1/17/2009

முதல்வருக்கு ஒரு அறைகூவல்!

வணக்கம்! இன்றைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ஏற்பட்ட விரக்தியின் விளைவே இந்த அறைகூவல். இன்னல்கள் கண்டு, மனம் நொந்து இருக்கும் வேளையில், உம்மைக் கடிந்து தொழுவதைத் தவிர வேறொன்றும் எமக்குத் தெரிந்திருக்கவில்லை.

விநாயகனே வினை தீர்ப்பவனே!
விநாயகனே வினை தீர்ப்பவனே!
வேழ முகத்தோனே, ஞால முதல்வனே!
விநாயகனே வினை தீர்ப்பவனே!

இந்தப் பாடல்தானே, எங்களுக்கு உயிர் மூச்சு. அதை நீர் மறந்து விட்டீரா? வினை தீர்ப்பவன் நீயன்றோ? ஏன், இனியும் மெளனம் கலையாமல் இருக்கிறீர்?? அரசமரமும், வேப்பமரமும் இணைந்திருக்க, அதனடியில் நீர் வீற்றிருக்க, நாங்கள் துன்பமென்றதும் ஓடோடி வந்தும்மைத் தொழுதழுவோம். ஒரு ம‌ண்ட‌ல‌மும், அனுதின‌ம் உம்மைச் சுற்றி வ‌ந்து, ம‌ன‌முருகினால், தீராத‌ துன்ப‌ம் தீருமென்பார். இன்றைக்கு அந்த‌ ம‌ர‌ங்க‌ளும், ஏன், நீர் வீற்றிருக்கும் ம‌ர‌த்த‌டிக‌ளுமே இரையாகித்தானே போகின்ற‌து? ஏன் இன்னும் மெள‌ன‌மாய் இருக்கிறீர்?? எம்ம‌வ‌ர் துன்ப‌ம் தீர்த்து வைக்க‌ மாட்டீரோ? உம‌க்கு, இந்த‌ அடியேன் சொல்லித் தெரிய‌ வேண்டிய‌தில்லை. என்றாலும், எம் ஆத்ம‌வ‌லியின் கார‌ணியாய்ச் சொல்கின்றேன், ம‌க்க‌ள் இல்லையேல் நீர் இல்லைய‌ன்றோ??

நீர் கிழக்கு முகமாய், ஆற்றங்கரையோரம் அரசமர நிழலில் வீற்றிருப்பீர். அங்கு ஊர் மக்களும் வந்திருந்து,

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன்
கோலம்செய் துங்கக்கரிமுகத்துத் தூமணியே
நீ எனக்குச் சங்கத்தமிழ் மூன்றும் தா!

என்று மனதார உருகிப்பாடி, எருக்கைப் பூச்சாத்தி, "தமிழின் சோதரனே! எம்தமிழை எமக்குத் தந்திடுவாய்!!" என்றும், "காத்திடுவாய்!" என்றும் வேண்டி தோப்புக்கரணம் இடுவார் நம்மக்கள். அந்த மக்களும், தமிழும் கூக்குரலிடும் ஓசை உமக்கு எட்டவில்லையா, ஞால முதல்வரே? இல்லை, எட்டியும் எட்டாதது போல் பாவிக்கிறீரா? சக்தி இல்லையேல், சிவம் இல்லை என்றார், உம் பெற்றோர் குறித்து! யாம் சொல்கின்றோம், பக்தன் இல்லையேல் முதல்வர் இல்லை. இந்தத் தொண்டர் இல்லையேல், தலைவரும் இல்லை. வேழ்முகத்து வேந்தே, போதும் உமது பொறுமை!

பிள்ளையார் பிள்ளையார்
பெருமைவாய்ந்த பிள்ளையார்
பிள்ளையார் பிள்ளையார்
எம்மைக் காக்கும் பிள்ளையார்!

ஆற்றங்கரை மீதிலே
அரசமர நிழலிலே
வீற்றிருக்கும் பிள்ளையார்
வினைகள் தீர்க்கும் பிள்ளையார்!

நேரும் துன்பம் யாவையும்
நீக்கிவைக்கும் பிள்ளையார்
கூடிப்பாடும் தொண்டரின்
குறைகள் தீர்க்கும் பிள்ளையார்!

முதல்வா, முத்தமிழே, இந்த கடைக்கோடி பக்தனின் அறைகூவல் இதுதான் வேந்தே! வினைகள் தீர்த்து விடு, இனமான உணர்வு தளைக்க விட்டு, அமைதி எங்கும் பொங்க வழிவகை செய்து விடு!! இல்லாவிடில், வெண்ணெய் திரளும் போது தாழி உடைந்த கதை என்பது, உமக்கு சொல்லித் தெரிவதில்லையன்றோ!?!

22 comments:

ARIVUMANI, LISBON said...

miga chariyaana pathivu...

பழமைபேசி said...

//BLUESPACE அறிவுமணி, ஜெர்மனி said...
miga chariyaana pathivu...
//

நன்றிங்க‌!

நசரேயன் said...

நானும் ௬விக்கிறேன் உங்களோட சேர்ந்து

நாமக்கல் சிபி said...

நானும் கூவிக்கிறேன்!

தேவன் மாயம் said...

வேண்டுதலில் நானும் கலந்து கொள்கிறேன்!
தேவா..

சின்னப் பையன் said...

நானும்....

Mahesh said...

நானும் முழுசாவே கூவிக்கிறேன்.... பெரிய்ய காது வெச்சுருக்காரு.. விழுதா பாப்போம்

அபி அப்பா said...

தல நீங்க சீமாச்சு அண்ணா நன்பர்ன்னு தெரியும்! ஆனா இப்படி ஒரு சூப்பர் உள்குத்து பதிவு போடுவீங்கன்னு தெரியாது!

உங்க புத்தாண்டு வாழ்த்தே ஒரு வித்யாசமா இருந்துச்சு! அப்பவே மைல்டா ஒரு டவுட்டு எனக்கு, இவரு பட்டைய கிளப்ப போரார்ன்னு:-))

குடுகுடுப்பை said...

தல நீங்க சீமாச்சு அண்ணா நன்பர்ன்னு தெரியும்! ஆனா இப்படி ஒரு சூப்பர் உள்குத்து பதிவு போடுவீங்கன்னு தெரியாது!//

மறுக்கா கூவிக்கறேன்

பழமைபேசி said...

@@நசரேயன்
@@Namakkal Shibi
@@ச்சின்னப் பையன்
@@Mahesh
@@அபி அப்பா
@@குடுகுடுப்பை

என்னோட கூவுதலோட, ஆதரவா உங்க கூவுதலையும் தெரிவிச்ச உங்க எல்லார்த்துக்கும் மனமார்ந்த நன்றி! அருள் கிடைக்க வேண்டுவோமாக!!

பழமைபேசி said...

//thevanmayam said...
வேண்டுதலில் நானும் கலந்து கொள்கிறேன்!
தேவா..
//

நன்றிங்க ஐயா!

பழமைபேசி said...

//அபி அப்பா said...
தல நீங்க சீமாச்சு அண்ணா நன்பர்ன்னு தெரியும்! ஆனா இப்படி ஒரு சூப்பர் உள்குத்து பதிவு போடுவீங்கன்னு தெரியாது!

உங்க புத்தாண்டு வாழ்த்தே ஒரு வித்யாசமா இருந்துச்சு! அப்பவே மைல்டா ஒரு டவுட்டு எனக்கு, இவரு பட்டைய கிளப்ப போரார்ன்னு:-))
//

அண்ணே, வாங்க, வணக்கம்! நம்ப சீமாச்சு அண்ணன் உங்களைப் பத்தி சொல்லி இருக்காரு. மிக்க மகிழ்ச்சிங்க!!

Anonymous said...

//பக்தன் இல்லையேல் முதல்வர் இல்லை. இந்தத் தொண்டர் இல்லையேல், தலைவரும் இல்லை. வேழ்முகத்து வேந்தே, போதும் உமது பொறுமை//

எந்த முதல்வராலும் பாலும் தேனும் ஆறா ஓட வைக்கமுடியலை.

KarthigaVasudevan said...

//"முதல்வருக்கு ஒரு அறைகூவல்!"//


என்னமோ இருக்குன்னு புரியுது...என்னான்னு தான் புரியலை!

வேத்தியன் said...

உங்ககூட நானும் சேர்ந்துக்கிறேனுங்க...

Anonymous said...

உங்கள் உணர்வு வெற்றி பெறவேண்டும் என வாழ்த்துகின்றேன்!!!!!!!!!!!!

ஈழத் தமிழன்

அது சரி(18185106603874041862) said...

//
விநாயகனே வினை தீர்ப்பவனே!
விநாயகனே வினை தீர்ப்பவனே!
வேழ முகத்தோனே, ஞால முதல்வனே!
விநாயகனே வினை தீர்ப்பவனே!
இந்தப் பாடல்தானே, எங்களுக்கு உயிர் மூச்சு. அதை நீர் மறந்து விட்டீரா?
//

நீங்க சொல்றது ரொம்பவும் உண்மை...முதல் பாட்டே விநாயகனே வினை தீர்ப்பவனே தான்...

பழமைபேசி said...

@@சின்ன அம்மிணி
@@மிஸஸ்.டவுட்
@@வேத்தியன்
@@Anonymous
@@அது சரி

எல்லார்த்துக்கும் மனமார்ந்த நன்றி! அருள் கிடைக்க வேண்டுவோமாக!!

karu said...

unkalalaippunanru wish u well

பழமைபேசி said...

//karunanithy said...
unkalalaippunanru wish u well
//

Thank you buddy!

தாராபுரத்தான் said...

அப்படியே பரமசிவனுக்கு(பிரதமர்) வேண்டுகோள் கொடுங்க தம்பி.....

ஷண்முகப்ரியன் said...

அருமை.