7/04/2009

Fetna Live.... தமிழ் விழா, இரண்டாம் நாள் நிறைவுப் பகுதி

பின்னேர உணவு இடை வேளைக்குப் பின்னர், முக்கியப் பங்களித்தளிவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிறையப் பிரபலங்களை அரங்கில் பார்க்க முடிந்தது.

அதற்குப் பின்னர் அனுராதா ஸ்ரீராம் அவர்களின் நிகழ்ச்சி, ஆடல் பாடலுடன் வெகு விமரிசையாக நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. நள்ளிரவு வரையிலும் தொடருமென்பதால், இன்றைக்கு முடிவாக இடவிருந்த இரண்டாம் நாள்க் கண்ணோட்டம் இட முடியாத நிலையில் இருக்கிறேன். வலையில் நேரடியாக ஒலிபரப்பு இடம் பெற்று வருகிறது.

மொத்தத்தில் இரண்டு நாள் நிகழ்ச்சிகளும் வெகு சிறப்பாக எவ்விதத் தொய்வுமின்றி இனிதே நடந்தது. வட அமெரிக்கத் தமிழ் விழாக் குழுவினருக்கு பாராட்டுகள் உரித்தாகட்டும்.

விழா பற்றிய முந்தைய இடுகைகளுக்கு, தமிழ்விழா(Fetna) என்கிற வகைப்பாட்டு(label) சுட்டியைச் சொடுக்கவும்.

வட அமெரிக்க தமிழ்த் திருவிழா(Fetna): July 04, காலை 10.40 மணி

Fetna Live.... தமிழ் விழாத் தகவல்கள்...காலை 11.30 மணி

Fetna Live.... தமிழ் விழாத் தகவல்கள்... நண்பகல்

Fetna Live.... தமிழ் விழாத் தகவல்கள்...பிற்பகல் நான்கு மணி

Fetna Live.... தமிழ் விழாத் தகவல்கள்... மாலை ஏழு மணி

4 comments:

அப்பாவி முரு said...

பழமைபேசி = தேன் ஈ..

ஆ.ஞானசேகரன் said...

///மொத்தத்தில் இரண்டு நாள் நிகழ்ச்சிகளும் வெகு சிறப்பாக எவ்விதத் தொய்வுமின்றி இனிதே நடந்தது. வட அமெரிக்கத் தமிழ் விழாக் குழுவினருக்கு பாராட்டுகள் உரித்தாகட்டும்.////

பாராட்டுகள்...

ரவி said...

ஒன்பது டாலராமே லைவ் டெலகாஸ்ட் ?

ஏன் அய்யா ?

இலவச சேவைகள் உண்டே ?

லைவ்காஸ்ட் அக்கவுண்டு ஒன்றை உருவாக்கி உங்கள் லேப்டாப் காமிராவை அந்த பக்கம் திருப்பும் அய்யா...

நாங்களே பார்த்துக்கறோம்...

பழமைபேசி said...

இரவி அண்ணே, இதோ இப்பவே போயி அந்த நெறியாளுநர்கிட்ட பேசிப் பாக்குறேன்....என்கிட்ட உரிய சாதனம் வெச்சி இல்லை.... மன்னிக்கணும்!