நாம எப்பவும் இந்தத் திரைப்படங்களுக்கு போவதும் இல்லை; போயிப் பார்த்துட்டு விமர்சனம் எழுதின அனுபவமும் இல்லை. ஆகவே, இதை ஒரு கைதேர்ந்த விமர்சகப் பண்டிதருடைய விமர்சனம் என நினைத்துக் கருத்து சொல்வது தவிர்க்க வேண்டுகிறேன்.
காலையில எழுந்ததுமே சீமாச்சு அண்ணன் சொன்னாரு, சனிக்கிழமையும் தமிழ் இராவணனை சார்லட்ல காண்பிக்கிறாய்ங்களாம்னு.
அது சரி, எருமைக்குப் புல் புடுங்கினா மாதிரியும் ஆச்சு, காடு சுத்தமான மாதரயும் ஆச்சு; கோவிலுக்குப் போயி சாமி கும்பிட்ட மாதிரியும் ஆச்சு, அண்ணனுக்குப் பெண் பார்த்த மாதிரியும் ஆச்சு; அரங்கத்துக்குப் போயி திரைப்படம் பார்த்த மாதிரியும் ஆச்சு, கைவசம் இருக்கிற FeTNA தமிழ்த் திருவிழா நறுக்கு(flyer)களை அங்க வெச்சி விநியோகம் செய்தது போலவும் ஆச்சுன்னு, மணி மூனே முக்கால்க் காட்சிக்கு நானும் எனது நண்பரும் போயிருந்தோம்.
காட்சி துவங்கினதுமே பட்சி சொல்லுச்சு, இது எதோ அரைச்ச மாவையே அரைக்கிற வேலைன்னு. இருந்தாலும், இருந்து பார்ப்போம்னு மனசைத் தேத்திகிட்டேன். ஏன்னா, படத்துக்கு பங்களிச்ச நிறையக் கலைஞர்கள், விக்ரம், ப்ரியாமணி, பாடகர் கார்த்திக்னு நிறையப் பேர் நம்ம கனெக்டிக்கெட் தமிழ் விழாவுக்கு வர்றாங்க பாருங்க.
எடுத்த எடுப்புலயே, காவல்துறை அதிகாரியின் மனைவியக் காட்டுக்குள்ள கடத்திட்டுப் போயிடுறாங்க. எந்தவிதமான அத்துமீறலும் இல்லாம, மற்றவருடைய மனைவியான அந்தப் பெண்மணி கவனிக்கப்படுறாங்க.
கதையின் போக்குல, ஏன் அவங்க காவல்துறை அதிகாரிகள் மேல தீவிரமா நடந்துக்கிறாய்ங்க அப்படின்னு சொல்லும்படியான காட்சிகள். மேட்டுக் குடியினரால, மேட்டுக்குடி, காட்டான், கிராமத்தான், ஒடுக்கப்பட்டவன் முதலான சொற்கள் வெகு இலாவகமா, எப்பவும் போலக் கையாளப்பட்டு எடுக்கப்பட்ட திரைப்படம்தான் இதுவும்.
மேட்டுக்குடியினரால, எப்படியெல்லாம் அதிகார மமதை கையாளப்படுது. அப்பாவி, சாமன்ய மக்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்படுறாங்கன்னு உணர்த்தக் கூடிய காட்சிகள் நன்றாகவே படமாக்கப்பட்டு இருக்கிறது. இங்கதாங்க நமக்கு வேதனை தலைதூக்குது!
பாதிப்பு, அடக்குமுறை, கிராதகம், இதையெல்லாம் எதிர்த்துக் குரல் குடுக்கிறதை ஒரு கதாநாயகத்துவமாக் காண்பிக்கிற சமூகம், ஏன் நிதர்சன வாழ்க்கையில அதை வேறுபடுத்தியும், மாறுபடுத்தியும், திரித்தும், இழித்தும் காண்பிக்கணும்? இப்படியான படைப்புகளும் மேட்டுக்குடியில இருந்துதானே வருது?! நிதர்சனத்துல நடைபெறுகிற திரிபுகளுக்கும், இழிவுகளுக்கும் அவர்கள்தானே காரணம்??
இதை யோசிச்சி, மனசு நொந்துகிட்டு இருக்கிற இடத்துலதாங்க, அந்தப் பாடல் வரிகளைப் பாடகர் வெகு அருமையாப் பாடுறார். அது, வெந்த புண்ல வேலைப் பாய்ச்சின மாதிரியே இருந்தது எனக்கு. அப்படியென்ன சொல்லுச்சு, அந்த வரிகள்?
வலி மிகும் இடங்கள் வலி மிகா இடங்கள் தமிழுக்குத் தெரிகின்றதே! வலி மிகும் இடங்கள் வலி மிகா இடங்கள் தங்களுக்குத் தெரிகின்றதா?! இப்படித் தொடர்ச்சியாப் போகும் அந்தப் பாடல்.
நிச்சயமாக் கவிஞர் இப்படித்தான் எழுதி இருக்க வேண்டும், வலி மிகும் இடங்கள் வலி மிகா இடங்கள் தமிழுக்குத் தெரிகின்றதே! வலி மிகும் இடங்கள் வலி மிகா இடங்கள் தமிழனுக்குத் தெரிகின்றதா?! அப்படின்னு. படத்துக்காகக் கொஞ்சம் மாத்திட்டாங்களோ??
எங்க, எப்ப வலி மிக வேணும்; எங்க, எப்ப வலி மிகாமல் இருக்கணும்ன்னு தெரியாமத்தானே இருக்கு சமூகம்? திரையரங்குல அழுவோம்! வாழ்க்கையில எத்தகைய கொடூரத்தையும் பார்த்திட்டுக் கண்டுங் காணாமப் போறவங்கதானே நாம்??
இதை நாம எழுதினோமானா, இவன் அமெரிக்காவுல இருந்துட்டு வக்கணையா எழுதுறான். போயி, ஊர்ல, வழில நின்னு கூவ வேண்டியதுதானே அப்படின்னும் பகிடி விடுவான் நம்மாளு.
கிராமத்தானுக, காட்டானுக, பாமரன்கள் எல்லாம் அப்பழுக்கு இல்லாத வெள்ளந்திகள்ங்ற உண்மையத் தெரியாத்தனமாக் காண்பிச்சிட்டாங்க போலிருக்கு. அதுக்கே, நீங்க தாராளமா இந்த படத்துக்குப் போகலாம்.
முடிவுக் காட்சி வருது.... ஒரு ஆண், எந்த சூழ்நிலையிலும் எந்தப் பெண்ணையும் ஐயமுறுகிற பொதுப்புத்தி உடையவன்ங்ற யதார்த்தம் துணிவா வெளிப்படுதோன்னு நம்பி உட்கார்ந்தேன். ஆனா, அது ச்சும்மா, லுலுலாய்க்குன்னு சொல்லி முழுப் பூசணிக்காயை சோத்துல மறைக்கிறாய்ங்க. இதோட, வண்ணத்திரை வெண் திரையாகுது. என்ன கொடுமை சரவணன் இது?
நடித்த கலைஞர்கள், தங்கள் பங்கைச் செம்மையாச் செய்து இருக்காங்க. ஓரிரு பாடல்களும் அருமை. ஆனாக் கதையும் வசனமும்??
அடப் போங்கய்யா, நீங்களும் உங்க நீதியும், கதையும்ன்னு மனசுல நொந்துகிட்டே வந்து வாசல்ல நின்னேன். வர்றவங்களுக்கு எல்லாம், தமிழ்த் திருவிழா 2010 குறித்த நறுக்கைக் கொடுத்தேன். அவங்கள்ல சிலராவது, தமிழ் நிகழ்ச்சிக்கு வருவாங்கன்னு எதிர்பார்க்குறேன்.

34 comments:
நல்ல வேளை டிக்கெட்ட்டைப் பிரதிய்யெடுத்துப் போட்டீங்க.. இல்லேன்னா.. படம் பாக்காமயே விமர்சனம் எழுதறீங்கன்னு நறுக்குனு நாலுவார்த்தை நாக்கு மேல பல்லு போட்டுப் பேசிப்புடுவாங்க..
ஆமாம் படம்பார்த்தா அதப் படமாப்பார்த்தமா, அனுபவிச்சமான்னு இருக்கணும். அதுல போயி நுண்ணரசியல் தேடக்கூடாது. அப்படித்தான் என்னைப் போல பாமரமக்கள் படம் பார்க்குறோம். நீங்க என்னடான்ன மேட்டுக்குடி அரசியல் பேசுறீங்க..
நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது செய்யணும்னா, வேட்டிய மடிச்சிக் கட்டிக்கிட்டு களத்துல எறங்குங்க.. மத்தபடி சினிமாத் தொ்ழிலை வியாபாரமாப் பண்ணுறவங்ககிட்டே நியாயம் கேட்டு கிடைக்குமுன்னு நினைக்கிறீங்க...?????
தம்பி மணி
பாடல்கள் கவிஞர் தாமரை.
மன்னிப்பாயா ... பாடலின் இடையில் இருந்து வரிகளை எடுத்துக்காட்டி
எனது பிழைப்பைக் கெடுத்துவிட்டீர்களே? விநாடி வினாவுக்காக நான்
ஏற்கனவே கேட்கவிருந்த கேள்வியை வெளிப்படுத்தி விட்டீர்கள்.
இப்போது எனக்கு வலிக்கிறது.
படத்தைப் பற்றி நன்றாக எழுதியுள்ளீர்கள்.
அண்ணன் நாஞ்சில் பீற்றர்
நண்பா இதற்கென்று, இதை புரிய வைக்கவென்று மிகப் பெரிய பண்டிதர்கள் வலையில் இருக்கிறார்கள். காசு போட்டு காசு பார்க்கிற இடத்தில கண்டதையும் தேடக்கூடாது என்பார்கள். மொத்தத்தில் சீமாச்சு சொன்னது சரிதான்.
//அதுல போயி நுண்ணரசியல் தேடக்கூடாது. //
ஆமாமா.... திரைப்படத்தை திரைப்படமா நினைக்கணும்.... அப்படித்தான படங்கள் எடுக்குறோம் நாம??
//அப்படித்தான் என்னைப் போல பாமரமக்கள் படம் பார்க்குறோம். //
நம்பிட்டோம்....
//நீங்க என்னடான்ன மேட்டுக்குடி அரசியல் பேசுறீங்க..
//
முடியலை!
அரங்கத்துக்கு போனமா... நறுக்குகளை வினியோகம் பண்ணுனமான்னு இருக்கணும்... உள்ள போய் படத்தைப் பாத்தா இப்பிடித்தான்.... மணிரத்தினம் கிட்ட இருந்து மணியும் ரத்தினமும் உதிர்ந்து போய் காலமாச்சு.. :(
ஆஹா... அண்ணன் திரைப்பட விமர்சனமெல்லாம் எழுதறாரு டோய்!!!!!
அண்ணே.. படம் பாக்கறதுக்குக் கூட நேரமில்லாமே உக்காந்திருக்கோம்ணே!!! இன்னும் 15 நாளைக்கும் குறைவான நாளே இருக்கு...
தம்பி மணி
பாடல்கள் கவிஞர் தாமரை.
மன்னிப்பாயா ... பாடலின் இடையில் இருந்து வரிகளை எடுத்துக்காட்டி
எனது பிழைப்பைக் கெடுத்துவிட்டீர்களே? விநாடி வினாவுக்காக நான்
ஏற்கனவே கேட்கவிருந்த கேள்வியை வெளிப்படுத்தி விட்டீர்கள்.
இப்போது எனக்கு வலிக்கிறது.
படத்தைப் பற்றி நன்றாக எழுதியுள்ளீர்கள்.
அண்ணன் நாஞ்சில் பீற்றர்
அண்ணே.. நாம வெள்ளிக்கிழமை இரவு பார்த்த ஒருதலைராகம் படத்துக்கும் சுடச்சுட ஒரு விமரிசனம் எதிர்பார்க்கிறேன்..
ஏமாத்திடாதீங்க...
//மொத்தத்தில் சீமாச்சு சொன்னது சரிதான்.//
என் கருத்துக்களை மறுமொழிந்த அண்ணன்/அக்கா(?) ஜோதிஜி அவர்களுக்கு என் நன்றிகள் !!
//காசு போட்டு காசு பார்க்கிற இடத்தில கண்டதையும் தேடக்கூடாது என்பார்கள்.//
அடக் கடவுளே.... கலப்படம் செய்யுற யாவாரியும் இதையேதான சொல்லுறான்.... கல்விய விக்கிற தரகனும் இதையேதான் சொல்லுதான்.... மருத்துவம் பாக்குற மருத்துவரும் இதையேதான் சொல்லுதான்....
முடியலை! முடியலை!!
//Seemachu said...
அண்ணே.. நாம வெள்ளிக்கிழமை இரவு பார்த்த ஒருதலைராகம் படத்துக்கும் சுடச்சுட ஒரு விமரிசனம் எதிர்பார்க்கிறேன்..
//
அது படம்! எதனா, வம்பு தும்பு உண்டா.... திரைக்கதைதானே கதாநாயகன் அந்தப் படத்துல??
//naanjil said...
தம்பி மணி
பாடல்கள் கவிஞர் தாமரை.
மன்னிப்பாயா ... பாடலின் இடையில் இருந்து வரிகளை எடுத்துக்காட்டி
எனது பிழைப்பைக் கெடுத்துவிட்டீர்களே?
//
மன்னிக்கணும் அண்ணா.... அழகான வரிகளும், பாடிய விதமும் அருமை!! நன்றி!!
@@Mahesh
மகேசு அண்ணே, நல்லா இருக்கீங்களா??
//ச்சின்னப் பையன் said...
ஆஹா... அண்ணன் திரைப்பட விமர்சனமெல்லாம் எழுதறாரு டோய்!!!!!
//
இஃகி; வந்து பார்க்க ஆவலோ ஆவல்!
//Seemachu said...
அண்ணே.. நாம வெள்ளிக்கிழமை இரவு பார்த்த ஒருதலைராகம் படத்துக்கும் சுடச்சுட ஒரு விமரிசனம் எதிர்பார்க்கிறேன்..
ஏமாத்திடாதீங்க...//
சுடச்சுடவ்வா......அவ்வ்வ்வ்...
//காடு சுத்தமான மாதரயும் ஆச்சு; //
உங்களுக்கு என்னாச்சு? ;)
மன்னிக்கணும்! விமரிசனம் சப்புன்னு இருக்கு. முதலாளித்துவம்,கார்ப்பொரேட், ஆதிக்கம்னு இன்னும் கொஞ்சம் மசாலா சேர்த்து பெப் ஏத்தணும். படம் பாக்கறீங்களோ இல்லையோ டைட்டில் பார்த்து, சந்தோஷ் சிவன் காமிரால சினிமாத்தனம் தெரியுது, சுஹாசினி வசனம் சரியில்லை, மணிரத்தினம் டாப் ஆங்கிள்ள எடுத்தது மாபெரும் தவறு. 23.33 பாகையில சாய்ச்சி எடுத்திருந்தா ஐசுவரியா ராய்க்கு 5 வயசு கம்மியாயிருக்கும்னு எல்லாம் எழுத வேணாமா?
ஆகா ஒரு தலை ராகம் அண்ணாச்சிகூட பார்த்தீங்களா? அண்ணனை பிடிக்க முடியாதே? இதான் மீனா ரீனா பாட்டு எடுத்த வேலாயுதம் ஹால், இந்த பாலத்திலே தான் நாங்க உட்காந்து இருப்போம், இந்த சரச்வதி சிலை தான், இந்த ரயில் தான் அப்படீன்னு படம் பார்க்க விட்டிருக்க மாட்டாரே? பின்ன எங்கிட்டு இருந்து விமர்சனம் எழுதறது???
இருந்தாலும் ஒருதலை ராகம், வசந்தமாளிகை பட விமர்சனங்களை எதிர் நோக்கும் அன்பன் - அபிஅப்பா
இன்றைக்கு ராவணன் முன்பதிவு செய்தாயிற்று.அதனால் படம் பற்றி பேசாமல் இரண்டு குட்டிச்சண்டை போடலாம் வாங்க.
1.நறுக்குன்னா இங்கே பொருளும் அதன காப்புரிமையும் வானம்பாடிகள் பாலாவுக்கு சொந்தம்.மொழிபெயர்ப்புன்னு எனக்கு தப்பு சொல்லிட்டு பிழையர் (Flyer)தப்பாட்டம் ஆடக்கூடாது.நறுக் (Flyer)!Any buddy convinced here?
2.நசரேயன்கிட்ட மல்லு கட்டணுமுன்னா அவரு கடைக்கு போய் சண்டை போடனும்,இல்லாட்டி உங்க கடைக்கு வரும்போது வசமா புடிக்கணும்.அதை விட்டுட்டு பயந்தாங்கொள்ளின்னு அடுத்தவங்க கிட்டயெல்லாம் பொரணி பேசக்கூடாது.
யார் பயந்தாங்கொள்ளின்னு துணிஞ்சு வந்து கேட்டதால நான் நசரேயன் பக்கம்.
//அது சரி, எருமைக்குப் புல் புடுங்கினா மாதிரியும் ஆச்சு, //
இருங்க அவர்கிட்ட கோல் மூட்டி வைக்கிறேன்.
////காசு போட்டு காசு பார்க்கிற இடத்தில கண்டதையும் தேடக்கூடாது என்பார்கள்.//
அடக் கடவுளே.... கலப்படம் செய்யுற யாவாரியும் இதையேதான சொல்லுறான்.... கல்விய விக்கிற தரகனும் இதையேதான் சொல்லுதான்.... மருத்துவம் பாக்குற மருத்துவரும் இதையேதான் சொல்லுதான்....
முடியலை! முடியலை!!////
இந்த ஆதங்கமும்,கோபமும் தேவையே.
நேத்து சிங்கா / சிங்கிங்கிறாரு
இன்னிக்கு சினிமாக்கு போறாரு...
போற போக்கு செரியில்லீங்கோ
தங்கச்சிய நேரம்காலமா ஊருக்கு அனுப்பனும் போல.
/இதை ஒரு கைதேர்ந்த விமர்சகப் பண்டிதருடைய விமர்சனம் என நினைத்துக் கருத்து சொல்வது தவிர்க்க வேண்டுகிறேன்./
இப்புடி போட்டப்புறமும் ஏன் கருத்து சொன்னேன்னு கேக்க வேணாமா? :)). மதுரைத் தமிழ்ல எழுதினீங்களா? மதுரைக்காரன் என்னைக்கு சொன்னபடி கேட்டிருக்கான்னு வடிவேலு காமெடில வரும்ல அதேன்:))
//
அது சரி, எருமைக்குப் புல் புடுங்கினா மாதிரியும் ஆச்சு,
//
அதெல்லாம் சரி, இதுல நான் எங்கவோய் வந்தேன்?? அதுவும் எருமைக்கு புல் புடுங்கனுமாமில்ல? முடியாது...போங்க...எனக்கு ஸன்டே லீவு வேணும்..
(படம் பார்க்கலை...அதனால பார்த்துட்டு அப்புறம் சொல்றேன்)
நல்ல வேளை டிக்கெட்ட்டைப் பிரதிய்யெடுத்துப் போட்டீங்க.. இல்லேன்னா.. படம் பாக்காமயே விமர்சனம் எழுதறீங்கன்னு நறுக்குனு நாலுவார்த்தை நாக்கு மேல பல்லு போட்டுப் பேசிப்புடுவாங்க..
//
அதுக்கு தானா அது??
உள்ளப்படியே எழுதியிருக்கிங்க.
//ராஜ நடராஜன் said...
இன்றைக்கு ராவணன் முன்பதிவு செய்தாயிற்று.அதனால் படம் பற்றி பேசாமல் இரண்டு குட்டிச்சண்டை போடலாம் வாங்க.
1.நறுக்குன்னா இங்கே பொருளும் அதன காப்புரிமையும் வானம்பாடிகள் பாலாவுக்கு சொந்தம்.மொழிபெயர்ப்புன்னு எனக்கு தப்பு சொல்லிட்டு பிழையர் (Flyer)தப்பாட்டம் ஆடக்கூடாது.நறுக் (Flyer)!Any buddy convinced here?
//
பாலாண்ணனை மாட்டி வுடுறதுக்கு நிறையப் பேரு கிளம்பி இருக்காய்ங்க போல....
முதல்ல அவர் அப்படி எழுதி இருந்தா அது பிழை! அது, ‘நறுக்’னு நாலு வார்த்தை!! நறுக்குன்னு நாலு வார்த்தைன்னு சொன்னா அது பிழை!!!
இரண்டாவது, அது என்ன பிழையர்??
மூனாவது,
நறுக்கு naṟukku : (page 2186)
நறுக்கு² naṟukku
, n. < நறுக்கு-. 1. Piece cut off; துண்டு.
மத்தவங்களிக்கு, ஒரு காப்பியப் போட்டுட்டு வந்து சொல்றேன் பதிலு!!!
இன்னுமா காப்பி போடறீங்க?:-))
பழம, நீங்களும் உங்கப் பங்கிற்கு பணத்தை அழுதிட்டீங்களா...
//பாதிப்பு, அடக்குமுறை, கிராதகம், இதையெல்லாம் எதிர்த்துக் குரல் குடுக்கிறதை ஒரு கதாநாயகத்துவமாக் காண்பிக்கிற சமூகம், ஏன் நிதர்சன வாழ்க்கையில அதை வேறுபடுத்தியும், மாறுபடுத்தியும், திரித்தும், இழித்தும் காண்பிக்கணும்? //
படத்தின் மூலமாக எப்பயாவது ஒரு சமூக நிகழ்விற்கு இதுதான் தீர்வுங்கிற மாதிரியோ, அல்லது தான் சொல்ல வந்த கருத்தை படீர்னு தைரியமா சொல்லியிருக்காய்ங்களா - குழப்பாம? எல்லாம் சந்தர்ப்பவாதம், எந்த நேரத்தில எத வித்தா சந்தையில விலை போகுமோ அதை வைச்சு விக்கிறதுதான் தொழில்.
உங்களோட எதிர்பார்ப்பும், ஆதங்கமும் விளங்குது, ஆனா யார்கிட்ட போயி எத எதிர்பார்க்கிறீங்க?
சில பின்னூட்டங்கள் மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. நான் படத்தைக் குறை கூறவே இல்லை.
திரைக்கதை, வசனம் மற்றும் முடிவுறு காட்சியில் ஏமாற்றம் என்று மட்டுமே குறிப்பிட்டு இருக்கிறேன்.
மாறாக, படத்தில் யதார்த்ததைக் காண்பிக்கிறார்கள். ஆனால், நிதர்சன வாழ்க்கையில் ய்தார்த்தத்தை இழித்தும் பழித்தும் திரித்தும் வன்மைப்படுத்துகிறார்கள் என சமூகத்தின்பால்தான் என் ஆதங்கத்தைக் குறிப்பிட்டு இருக்கிறேன். தயவு கூர்ந்து அதனை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன்.
@@நிகழ்காலத்தில்...
@@【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║
மிக்க நன்றி அன்பர்களே!
//@@வானம்பாடிகள் said...
மன்னிக்கணும்! விமரிசனம் சப்புன்னு இருக்கு.//
பாலாண்ணே, வாங்க, வணக்கம். இஃகி!
எதோ, ஏழைக்குத் தகுந்த எள்ளுருண்டை.... இஃகிஃகி!!
@@அபி அப்பா
நீங்க வேற, நம்ம அண்ணங்கூட இருக்குறதே ஒரு சுவாரசியம்... அதையே விமர்சனமா எழுதலாம்.... இஃகி!
@@ராஜ நடராஜன்
நசரேயன் சமாச்சாரம் ஒரு லுலுலாயி சமாச்சாரம்ங்க....
@@ஈரோடு கதிர்
மாப்பு, அங்கன கிங்கன தங்கச்சிகிட்ட சொல்லிக்குடுத்து வெச்சிடாதீங்க ஆப்பு?
//வானம்பாடிகள் //
பாலாண்ணே, அப்படிச் சொன்னாதான் நம்மாளுக கேட்பாய்ங்க கேளுவி... அதுக்குத்தேன் அது... இது எப்படி இருக்கு?
@@அது சரி
ஆகா, வாங்ணே வாங்க! அப்படி எழுதினாலாவது நீங்க நம்ம பக்கம் வரமாட்டீங்களான்னுதேன்! புடிச்சி இழுத்துட்டு வந்த தாராவரத்து நடராசா சர்வீசுக்கு நன்றியோ நன்றி! இஃகி!!
@@பிரியமுடன் பிரபு
ஆமாங்கோ!
//கபீஷ் said...
இன்னுமா காப்பி போடறீங்க?:-))
//
சீமாட்டிகிட்டத் தப்பமுடியுமா என்ன??
@@சி. கருணாகரசு
நன்றிங்க!
@@Thekkikattan|தெகா
நன்றிங்க பிரபா!
ஆமா விமர்சனம் எங்கண்ணே
//பேநா மூடி said...
ஆமா விமர்சனம் எங்கண்ணே
//
அஃகஃகா! அந்த அளவுக்கு மோசமாவா இருக்கு நம்ம எழுத்து?? ந்க்கொய்யால கடையச் சாத்தலாம்தான்..... இருந்தாலும் நாங்க அவ்வளவு சீக்கிரத்துல ஓஞ்சிருவமா என்ன?? இஃகி!
படத்தைப் பார்க்கப்போய் பாதில தூங்கிட்டீங்க.. ஆரம்பம் இருக்கு.. முடிவு இருக்கு.. நடுவுல தூக்கம்.. இதுக்கு ஒரு விமர்சனமா? :-)))
Post a Comment