“சொல்றா தங்கம், என்றா?”
“ம், பல் வுழுந்திரிச்சி!”
“அட, இதுக்குள்ளயா?
“ஆமாங்ப்பா!”
“சரி, சரி, தாத்தாகிட்டச் சொல்லிப் பணம் பத்தோ, நூறோ வாங்கிக்கடா!”
“ம்க்கும்! தாத்தாவுக்குதான் பல் வுழுந்திரிச்சி!!”
அடக் கடவுளே! மனுசன் இங்க பனிரெண்டு மணி நேரம் இந்த ஆந்திராக்காரப் பசங்களைக் கட்டி மேய்ச்சுட்டு, ஆய்ஞ்சி, ஓய்ஞ்சி போய் வந்து, நித்திரையால ஆவுறதுக்கு முன்னாடி, சித்த மனசாரப் பெத்த குழந்தைகூடப் பேசலாமுன்னா? நீங்களே பாருங்க, என்னா வில்லத்தனம்?! இதுல போயி நான் என்னத்த இடுகையப் போட்டு, பின்னூட்டம் போட்டு??
மக்கா, வேலை சடவு இடுப்பை முறிக்குது! இடுகையுங் கிடையாது, பின்னூட்டுங் கெடையாது இன்னைக்கு. நாளா, மக்கா நாள் பாத்துகுலாஞ் செரியா? செரி அப்ப, போயிட்டு வாங்க!!
நடைன்னு நடப்பனா? வடைன்னு சுடுவனா??
வந்த விருந்தாடிக்கி இந்தான்னு குடுப்பனா??
12 comments:
விதையொன்னு போட்டா சுரையொன்னு முளைக்குமாக்கு.
/“ம்க்கும்! தாத்தாவுக்குதான் பல் வுழுந்திரிச்சி!!”/
அப்புடி போடுறா தங்கம்=))
//“ம்க்கும்! தாத்தாவுக்குதான் பல் வுழுந்திரிச்சி!!”//
அருமைங்க மாப்பு...
குட்டிப் புள்ளைக்கு இப்பவே பின் நவீனத்துவத்த பாருங்க...
//தாத்தாவுக்குதான் பல் வுழுந்திரிச்சி!!”//
இஃகி இஃகி
///நடைன்னு நடப்பனா? வடைன்னு சுடுவனா??வந்த விருந்தாடிக்கி இந்தான்னு குடுப்பனா??///
:)) புலிக்குன்னா பொறந்திருக்கு..:))
வடை ஊசிப்போவதற்குள் வந்துருங்கோ....
--வித்யா
//.. ம்க்கும்! தாத்தாவுக்குதான் பல் வுழுந்திரிச்சி! ..//
அதானே..
//மக்கா, வேலை சடவு இடுப்பை முறிக்குது! இடுகையுங் கிடையாது, பின்னூட்டுங் கெடையாது இன்னைக்கு. நாளா, மக்கா நாள் பாத்துகுலாஞ் செரியா? செரி அப்ப, போயிட்டு வாங்க!!//
செரி பழம
:))))
/“சரி, சரி, தாத்தாகிட்டச் சொல்லிப் பணம் பத்தோ, நூறோ வாங்கிக்கடா!”/
இந்த மெத்தட் நல்லா இருக்கே!!
//நடைன்னு நடப்பனா? வடைன்னு சுடுவனா??வந்த விருந்தாடிக்கி இந்தான்னு குடுப்பனா??//
சரிதான்....பொறுமையா வாங்க....
நல்லா இருக்கே
:)
இப்படியெல்லாம் சொன்னா.....வுட்டுருவமா? பின்னூட்டம் போடுவீங்களோ...முன்னூட்டம் போடுவீங்களோ.......
பதிவு எழுதிப் போடுங்க சாமி......அத நிறுத்தி போடாதீங்க.....
அய்யாவின் கருத்துத்தான் நானும்... விதையொன்று....
இந்த காலத்து குழந்தைகள் மிக புத்திசாலிகள்....
பிரபாகர்.
விடுங்க தாத்தாவுக்கு பல்லு விழுந்தாலும் தாத்தாதான் காசு குடுக்கணுமுன்னு சொல்லி முறையை மாத்திகிடலாம்
Post a Comment