திமுக, திமுக அனுதாபிகள், திமுக தலைவர்கள், தோழமைக் கட்சியினர் என அனைவரும் கேலிக்கு உள்ளாக்கப்பட்டு, கொச்சைப்படுத்துதலுக்கு ஆளாகிறார்கள். காரணம்? தமிழுக்கும் தமிழனுக்கும் நேர்ந்திருக்கும் பின்னடைவு என்பதில் நமக்கு ஐயமேதும் இல்லை.
ஆனால், அமெரிக்காவில் குடியிருக்கும் இவர்களுக்கு ஊரைப்பற்றின நிலை எப்படித் தெரிய வந்திருக்கும்? வேறென்ன?? இணையம்தான்! இணையம் என்பது, வெகுசன மக்களின் மனோநிலையை அப்படியே பிரதிபலிக்கும் ஒரு சாதனமா? கிடையவே கிடையாது என்பதுதான் நம் கருத்து. வலைப்பக்கங்களும், திரட்டிகளும் இன்றைய நாள் வரையிலும் சமூகத்தின் மனோ நிலையைப் பிரதிபலிப்பது இல்லை என்பதுதான் யதார்த்தம். தாயகத்தில், தமிழ்ச் சமூகத்தில் இணையம் என்பது அவ்வளவாகப் புழக்கத்தில் வரவில்லை என்பதுதான் காரணம்.
இன்னுஞ் சொல்லப் போனால், தாயகத்து நாளிதழ்களும், வார இதழ்களும், இன்னும் பிற ஊடகங்களுமே வெகுசன மனோநிலையைப் பிரதிபலிப்பது இல்லை. மாறாக, தத்தம் கருத்துகளையும் நிலைப்பாட்டையும் கொண்டு செலுத்துவதிலேதான் முனைப்பாய் இருந்து வெற்றி காணத் துடிக்கின்றன.
இச்சூழலில்தான், நமது வெளியூர்ப் பயணங்களும் இன்ன பிற கலந்துரையாடல் நிகழ்ச்சிகளும் அமைந்தன. அரசியல், ஊழல்வாதியால் மக்கள் இன்னலுறுகிறார்கள் என்ற ரீதியில் நண்பர்களுடைய கேலிப் பேச்சுகள். ”அது அப்படி அல்ல; சுயநலவாத மற்றும் அடிப்படையைப் புரிந்து கொள்ளாத நம்மவர்களால்தான் நமக்கு இன்னல்கள் நிறைய”, என்பது நம் வாதம்.
துள்ளிக் குதித்து எழுந்தனர் நம்மவர்கள். பிரச்சினையை ஆழமாகப் பேசிப் புரிந்து கொள்ள எவருமே ஆயத்தமாக இல்லை. மாறாக, உடன் இருக்கும் சக தமிழனை, திமுக அனுதாபி எனும் பட்டத்தைச் சூட்டி ஆர்ப்பரிப்பதில் மகிழ்ச்சி அடைந்தார்கள். இணையத்தில் கேட்ட, கண்ட பரப்புரைகளை, சொல்லி வைத்தாற்போல் மாய்ந்து மாய்ந்து வாந்தி எடுத்தார்கள்.
கொள்கைகள் இன்னது என அடையாளம் காண முற்படவில்லை. சித்தாந்தங்கள் சிந்தனைக்குள் கொண்டு வரப்படவில்லை. சமூகம் என்பது, பொருளாதாரம், அரசியல் மற்றும் கொள்கைகள் முதலானவற்றோடு இரண்டறக் கலந்தது. அதையொட்டியே, யாவும் திட்டமிட்டு நடத்தப்பட வேண்டும் என்பதை உணரவே இல்லை. வேறு என்னதான் செய்கிறார்கள் இவர்கள்?
”இந்த மாதிரி இன்னமும் திமுகவுக்கு அனுதாபியா இருக்குற ஆட்களாலதான், இலவசத்தைக் கொடுத்துக் கொடுத்தே நாட்டைக் கெடுக்கிறானுக இவனுக?”, சக நண்பர் என் முன்னாலேயே கூறியதுதான் இது.
இவருடைய குழந்தைகள் தமிழ் கற்க வேண்டும். நாட்டிய, நாடகங்களில் பங்கேற்க வேண்டும். இந்நிலையில், கட்டமைப்பைக் கட்டி, நல்லதொரு வாய்ப்பினை நல்கும் தமிழ்ச் சங்கத்துக்கு உரிய கொடைக் கட்டணத்தை நினைவு கூர்ந்த சில நிமிடங்களில் ஆள் அம்பேல். இவர் பேசுகிறார், ”தாயகத்தில் இலவசத்தின் தாக்கம் அளப்பரியது”.
மனமுவந்து முன்வந்து, தமிழ்க் கட்டமைப்புக்கும் இன்னபிற சமூகம் சார்ந்த தொண்டு நிறுவனங்களுக்கு ஈவது, அல்லது தொண்டாற்றுவதை வழக்கமாகக் கொண்ட நம்மவர்கள் எத்தனை பேர்?
சொந்தத் தெருக்களில் வாழும் சக தமிழனிடம், உள்ளூர்ப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசியது உண்டா?
தன் கிராமத்தில், தன் ஊரில் நடக்கும் கிராம சபைக் கூட்டத்திற்கு, ஒரு பார்வையாளனாகச் சென்று அவதானித்த நாள் ஒன்று இவ்விமர்சகருக்கு உண்டா??
வாரம் ஒருமுறை, வேண்டாம், மாதம் ஒரு முறையாவது தன் சொந்த கிராமத்துக்குச் சென்று, ஊர்க்கட்டமைப்பு அல்லது இன்னபிற நிகழ்வுகளில் தன் பங்களிப்பைச் செய்தது உண்டா??
சென்ற தலைமுறையில் எழுத்தறிவின்மையைப் போக்குவது முதன்மைத் தேவையாக இருந்தது. இன்றைக்கு, சிந்தனையறிவின்மை என்பது பெரும் பிரச்சினையாக உருவெடுத்து இருக்கிறது. கேளிக்கை மற்றும் பொழுது போக்கைத் தவிர்த்து படைக்கப்படும் படைப்புகளுக்கு தொடர்புடைய விமர்சகர்கள் செய்த பங்களிப்பு என்ன?
பொருளாதாரத்தில் மேன்மை அடைய வேண்டும் என்பதைத் தவிர, இனமான மற்றும் தமக்கு ஒத்த விழுமியத்தைப் பற்றி சிந்தனைவயப்பட்டது உண்டா?
தனிமனிதனாய் மிளிரும் பிரச்சாரகரின் பின்னால் அணிவகுப்பதை விடுத்து, அப்படிப்பட்ட பரப்புரையாளரின் கொள்கைகள் மற்றும் இலக்கினைப் பற்றி வினவுவது உண்டா? உணர்வைக் கிளர்ந்து எழச் செய்து, அதற்கு ஆட்படுவதால் இருக்கும் பிரச்சினைகள் தீர்வு கண்டுவிடுமா?
அமெரிக்கா வந்தும், சாதிப் பற்றைக் கைவிட முடியாமல் திரிகிறோமே? இந்த இலட்சணத்தில், காசு பார்க்கும் அரசியல்வாதியின் வெற்றியே அதில்தான் அடங்கி இருக்கிறது என்பதை உணர்வது எப்படி??
பிரச்சினை என்ற மாத்திரத்தில், தமிழ், தமிழன் என்று கத்திக் கூப்பாடு போடுவதால் வந்துவிடுமா தீர்வு? கொள்கைகள் தரித்த மனிதர்கள் உலாவுதல் வேண்டும். அம்மனிதர்களின் வெளிப்பாடாய், கட்சிகள் தோன்றுதல் வேண்டும் என்பதுதானே நியமம்??
உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், வணிகமயமாக்கல் என மாற்றங்களைத் திணிக்கிறான் வளர்ந்த நாட்டுக்காரன். பகற்பொழுதில் ஐந்து பில்லியன், பத்து பில்லியன் என, உதவுதல் போலக் காசைத் தருகிறான். அன்றைய இராப் பொழுதிலேயே, ஐம்பது பில்லியன், அறுபது பில்லியன் என அறுவடையும் செய்கிறான். அதைப் பற்றிப் பேசினால், கலாசாரக் காவலன் எனக் கேலி பேசுவதில்லை?!
நின்முந்தை, நின் மரபு, நின் மொழி, நின் நானிலம், நின் மக்கள் எனும் உணர்வைத் தரிக்க தனிமனிதனாய் ஒருநாளேனும் சிந்தித்தது உண்டா? முதன்மையாய்த் தமிழில் பேசுவதை ஒரு கணமேனும் செயற்படுத்தியது உண்டா??
கிராமத்தில், பாமரராய் இருந்தும் அழகாய்ச் சொல்வர், “தும்பை வுட்டுட்டு, வாலைப் புடிக்கிறான் இவன்?”. இப்படிப் பின்பற்றக் கூடியனவற்றைச் செய்யாது இருந்து விட்டு, வெற்றுக் கூச்சல் இடும் இவர்களால் ஆகப் போவது ஒன்றும் இல!
திமுக தோற்று, அதிமுக வரலாம்!! ஆனால், மீண்டும் அதே திமுகதான் வெல்லும்... இளிச்சவாய்த் தமிழன், தான் திருந்தும் நாளது வரையிலும்!!!
அவர்கள் அவனைப் பிடிக்கும் வரை, ஒவ்வொருவரும் நேர்மையானவரே!
56 comments:
//திமுக தோற்று, அதிமுக வரலாம்!! ஆனால், மீண்டும் அதே திமுகதான் வெல்லும்... இளிச்சவாய்த் தமிழன், தான் திருந்தும் நாளது வரையிலும்!!! //
:)
திமுகவிற்கும் அதிமுக விற்கும் அ தானே வித்தியாசம் ?
குஜமுக?
வாதங்கள், கேள்விகள் ஒவ்வொன்றும் நச்..
கணினித்திரைகளில் புரியும் விவாதங்கள் எந்த அளவிற்கு சமூகத்தைக் காட்டுகின்றன? என்பது சரியான கேள்வியே.
இதற்குத் தலைப்பு சரியாகத் தோன்றவில்லை.
"நான் என்ன கட்சியா இருந்தா உங்களுக்கென்ன.. உங்க வேலைய ஒழுங்கா செய்தீங்களா?" என்ற தலைப்பு சரியாக இருந்திருக்கும்.
அவர்கள் அவனைப் பிடிக்கும் வரை, ஒவ்வொருவரும் நேர்மையானவரே!
...... விரிவான அலசலும் கருத்துக்களும் ...... அந்த கடைசி வரி, நிறையவே சிந்திக்க வைக்கிறது.
good post..
பதிவுக்கு என்னுடைய வாக்குகளை செலுத்திவிட்டேன்.
யதா பிரஜா ததா ராஜா! நமது யோக்யதைக்கு இப்படிப்பட்ட 'தலைவர்கள்' தான் அமைவார்கள்.
//இணையம்தான்! இணையம் என்பது, வெகுசன மக்களின் மனோநிலையை அப்படியே பிரதிபலிக்கும் ஒரு சாதனமா? கிடையவே கிடையாது என்பதுதான் நம் கருத்து. வலைப்பக்கங்களும், திரட்டிகளும் இன்றைய நாள் வரையிலும் சமூகத்தின் மனோ நிலையைப் பிரதிபலிப்பது இல்லை என்பதுதான் யதார்த்தம். தாயகத்தில், தமிழ்ச் சமூகத்தில் இணையம் என்பது அவ்வளவாகப் புழக்கத்தில் வரவில்லை என்பதுதான் காரணம்//
இந்த பதிவு யாருக்காக?.
-ve voted
"ஜனநாயக நாட்டில் மன்னனின் லட்சனம் மக்கள் மனநிலையின் பிம்பம் தான்" என்ற கூற்றை தெள்ளத் தெளிவாக பறைசாற்றிய பாங்கு அற்புதம். உங்களைப் போன்று பிரச்சினைகளை பொதுப் புத்தியுடன் அணுகும் பாங்கு கொண்ட தமிழ் பதிவர்கள் எண்ணிக்கை உயரவேண்டும். நல்ல பகிர்வுக்கு நன்றி.
இலவசங்கள் யாருக்கு அவசியமோ அவர்களை விட அவசியமில்லாதவர்கள் கைகளில் போய் சேருவது தாங்க கோவமே..
டீவி இருக்க எத்தனை வீட்டில் டீவி குடுத்தாங்க தெரியுமா.. இப்ப எல்லார் வீட்டிலும் ரெண்டு டீவி.. குடுங்க ஆனா யாருக்கு குடுக்ககூடாதோ அவங்க்ளுக்கு ஏன்..?
அது யாரு பணம்.. எங்கபணம் தானே. :( நாங்க வேணா வெளியூருல இருக்கலாம்.. எங்க சொந்தமெல்லாம் அங்க தானே இருக்கு.
//தனிமனிதனாய் மிளிரும் பிரச்சாரகரின் பின்னால் அணிவகுப்பதை விடுத்து, அப்படிப்பட்ட பரப்புரையாளரின் கொள்கைகள் மற்றும் இலக்கினைப் பற்றி வினவுவது உண்டா? //
see or vai ?
Well Said !! (from Mobile)
good written.
நீங்க எந்த திமுக?
அண்ணா திமுகவா?
கருணாநிதி திமுகவா?
மறுமலர்ச்சி திமுகவா?
லட்சிய திமுகவா?
ஆமா, நான் திமுகதான்... இப்ப என்ன?!
என்னாச்சு பழமை! யாரோட வாய்க்கா வரப்பு.
தானாடலைன்னாலும் தன சதை ஆடும்பாங்க. உங்கள் நல்லாவே கிளப்பிவுட்டுட்டாங்க. இடுகை சூடா இருக்கு.
உடுமலைக்கு வேட்பாளர் மனு கொடுக்கப் போறீகளா?
// யாரோட வாய்க்கா வரப்பு.//
சேதுவோடையா?
தளபதி, நல்லாத் தானே எங்க மக்க பழமையை கவனிச்சு அனுப்பினாங்க. பின்ன யாரு.
//இணையம்தான்! இணையம் என்பது, வெகுசன மக்களின் மனோநிலையை அப்படியே பிரதிபலிக்கும் ஒரு சாதனமா? கிடையவே கிடையாது என்பதுதான் நம் கருத்து. வலைப்பக்கங்களும், திரட்டிகளும் இன்றைய நாள் வரையிலும் சமூகத்தின் மனோ நிலையைப் பிரதிபலிப்பது இல்லை என்பதுதான் யதார்த்தம். தாயகத்தில், தமிழ்ச் சமூகத்தில் இணையம் என்பது அவ்வளவாகப் புழக்கத்தில் வரவில்லை என்பதுதான் காரணம்//
So don't waste time with twitter #TNfisherman.
:(
நல்லா சொன்னீங்க!!
//வேறென்ன?? இணையம்தான்! இணையம் என்பது, வெகுசன மக்களின் மனோநிலையை அப்படியே பிரதிபலிக்கும் ஒரு சாதனமா? கிடையவே கிடையாது என்பதுதான் நம் கருத்து. வலைப்பக்கங்களும், திரட்டிகளும் இன்றைய நாள் வரையிலும் சமூகத்தின் மனோ நிலையைப் பிரதிபலிப்பது இல்லை என்பதுதான் யதார்த்தம்.// உண்மைதான் தலைவரே இங்க விசயகாந்த கேலி பண்ணுறாங்க ஆனா ஊரில அந்தாளுக்கும் அம்புட்டு கூட்டம் கூடுது. இங்க சரத்பாபுன்னு ஒருத்தர எல்லோரும் ஆதரிச்சாங்க ஆனா வெகுசனம் அவரை ஆதரிக்கல.
மிகவும் அருமையான பதிவு தோழா
@@K.MURALI
buddy, it should be the other way.... வலையுலகில் இருக்கும் உணர்வுகள், அதே வீச்சுடன் தமிழகத்துத் தெருக்களிலும் இடம் பெற வேண்டும்... I do support TNfisherman campaign.
//இவருடைய குழந்தைகள் தமிழ் கற்க வேண்டும். நாட்டிய, நாடகங்களில் பங்கேற்க வேண்டும். இந்நிலையில், கட்டமைப்பைக் கட்டி, நல்லதொரு வாய்ப்பினை நல்கும் தமிழ்ச் சங்கத்துக்கு உரிய கொடைக் கட்டணத்தை நினைவு கூர்ந்த சில நிமிடங்களில் ஆள் அம்பேல். இவர் பேசுகிறார், ”தாயகத்தில் இலவசத்தின் தாக்கம் அளப்பரியது”.//
தமிழ்ச் சங்கம் நடத்தும் நிகழ்ச்சியில் தன் பிள்ளை(கள்)கலந்துக்கனும் ஆனா
தமிழ்ச் சங்கத்துக்கு காசு கொடுக்கனும்னா மட்டும் பலருக்கு முடிவதில்லை ஏன்னு புரியலை.
//இன்றைக்கு, சிந்தனையறிவின்மை என்பது பெரும் பிரச்சினையாக உருவெடுத்து இருக்கிறது. //
சிந்தனையா அப்படின்னா என்னான்னு கேக்குற நிலைமைலதான் நாட்டு மக்கள் இருக்காங்க :-((
//திமுக தோற்று, அதிமுக வரலாம்!! ஆனால், மீண்டும் அதே திமுகதான் வெல்லும்... இளிச்சவாய்த் தமிழன், தான் திருந்தும் நாளது வரையிலும்!!! //
இளிச்சவாய்த் தமிழன் -- உண்மை
***பிரச்சினை என்ற மாத்திரத்தில், தமிழ், தமிழன் என்று கத்திக் கூப்பாடு போடுவதால் வந்துவிடுமா தீர்வு?***
தீர்வா?
பதிவு சூடாகனும்னு கூட நம்ம தமிழுணர்வைக் காட்டலாம்! "அரசியல்வாதிகள்" விஞ்ஞானவுலகிலும், பதிவுலகிலும் அதிகம்!
ஒருவர், காவலன் ஃப்ளாப் ஆன வயித்தெரிச்சல்லகூட "கருணாநிதி ஒழிக" னுகூட பதிவு போடலாம்! இது தமிழினப்பற்றா இல்லை விஜயை கும்ம்பிடும் பக்தரின் "பக்தி"யா? யாருக்குத் தெரியும்?
எந்தப்பதிவுக்கு என்ன காரணம்னு அவன் அவன் மனசாட்சிக்குத்தான் தெரியும்!
ஆமா இப்போ என்ன பிரச்சினை மணியண்ணா?
நானும் தி.மு.க. தான்
அனைத்து கட்சிகளும் ஒரே குட்டையில் ஊரிய மட்டைகள் தான் எனவே பிரச்சனையின் அடிப்படையில் ஆதரிப்பதும் எதிர்ப்பதுமே சரியான அனுகு முறையாக இருக்கமுடியும்.
திண்ணை பேச்சு மனிதர்களிடம் ஒரு கண்ணா இருக்கணும் அண்ணாச்சி.
//
திமுக, திமுக அனுதாபிகள், திமுக தலைவர்கள், தோழமைக் கட்சியினர் என அனைவரும் கேலிக்கு உள்ளாக்கப்பட்டு, கொச்சைப்படுத்துதலுக்கு ஆளாகிறார்கள். காரணம்? தமிழுக்கும் தமிழனுக்கும் நேர்ந்திருக்கும் பின்னடைவு என்பதில் நமக்கு ஐயமேதும் இல்லை.
//
என்னங்ணா கொழப்பறீங்க. தமிழுக்கும் தமிழனுக்கும் என்ன பின்னடைவு? ஓஹோ உங்க கட்சிக்கு பின்னடைவுன்னா அது தமிழுக்கு பின்னடைவா?
உங்க கட்சி தான் தமிழ்னு ஏன்யா தமிழை அசிங்கப்படுத்தறீங்க?
பின்னடைவுன்னா என்னன்னு நான் சொல்லட்டுமா? உங்க தலைவனை ஜல்சா செய்ய உன் உமிழ் நீர் அது தமிழ்நீர்னு யாரோ மொக்க்கை கவுஜ படிச்சாங்களாமே? அது தான்யா பின்னடைவு.
அது பின்னடைவு கூட இல்ல, அசிங்கம். தமிழ் உன்னோட மூத்திரம்னு நாளைக்கு ஒரு பன்னாடை சொல்லும். நீங்களும் ஆமா, ஆமா உன் மூத்திரம் அது தீர்த்தம்னு சொல்வீங்க. நாங்க கேட்டுக்கிட்டு ஆஹா, ஒஹோ என்னா ஒரு தமிழ் உணர்வுன்னு சொல்லணும்.
எங்க மண்டைல என்ன மலமா இருக்கு?
@@பேரிக்காய்
முடியலைங்க தம்பி!
//
ஆனால், அமெரிக்காவில் குடியிருக்கும் இவர்களுக்கு ஊரைப்பற்றின நிலை எப்படித் தெரிய வந்திருக்கும்? வேறென்ன?? இணையம்தான்!
//
அய்யோ அய்யோ. அண்ணே, நீங்க என்ன பொள்ளாச்சிலயும் உடுமலைப்பேட்டையிலயும் புண்ணாக்கா வித்துக்கிட்டு இருக்கீங்க? நீங்களும் அமேரிக்காதானுங்களே? உங்களுக்கு மட்டும் தான் ஊரு நெலவரம் தெரியுமாக்கும்? மத்தவங்க எல்லாம் நெட் பார்த்து தான் தெரிஞ்சிக்கிறானுவ...அட அட. என்னா ஒரு அறிவாளித்தனம். சூப்பரப்பு!
ஆனாங்னா, உங்களை மாதிரி எல்லா பயக்களும் ஊருக்கு பேஸ்றவய்ங்க தான். நேரம் கிடைச்சா ஒரு வாரமோ ஒரு மாசமோ ஓடிப் போறவனுவ தான். மக்க மனுசங்க உங்களுக்கு மட்டுமில்லைங்னா, எங்களுக்கும் இருக்காக.
//
பழமைபேசி said...
@@பேரிக்காய்
முடியலைங்க தம்பி!
//
உங்க போஸ்ட்டை பார்த்து எனக்கும் முடியலீங்ணா. பெரியவங்க மனசு வெச்சி இந்த சின்னப்பய சொல்றதை அனுமதிக்கணும்.
//
இன்னுஞ் சொல்லப் போனால், தாயகத்து நாளிதழ்களும், வார இதழ்களும், இன்னும் பிற ஊடகங்களுமே வெகுசன மனோநிலையைப் பிரதிபலிப்பது இல்லை. மாறாக, தத்தம் கருத்துகளையும் நிலைப்பாட்டையும் கொண்டு செலுத்துவதிலேதான் முனைப்பாய் இருந்து வெற்றி காணத் துடிக்கின்றன.
//
இது நெசம் தானுங்னா. எல்லாம் யாவாரமா போச்சு. கவுருமெண்டை எதிர்த்து எழுதினா கழுத எதிர்க்க கூட வேணாம் இப்படி செய்றது செரியான்னு எழுதினா கூட வெளம்பரம் எதுவும் தர்றதில்லையாம்.
உங்க கருத்தை நிலைநாட்ட நீங்க செய்ற மாதிரி அவய்ங்களும் செய்றாங்க போல.
//
துள்ளிக் குதித்து எழுந்தனர் நம்மவர்கள். பிரச்சினையை ஆழமாகப் பேசிப் புரிந்து கொள்ள எவருமே ஆயத்தமாக இல்லை. மாறாக, உடன் இருக்கும் சக தமிழனை, திமுக அனுதாபி எனும் பட்டத்தைச் சூட்டி ஆர்ப்பரிப்பதில் மகிழ்ச்சி அடைந்தார்கள். இணையத்தில் கேட்ட, கண்ட பரப்புரைகளை, சொல்லி வைத்தாற்போல் மாய்ந்து மாய்ந்து வாந்தி எடுத்தார்கள்.
//
மாய்ந்து மாய்ந்து வாந்தி எடுத்தனர்.
சூப்பருங்ணா.
//
இவருடைய குழந்தைகள் தமிழ் கற்க வேண்டும். நாட்டிய, நாடகங்களில் பங்கேற்க வேண்டும். இந்நிலையில், கட்டமைப்பைக் கட்டி, நல்லதொரு வாய்ப்பினை நல்கும் தமிழ்ச் சங்கத்துக்கு உரிய கொடைக் கட்டணத்தை நினைவு கூர்ந்த சில நிமிடங்களில் ஆள் அம்பேல். இவர் பேசுகிறார், ”தாயகத்தில் இலவசத்தின் தாக்கம் அளப்பரியது”.
//
ஏனுங்,
நீஙக் பேசுறது உங்களுக்கே அநியாயமா தெரியலை?
ஊழல் ஊதாரித்தனம் பத்தி பேசினா நீங்க எதுக்கு தமிழன், தமிழ்னு இழுக்கறீங்க? இப்படி பேசி பேசியே மொட்டையடிச்சது போதாதா?
நீங்க எழுதி இருக்கதுல எதாவது லாஜிக் இருக்கா?
தமிழன், தமிழ்னு சொல்லியே ஊழலை மறைச்சாச்சு. இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?
//
வாரம் ஒருமுறை, வேண்டாம், மாதம் ஒரு முறையாவது தன் சொந்த கிராமத்துக்குச் சென்று, ஊர்க்கட்டமைப்பு அல்லது இன்னபிற நிகழ்வுகளில் தன் பங்களிப்பைச் செய்தது உண்டா??
//
இதெல்லாம் செஞ்சா ஊழல் செய்யலாமா?
ஊழல் செய்றதுக்கு இப்படி ஒரு க்வாலிபிகேஷன் இருக்கது தெரியாம போச்சே?
//
தனிமனிதனாய் மிளிரும் பிரச்சாரகரின் பின்னால் அணிவகுப்பதை விடுத்து, அப்படிப்பட்ட பரப்புரையாளரின் கொள்கைகள் மற்றும் இலக்கினைப் பற்றி வினவுவது உண்டா? உணர்வைக் கிளர்ந்து எழச் செய்து, அதற்கு ஆட்படுவதால் இருக்கும் பிரச்சினைகள் தீர்வு கண்டுவிடுமா?
//
ஜூப்பர் கொஸ்டினுங்னா.
இந்த கேள்வியை கண்ணாடி முன்னாடி நின்னு கேளுங்க. இல்லியேன்னு பதில் வரும்.
//
அமெரிக்கா வந்தும், சாதிப் பற்றைக் கைவிட முடியாமல் திரிகிறோமே? இந்த இலட்சணத்தில், காசு பார்க்கும் அரசியல்வாதியின் வெற்றியே அதில்தான் அடங்கி இருக்கிறது என்பதை உணர்வது எப்படி??
//
அதெப்படி விட முடியும்? ஜாதில பெரிய ஆளுன்னு ப்ரூவ் பண்ணா ஒங்க தலீவரு எம்.எல்.ஏ சீட்டு கூட தரலாம். எவனுக்கு தான் எம்.எல். ஏ, மந்திரி ஆக ஆசை இருக்காது?
அமெரிக்காவுல பத்தாயிரம் வருஷம் உழைச்சா கூட ஒரு லட்சத்து எழுபதாயிரம் கோடி பார்க்க முடியாதுங்ணா. ஒங்க கணக்குக்கு ஃபோர்ட்டி பில்லியன்னு சொல்றாய்ங்க. இப்ப புரியுதுங்ளா?
//
பிரச்சினை என்ற மாத்திரத்தில், தமிழ், தமிழன் என்று கத்திக் கூப்பாடு போடுவதால் வந்துவிடுமா தீர்வு? கொள்கைகள் தரித்த மனிதர்கள் உலாவுதல் வேண்டும். அம்மனிதர்களின் வெளிப்பாடாய், கட்சிகள் தோன்றுதல் வேண்டும் என்பதுதானே நியமம்??
//
ஆமா, அப்படி உலாவுற ஆளு தான உங்க தலீவரு? அதானலதான நீங்க சப்போர்ட் பண்றீங்க?
//
உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், வணிகமயமாக்கல் என மாற்றங்களைத் திணிக்கிறான் வளர்ந்த நாட்டுக்காரன். பகற்பொழுதில் ஐந்து பில்லியன், பத்து பில்லியன் என, உதவுதல் போலக் காசைத் தருகிறான். அன்றைய இராப் பொழுதிலேயே, ஐம்பது பில்லியன், அறுபது பில்லியன் என அறுவடையும் செய்கிறான். அதைப் பற்றிப் பேசினால், கலாசாரக் காவலன் எனக் கேலி பேசுவதில்லை?!
//
இதுக்கும் கலாச்சாரத்துக்கும் என்னய்யா சம்பந்தம்?
இப்படி யாரும் சொல்லி நான் கேள்விப்பட்டதில்லை. இது வேறா ப்ராப்ளம். நீங்க தான் கலாச்சாரத்தை கால பிடிச்சி இழுக்கறீங்க.
அதெல்லாம் இருக்கட்டும், வளர்ந்த நாட்டுக்காரன் திணிச்சதுனால தான் நீங்க அமெரிக்காவுல இருக்கீங்களா? ச்சும்மா ஒரு டவுட்டு தான்.
//
நின்முந்தை, நின் மரபு, நின் மொழி, நின் நானிலம், நின் மக்கள் எனும் உணர்வைத் தரிக்க தனிமனிதனாய் ஒருநாளேனும் சிந்தித்தது உண்டா? முதன்மையாய்த் தமிழில் பேசுவதை ஒரு கணமேனும் செயற்படுத்தியது உண்டா??
//
ஆமா. தனிமனிதனாய் சிந்திச்சி தான் நான் திமுகன்னு அடையாளம் சொல்றீங்க.
கவுண்டமணில ஆரம்பிச்சு கோயம்புத்தூர் பக்கத்துல எல்லாருக்கும் காமெடி சென்ஸ் கொஞ்சம் ஜாஸ்தி தான் போல.
நிந்தை, நின் மரபு, நின் மக்கள், தனி மனித சிந்தனை. :))))
தனிமனித சிந்தனைன்னா என்ன அர்த்தம் தெரியுமா உங்களுக்கு? செம காமெடி பண்றீங்க போங்க.
//
கிராமத்தில், பாமரராய் இருந்தும் அழகாய்ச் சொல்வர், “தும்பை வுட்டுட்டு, வாலைப் புடிக்கிறான் இவன்?”. இப்படிப் பின்பற்றக் கூடியனவற்றைச் செய்யாது இருந்து விட்டு, வெற்றுக் கூச்சல் இடும் இவர்களால் ஆகப் போவது ஒன்றும் இல!
//
ஆமா. இவய்ங்களை பார்த்தா எனக்கும் கடுப்பா தான் இருக்கு. இப்ப பாருங்க, தமிழ், தமிழன்ன்னு சொல்வாய்ங்க. ஆனா புள்ளைங்களுக்கு வடமொழில பேரு வைப்பாய்ங்க.
இப்படி பேரு வைக்கிற ஆளுங்களை பத்தி நீங்க என்னண்ணா நினைக்கறீங்க? அதையும் எழுதுங்க. அறிவை வளர்த்துக்கிறேன்.
//
திமுக தோற்று, அதிமுக வரலாம்!! ஆனால், மீண்டும் அதே திமுகதான் வெல்லும்... இளிச்சவாய்த் தமிழன், தான் திருந்தும் நாளது வரையிலும்!!!
//
இது ஸேம் சைட் கோல்.
அஞ்சி வருசம் முன்னாடி அப்படி தான் ஜெயிச்சாய்ங்க. :)))
ஆனா, அவய்ங்களை இளிச்சவாயவே வச்சிருக்க நீங்கல்லாம் ஓவர்டைம் போட்டு வொர்க் செய்றீங்க்ன்னு தெரியுதுங்ணா.
முயற்சி திருவினையாக்குமாம். எங்க டீச்சர் சொன்னிச்சி. நீங்க விடாது ட்ரை பண்ணுங்க, அஞ்சி வருஷம் முன்னாடி ஆக்கினது இப்ப ஆகாம போகுமா?
தம்பி, ஆச்சுங்களா?
//
பழமைபேசி said...
தம்பி, ஆச்சுங்களா?
//
பெரியவுக நீங்க ஏதாவது சொன்னா நான் கண்டினியூ பண்றேனுங்ணா.
இல்ல, கண்டவங்களைத் திட்டுறதுக்கு மாறா நாமளும் களத்துல இறங்குவோம்னு சொல்றது தவறுங்களா? கூடச் சேர்ந்து திட்டலைன்னா, அவன் அபிமானின்னு ஒரு முடிவுக்கு வந்திடுவீங்க?!
நீங்க மட்டும் இல்ல.... ஊரே என்னைப் பார்த்து அப்படித்தான் சொல்லுது... அதுல நீங்களும் சேர்ந்து அர்ச்சிக்கிறீங்க... நடத்துங்க... நான் வேற என்ன சொல்ல முடியும்?!

February 2, 2011 8:51 PM
//
பழி போடாதீக. நான் எங்க அபிமானின்னு சொன்னேன்?
இடுகை தலைப்பை நீங்க படிக்கவே இல்லீங்ளா?
அதைப் பார்த்தவுடனே ஒரு முடிவுக்கு வந்துட்டீங்க..... நல்லா இருங்க தம்பி!!
//
பழமைபேசி said...
அதைப் பார்த்தவுடனே ஒரு முடிவுக்கு வந்துட்டீங்க..... நல்லா இருங்க தம்பி!!
//
வாழ்த்துக்கு நன்றீங்ணா.
அதைப் பார்த்து தான் நான் கமெண்ட் போட்டேன்னு முடிவுக்கு வந்துட்டீங்க. நல்லா இருங்ணா.
//ஒங்க தலீவரு//
????
//திமுக, திமுக அனுதாபிகள், திமுக தலைவர்கள், தோழமைக் கட்சியினர் என அனைவரும் கேலிக்கு உள்ளாக்கப்பட்டு, கொச்சைப்படுத்துதலுக்கு ஆளாகிறார்கள். காரணம்? தமிழுக்கும் தமிழனுக்கும் நேர்ந்திருக்கும் பின்னடைவு என்பதில் நமக்கு ஐயமேதும் இல்லை.//
?????
முடியலை... மக்கள் அதீத கோபத்தில் இருப்பதற்கான காரணம், இனத்திற்கு இன்னல் நேர்ந்த நேரத்தில் செயலாற்றாமல் இருந்தமை அப்படிங்ற பொருள்ல, பின்னடைவுக்கு காரணமாய் இருந்த காரணம்ங்ற பொருள்ல சொன்னது அது.... முன்முடிவுடன் வாசிச்சா, அப்படித்தான் பிறழச் செய்யுமுங்க தம்பி!!!
மீ டூ திமுக!
Post a Comment