கறக்கிறதென்னவோ நாழிப்பால்;
உதைக்கிறது பல்லுப் போக!!
உதைக்கிறது பல்லுப் போக!!
பார்த்தீங்கன்னா உருப்படியா பேசுறது நாலே நாலு பழமயாத்தான் இருக்கும். ஆனா நம்ம பேச்சாளருங்க செய்யுற அலட்டல் என்ன? உருட்டல் என்ன? உணர்ச்சிப் பிரவாகங்கள் என்ன? ச்சும்மா ஆய் ஊய்ன்னு கத்தி ஊரைக் கூட்டுவாங்க... உடனே பேச்சாளர் பேச்சுல மடங்கின நம்மாள், அடுத்தாள் கிட்டக் கேப்பான், ‘என்ன கொடுமை இது?’. அடுத்தாள் என்ன பதில் சொல்றதுன்னு தெரியாம அசடு வழியுவான்....
மேல சொன்னா மாதர நீங்களும் என்ன கொடுமை சரவணன் இது?ன்னு கேட்டும் இருப்பீங்க. அதே போலத்தான் நம்ம நண்பர் ஒருத்தர் என்னையுங் கேட்டாரு. நான் விடுவேனா, நீ இருக்குற கொடுமைகளோட பேரெல்லாஞ் சொல்லு, நான் அதுல எதுன்னு பாத்துச் சொல்லுறேன்னேன். ஆளுக்கு மூஞ்சியில ஈ ஆடலை! இஃகிஃகி!!
ஆமா, இந்த மூஞ்சியில ஈ ஆடக் காணோம், அப்படீன்னு சொல்றாங்களே? உங்களுக்கு அதுக்குண்டான விளக்கம் தெரியுமா? அஃகஃகா! இதென்னடா தலைவலி போயித் திருகுவலி வந்திடுச்சேன்னு யோசிக்கிறீங்களா? கொடுமைகளோட பேரே தெரியாது, இதுல நான் முகத்துல ஈ ஆடுறதுக்குண்டான விளக்கத்துக்கு எங்க போவேன்னு நீங்க மண்டையப் போட்டு நெம்ப படுத்தாதீங்க.... நாம இப்ப கொடுமைகளைப் பார்க்கலாம் வாங்க!
இட்டேற்றிக் கொடுமை: ஒருத்தர் மேல இல்லாததையும் பொல்லாததையும் இட்டுக் கட்டி கெட்ட பெயர் வாங்கித் தந்து கொடுமைப் படுத்துறது.
உக்கிரக் கொடுமை: உக்கிரம்ன்ன உடனே, பாடாப் போட்டு அடிச்சுக் கொடுமைப் படுத்துறதுன்னு நினைக்காதீங்க. இது அப்படியல்ல... அளவுகடந்த பாசத்தைப் பொழியுறது. எங்க கோயமுத்தூர்ப் பக்கம் அடிக்கடி இது நடக்கும். வட்டல் நெறைய சோத்தைப் போட்டு, முருங்கக்கா சாம்பாரையும் ஊத்தி, தின்னூ, தின்னூனுவாங்க.... அவ்வ்வ்....
உறைப்புக் கொடுமை: ஒன்னு ரெண்டு வார்த்தை பேசுனாலும், அதுல சுருக்குன்னு மனசைத் தெக்கிறமாதிரி உறைப்பைக் காட்டிக் கொடுமைப் படுத்துறது.
கடூரக்(வன்) கொடுமை: கடுமையான துயரத்துல கெடந்து தவிக்கிறதுதான் கடூரக் கொடுமை.
கிறாளிக் கொடுமை: சுத்தி விடறதுன்னு ஈழத் தமிழர்கள் சொல்வாங்க. அதாவது உங்களுக்கு ஒரு வேலையக் கொடுத்து, அதைச் செய்ய முடியாதபடிக்கு தவறான தகவல்களைக் கொடுத்து குழப்பி விட்டுட்டு, இன்னும் வேலை முடியுலான்னு கேட்டுக் கேட்டே கொடுமைப் படுத்துறது.
குரூரக் கொடுமை: விகாரமா, பயங்கரமான துன்பங்களைக் காமிச்சோ, கொடுத்தோ கொடுமைப் படுத்துறது.
குழைவுக் கொடுமை: இது குரூரக் கொடுமைக்கு நேர் எதிரானது. ஒருத்தர்கிட்ட அடுத்தவர் குழைஞ்சி, குழைஞ்சி(நாய் வாலை ஆட்டி ஆட்டி வர்ற மாதிரி) வர்றது. அந்தக் குழைவுல தான் அகப்பட்டு ஏமாந்து போற கொடுமைதான் குழைவுக் கொடுமை.
குள்ளக் கொடுமை: தந்திரத்தால கொடுமைப் படுத்துறது.
கூரக் கொடுமை: கூரமின்னா பொறாமை. பொறாமையால மனசை நோகடிச்சு, துயரங்களைக் கொடுத்து மறைமுகமாச் சித்திரவதை செய்யுறது.
கோரக் கொடுமை: பயமுறுத்துச் சித்திரவதை செய்யுறது. கிலி பிடிச்சு அலறி, பயந்து அதுனால துன்பத்தை அனுபவிக்கிற கொடுமைதான் இது.
விகாரக் கொடுமை: குரூரக் கொடுமையும் இதுவும் ஒன்னு போலவே இருக்கும். ஆனா, குரூரம்ங்றதுல ஆழம் அதிகம்.
சடக் கொடுமை: சோம்பேறித்தனத்தால வர்ற இடைஞ்சல்களை சடக் கொடுமைன்னு சொல்றது.
சண்டக் கொடுமை: சண்டம்... வலிமைய எதிர்கொள்ள முடியாம அந்த வலிமைக்கு ஆட்பட்டு துயரங்களை அனுபவிக்கிற கொடுமை.
பிணிக் கொடுமை: நோய் நொடியால வர்ற கொடுமை.
தீனக் கொடுமை: வறுமையால வர்ற துயரங்கள் தீனக் கொடுமை.
நேரக் கொடுமை: எல்லாம் சரியா இருக்கும். ஆனாலும் நினைச்சது நடக்காம, எதிர்பாராம வர்ற இடைஞ்சல்கள் நேரக் கொடுமையால வர்றது.
தெரியாக் கொடுமை: தனக்கு சரிவரத் தெரியாததால நேருகிற இடைஞ்சல்கள், துன்பங்கள் தெரியாக் கொடுமை.
இல்லாக் கொடுமை: வறுமையில இருந்து கொஞ்சம் மாறுபட்டது இது. அந்த கணத்துல அது தன்னிடம் இல்லாமத் தவிக்கிற கொடுமை இது.
நீசக் கொடுமை: அசுத்தம் காரணமாவும், ஒவ்வாச் சூழ்நிலை காரணமாவும் நேருகிற கொடுமைகள் இது.
பசலிக் கொடுமை: காதலன் - காதலி, தலைவன் - தலைவி, இப்படி மற்றவர்களுடனான பிரிவால் வரும் கொடுமை.
முரண் கொடுமை: பிணக்குகளால் நேரும் கொடுமைதான் முரண் கொடுமை.
வக்கிரக் கொடுமை: வக்கிர எண்ணங்களால் நேருகிற கொடுமை.
வஞ்சகக் கொடுமை: ஏமாத்திச் சித்திரவதை செய்யுற கொடுமைதான் இது.
புரியுது... இதையெல்லாம் படிக்கணும்ன்னு என் தலைவிதி இன்னைக்குன்னு நீங்க புலம்புறதும் புரியுது இராசா... அதான் நேரக் கொடுமைங்கறது.... இஃகிஃகி!!
இந்த இடுகை அன்புத் தம்பி அப்பாவி முரு அவர்களுக்காக.....
24 comments:
//
முரண் கொடுமை: பிணக்குகளால் நேரும் கொடுமைதான் முரண் கொடுமை.
//
என்னோட ப்ளாக் சைட்டை கொடுமைன்னு சொல்றதை வன்மையாக கண்டிக்கிறேன்....என்ன கொடுமை சார் இது?? :0)))
ஆணிக் கொடுமை அதிகமாயிட்டதுனால கொஞ்ச நாள் வர முடியலை....நிறைய எழுதியிருக்கீங்க போலருக்கே...படிச்சிட்டு சொல்றேன்...
//அது சரி said...
//
முரண் கொடுமை: பிணக்குகளால் நேரும் கொடுமைதான் முரண் கொடுமை.
//
என்னோட ப்ளாக் சைட்டை கொடுமைன்னு சொல்றதை வன்மையாக கண்டிக்கிறேன்....என்ன கொடுமை சார் இது?? :0)))
//
அது சரி அண்ணாச்சி, வாங்க, வாங்க!!
//அது சரி said...
ஆணிக் கொடுமை அதிகமாயிட்டதுனால கொஞ்ச நாள் வர முடியலை....
//
நீங்க இல்லாம, பெரிய வறட்சி... ஒரு நக்கல் உண்டா.. நையாண்டி உண்டா...பதிவுலகத்துல நகைச்சுவையே இல்ல.... அவங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் தனிமனித தாக்குதல்... அல்லாட்டி, ஒப்பாரி....அவ்வ்வ்வ்வ்......
இந்த இடுகை எனக்கா?
// அப்பாவி முரு said...
இந்த இடுகை எனக்கா?
//
இதுலென்ன ஐயம் வேண்டிக் கெடக்கு? இஃகி!
கொடுமை கொடுமைன்னு மணியார் பதிவுக்கு வந்தா இங்க பதினேழு கொடுமை !! என்ன கொடுமை இது??
சனங்க சரளமா புழங்குற வங்கொடுமை காணாம போன கொடுமைய என்ன சொல்ல.அவ்வ்வ்.
// Mahesh said...
கொடுமை கொடுமைன்னு மணியார் பதிவுக்கு வந்தா இங்க பதினேழு கொடுமை !! என்ன கொடுமை இது??
//
அவ்வ்வ்.... நாந்தான் அது கால, நேரக் கொடுமையின்னு இடுகையிலயே சொல்லி வெச்சேனே... சொல்லி வெச்சேனே... இந்தக் கொடுமைய என்ன சொல்லி அழ? அவ்வ்....
//பாலா... said...
சனங்க சரளமா புழங்குற வங்கொடுமை காணாம போன கொடுமைய என்ன சொல்ல.அவ்வ்வ்.
//
வங்கொடுமை(வன் கொடுமை)யுங்றதும், கடும் கொடுமை(கடூரக் கொடுமையும்)யுங்றதும் ஒன்னுதான்னு பாலாண்ணனுக்கு தெரியாமப் போச்சே... இதான் தெரியாக் கொடுமைங்றதும் அண்ணனுக்கு வெளங்காமப் போச்சே? அவ்வ்வ்........
ம்ஹூம். இந்தக் கொடுமக்கெல்லாம்
பின்னூட்டம்
போட்டு முடியாதுப்பா:))
ப.பேக்குத் தெரியாத விஷயமே இல்லை போல.
வல்லியம்மா சொன்னதுதான் சரி - மணிக்குத் தெரியாததே கிடையாது போல
நல்லாருப்பா
//
வல்லிசிம்ஹன் said...
ப.பேக்குத் தெரியாத விஷயமே இல்லை போல.
July 26, 2009 9:45 AM
//
இம்புட்டு வெவரம் சொல்றாரு...இவரைப் போய் "பேக்கு"ன்னு சொல்லிட்டியளே....அதுவும் இனிஷியலோட :0)))
//அது சரி said...
//
வல்லிசிம்ஹன் said...
ப.பேக்குத் தெரியாத விஷயமே இல்லை போல.
July 26, 2009 9:45 AM
//
இம்புட்டு வெவரம் சொல்றாரு...இவரைப் போய் "பேக்கு"ன்னு சொல்லிட்டியளே....அதுவும் இனிஷியலோட :0)))
//
ஆகா...இதான் இல்லாமக் காத்திட்டு இருந்தோம்... வல்லிம்மா வந்து அண்ணனுக்கு பதில் சொல்லுங்கோ....
//cheena (சீனா) said...
நல்லாருப்பா
//
நன்றிங்க ஐயா!
/////
அதே போலத்தான் நம்ம நண்பர் ஒருத்தர் என்னையுங் கேட்டாரு. நான் விடுவேனா, நீ இருக்குற கொடுமைகளோட பேரெல்லாஞ் சொல்லு, நான் அதுல எதுன்னு பாத்துச் சொல்லுறேன்னேன். ஆளுக்கு மூஞ்சியில ஈ ஆடலை! இஃகிஃகி!!
/////
நல்லவேளை அந்த மூஞ்சியில ஈ ஆடாத ஆள் நான்தான்னு நீங்க யாருகிட்டேயும் சொல்லலை
///
எங்க கோயமுத்தூர்ப் பக்கம் அடிக்கடி இது நடக்கும். வட்டல் நெறைய சோத்தைப் போட்டு, முருங்கக்கா சாம்பாரையும் ஊத்தி, தின்னூ, தின்னூனுவாங்க.... அவ்வ்வ்....
///
ஆஹா
///
எதிர்பாராம வர்ற இடைஞ்சல்கள் நேரக் கொடுமையால வர்றது.
///
அதான் அதேதான்
கடூரக் கொடுமை (அ) வங்கொடுமைன்னு போட்டிருக்கலாமல்லோ. இந்தக் கொடுமைக்கு என்ன ஆளாக்கிட்டியளே. அவ்வ்வ்
ம்ம்ம்
இதென்ன கொடுமை
கொடுமைல இத்தனை கொடுமையா??????
கொடுமையிலே இத்தனை வகையான கொடுமைங்க இருக்கா. கொடுமைடா சாமி.
"கொடுமை கொடுமைன்னு கோயிலுக்கு போனானாம், அங்க ஒரு கொடுமை அவுத்து போட்டுக்கிட்டு ஆடுச்சாம்" இது எந்த கொடுமையா இருக்கும்???
//பிரியமுடன் பிரபு said... //
பிரபு... கொடுமைல இருந்து போனாப் போகுதுன்னு வுட்டுட்டேன்... இஃகிஃகி!
//பாலா... said... //
திருத்திட்டேன் பாலாண்ணே!
//ஆ.ஞானசேகரன் said... //
ஞானியார் வாங்க!
//குறும்பன் said... //
காலக் கொடுமை...இஃகிஃகி!
அடக் கொடுமையே :)
இப்டில்லாமையா கொடுமை படுத்துவிய.
Post a Comment