பேரவையின் வரலாறு என்பது, தொன்றுதொட்டு நிகழ்ந்து வருவது. ”இன்னார் தலைவராக இருக்கும் போது, வீதிக்கே சென்று திரிசாவை வரவழைத்தார்கள்”, இப்படியெல்லாம் சுவடுகள் வழிவழியாகத் தொடர்ந்து கொண்டிருக்கும். அவற்றுக்கு எவரும் அணை போட்டு விட முடியாது.
”மேன்மை அணி வரலாற்று வெற்றி கொள்கின்றது. குழுக்கள் அமைக்கப்படுகின்றன. பெருந்திரளாகத் தன்னார்வலர்கள் முனைந்து வருகின்றனர். குழுக்கள், உறுப்பினர்கள் பட்டியல் வெளிப்படையாகப் பொதுவெளியில் பகிரப்படுகின்றது. கூட்ட அறிக்கைகள் பகிரப்படுகின்றன. விழாக்கள் வெற்றிகரமாக நிகழ்கின்றன. குழுக்கள் இயங்குகின்றன. தரவு சேமிப்பு. முதன்முதலாக மாவீரர்நாள் கடைபிடிப்பு. தகவல் தொடர்பில் முனைப்பு”, இப்படியாக ஒரு தோற்றம்.
“ஒருமித்த வெற்றி. வாட்சாப் குழுவில் நீக்கம். ஆயுள் உறுப்பினர் நீக்கம். சலசலப்பு. விழாவில் சலசலப்பு. சிலர் தத்தம் பணிகளில் இருந்து ஒதுங்கல். முதலாம் ஆண்டைப் போல, இரண்டாம் ஆண்டில் குழுக்கள் இயங்காமை. எழுத்தாளர் அழைப்பு குறித்த சர்ச்சை. இலக்கியக்குழு சலசலப்பு. பழைய அருவி, மலர்கள் காணக்கிடைக்காமை. பேரவையின் அறிவுசார் சொத்துகள் தனிக்கடைகளாக இருப்பது, உறுப்பினர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை”, இப்படியாக ஒரு தோற்றம்.
முதலாவது தோற்றத்தின்கண் இருப்பவருக்கு, இரண்டாவது தோற்றம் கிடைக்கப் பெறுவதில்லை. இரண்டாவது மனத்தோற்றம் கொண்டிருப்பவருக்கு, முதலாவது தோற்றம் தோன்றுவதில்லை. ஏன்? முன்பிருந்த திறந்தவெளி உரையாடல் தற்போது கொல்லப்பட்டுவிட்டதுதான் காரணம். இது யாருக்கான தோல்வி?
தேர்தல் மாண்பின் விதையான நண்பர் சிவானந்தம், சென்றமுறை செயற்குழுவினரிடம் அழகாகச் சொன்னார், “தேர்தலில் யார் யாரெல்லாம் போட்டியிடத் தகுதியானோர் என்பதனைப் பேரவையே தேர்தல் அறிவிப்பின் ஒருபகுதியாக வெளியிட வேண்டும். அல்லாவிடில், எல்லோரும் தகுதியானவர்களேயென அறிவித்து, எல்லோரையும் போட்டிக்குள் கொண்டுவர ஊக்குவிக்க வேண்டும்”. விழுமியமார்ந்து இருப்பதுதான் ஒரு மனிதனுக்கான வெற்றியென்பதுதான் அடிப்படை.
𝐇𝐢𝐞𝐫𝐚𝐫𝐜𝐡𝐲 𝐨𝐟 𝐚𝐮𝐭𝐡𝐨𝐫𝐢𝐭𝐲 𝐢𝐧 𝐚 𝐧𝐨𝐧𝐩𝐫𝐨𝐟𝐢𝐭:
- Federal Law/Tax Law (e.g., IRS regulations)
- State Statute/Law (e.g., State Nonprofit Corporation Act)
- Articles of Incorporation (Charter)
- Bylaws
- Board Policies/Procedures (e.g., Robert's Rules of Order)
தணிக்கைக்குழு அமைக்கப்படுகின்றது. வரிசையில் நான்காவதாக இடம்பெற்றுள்ள அமைப்பின் சட்டக்கோப்பில் உள்ள ஒரு சரத்தினை மட்டும் கருத்தில் கொண்டு, ஒரு முடிவு. அந்த முடிவினைச் சான்றாகக் கொண்டு, செயற்குழுவில் ஒரு கதையாடல். அந்தக் கதையாடலின் தீர்வாக, நான்கு பேர் வரிசைப்படுத்தப்படுகின்றனர். அந்தக் கதையாடல் கோப்பு உறுப்பினர்களுக்குச் சென்று சேர்கின்றது. அவர்கள் இன்னபிறருக்கு அனுப்பி வைப்பர். சமூகத்தில், அந்த நான்கு பேரின் மீதான அளவளாவல். ஒழுங்கைக் கட்டமைக்கிறோமெனும் பேரில், ஒழுங்கு தவறுவது சரியா?
இல்லினாய் மாகாண அரசின் சட்டம் சொல்கின்றது, இலாபநோக்கற்ற அமைப்புகளில் வேலை செய்யும் தன்னார்வலருக்கான சட்டப்பாதுகாப்பினை அந்தந்த அமைப்புகள் உறுதி செய்யும் பொருட்டு, சட்டக்கோப்பு விதியை வைத்திருக்க வேண்டும். அதன்படிக்கு, பேரவையின் சட்டக்கோப்பில் ஈட்டுறுதிக்கான சரத்தும் உள்ளது. “Board Member of the Federation shall be indemnified by the Federation, பணிகளைச் செய்யும்போது ஏற்படும் சட்டச் சிக்கல்களுக்கு, சம்மேளனம் அந்த உறுப்பினருக்கு இழப்பீடு வழங்கும்” என்பதனை, மூன்றில் இரு பங்கு உறுப்பினர்கள் ஏற்கனவே ஏற்றுக் கொண்டுவிட்ட சட்டப்பூர்வ உடன்படிக்கைதான் சட்டக்கோப்பு. இதனைச் சற்றும் கருத்தும் கொள்ளாமல் செயற்படுவது, நீண்டகாலப் பார்வையில் பெரும் தீங்காகவே அமையும். “shall be" எனும் பதத்தின் தன்மையானது, கட்டாயத்தன்மையை வலியுறுத்துவதாகும்.
தங்களுக்குள் மட்டும் ஓங்கிய ஒற்றுமையை வைத்துக்கொண்டு, மற்றவர்களை ஒதுக்கி வைக்கும் போக்கினை, ’பழங்குடி மனப்பான்மை’ என உளவியலாளர்கள் குறிப்பிடுவர். அது உள்ளார்ந்த, ஒருங்கமைந்த சமூகவிழுமியத்தை ஒருபோதும் ஈட்டித்தராது. எல்லோரையும் இயங்கவிட்டு, அதிலிருந்து சிறப்பினை கடைந்தெடுப்பதுதான், பேரின்ப வெற்றியாக ஒருவருக்கான சுவடு(legacy) அமைய வேண்டுமேவொழிய, அதிகாரத்தின் குரலில் அமைவதாக இருக்கலாகாது; அது காலத்தின் பிற்பகுதியில் ஏசும்!
நெறிமுறைப் பிறழ்வுகள் (procedural violations) இனம்காணப்பட வேண்டும். திருத்தப்பட வேண்டும். மாறாக, ’திருத்துகிறேன்’ என்ற போர்வையில் ஒழுங்குப் பிறழ்வுகள்(wilful violations) இடம்பெற்றுவிடக் கூடாது. முதலில் திருத்தப்பட வேண்டியது அமைப்பின் சட்டக்கோப்புதான்!
𝐑𝐞𝐚𝐥 𝐜𝐨𝐧𝐬𝐞𝐧𝐬𝐮𝐬 𝐢𝐧𝐯𝐢𝐭𝐞𝐬 𝐯𝐨𝐢𝐜𝐞𝐬; 𝐟𝐨𝐫𝐜𝐞𝐝 𝐜𝐨𝐧𝐬𝐞𝐧𝐬𝐮𝐬 𝐞𝐫𝐚𝐬𝐞𝐬 𝐭𝐡𝐞𝐦!
-பழமைபேசி.
2 comments:
The main concern with the Board MoM is its wording and timing. Instead of reading like a neutral record of Board discussion, it reads as though conclusions have already been reached. Terms such as “identified violations,” “unauthorized transfers,” and “failed fiduciary duty” sound final and accusatory, even though the same MoM says notice and written explanations are still to be obtained. That creates an appearance of prejudgment, especially since the MoM also notes that it was prepared from video and may not be verbatim.
There is also an election-related concern. The MoM itself says this review was tied to an election promise made by the current team. That does not automatically prove bad intent, but it does create the impression that the matter is being handled in a politically charged way. A more neutral MoM would have simply stated that questions were raised about approval, payment procedures, and bylaw compliance, and that the concerned individuals would be given a fair opportunity to respond before any conclusions are drawn.
couldn't agree more.
Post a Comment