததென்பதையும் இதழ்கள் படம் பிடித்துக் காண்பித்தன. அதைக் கண்டு, சினம் தணிந்த தமிழ்நாட்டுச் சமூகம் கலங்கியது. காரணம், சக மனிதனின் துக்கம், அவர்களது துயர் கண்டு மனம் நோவதென்பது மாந்தநேயத்தின் குறியீடு. சமூக அமைதிக்கு அது இன்றியமையாதது.

2005 - 2012ஆம் ஆண்டு வரையிலும், தனித்துவமான தமிழ் இணையவுலகமென ஒன்று இருந்தது. தமிழ்மணத்தின் பங்கு அதில் முதன்மையாகும். உலகெங்கும் இருக்கும் தமிழர்கள், தம் எழுத்துகளால் பிணைந்திருந்தார்கள். அப்படியான உலகில், பதிவர் டோண்டு என்பவர் நன்கறியப்பட்டவராக இருந்தார். காரணம், அவரது அதிதீவிர வலதுசாரித்தன எழுத்தும், விமர்சனப்பாங்கும். கடுமையான எதிர்ப்புக்கு ஆட்பட்டவராக இருந்தார். அவர் மறைந்து விட்டாரெனும் செய்தியறிந்து, ஒட்டுமொத்த தமிழ்ப்பதிவுலகும் இழப்பின் தாக்கத்தில் சிக்குண்டு போய், செய்வதறியாமல், சொல்வதறியாமல் கனத்த மெளனத்தைக் கடைபிடித்தது. அதை உணர்ந்த இதழ்கள், அத்தகு நிலையைக் குறிப்பிட்டு அவருக்கான இரங்கல் செய்திகளை வெளியிட்டன.

முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் மறைவின் போழ்து, காலமெல்லாம் தீவிரமாகவும் கடுமையாகவும் விமர்சித்த, எதிர்த்துவந்த இதழ்களெல்லாம், நினைவு இதழ்களைத் தத்தம் சொந்த செலவில் பக்கம் பக்கமாக வெளியிட்டுத் தத்தம் ஆழ்ந்த இழப்பினையும் உணர்வுகளையும் வெளிப்படுத்திக் கொண்டன.

ஞானபீடவிருதுச் சிறப்புக் கொண்ட ஜெயகாந்தன் மறைவின் போது, அவர் யாரையெல்லாம் காலமெல்லாம் விமர்சித்து வந்தாரோ அவர்களெல்லாம் வந்திருந்து மலர்வணக்கம் செலுத்தியது; அரசு இயந்திரமோ மேல்தட்டு வர்க்கமோ கண்டு கொள்ளாமலே விட்டுவிட்டதென்கின்ற அகங்கலாய்ப்புகள் இணையமெங்கும் இடம் பெற்றதென்பதையும் கண்டோம். https://daily.navinavirutcham.in/?p=23653 காரணம், மாந்தநேய மாண்பு.

இத்தகு சூழலில்தாம், தற்போது,  30 ஆண்டுகாலம் தமிழ் எழுத்துக்காகப் பங்காற்றிய ஒருவர், எம்மைப் போன்றவர்களையெல்லாம் அணுகி, எழுதுங்கள், எழுதிக்கொண்டே இருங்களென ஊக்கப்படுத்திய ஒருவர் மறைந்து விடுகின்றார். ஒவ்வொருவரின் சாவுக்கான பயணமும் பிறக்கும் போதேவும் துவங்கி விடுகின்றதெனச் சொன்னார் கவியரசர். நாம் எல்லாருமே சாவுக்கான பயணத்தில்தாம் இருக்கின்றோம். அவரவருக்கான நேரம் வந்ததும் பயணம் முடிவுக்கு வருகின்றது. அப்படியான இலக்கியப் பங்களிப்பின் முடிவுக்கு அபத்தமான ஓர் அஞ்சலிக்குறிப்பு. இலக்கிய உலகம் நொந்து கொள்கின்றது. 

நியூயார்க், இலண்டன், ரொறண்ரோக்களில் தமிழ்விழாக்கள் நடந்தால் மட்டும் போதுமா? இலக்கிய மாண்பென்பது, இலக்கியவாதியிடமிருந்தே பிறக்க வேண்டும்.


4/02/2026

தொடர்மருந்தின் அவசியம், தற்போதைய நிலை

நண்பர் சிலநாட்களாகத் தொடர்பில் வரவில்லை. ஏனென வினவியதற்கு அவர் சொன்னது, “அண்ணா, துயர சம்பவம். அக்கா, தம்பி, ரெண்டு பேரும் இங்க பக்கத்துலதா இருக்காங்க. அவங்க அம்மா ஒருவேளை மருந்து எடுக்கத் தவறவிட்டுப் போயி, நினைவிழந்துட்டாங்க. அவரால இப்ப ஊருக்குப் போக முடியாது. அக்கா கிரீன்கார்டு, அவங்களை இப்பதா ஃபிளைட் ஏத்திவுட்டுட்டு வந்தன்”.

தமிழ்நாட்டின் இன்றைய சூழலில், பல குடும்பங்களில் உயர் இரத்த அழுத்தம் என்பது ஒரு பொதுவான உடல்நலப் பிரச்சனையாக மாறிவிட்டது. ஆனால், இதற்கான மருந்துகளை வாழ்நாள் முழுவதும் உட்கொள்ள வேண்டும் என்ற புரிதல் இன்னும் முழுமையாக ஏற்படவில்லை. பல பெற்றோர்கள் "உடல்நிலை நன்றாகத்தான் இருக்கிறது" அல்லது "இன்று தலைவலி இல்லையே" என்று நினைத்து, தாங்களாகவே ஒரு நாள் அல்லது சில நாட்கள் மருந்து உட்கொள்வதை நிறுத்தி விடுகின்றனர். இந்தச் சிறு கவனக்குறைவு, உடலில் இரத்த அழுத்தத்தின் அளவைச் சீரற்றதாக்கி, எதிர்பாராத நெருக்கடிகளை உருவாக்குகிறது.

மறதிக்கான காரணங்களும் குடும்பச் சூழலும்

வயதான காலத்தில் ஏற்படும் நினைவாற்றல் குறைபாடு ஒருபுறமிருக்க, பல நேரங்களில் மாத்திரைகளைச் சரியாக அடுக்கிக் கொடுக்க ஆளில்லாத சூழலும் ஒரு முக்கியக் காரணமாகிறது. கூட்டுக்குடும்பச் சிதைவு , பிள்ளைகள் வேலை நிமித்தமாக வெளியூர்களில் அல்லது வெளிநாடுகளில் வசிக்கும் சூழலில், பெற்றோர்கள் தங்களின் மருந்து அட்டவணையைத் தாங்களே நிர்வகிப்பதில் சிரமம் கொள்கின்றனர். "மாத்திரை சாப்பிட்டோமா இல்லையா?" என்ற சந்தேகம் வரும்போது, தெரியாமல் இரண்டாவது முறை உட்கொள்வது அல்லது பயத்தில் தவிர்ப்பது என இரண்டுமே ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

மருந்து விடுபடுவதால் ஏற்படும் மறைமுக ஆபத்துகள்

இரத்த அழுத்த மருந்து என்பது இரத்தக் குழாய்களின் விரிவு , சுருக்கத்தைச் சீராக வைக்கும் ஒரு கவசம் போன்றது. ஒருநாள் மருந்து விடுபடும்போது, இரத்த அழுத்தம் திடீரென உயர்ந்து, அது மூளைக்குச் செல்லும் மெல்லிய இரத்தக் குழாய்களைப் பாதிக்கலாம். இதுவே பக்கவாதம் ஏற்படுவதற்கு முதன்மைக் காரணியாக அமைகிறது. மேலும், அவ்வப்போது மருந்தைத் தவிர்ப்பது இதயத் தசைகளின் அழுத்தத்தை அதிகரித்து, பிற்காலத்தில் இதயச் செயலிழப்பு அல்லது சிறுநீரகப் பாதிப்புகளுக்கு விதையிடுகிறது.

தீர்வுகளும் விழிப்புணர்வும்

இந்த சிக்கலைத் தவிர்க்க எளிய தொழில்நுட்ப , மேலாண்மை முறைகளைக் கையாளலாம். வாராந்திர மாத்திரை பெட்டிகளை பயன்படுத்துவதன் மூலம், அந்தந்த நாளுக்கான மாத்திரை உட்கொள்ளப்பட்டதா என்பதை எளிதாகக் கண்டறியலாம். பிள்ளைகள் அருகில் இல்லாத பட்சத்தில், கைபேசி அலாரங்கள் அல்லது மருந்துகளை நினைவூட்டும் செயலிகள் பெரியவர்களுக்குப் பேருதவியாக இருக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக, இரத்த அழுத்தம் என்பது அறிகுறி தெரிந்தபின் குணப்படுத்தும் ஒன்றல்ல, மாறாக அறிகுறிகள் வராமல் தற்காத்துக் கொள்ள வேண்டிய ஒன்று என்பதைப் பெற்றோர்களுக்குப் புரிய வைப்பது கட்டாயம்.

கடந்தவாரம்

நண்பர் சிலநாட்களாகத் தொடர்பில் வரவில்லை. ஏனென வினவியதற்கு அவர் சொன்னது, “அண்ணா, துயர சம்பவம். அக்கா, தம்பி, ரெண்டு பேரும் இங்க பக்கத்துலதா இருக்காங்க. அவங்க அம்மா ஒருவேளை மருந்து எடுக்கத் தவறவிட்டுப் போயி, நினைவிழந்துட்டாங்க. அவரால இப்ப ஊருக்குப் போக முடியாது. அக்கா கிரீன்கார்டு, அவங்களை இப்பதா ஃபிளைட் ஏத்திவுட்டுட்டு வந்தன்”.

அன்றாடம் நாம் அம்மாவை அழைத்துச் சிறுப்பிள்ளை போல ஒவ்வொன்றையும் கேட்டறிந்து கொள்வது உண்டு. போனவாரம்தான் கேட்டேன், “மருந்தெல்லா இருக்கா தீர்ந்து போயிருச்சா?”, “எல்லாம் இருக்கு”. இந்த சம்பவத்தை முன்னிட்டு மீண்டும் கேட்கலானேன், “அண்ணிய ஃபோன் செய்யச் சொல்லி இருக்கன். இன்னிக்கிதா வாங்கணும், தீர்ந்து போச்சி”. ”அம்மா, போன வாரம்தான கேட்டன், எல்லா இருக்குனு சொன்னியே?”. “ஆமா, அப்ப இருந்துச்சி. இப்ப இல்லை”. நாம் என்ன பேசமுடியும்?  மனைவியாரிடம் இது குறித்துச் சொன்னேன். “ஆமா, எங்க அம்மாவும், மருந்து வாங்கி, எங்க வெச்சோம்னே தெரியாம... தலைவலி வந்திருச்சாம். பிற்பாடு புதுசா வாங்கித் தின்னாங்ளாம். வாங்கின மருந்து, மதில்சுவர்மேலயே மறந்து வெச்சிருக்க, இன்னிக்கிக் கிடைச்சுதாம். இவங்களுக்கு எவ்ளோ சொன்னாலும் தவறுகள் நடந்துட்டேதா இருக்கூ”.

திடீரென முழிப்புத் தட்டிவிட்டது. காலை 3 மணி. உறக்கமே வரவில்லை. ஆழ்மனத்தில் அம்மா மருந்து வாங்கினார்களா இல்லையாயெனும் அழுத்தம். அழைத்தேன், “அம்மா எங்க இருக்க?”. “நான் கலா கூட தாயம் விளையாடிட்டு இருக்கன்”. “அந்த மருந்து?”. “வாங்கியாச்சு வாங்கியாச்சு”. “எப்ப?” “காலையில பத்துமணிக்கே”. நிம்மதியாகப் படுத்தேன். சற்று நேரத்துக்கும் முன், காலை 8 மணிக்குத்தான் எழுந்தேன்.

மாமானார் அவர்கள், ஏதோ யோகா செய்திருக்கின்றார். மூளைச்சலவையில் ஆட்கொள்ளப்பட்டிருந்திருக்க வேண்டும். யோகா செய்வதால எல்லாம் நல்லா இருக்கு. காலையில இப்பெல்லாம் தவறாம வாங்கிங் போகின்றேன். விளைவு, மருந்து உட்கொள்வதை இவராக நிறுத்திக் கொண்டுவிட, அடுத்தடுத்த வாரங்களில் ஒரு நாள், குளியலறையில் கீழே விழுந்து, நினைவு தப்பி, பிரிவுக்கு இட்டுச் சென்றுவிட்டது.

மற்றொரு உறவினர், வேறெதற்கோ மருத்துவரிடம் சென்றிருந்திருக்கின்றார். இவர் தாம் உட்கொள்ளும் மருந்து குறித்துச் சொல்லவில்லை. மருத்துவரும் பரிசோதனைகள் செய்துவிட்டு, உங்களுக்கு இரத்த உயரழுத்தமெல்லாம் இல்லை எனச் சொல்லி இருக்கின்றார். அதையே வாக்காக எடுத்துக் கொண்டு மருந்து உட்கொள்வதை நிறுத்திக் கொண்டுவிட, கட்டிலில் இருந்து எழும் போது கீழே விழுந்து, பரிசோதனை செய்யும் போது, மூளையில் இரத்தக்கசிவு. கை கால் செயலிழப்பு.

புலம்பெயர் மண்ணில் இருந்து கொண்டு, நாம் இக்கதைகளைத் தொடர்ந்து எதிர்கொண்டபடியேதாம் இருக்கின்றோம். பெரியவர்களைக் குழந்தைகளாகப் பாவித்துப் பேணுவது நம் கடமை. 𝐓𝐡𝐞 𝐡𝐚𝐧𝐝𝐬 𝐭𝐡𝐚𝐭 𝐨𝐧𝐜𝐞 𝐡𝐞𝐥𝐝 𝐮𝐬 𝐝𝐞𝐬𝐞𝐫𝐯𝐞 𝐭𝐨 𝐛𝐞 𝐡𝐞𝐥𝐝 𝐰𝐢𝐭𝐡 𝐜𝐚𝐫𝐞.

-பழமைபேசி.

3/29/2026

குருவிகாண்பு நோன்பு


குருவிகாண்பு( Bird Watching ) என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமன்று; அது நம் வாழ்வியலோடு பிணைந்த ஒரு கலை. இயற்கையின் விந்தைகளை ரசிக்கவும், மன அழுத்தத்தைப் போக்கவும் இது ஒரு சிறந்த வழியாகும். இயற்கையோடு உரையாடும் கலை இஃது!

1. விழிப்புணர்வும் ஒருமைப்பாடும்

குருவிகாண்பு என்பது ஒரு வகை 'தியானம்'. ஒரு மரக்கிளையில் அசையும் சிறிய இலையையோ அல்லது மெல்லிய ரீங்காரத்தையோ கவனிக்க நமக்கு மிகுந்த பொறுமையும், கூர்மையான பார்வையும் தேவை. இன்றைய அவசர உலகில், நம் கவனம் சிதறாமல் ஒரு புள்ளியில் நிலைக்க இது உதவுகிறது. ஒரு பறவையை உற்று நோக்கும்போது, நாம் கடந்த காலக் கவலைகளையும் வருங்கால பயத்தையும் மறந்து, அந்த 'நொடியில்' வாழப் பழகுகிறோம்.

2. வாழ்வின் சுழற்சியும் நம்பிக்கையும்

பறவைகளின் வாழ்க்கை நமக்கு ஒரு பெரிய பாடத்தைக் கற்பிக்கிறது. ஆயிரக்கணக்கான மைல்கள் கடந்து வரும் வலசைப் பறவைகள் (Migratory Birds), தங்களின் இலக்கை அடைய காட்டும் உறுதி அசாத்தியமானது. ஒரு சிறிய சிட்டுக்குருவி தன் கூட்டை மீண்டும் மீண்டும் கட்டுவதைப் பார்க்கும்போது, தோல்விகளைக் கண்டு துவளாமல் முன்னேறும் தன்னம்பிக்கை நமக்குள் பிறக்கிறது. இயற்கையின் சுழற்சிக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ளும் பறவைகள், நாமும் மாற்றங்களை ஏற்று வாழப் பழக வேண்டும் என்பதை உணர்த்துகின்றன.

3. மனநலமும் அமைதியும்

காலை வேளையில் பறவைகளின் கீச்சலோசையைக் கேட்பது மனதிற்கு ஓர் இனிய மருந்தாகும். ஆய்வுகளின்படி, பறவைகளின் ஒலியும் அவற்றின் வண்ணமயமான தோற்றமும் நம் மூளையில் மகிழ்ச்சியைத் தூண்டும் ஹார்மோன்களை சுரக்கச் செய்கின்றன. நகர்ப்புற நெரிசலில் வாழும் நமக்கு, ஒரு மரங்கொத்தியின் சத்தமோ அல்லது ஒரு மைனாவின் துள்ளலோ ஒருவித அமைதியையும், புத்துணர்ச்சியையும் தருகின்றன.

4. சுற்றுப்புற சூழல் ஆர்வம்

பறவைகளை கவனிக்கத் தொடங்கும்போதுதான், நம்மைச் சுற்றியுள்ள மரங்கள், நீர்நிலைகள் , செடி கொடிகளின் முக்கியத்துவம் நமக்குத் தெரியவரும். ஒரு குறிப்பிட்ட பறவை ஏன் ஒரு குறிப்பிட்ட மரத்திற்கு வருகிறது என்று ஆராயும்போது, இயற்கைப் பாதுகாப்பு (Conservation) குறித்த அக்கறை தானாகவே நமக்குள் வளரும். நம் தாய்மொழி , பண்பாட்டில் பறவைகளுக்குக் கொடுக்கப்பட்டுள்ள முக்கியத்துவத்தை உணர்ந்து, அவற்றை அழியாமல் காப்பது நம் கடமையாகும்.

"பறவைகளைக் கவனிப்பது என்பது இயற்கையின் ரகசியப் பக்கங்களைப் புரட்டிப் பார்ப்பது போன்றது. குருவிகாண்பு என்பது ஒரு தேடல். அது நம் வாழ்வை மேலும் பொலிவானதாகவும் அழகாகவும் மாற்றுகிறது".

வடக்கத்திய கார்டினல் (Northern Cardinal)

இது வட கரோலினாவின் மாநிலப் பறவை. அடர் சிவப்பு நிறத்தில், தலையில் ஒரு கொண்டையுடன் காணப்படும் ஆண் பறவைகள் பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும். இவை ஆண்டு முழுவதும் இங்கேயே இருப்பதால், உங்கள் வீட்டுத் தோட்டத்திலேயே இவற்றை எளிதாகக் காணலாம்.

கரோலினா சிகாடீ (Carolina Chickadee)

சிறிய உருவம், கருப்பு நிறத் தொப்பி மற்றும் வெள்ளை நிறக் கன்னங்களுடன் துறுதுறுவென இயங்கும் பறவை இது. இதன் மெல்லிய குரல் ஒலியை வைத்து இதை எளிதில் அடையாளம் காணலாம். இவை மனிதர்களுடன் எளிதில் பழகக்கூடியவை.

கிழக்கு புளூபேர்ட் (Eastern Bluebird)

வசந்த காலத்தின் தொடக்கமான மார்ச் மாதத்தில் இவை மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். பிரகாசமான நீல நிற முதுகும், துருப்பிடித்த சிவப்பு நிற மார்பும் கொண்ட இவை, புல்வெளிகளிலும் தோட்டங்களிலும் உள்ள கூடுகளுக்கு வந்து செல்வதைக் காணலாம்.

அமெரிக்கன் ராபின் (American Robin)

இவை வசந்த காலத்தின் வருகையை அறிவிக்கும் பறவைகள். மார்ச் மாத இறுதியில் இவை அதிக அளவில் தரைப்பகுதியில் புழுக்களைத் தேடி ஓடுவதைப் பார்க்கலாம். இதன் ஆரஞ்சு நிற மார்புப் பகுதி தனித்துவமானது.

ஊதா நிற ஜே (Blue Jay)

அறிவுக்கூர்மை மிக்க இந்தப் பறவை, அழகான நீல நிற இறக்கைகளையும் கருப்பு நிறக் கழுத்து வளையத்தையும் கொண்டது. மற்ற பறவைகளின் ஒலியைப் போலப் பாடி ஏமாற்றுவதில் இவை வல்லவை.

மரங்கொத்திகள் (Red-bellied Woodpecker)

வட கரோலினாவின் மரங்கள் நிறைந்த பகுதிகளில் தலைப்பகுதியில் சிவப்பு நிறம் கொண்ட இந்த மரங்கொத்திகளை நீங்கள் அடிக்கடி பார்க்கலாம். மரங்களைத் தட்டும் சத்தத்தை வைத்தே இவற்றை அடையாளம் கண்டுவிடலாம்.

அதிகாலை 6 மணி முதல் 9 மணி வரை பறவைகள் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். வீட்டுத் தோட்டம், அருகில் உள்ள பூங்காக்கள் போன்றவை சிறந்த இடங்கள். அரும்புக்காலம் துவங்கி விட்டது. கிளைகளில் துளிர்களும் பூக்களும் குருவிகளும் பூக்கும் காலமிது. காண்பு நோன்பில் இன்புறுவோம்!


-பழமைபேசி.

3/27/2026

𝐅𝐞𝐓𝐍𝐀 𝟐𝟎𝟐𝟓: 𝐏𝐮𝐫𝐞 𝐞𝐱𝐭𝐫𝐚𝐯𝐚𝐠𝐚𝐧𝐳𝐚


 𝐅𝐞𝐓𝐍𝐀 𝟐𝟎𝟐𝟓: 𝐏𝐮𝐫𝐞 𝐞𝐱𝐭𝐫𝐚𝐯𝐚𝐠𝐚𝐧𝐳𝐚

உள்ளடக்கிய தன்மை என்பது வெறும் நாகரிகசொல் அன்று; அது ஒரு நாகரிகத்தின் முதிர்ச்சி. 

ஒரு தோட்டத்தில் ஒரே ஒரு வகை மலர் மட்டும் பூத்திருப்பதை விட, பல வண்ண மலர்கள் பூத்திருப்பதே கண்களுக்கு விருந்து. அதுபோலவே, ஒரு சமூகத்தில் வெவ்வேறு பின்னணி, மொழி, உடல் அமைப்பு , சிந்தனை கொண்ட மனிதர்கள் பாகுபாடின்றி ஒன்றிணைந்து செயல்படும்போதுதான் அந்தச் சமூகம் முழுமையடைகிறது. "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற தமிழரின் பழமொழி, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இந்த உள்ளடக்கிய தன்மையைத்தான் உலகிற்குப் போதித்தது.

ஒரு நிறுவனத்திலோ அல்லது பொது இடத்திலோ 'பல்வகைமை' (Diversity) இருப்பது ஒரு தொடக்கம் மட்டுமே. எடுத்துக்காட்டாக, ஒரு விருந்துக்கு எல்லாத் தரப்பு மக்களையும் அழைப்பது பல்வகைமை. ஆனால், அந்த விருந்திற்கு வந்திருக்கும் ஒவ்வொருவரும் எந்தவிதத் தயக்கமும் இன்றி உணவருந்தவும், உரையாடவும், தங்களை அந்த இடத்தின் ஒரு அங்கமாக உணரவும் வைப்பதுதான் 'உள்ளடக்கிய தன்மை'. எங்கே ஒரு மனிதன் "நானும் இங்கே மதிக்கப்படுகிறேன்”, ”என் குரலும் இங்கே கேட்கப்படுகிறது" என்று உணர்கிறானோ, அங்கேதான் உள்ளடக்கிய தன்மை உயிர்பெறுகிறது.

இன்றைய நவீன உலகில் உள்ளடக்கிய தன்மை என்பது ஒரு சமூகத் தேவையாக மாறியுள்ளது. வெவ்வேறு துறைகளில் இருக்கும் வல்லுநர்கள், மாற்றுத்திறனாளிகள், பல்வேறு மொழிகளைப் பேசுபவர்கள் என அனைவரும் ஒன்றாக அமர்ந்து ஆலோசிக்கும்போது, அங்கே புதிய சிந்தனைகள் பிறக்கின்றன. ஒரே மாதிரியான சிந்தனை கொண்டவர்கள் ஒரு சிக்கலுக்கு ஒரே மாதிரியான தீர்வையே தருவார்கள். ஆனால், மாறுபட்ட பின்னணி கொண்டவர்கள் அந்தச் சிக்கலை வெவ்வேறு கோணங்களில் அணுகி, யாரும் எதிர்பாராத ஒரு புதுமையானத் தீர்வை முன்வைப்பார்கள். இதுதான் ஒரு அமைப்பின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான காரணியாகும்.

தனிப்பட்ட ரீதியில் நாம் இந்த உள்ளடக்கிய தன்மையை எளியச் செயல்கள் மூலம் பழகலாம். ஒரு விவாதத்தில் எப்போதும் அமைதியாக இருப்பவரிடம் "உங்கள் கருத்து என்ன?" என்று கேட்டுப் பார்ப்பது ஒரு சிறந்தத் தொடக்கம். மற்றவர்களின் குறைகளைத் துருவித் துருவிப் பார்ப்பதை விட, அவர்களின் தனித்துவமானத் திறமைகளை அங்கீகரிப்பது அவசியம். ஒருவரை அவர் சார்ந்த அடையாளங்களை வைத்து எடைபோடாமல், ஒரு சக மனிதராக அரவணைக்கும்போது ஒரு ஆரோக்கியமானச் சூழல் உருவாகிறது. வார்த்தைகளில் மென்மையும், பார்வையில் சமத்துவமும் இருந்தால் உள்ளடக்கிய தன்மை தானாகவே மலரும்.

உள்ளடக்கிய தன்மை என்பது ஒரு சட்டமோ அல்லது விதியோ அல்ல; அது நம் மனப்பான்மையில் ஏற்பட வேண்டிய மாற்றம். "நான்" என்ற குறுகிய வட்டத்தில் இருந்து வெளியே வந்து "நாம்" என்ற விரிந்தத் தளத்தில் இயங்கும்போதுதான் உலகம் இன்னும் அழகாகிறது. மற்றவர்களுக்குக் கதவுகளைத் திறந்து விடுவது என்பது அவர்களை உள்ளே அழைப்பது மட்டுமல்ல, நமக்கானப் புதிய வாய்ப்புகளையும், அனுபவங்களையும் உள்ளே அனுமதிப்பதாகும். சமத்துவமான ஒரு உலகைப் படைக்க உள்ளடக்கியத் தன்மையே முதற்படி.

’வீட்டிலிருந்தே வேலை செய்கின்றேன். வீட்டில் இருப்பதால் இரண்டு தொடுதிரைகளுடன் கூடிய தனிப்பட்ட கணினியில் பேரவை விழா வேலைகள், மடிக்கணினியில் நிறுவன வேலை, தவிர வீட்டு வேலைகளென இருக்கலாம். விழா வளாகம் வந்தால், எமக்குக் கையும் ஓடாது காலும் ஓடாதென முன்கூட்டியே விழா ஒருங்கிணைப்பாளர்கள், குழுத்தலைவர்களென எல்லாருக்கும் சொல்லி இருந்தேன். இருந்தாலும், அழைப்பு மேல் அழைப்புகள். கச்சை முதற்கொண்டு, பாதித் துணிமணிகளை வீட்டிலேயே விட்டுவிட்டு வந்துவிட்டோம்.

பேரவைக்கான குழுக்கள் அமைத்ததிலிருந்து, பல்வேறு பணிகளில் ஈடுபட்டது வரையிலும், கனடாவிலிருந்து ஃபுளோரிடா, கீழ்க்கரையிலிருந்து மேல்க்கரை வரையிலும், எல்லாமும் பரவல்தான். எதுவும் ஓரிடத்தில் குவிந்திருக்கவில்லை. தன்னார்வத் தொண்டர்கள் தட்டுப்பாடு எனப் பேசிக் கொண்டார்கள். நான் சொன்னேன், “வெளியூர்களிலிருந்து குறைந்தது 150 தம்பிமார்கள் வருகின்றார்கள், அது போதும், எவருக்கும் அடிபணியத் தேவையில்லை”. 

வேலையிடத்திலிருந்து புறப்பட்டு விட்டதாக மனைவியார் அழைத்துச் சொன்னதுமே, புறப்படத் துவங்கினேன். அழைப்புகளோ அழைப்புகள். ’வாசிங்டன் டிசி விமானம் நிலையத்தில் இருந்து மாறி வரவேண்டும், என்ன செய்வது?’, ‘இன்ன போட்டிக்கு எந்த அறை?’, இப்படி நிறைய. முன்னாள் செயலாளர் அழைத்து, ’தமது விமானம் கிரீன்ஸ்பரோவுக்குத் திருப்பி விட்டுவிட்டனர்; இங்கிருந்து யாராவது தம்மை அழைத்துச் செல்ல முடியுமா?’. குழுக்களில் விபரத்தைப் பதிந்ததுமே, முன்னாள் செயற்குழு உறுப்பினர் அவர்கள் அழைத்து, ‘அட்லாண்டாவிலிருந்து கிரீஸ்பரோ நோக்கித்தான் வந்து கொண்டிருக்கின்றேன். பிக்-அப் செய்து கொள்கின்றேன்’. இப்படி, பலப்பல.

இத்தனைக்கும் நடுவில்தான் புறப்பட்டு வந்து கொண்டிருந்தோம். மீண்டும், மழை, புயல், போக்குவரத்து நெரிசல்; மாலை 7 மணிக்கு நான் அங்கிருப்பேன், சந்திக்கலாமெனச் சொல்லி இருந்தேன். இரவு 9.15 மணிக்குத்தான், விடுதி வளாகம் சென்று சேர்ந்தோம். அத்தனை பேர் வந்து சூழ்ந்து கொண்டனர். கிட்டத்தட்ட 50+ பேர் வரையிலும் எனக்காகக் காத்திருந்தனராம். அந்த அன்புக்கு நான் என்ன கைம்மாறு செய்வேன்? அதிலும் பெரும்பாலும், பெண்கள். 

4 நாட்கள் இருந்து விட்டுக் கிளம்பும் வரையிலும், தன்னார்வலர் தட்டுப்பாடு என்பதே எம் கண்களுக்குத் தட்டுப்படவில்லை.  வாய்ப்புகள் தருவதன் மூலம் ஒரு கூட்டத்தை ஒருங்கிணைப்பது என்பது, வெறும் நிர்வாகச் செயல்முறை மட்டுமல்ல, அது ஆழமான உளவியல் ரீதியான பிணைப்பை உருவாக்குவதாகும். ஒரு மனிதனுக்கு ஒரு அமைப்பில் அங்கீகாரமும், அவனது திறமையை வெளிப்படுத்த ஒரு பொறுப்பும் வழங்கப்படும்போது, அவன் அந்த அமைப்பைத் தனது சொந்த அமைப்பாகக் கருதத் தொடங்குகிறான். "நான் இங்கே வெறும் பார்வையாளன் அல்ல, இந்த இயக்கத்தின் ஒரு அங்கம்" என்கிற உணர்வு அவனுள் ஒரு பிணைப்பை ஏற்படுத்துகிறது. இத்தகைய பொறுப்புகள் ஒருவருக்குத் தன்னாட்சி உணர்வையும், சமூகமதிப்பையும் தருவதால், அவர் அந்த இலக்கை நோக்கி மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்படுகிறார். இவ்வாறு பலருக்கும் சிறு சிறு வாய்ப்புகளைப் பகிர்ந்தளிக்கும்போது, அவர்கள் ஒவ்வொருவரும் அந்த வெற்றியின் பங்காளிகளாக மாறி, ஒரு வலுவான, அர்ப்பணிப்புள்ள கூட்டமாகத் தானாகவே திரள்கிறார்கள்.  [படம்: விருந்தோம்பலில் பழமைபேசிக் குடும்பம்]

𝐖𝐞 𝐫𝐢𝐬𝐞 𝐡𝐢𝐠𝐡𝐞𝐫 𝐰𝐡𝐞𝐧 𝐞𝐯𝐞𝐫𝐲𝐨𝐧𝐞 𝐢𝐬 𝐥𝐢𝐟𝐭𝐞𝐝.

-பழமைபேசி.

3/23/2026

எழுத்தாளன்

சமூகத்தில் ஓர் எழுத்தாளரின் கடமைகள் மிக முக்கியமானவை. காலத்தின் கண்ணாடியாகவும், மாற்றத்திற்கான விதையாகவும் எழுத்தாளர்கள் கருதப்படுகிறார்கள். அவர்களின் முதன்மையான கடமைகளாகப் பின்வருவனவற்றைச் சொல்லலாம்:

1. உண்மையை உரக்கச் சொல்லுதல்

சமூகத்தில் நடக்கும் அநீதிகள், முரண்பாடுகள் , எளிய மக்களின் வலிகளை மறைக்காமல் வெளிச்சத்திற்குக் கொண்டு வருவது எழுத்தாளரின் அடிப்படை அறம். அதிகாரத்திற்கு உண்மையைச் சொல்லும் துணிச்சல் அவருக்கு அவசியம்.

2. விழிப்புணர்வு ஏற்படுத்துதல்

மக்களிடையே நிலவும் மூடநம்பிக்கைகள், சமூக ஏற்றத்தாழ்வுகள் , அறியாமையைப் போக்கி, பகுத்தறிவு , சிந்திக்கும் ஆற்றலைத் தூண்டுவது எழுத்தாளரின் பணியாகும்.

3. பண்பாட்டுப் பாதுகாப்பு

ஒரு மொழியின் இலக்கியத்தையும், அந்த இனத்தின் பண்பாட்டையும் அடுத்த தலைமுறைக்குக் கடத்துவதில் எழுத்தாளருக்குப் பெரும்பங்கு உண்டு. வரலாற்றையும் கலாச்சாரத்தையும் சிதையாமல் பதிவு செய்வது அவர் கடமை.

4. புதிய சிந்தனைகளை உருவாக்குதல்

சமூகம் தேக்க நிலையில் இருக்கும்போது, புதிய கோணங்களில் சிந்திக்க வைப்பதன் மூலம் மாற்றத்தை நோக்கி மக்களை நகர்த்துவது எழுத்தாளரின் எழுத்துகளாக இருக்க வேண்டும்.

5. அறநெறி ஊட்டம்

நேரடியாக அறிவுரை கூறாமல், தனது படைப்புகளின் (கதை, கவிதை, கட்டுரை) வாயிலாக அறம் சார்ந்த வாழ்வியலை வாசகர்களுக்கு உணர்த்துவது சிறந்த எழுத்தாளரின் அடையாளம்.

6. நம்பிக்கையளித்தல்

துயரமான காலங்களில் மக்களுக்கு மனவலிமையையும், எதிர்காலத்தைப் பற்றிய நேர்மறையான நம்பிக்கையையும் தன் எழுத்துகளின் மூலம் வழங்க வேண்டும்.

"எழுத்தாளன் என்பவன் வெறும் வார்த்தைகளை அடுக்குகிறவன் அல்ல; அவன் சமூகத்தின் ஆன்மாவைச் செதுக்குகிறவன்".

பேனாவின் தீப்பந்தம்

சமூகத்தின் இருள்மூடிய பாதைகளில்
விடியலைத் தேடும் கலங்கரைவிளக்கம் நீ!
மௌனமாய் வீழ்ந்து கிடக்கும் நீதியின் குரலாய்
மக்களின் மனசாட்சியாய் எழுக நீ!
கண்ணாடி உடைக்கும் கல்லாக இன்றி
சமூகம் தன்னைத்தானே திருத்திக்கொள்ளும்
திறந்த கண்ணாடியாய் இரு!
ஏழையின் கண்ணீரைத் துடைக்கும் விரலாய்,
அநீதிக்கு எதிராகக் கொதிக்கும் எரிமலையாய்,
அறிவுப்பசி தீர்க்கும் ஊற்றாய் இரு!
வரலாற்றின் பக்கங்களில்
உன் எழுத்துகள் அழியாத சுவடுகளாய்!
காலத்தின் மாற்றத்தை விதையிடும்
பாங்கான உற்ற உழவனாய் இரு!
வார்த்தைகள் வெறும் ஒலிகளல்ல,
விழிப்புணர்வூட்டும் அறைகூவல்கள்!
உன் பேனா முனையில் உயிர் பெறட்டும்
புதியதோர் உலகம், நீதமான சமூகம்!

[ஒரு சொல்கூட நாம் எழுதியதன்று. எல்லாமும் ஜெமினியார்தான்!]

-பழமைபேசி.

3/21/2026

𝐅𝐞𝐓𝐍𝐀: 𝐟𝐨𝐫𝐜𝐞 𝐜𝐨𝐧𝐬𝐞𝐧𝐬𝐮𝐬, 𝐧𝐨𝐭 𝐣𝐮𝐬𝐭 𝐦𝐚𝐣𝐨𝐫𝐢𝐭𝐲 𝐫𝐮𝐥𝐞

பேரவையின் வரலாறு என்பது, தொன்றுதொட்டு நிகழ்ந்து வருவது. ”இன்னார் தலைவராக இருக்கும் போது, வீதிக்கே சென்று திரிசாவை வரவழைத்தார்கள்”, இப்படியெல்லாம் சுவடுகள் வழிவழியாகத் தொடர்ந்து கொண்டிருக்கும். அவற்றுக்கு எவரும் அணை போட்டு விட முடியாது.

”மேன்மை அணி வரலாற்று வெற்றி கொள்கின்றது. குழுக்கள் அமைக்கப்படுகின்றன. பெருந்திரளாகத் தன்னார்வலர்கள் முனைந்து வருகின்றனர். குழுக்கள், உறுப்பினர்கள் பட்டியல் வெளிப்படையாகப் பொதுவெளியில் பகிரப்படுகின்றது. கூட்ட அறிக்கைகள் பகிரப்படுகின்றன. விழாக்கள் வெற்றிகரமாக நிகழ்கின்றன. குழுக்கள் இயங்குகின்றன. தரவு சேமிப்பு. முதன்முதலாக மாவீரர்நாள் கடைபிடிப்பு. தகவல் தொடர்பில் முனைப்பு”, இப்படியாக ஒரு தோற்றம்.

“ஒருமித்த வெற்றி. வாட்சாப் குழுவில் நீக்கம். ஆயுள் உறுப்பினர் நீக்கம்.  சலசலப்பு. விழாவில் சலசலப்பு. சிலர் தத்தம் பணிகளில் இருந்து ஒதுங்கல். முதலாம் ஆண்டைப் போல, இரண்டாம் ஆண்டில் குழுக்கள் இயங்காமை. எழுத்தாளர் அழைப்பு குறித்த சர்ச்சை. இலக்கியக்குழு சலசலப்பு. பழைய அருவி, மலர்கள் காணக்கிடைக்காமை. பேரவையின் அறிவுசார் சொத்துகள் தனிக்கடைகளாக இருப்பது, உறுப்பினர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை”, இப்படியாக ஒரு தோற்றம்.

முதலாவது தோற்றத்தின்கண் இருப்பவருக்கு, இரண்டாவது தோற்றம் கிடைக்கப் பெறுவதில்லை. இரண்டாவது மனத்தோற்றம் கொண்டிருப்பவருக்கு, முதலாவது தோற்றம் தோன்றுவதில்லை. ஏன்? முன்பிருந்த திறந்தவெளி உரையாடல் தற்போது கொல்லப்பட்டுவிட்டதுதான் காரணம்.  இது யாருக்கான தோல்வி?

தேர்தல் மாண்பின் விதையான நண்பர் சிவானந்தம், சென்றமுறை செயற்குழுவினரிடம் அழகாகச் சொன்னார், “தேர்தலில் யார் யாரெல்லாம் போட்டியிடத் தகுதியானோர் என்பதனைப் பேரவையே தேர்தல் அறிவிப்பின் ஒருபகுதியாக வெளியிட வேண்டும். அல்லாவிடில், எல்லோரும் தகுதியானவர்களேயென அறிவித்து, எல்லோரையும் போட்டிக்குள் கொண்டுவர ஊக்குவிக்க வேண்டும்”. விழுமியமார்ந்து இருப்பதுதான் ஒரு மனிதனுக்கான வெற்றியென்பதுதான் அடிப்படை.

𝐇𝐢𝐞𝐫𝐚𝐫𝐜𝐡𝐲 𝐨𝐟 𝐚𝐮𝐭𝐡𝐨𝐫𝐢𝐭𝐲 𝐢𝐧 𝐚 𝐧𝐨𝐧𝐩𝐫𝐨𝐟𝐢𝐭:

  1. Federal Law/Tax Law (e.g., IRS regulations)
  2. State Statute/Law (e.g., State Nonprofit Corporation Act)
  3. Articles of Incorporation (Charter)
  4. Bylaws
  5. Board Policies/Procedures (e.g., Robert's Rules of Order)

தணிக்கைக்குழு அமைக்கப்படுகின்றது. வரிசையில் நான்காவதாக இடம்பெற்றுள்ள அமைப்பின் சட்டக்கோப்பில் உள்ள ஒரு சரத்தினை மட்டும் கருத்தில் கொண்டு, ஒரு முடிவு. அந்த முடிவினைச் சான்றாகக் கொண்டு, செயற்குழுவில் ஒரு கதையாடல். அந்தக் கதையாடலின் தீர்வாக, நான்கு பேர் வரிசைப்படுத்தப்படுகின்றனர். அந்தக் கதையாடல் கோப்பு உறுப்பினர்களுக்குச் சென்று சேர்கின்றது. அவர்கள் இன்னபிறருக்கு அனுப்பி வைப்பர். சமூகத்தில், அந்த நான்கு பேரின் மீதான அளவளாவல். ஒழுங்கைக் கட்டமைக்கிறோமெனும் பேரில், ஒழுங்கு தவறுவது சரியா?

இல்லினாய் மாகாண அரசின் சட்டம் சொல்கின்றது, இலாபநோக்கற்ற அமைப்புகளில் வேலை செய்யும் தன்னார்வலருக்கான சட்டப்பாதுகாப்பினை அந்தந்த அமைப்புகள் உறுதி செய்யும் பொருட்டு, சட்டக்கோப்பு விதியை வைத்திருக்க வேண்டும். அதன்படிக்கு, பேரவையின் சட்டக்கோப்பில் ஈட்டுறுதிக்கான சரத்தும் உள்ளது. “Board Member of the Federation shall be indemnified by the Federation, பணிகளைச் செய்யும்போது ஏற்படும் சட்டச் சிக்கல்களுக்கு, சம்மேளனம் அந்த உறுப்பினருக்கு இழப்பீடு வழங்கும்” என்பதனை, மூன்றில் இரு பங்கு உறுப்பினர்கள் ஏற்கனவே ஏற்றுக் கொண்டுவிட்ட சட்டப்பூர்வ உடன்படிக்கைதான் சட்டக்கோப்பு. இதனைச் சற்றும் கருத்தும் கொள்ளாமல் செயற்படுவது, நீண்டகாலப் பார்வையில் பெரும் தீங்காகவே அமையும். “shall be" எனும் பதத்தின் தன்மையானது, கட்டாயத்தன்மையை வலியுறுத்துவதாகும்.

தங்களுக்குள் மட்டும் ஓங்கிய ஒற்றுமையை வைத்துக்கொண்டு, மற்றவர்களை ஒதுக்கி வைக்கும் போக்கினை, ’பழங்குடி மனப்பான்மை’ என உளவியலாளர்கள் குறிப்பிடுவர். அது உள்ளார்ந்த, ஒருங்கமைந்த சமூகவிழுமியத்தை ஒருபோதும் ஈட்டித்தராது. எல்லோரையும் இயங்கவிட்டு, அதிலிருந்து சிறப்பினை கடைந்தெடுப்பதுதான், பேரின்ப வெற்றியாக ஒருவருக்கான சுவடு(legacy) அமைய வேண்டுமேவொழிய, அதிகாரத்தின் குரலில் அமைவதாக இருக்கலாகாது; அது காலத்தின் பிற்பகுதியில் ஏசும்!

நெறிமுறைப் பிறழ்வுகள் (procedural violations) இனம்காணப்பட வேண்டும். திருத்தப்பட வேண்டும். மாறாக, ’திருத்துகிறேன்’ என்ற போர்வையில் ஒழுங்குப் பிறழ்வுகள்(wilful violations) இடம்பெற்றுவிடக் கூடாது. முதலில் திருத்தப்பட வேண்டியது அமைப்பின் சட்டக்கோப்புதான்!

𝐑𝐞𝐚𝐥 𝐜𝐨𝐧𝐬𝐞𝐧𝐬𝐮𝐬 𝐢𝐧𝐯𝐢𝐭𝐞𝐬 𝐯𝐨𝐢𝐜𝐞𝐬; 𝐟𝐨𝐫𝐜𝐞𝐝 𝐜𝐨𝐧𝐬𝐞𝐧𝐬𝐮𝐬 𝐞𝐫𝐚𝐬𝐞𝐬 𝐭𝐡𝐞𝐦!

-பழமைபேசி.




3/19/2026

𝐅𝐞𝐓𝐍𝐀: 𝐅𝐢𝐥𝐢𝐛𝐮𝐬𝐭𝐞𝐫

ஃபிலிபஸ்டர் என்பது ஒரு சட்டமன்றத்தில் சட்டம் இயற்றும் முறையைத் தாமதப்படுத்த அல்லது முழுமையாகத் தடுக்கப் பயன்படுத்தப்படும் ஒரு தந்திரமாகும். ஒரு குறிப்பிட்ட சட்ட முன்வடிவு மீது வாக்கெடுப்பு நடத்தப்படாமல் இருக்க, ஒரு உறுப்பினர் அல்லது உறுப்பினர்கள் குழு சபையில் மிக நீண்ட நேரம் உரையாற்றுவதே இதன் அடிப்படைச் செயல்பாடாகும். இதன் மூலம் விவாத நேரத்தை நீட்டித்து, அந்தச் சட்டத்தை நிறைவேற்ற விடாமல் முட்டுக்கட்டை போடுகின்றனர்.

இந்த நடைமுறை அமெரிக்க செனட் சபையில் மிகவும் பிரபலம். அங்குள்ள விதிகளின்படி, ஒரு விவாதத்தை முடிவுக்குக் கொண்டு வர 'குளோட்சர்' எனப்படும் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இதற்கு 100 உறுப்பினர்களில் 60 பேரின் ஆதரவு தேவை. ஒருவேளை ஆளுங்கட்சியிடம் இந்த அறுதிப் பெரும்பான்மை இல்லையெனில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஃபிலிபஸ்டர் முறையில் இடைவிடாது உரையாற்றுவர்; பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வுகாண வேண்டும்.

ஃபிலிபஸ்டர் செய்யும் உறுப்பினர்கள் மணிக்கணக்கில் பேச வேண்டும் என்பதால், அவர்கள் பேசுவதற்குத் தலைப்புச் சார்ந்த தகவல்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அமெரிக்க வரலாற்றில் சில செனட்டர்கள் சமையல் புத்தகங்கள், தொலைபேசி டைரக்டரிகள் , ஷேக்ஸ்பியர் நாடகங்களை வாசித்து நேரத்தைக் கடத்தியுள்ளனர். 1957இல் சிவில் உரிமைகள் சட்டத்திற்கு எதிராக ஸ்ட்ரோம் தார்மண்ட் என்பவர் 24 மணி நேரத்திற்கும் மேலாகப் பேசி சாதனை படைத்தது இன்றும் ஒரு முக்கிய வரலாற்று நிகழ்வாகக் கருதப்படுகிறது.

அமெரிக்காவின் தனிச்சிறப்பே அதன் அரசியல் சாசனம்தான். ’ஒவ்வொரு மூலை முடுக்கில் இருப்போர், சமூகத்தில் ஒரு தனியாள் இருந்தாலும் அவரின் குரல்’ என ஒருங்கமைந்த சமூகமாக, எல்லாத் தரப்பையும் உள்ளடக்கிய சமூகமாக நாடு திகழ வேண்டுமெனப் பார்த்துப் பார்த்து முன்னோர்களால் செதுக்கப்பட்டிருப்பதன் ஒரு விழுமியச்சான்றுதான் இது, 𝐅𝐢𝐥𝐢𝐛𝐮𝐬𝐭𝐞𝐫.

பேரவையின் செயற்பாடுகளில் சிலவற்றை முன்வைத்து, முன்னாள் தமிழ்ச்சங்கத் தலைவர் ஒருவர் இத்தகு ஃபிலிபஸ்டரைக் கையிலெடுத்திருக்கின்றார். வாராவாரம் மின்னஞ்சல்கள் வருகின்றன. நமக்கு நமது பெட்டி நிறையக் கூடாது. மேலும், ’வாய்சுநோட்’ என்பதெல்லாம் மட்டுப்படுத்திக் கொள்ள வேண்டுமென நாம் எவ்வளவு சொன்னாலும் சமூகம் கேட்பதில்லை. இஃகிஃகி. பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வு காண்பதுதான் அமெரிக்கமுறை.

𝐄𝐧𝐝𝐮𝐫𝐚𝐧𝐜𝐞 𝐢𝐬 𝐨𝐟𝐭𝐞𝐧 𝐭𝐡𝐞 𝐥𝐨𝐮𝐝𝐞𝐬𝐭 𝐟𝐨𝐫𝐦 𝐨𝐟 𝐬𝐢𝐥𝐞𝐧𝐭 𝐩𝐫𝐨𝐭𝐞𝐬𝐭.

-பழமைபேசி, 03/19/2026.

3/10/2026

தனித்தமிழின் தேவை: ஒரு பார்வை

தமிழ்மொழி பிறமொழிகளின் துணையின்றித் தனித்து இயங்கும் வல்லமை கொண்ட சீரிளமைத் திறம் வாய்ந்தது. ஒருகாலத்தில் வடமொழிச் சொற்கள் தமிழின் தனித்தன்மையின் மீது தாக்கம் கொண்டபோது, மறைமலை அடிகள், பாவாணர் போன்றோரின் பங்களிப்பால்  'தனித்தமிழ் இயக்கம்' உருவானது. நாம் ஏன் தனித்தமிழைக் கடைபிடிக்க வேண்டுமென்பதற்குப் பல அழுத்தமான காரணங்கள் உள்ளன.

ஒரு மொழியின் தனித்துவம் என்பது அந்த இனத்தின் அடையாளமாகும். மொழியில் பிறமொழிச் சொற்கள் மிகைபடக் கலக்கும்போது, அந்த மொழியின் வேர்ச்சொற்கள் மெல்ல மெல்ல மறைந்து போகின்றன. இதனால் மொழியின் இலக்கணக் கட்டமைப்பும் சிதைந்து, ஒரு காலகட்டத்தில் அந்த மொழியே சிதைந்த நிலைக்குத் தள்ளப்படும் வாய்ப்பு உள்ளது. தமிழ் சிதையாமல் அதன் ஆதி வடிவில் நிலைத்திருக்க, தனித்தமிழ்ப் பயன்பாடு மிக முக்கியமானதாகும்.

அடுத்து, தமிழ்மொழி அறிவியல் அடிப்படையிலான வேர்ச்சொற்களைக் கொண்டது. புதிய கண்டுபிடிப்புகள் , புதுத் தொழில்நுட்பங்களுக்குத் தகுந்தவாறு புதிய கலைச்சொற்களை உருவாக்கும் ஆற்றல் தமிழுக்கு உண்டு. நாம் பிற மொழிச் சொற்களை அப்படியே இரவலாகப் பெற்றுப் பயன்படுத்தும்போது, நம்முடைய சிந்தனைத் திறனும் புதிய சொற்களை உருவாக்கும் படைப்பாற்றலும் மங்கிப்போகின்றன. தமிழைத் தூய வடிவில் பயன்படுத்தும்போதுதான், அது காலத்திற்கேற்பத் தொடர் வளர்ச்சி அடைய முடியும்.

தனித்தமிழ் என்பது வெறும் மொழியியல் சார்ந்த பற்றியம் மட்டுமன்று; அது நம் பண்பாட்டைக் காக்கும் அரண். ஓர் இனத்தின் பண்பாடும் வரலாறும் அதன் மொழியில்தான் பொதிந்துள்ளன. சங்க இலக்கியங்கள் முதல் தற்கால இலக்கியங்கள் வரை நாம் தடையின்றிப் புரிந்துகொள்ள வேண்டுமெனில், தமிழின் வேர்களை நாம் சிதைக்காமல் காக்க வேண்டும். பிறமொழிச் சொற்களின் கலப்பின்றிப் பேசுவதும் எழுதுவதும் அடுத்த தலைமுறைக்கு நாம் செய்யும் ஒரு பெரும் நற்பணியாகும்.

சுருக்கமாகச் சொன்னால், தனித்தமிழ் என்பது மற்ற மொழிகளைப் புறக்கணிப்பதன்று; மாறாக, தன் மொழியின் தனிச்சிறப்பை உணர்ந்து அதனை அழியாமல் காப்பதாகும். அன்றாடப் பேச்சுவழக்கில், ஆங்கிலம் , பிறமொழிச் சொற்களைக் குறைத்து, எளிய தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்துவதனால் நாம் நம் தாய்மொழிக்குப் பெருமை சேர்க்க முடியும்.

தனித்தமிழ் என்பது வெறும் பிறமொழிச் சொற்களைத் தவிர்ப்பது மட்டுமன்று; அது தமிழின் தனித்துவமான இலக்கண மரபுகளை, தொன்மையான வழக்காறுகளையும் போற்றிப் பாதுகாப்பதாகும். ஒவ்வொரு மொழிக்கும் ஓர் ஆன்மா உண்டு. அந்த ஆன்மா, அதன் மரபு சார்ந்த நடையில்தான் வாழ்கிறது. ஆனால், இன்று நம்முடைய பேச்சிலும் எழுத்திலும் வடமொழி, ஆங்கில மொழிகளின் இலக்கணத் தாக்கமும், சிந்தனை முறையும் ஊடுருவித் தமிழின் இயல்பான அழகைச் சிதைத்து வருகின்றன. இது ஒரு மொழிச் சிதைவு மட்டுமன்று, ஒரு பண்பாட்டு அடையாளத்தின் சிதைவுமாகும்.

பிறமொழி மரபுகளின் ஊடுருவலைக் களைவது இன்றியமையாதது. தமிழில் இல்லாதபிறமொழி எழுத்துகளையும், தத்திதச் சொற்களையும் பயன்படுத்துவதால் தமிழின் ஒலியியல் அமைப்பு மாறுகிறது. பழந்தமிழ் வழக்காறுகளைப் புறக்கணிப்பதும் தமிழின் செழுமையைக் குறைக்கிறது. தமிழ்ச்சொற்களிலேயே உயர்ந்த பொருளும் ஆழமான தத்துவமும் இருக்கும்போது, அவற்றை விடுத்துப் பிற மரபுகளைக் கொண்டாடுவது நம் மொழியின் தற்சார்புத் தன்மையை வலுவிழக்கச் செய்கிறது.

தற்காலத்தில் ஆங்கில மொழி மரபுகளின் ஆதிக்கம் தமிழை 'ஆங்கிலத் தமிழ்' வடிவாக மாற்றி வருகிறது. ஆங்கிலச் சொற்றொடர் அமைப்பைப் பின்பற்றித் தமிழில் எழுதுவது, தேவையற்ற இடங்களில் ஆங்கிலச் சொற்களைத் திணிப்பது போன்ற போக்குகள் பெருகியுள்ளன. கணினி, இணையம் போன்ற தற்காலத்துறைகளில், தமிழின் கலைச்சொற்களைப் பயன்படுத்தத் தயங்குவது, காலப்போக்கில் தமிழை ஒரு 'அடையாள மொழியாக' மட்டுமே சுருக்கிவிடும். ஆங்கில மரபுகளைக் களைந்து, தமிழின் தனித்துவமான வினைச்சொற்களையும் பெயர்ச்சொற்களையும் கொண்டு புதிய சிந்தனைகளை உருவாக்க வேண்டும். அப்படிச் செய்து கொண்டே இருக்கும் போது, தமிழ் ஒரு பயன்பாட்டு மொழியாகவும் நம்முள் குடிகொள்ளும்.

தமிழ்த்தாலிபான்கள், தமிழ்த்தீவிரவாதிகள், பிற்போக்காளர்கள்’ போன்ற சொல்லாட்சிக்கு ஆட்பட நேரிடும்தான். ஆனாலும் நாம்தான் ஒரு வேள்வியாகக் கருதிச் செயற்பட்டாக வேண்டும். அதுவே, தனித்தமிழ் முன்னவர் மறைமலை அடிகளார் அவர்களின் நூற்றைம்பதாவது ஆண்டினைக் கொண்டாடுவதற்குப் பொருண்மியத்தை ஊட்டும்!

கூடுதலாக, “பிழை திருத்துபவரின் மனைவி” எனும் இச்சிறுகதையும் வாசிக்கப் பரிந்துரைக்கப்படுகின்றது. https://shorturl.at/opVNd

-பழமைபேசி.