விருதுகள், படைக்கப்பட்ட படைப்புக்கே ஒழிய படைத்தவர்களுக்கு அல்ல. எதிலும் தனிமனிதர்களை முன்னிறுத்தி விமர்சனம் செய்வது என்பது களையப்பட வேண்டிய ஒன்று.
பங்கேற்ற நடுவர்கள் தத்தம் மனசாட்சிக்கு ஒப்ப நடந்து கொண்டிருப்பார்கள் என நம்புகிறேன். நம்பித்தான் ஆக வேண்டும். அப்படியே, ஓரிருவர் வழுவி இருந்தாலும் தேர்வுக்குப் பங்கம் நேர்ந்திருக்காது. ஏனெனில், ஒவ்வொரு பிரிவுக்கும் பல நடுவர்கள் பணியாற்றினர். ஒருவரது மதிப்பீடு மட்டும் இறுதித் தெரிவினை முடிவு செய்வதற்கான வாய்ப்புகள் மிகவும் சொறபம்.
கொடுத்த விருதினைத் திருப்பி அளிப்பது என்பது, கட்டமைப்புக்கும் கட்டமைப்பின் நேயர்களுக்கும் எதிரானது.
இறுதியாக, விருதுகள் என்பன கொடுக்கப்பட வேண்டுமே ஒழிய நாடப்படுவன அல்ல. அம்முறையில், தத்தம் இடுகையை தாமே விருதுக்குச் சமர்ப்பிப்பதில் அவ்வளவு நியாயம் இல்லை. மாறாக, தாம் வாசித்துச் சிலாகித்து, விருதுக்குத் தகுதியானவற்றை மற்றவர் முன்மொழிதலே சிறப்பாக இருக்க முடியும். இதிலும் சிக்கல் எழும். ஒரே பதிவரின் எண்ணற்ற இடுகைகள் முன்மொழியப்படக் கூடும். அப்படியான நேரத்தில், குறித்த பிரிவின் கீழ் முதலில் சமர்ப்பிக்கப்படும் இடுகை மாத்திரமே கணக்கில் கொள்ளப்பட வேண்டும்.
ஒரு சிலர், பங்கேற்பதில் இருந்து விலகுவதாக அறிவித்து இருக்கிறார்கள். என் பார்வையில் அதுவும் சரியன்று. விருது வழங்கலின் நோக்கத்தில், நயம்மிகு இடுகைகளைத் தெரிவு செய்து பார்வைக்கு வைத்தலும் அடக்கம். அப்படியாக, நயம்மிகு இடுகைகள் பார்வைக்குச் செல்லாமல் தடுப்பது எப்படி நியாயமானதாக இருக்கும்?
தமிழால் இணைந்தோம்!
8 comments:
என்ன சொன்னாலும், சில விவாத ப்ராந்துகள் ஏற்று கொள்வதில்லை பாஸ். நானும் இது குறித்து ஒரு பதிவு போட இருந்தேன். நீங்கள் முந்தி கொண்டீர்கள்...
சரியான பார்வை.
விருதுகள் படைப்புகளுக்கே என்பது தான் சரியான அனுகுமுறை. அதைப் புரிந்து கொண்டால் நன்றாக இருக்கும்.
எப்ப பாத்தாலும் இப்டியே மென்மையா தடவிக் கொடுத்தே நழுவி போயிடுவது தகுமா? முறையா? அடுக்குமா?
அவரவர் வழி அவரவர் குணம்.
அம்புட்டுத்தேன்.
@@Prasanna Rajan
ஃகூசுடன் கண்ணூ, வாங்க இராசா!
1.5ங்ற பிறைப்பு விகிதத்துல, தமிழரோட மக்கள் தொகை அருகிட்டே வருது. எஞ்சி இருக்குற நாமளாவது, குதூகலமா இருக்கலாம்... அமைதி...அமைதி!
@@ ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...
நன்றிங்க தம்பி!
@@ஜோதிஜி
வாலிபம் போய்ட்டே இருக்கு... வயோதிகம் வந்துட்டே இருக்கு... அதான் காரணம். இஃகிஃகி!!
வெடிகாத்தால வரைக்கும் தூங்காம இந்த வேலை தானா! :))
Well said.
Pazamai,
Jananayakathila servathum vilaguvathum avaravar viruppam. Freeaaga vudunga. Yaar vilagarangannu theriala.
Yenakku kooda kamaraj, vanambaadi ayya pathivugalil sila migavum pidikum. Aavalaa paarthirunthen. Kaanom. Yaaraavathu submit pannaangalannu theriala.
Tamilmanam muyarchikku yenathu paaraattugal.
Post a Comment