பண்பும் பயனும் அது!
இன்றைய ஊடகங்களில், வஞ்சகக் காதலும் அதன் நீட்சியான வஞ்சனைக் கொலைகள் பற்றிய செய்திகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இடம் பிடித்து வருகின்றன.
பெரும்பாலானோர் வருத்தத்தோடு சொல்வது, போதிய கல்வி அறிவின்மை, காதலுக்குத் தரும் முன்னுரிமையை அதை ஒட்டி வரும் காமத்திற்குத் தர முன்வராதது, காமம் பற்றிய அறிவின்மை, நமது பண்பாட்டில் போதிய மாற்றமின்மை போன்றவற்றைச் சுட்டிக் காட்டுகிறார்கள்.
இங்கேதான் நாம் அவற்றில் இருந்து சற்று மாறுபடுகிறோம். ஏன்? அன்பையும், அறத்தையும் ஏட்டிலிருந்தோ, சட்டத்தின் மூலமாகவோ, அல்லது பண்பாட்டை மாற்றி அமைப்பதன் மூலமாகவோ ஒருகாலும் நிலைநாட்ட முடியாது.
Love stands far away from Lust! காதல் என்பதற்கும் காமம் என்பதற்குமான இடைவெளி வெகு அதிகம். அப்படியானால், காதலின் நீட்சியானது என்னவாக இருக்க முடியும்? இங்கேதான் தமிழின் சிதைவானது நம் கண்களுக்குப் புலப்படாமலேயே போகிறது.
காமம் வேறு; மோகம் வேறு! காமத்தைச் சிந்துபவன் காமுகன்; மோகத்தைச் சிந்துபவன் மோகன்! காதலின் நீட்சி மோகிப்பது; காமத்தின் நீட்சி மாச்சரியம்!! அன்பால் உருக்கிப் புணர்வது மோகம். உணர்ச்சியால் மட்டும் உருக்கிப் புணர்வது காமம். மோகத்தின் ஒருபாதி உள்ளடக்கம் காமம்.
சரி, அப்படியானால் எந்தவொரு சாமான்யனும் காமவயப்படுவது இல்லையா? காமவயப்படுவது யதார்த்தம். அவ்வயப்பட்டு இடறிப்போவது அனர்த்தம்! இது யாருக்கும், எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். மனக்கட்டுப்பாடு தேவைப்படுகிறது.
காமுகனை மிருகம் என்றார்கள். மோகத்தை வெளிப்படுத்துகையில் கொஞ்சு புறாவே என்றார்கள். ஏன்? பறவை இனத்துள், கிட்டத்தட்ட 90 விழுக்காட்டுக்கு மேலானவை ஒருமிகள். விலங்குகள் அப்படியானவை அல்ல! ஒருமிகள் என்றால்? ஒருத்திக்கு ஒருவனாய் / ஒருவனுக்கு ஒருத்தியாய் இருப்பவை பறவைகள். பகுத்தறிவற்ற பறவைகள் ஒருவனுக்கு ஒருத்தியாய் இருக்கின்றன. இதுதான் அறிவியல்ப்பூர்வமான உண்மை.
அதே வேளையில், பகுத்தறிவுள்ளவனுக்குப் பாலியல் கற்றுத் தருவதும் அவசியமே! பழங்காலத்துக் கோவில்களிலும், கல்வெட்டுகளிலும் முன்னோர் அதைத்தான் செய்தார்கள். அதே வேளையில், கட்டுப்பாடுகளையும் விதித்துக் கொண்டார்கள்.
சரி, பாலியல் குறித்தான் அறிவின்மைதான் இக்கொலைகளுக்குக் காரணமா? அப்படியானால், காமத்தை அறியாதவர்கள்தான் இக்கொலைகளைச் செய்கிறார்களா?? அப்படி அல்ல என்பதுதானே உண்மை. இவர்களில் பெரும்பாலானோர் ஏற்கனவே மணமானவர்கள்.
கள்ளக்காதல்? ஏதோ ஒன்றை மறைவாகச் செய்வது கள்ளத்தனம்! ஒரு மாணவனும், மாணவியும் பிறர் அறியா வண்ணம் புரிவது கள்ளக் காதல். மணமானவர்கள் புரிவது கள்ளக் காதலா?? அது வஞ்சகக் காதல். தன்னை நம்பி வாழ்க்கைக்குள் வந்தவரை வஞ்சித்துச் செய்யும் காதலது!!
இது ஏதோ இந்தியாவில் மட்டுமே நிகழும் அனர்த்தம் அல்ல; உலகெங்கும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இன்னுஞ் சொல்லப் போனால், அமெரிக்காவில்தான் கிட்டத்தட்ட 40% பேர், வாழ்க்கையில் ஏதோ ஒரு கட்டத்தில் இத்தவறைச் செய்தவர்களாக இருக்கிறார்கள். ஆனால், சென்ற தலைமுறையினரோடு ஒப்பிடும் போது, பெருமளவில் குறைந்து கொண்டு வருவதாகச் சொல்கிறது ஆய்வுகள்.
குறைவதற்கான காரணங்கள் என்னென்ன?? சமூகத்திலே, அப்படியானவர்களை இனங்கண்டு அடையாளப்படுத்தத் துணிந்தார்கள். பதவி இழந்த அரசியல்வாதிகள், வாய்ப்பிழந்தவர் வரிசையில் விளையாட்டு வீரர்கள், திரைப்படத்துறையைச் சார்ந்தவர்கள், ஊடகத்துறையைச் சார்ந்தவர்கள்.... என எண்ணற்றோர்.
கலை, இலக்கியம், ஆன்மிகம், விளையாட்டு முதலானவற்றில் மணவாழ்க்கையின் போதான விசுவாசத்தைச் சிலாகித்துப் படைப்புகள் படைத்தார்கள். அறம் என்பது சொல்லித் தெரிவதில்லை; நடைமுறையில் மட்டுமே வரும்! Practicing is better than preaching!!
சென்ற வாரம் கூட, Blue Cross Blue Shield எனும் நிறுவனத்தில் யாருக்கோ பிறந்த நாள். ஒவ்வொருவராக அறிமுகம் செய்து கொண்டு வருகிறார்கள். ஒருவர் எழுந்து, தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார். எப்படி??
”I am Tom Verego, married to Darlene Verego for 36 years!”, எனச் சொல்லி அமர்கிறார். கரவொலி விண்ணை முட்டுகிறது. அதற்காக, மணமுறிவு கொண்டோரைத் தரம் தாழ்த்துகிறார்கள் என்பது அல்ல. ஒருவனுக்கு ஒருத்தியாய் இருப்பதைப் பெருமையாய் நினைப்பதைத்தானே இது சொல்கிறது?!
இத்தனைக்கும் மேலாக, பெரும்பாலான நாடுகளில் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான சட்டம்தான். மணமான ஒரு பெண்ணை, அப்பெண்ணின் இசைவோடு காமத்திற்கு உட்படுத்தியிருந்தாலும் அது சட்டப்படிக் குற்றம்.
Adultery (முறையற்ற உறவு)க்கு மிச்சிகனில் ஆயுள் தண்டனை என்றால், இந்தியாவில் பிரிவு 497ன் கீழ் ஐந்து ஆண்டுகள் தண்டனை. தகாத உறவில் ஈடுபட்ட பெண்ணுக்கு எவ்விதத் தண்டனையும் இராது. ஆணுக்கு மட்டுமே இச்சட்டம் பொருந்தும். (கண்ணுகளா, நாம பார்த்து இருந்துக்கலாமப்பூ...)
மேலும், இது வஞ்சகக்காதல் ஆகாதென வாதிடுவோர் பலர் இருக்கக்கூடும். கட்டிய மனைவி அல்லது கணவனின் கவனத்திற்கு உட்பட்டுச் செய்தால் அது வஞ்சகக் காதல் அல்லதான்! கண்ணில் மண்ணைத் தூவிவிட்டுச் செய்யும் பட்சத்தில், அது வஞ்சகக் காதலே; எவரும் அங்கீகரிக்கப் போவதில்லை! அங்கீகரிக்கவும் கூடாது!!
வஞ்சகக் காதலின் நீட்சியாய் நிகழும் வஞ்சனைக் கொலைகள் தவிர்க்கப்பட வேண்டுமாயின், மணமுறிவுகள் எளிதாக்கப்பட வேண்டும். ஊடகங்கள், கட்டற்ற சுதந்திரத்தை வரைமுறையோடு பாவித்து, வக்கிரம் மற்றும் வன்முறைப் படைப்புகளைத் தவிர்த்து, அற்ம்(ethics) என்பதைக் கையில் எடுத்தாலொழிய இதற்கு விமோசனமில்லை!!!
29 comments:
தல!
கொஞ்சம் சீரியஸான மேட்டரை எல்லாம் பேசுறீங்க! இதெல்லாம் நல்லாயில்ல!
திருக்குறள் எல்லாம் நல்லாத்தான் இருக்கு!
திருவள்ளுவர் எத்தனை திருக்குற்ளை ஒழுங்கா ஃபாளோ பண்ணி வாழ்ந்தார்னு நினைக்கிறீங்க? சுமாரா ஒரு நம்பர் சொல்லுங்க, பார்ப்போம்!
திருவள்ளுவறை விட்டுப்புட்டு மேட்டருக்கு வறேன்.
எல்லாம் கடவுள் செய்த குற்றம் தல!
@@வருண்
//எல்லாம் கடவுள் செய்த குற்றம் தல!
//
நித்தி சொன்னதுங்களா வருண்? இஃகி!
நல்ல பதிவு பழமை. அழகா எடுத்துச் சொல்லியிருக்கீங்க. வாழ்த்துக்கள்.
//ஊடகங்கள், கட்டற்ற சுதந்திரத்தை வரைமுறையோடு பாவித்து, வக்கிரம் மற்றும் வன்முறைப் படைப்புகளைத் தவிர்த்து, அற்ம்(ethics) என்பதைக் கையில் எடுத்தாலொழிய இதற்கு விமோசனமில்லை!!!//
சரியாச்சொன்னீங்க...
/வஞ்சகக் காதலும்/
இங்கயே டமால். வஞ்சம் இருக்குமானால் காதல் என்ற வார்த்தைக்கு அர்த்தமேயில்லை. காதலின் நீட்சியாக காமம் இருக்கக் கூடும், அல்லது இல்லாமலும் காதல் இருக்கும். காமத்துக்கு காதல் அவசியமில்லை. அதை மறைக்கக் கண்டுபிடித்த சொல்தான் கள்ளக்காதல் புண்ணாக்கு. இன்ஃபச்சுவேஷன் பற்றிய கருத்தேயில்லையே. அப்புறம் அந்த ஒருவனுக்கு ஒருத்தி பேசினா பழையபடி உடன்கட்டை, விதவா விவாக மறுப்புன்னு போகணுமே. கற்பழிக்கப்பெண்ணை மணப்பது தவறாகுமே. இப்படி மேலோட்டமான விஷயம் இல்லை இது. தண்டனை கூட மனம் சார்ந்ததற்கு இல்லை. உடல் சார்ந்தமைக்கு.
/”I am Tom Verego, married to Darlene Verego for 36 years!”, /
இங்கு இதுவல்ல கரு. I love Darlene for 36 years என்று சொல்லியிருந்தால் மட்டுமே கூட பாராட்டத்தக்கதல்ல. Because love don't count days. எப்போது தோன்றியது என்றே தெரியாதது காதல்.
இது எதிர்வினை இல்லையே தலைவா? ;)
பாலாண்ணா, வணக்கம்; இதெல்லாம் எதார்த்தத்துல வருமாங்ணா? மனக்கிலேசம் என்பது இல்லாத மனிதனா??
என்றோ ஒரு நாள், ஏதோ ஒரு தருணம்.... எழுகிறது... கட்டுப்படுத்தப்பட்டும் விடப்படுகிறது.... கட்டுப்படுத்தியவர் தன்னையே வெற்றி கொண்டவர் ஆகிறார்... இப்படிக் கட்டுப்படுத்தப் பழகிக் கொள்கிறோம்...
அங்கேதான் மனிதம் போற்றப்படுகிறது.... வீட்ல நாலு குழந்தைகள் இருக்கிறார்கள்... அவர்கள் நால்வரையும் ஒரு சேர நேசிப்பது இல்லையா??
அதேதான் காதலிலும்... ஆனால் என்ன? உடல், பொருள், ஆவி, நினைப்பு என அனைத்தும் ஒருங்கே ஒருவருக்கு மட்டுமே அர்ப்பணிக்கப்பட வேண்டும் என, அந்த பறவைகளைப் போல நமக்கு நாமே அமைத்துக் கொண்ட ஒரு பண்பாடுதான் மனிதக் காதலே அன்றி வேறொன்றும் அல்ல!!
//நர்சிம் said...
இது எதிர்வினை இல்லையே தலைவா? ;)
//
வாங்க நர்சிம், நல்லா இருக்கீங்ளா?
மொதல்ல இந்த மொழியாக்கம்பத்தி பேசுலாமுங்க...
ஒன்றை மொழிபெயர்க்கும் போது, ஒரு சொல்லுக்கான பொருள் அறிந்து அதே பொருள் கொள்ளும்படி அமைப்பதே சரியாக இருக்கும்.
Fanatics - சுருக்கமா Fan ஆச்சு... அந்த Fan விசிறி ஆகிப் போச்சு... ஆக, Fanatics என்கிற வெறியார்வலன் சிதைக்கப்பட்டு விட்டது.
அதேபோலத்தானுங்க இதுவும்... நிச்சய்மா ஒன்றைப் படித்ததற்கான reactionதான் இதுவும்... அதாவது ஏதோ ஒரு வினைக்கான மறுவினைதான் இது..... இங்கே மறுதல் என்பது இன்னொன்றைக் குறிப்பது; எதிர்வினை அல்ல!
remarriage அப்படிங்றோம்... எதிர்கல்யாணம்னு ஆய்டுமா?? ஒரு மணம் முடிந்ததின் நீட்சிதான் அது... அதுபோலத்தாங்க, இவ்விடுகையும் ஒரு நீட்சியே அன்றி எதிர் அல்ல!!
சரி அப்ப? எதிர்வினைன்னு எதைத்தான் சொல்றது?? ஏதோ ஒன்றை எதிர்த்துக் காரியமாற்றுவது எதிர்வினை... நிச்சயமா, அது அல்லங்க இது!
||எதிர்வினைன்னு எதைத்தான் சொல்றது?||
ங்கொய்யாலே இனிமே எதிர் இடுகைன்னு சொல்லுங்க 311 பேய் கிட்டே புடிச்சுக்கொடுத்துடுறேன்
__________
வஞ்சனைக் கொலைகள் தான் சகிக்க முடியவில்லை
நல்ல கட்டுரை! கொஞ்சம் கடுமையான விவகாரம்தான்! புரிதல் இல்லாததும் இதற்கு காரணமாக இருக்கலாம்.
வஞ்சக காதல்..புதிய கலைச்சொல் பங்களிப்பு.....
/என்றோ ஒரு நாள், ஏதோ ஒரு தருணம்.... எழுகிறது... கட்டுப்படுத்தப்பட்டும் விடப்படுகிறது.... கட்டுப்படுத்தியவர் தன்னையே வெற்றி கொண்டவர் ஆகிறார்... இப்படிக் கட்டுப்படுத்தப் பழகிக் கொள்கிறோம்... /
இது காதல் அல்ல.
/இப்படிக் கட்டுப்படுத்தப் பழகிக் கொள்கிறோம்... /
யாருக்காக. அப்படியானால் அது போலியில்லையா?
/அங்கேதான் மனிதம் போற்றப்படுகிறது..../
இந்த மனிதம் என்பது சமூகமா? போற்றுவது யார்? ஏன் அதற்கு முக்கியத்துவம்.
விஞ்ஞானப்படி நாயும், மனிதனும் மட்டுமே உடலின்பத்துக்காக உறவு கொள்வது. திரும்பவும் பறவை பண்பாடு காதல் என்றால் ஒத்துவராது. அது வில்லங்கமா போகும்.
//வானம்பாடிகள் said...
/என்றோ ஒரு நாள், ஏதோ ஒரு தருணம்.... எழுகிறது... கட்டுப்படுத்தப்பட்டும் விடப்படுகிறது.... கட்டுப்படுத்தியவர் தன்னையே வெற்றி கொண்டவர் ஆகிறார்... இப்படிக் கட்டுப்படுத்தப் பழகிக் கொள்கிறோம்... /
இது காதல் அல்ல.//
இது காதல் என்பது அல்ல நாம் சொல்ல வந்தது.... மனிதனின் யதார்த்தம் இதுதானே??
காதலின் நீட்சியாக ஒருவனுக்குக் காமம் இருக்கிறது என வைத்துக் கொள்ளுங்கள். அந்த மனிதனுக்கு, என்றும், எப்போதும் மனக்கிலேசம் வருவதில்லை என்று சொன்னால், அது யதார்த்தமாக எனக்குப்படவில்லை.
///அங்கேதான் மனிதம் போற்றப்படுகிறது..../
இந்த மனிதம் என்பது சமூகமா? போற்றுவது யார்? ஏன் அதற்கு முக்கியத்துவம்.//
இங்கு எல்லாமே மனிதர்களால் வரையறுக்கப்பட்டதுதான். சமூகத்துக்கு இவை நல்லவை... இவை கெட்டவை... ஆகாதவை என, பரிணாம வளர்ச்சியினூடாக அவன் கற்றுத் தெரிந்து தனக்குத் தானே ஒரு பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்கிறான்...
///இப்படிக் கட்டுப்படுத்தப் பழகிக் கொள்கிறோம்... /
யாருக்காக. அப்படியானால் அது போலியில்லையா?//
ஆகா....
http://arurs.blogspot.com/2010/09/blog-post_23.html
மேற்சொன்ன கவிதைதான், எதார்த்தத்தின் வெளிப்பாடு.... என்றோ ஒருநாள், யாரோ ஒருவருக்கு... அப்படி நிகழ்க்கூடும் என்பதுதான் எதார்த்தம்.... அதே வேலையாக ஒருவன் இருப்பதும் இல்லை!
நீங்கள் சொல்வது போல, மனிதர்களை வடிகட்டினால்.... எவ்வளவு தேறும்னு நீங்களே சொல்லுங்க....
பொதுவெளியில் பகிரங்கமாக ஒப்புக் கொள்கிறேன்.....
காதல் என்பதற்குத் தாங்கள் சொல்லும் வரையறை என்பது திண்ணமெனில், நான் ஒரு போலியே!
// ஈரோடு கதிர் said...
||எதிர்வினைன்னு எதைத்தான் சொல்றது?||
ங்கொய்யாலே இனிமே எதிர் இடுகைன்னு சொல்லுங்க 311 பேய் கிட்டே புடிச்சுக்கொடுத்துடுறேன்
//
இஃகிஃகி.... மாப்பு எப்ப இடுகை இடுவாருன்னு காத்திருந்து, கங்கண்க்கட்டிகிட்டு....
மழைக்காலமா? இந்தா புடிச்சிக்க, வெயில்காலம்னு இடுறதுக்கு பேர், எதிரிடுகை இல்லாம வேறென்னவாம்??
311 என்ன? 611கிட்ட வேணுமானாலும் போய்க்குங்க.... இஃகிஃகி!!!
***பழமைபேசி said...
@@வருண்
//எல்லாம் கடவுள் செய்த குற்றம் தல!
//
நித்தி சொன்னதுங்களா வருண்? இஃகி!***
நித்திக்கும் சாருவுக்கும் க்ரிடிட் கொடுப்பதை நான் வன்மையா கண்டிக்கிறேன்!
உன்னைச் சொல்லிக் குற்றமில்லை!
என்னைச் சொல்லிக் குற்றமில்லை!
காலம் செய்த கோலமடி
கடவுள் செய்த குற்றமடி னு நம்ம கவியரசர் இந்த அரைடவுடர்கள் எல்லாம் பேச ஆரம்பிக்க முன்னமே சொல்லிப்புட்டாரு! :)
@@வருண்
யெம்மா... வுட்டுப் பின்னுறீங்களே?
எப்படிங்க இதெல்லாம்??
வஞ்சகக் கொலைக்கு காரணம் வஞ்சகக் காமமே என்பது என் கருத்து.
திருவள்ளுவர் காலத்துல காமம் என்றால் காதல் என்று பொருள், இப்ப அதுக்கு பொருள் மாறிப்போச்சு.
""ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின். - 1330""
வித்தியாசமான பார்வை, நன்றாக இருக்கிறது.
//குறும்பன் said...
வஞ்சகக் கொலைக்கு காரணம் வஞ்சகக் காமமே என்பது என் கருத்து.
திருவள்ளுவர் காலத்துல காமம் என்றால் காதல் என்று பொருள், இப்ப அதுக்கு பொருள் மாறிப்போச்சு.
""ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்//
நம்மாட்கள், உரைக்கும் பேசுகிற பேச்சுக்கும் சுவை கூட்ட வேண்டும் என்பதற்காக... மாற்றிச் சொல்வது... திரிதலுக்கு வழி வகுக்கிறது....
காமத்திற்கு இன்பம், காமத்தினின்று விலகி இருப்பது. ஏனென்றால், எப்போதோ ஒரு வாய்ப்புகிட்டுகிற பட்சத்தில் இன்பத்தின் வீரியம் அதற்கதிகம்.
ஊடல் என்பது ஊடலாகவே இருந்துவிட்டால், இன்பமென்பதே கிட்டாமல் போய்விடும். எனவே ஊடலுக்கு இன்பம் ஊடல் விடுத்துக் கூடிக் களிப்பது ஆகும்.
@@குறும்பன்
எனக்குத் தெரிந்த வரையில், உள்ளது உள்ளபடி சொல்வது மு.வ அவர்களது உரை மட்டுமே. மற்றன எல்லாம்... வியாபாரிகளால் எழுதப்பட்டவை...
இது சம்பந்தப்பட்ட இரண்டு பதிவுகளுமே நிறைய கேள்விகளை எழுப்புது.. நிறைய யோசிக்க வைக்குது..
எக்ஸ் அண்ட் வை - இவங்க ரெண்டு பேரும் சுய விருப்பத்துல ஒரு திருமண பந்தத்துல இணைஞ்சிருக்காங்கன்னு வச்சுக்குவோம்.. பத்து வருஷம் நல்லாத் தான் போவுது.. புள்ள-குட்டிக இருக்கு.. இப்பப்போயி எக்ஸ் க்கு அலுவலகத்திலோ இல்ல இன்னொரு விதமாவோ இன்னொரு பொண்ணு பழக்கமாகி அதோட நெருங்க ஆரம்பிச்சுடறார்.. 'வை' க்கு இந்த மாதிரி எதுவும் ஆகாம எக்ஸ் ஐ மட்டுமே தன்னோட காதலரா/கணவரா வச்சு வாழ்ந்துட்டு இருக்கார்..
எக்ஸ் பண்ணுறது பத்தி வை க்கு தெரிய வருது.. வை யோட இடத்துல இருந்து பாத்தா அதை காதல்ன்னே கூட அவங்க ஒத்துக்குவாங்களான்னு தெரியல :)).. (நம்மள அந்த இடத்துல வச்சுப் பாத்தா தான் அந்த வலி/கோபம் புரியும்).. ஏன்னா ஒரு திருமண பந்தமே, பரஸ்பரம், உனக்கு-நான், எனக்கு-நீ, அப்படின்ற கமிட்மென்ட், மற்றும் புரிதல் ல இருந்து தான் ஆரம்பிக்குதுன்னு நான் நினைக்கறேன்.. எக்ஸ் க்கு இப்படிப்பட்ட புரிதல் ல விருப்பம் இல்லைன்னா, முன்னமே கமிட் ஆகாம ஒதுங்கி இருந்திருக்கனும்.. இல்ல வை க்கு சொல்லிட்டு திருமண பந்தத்த ஆரம்பிச்சிருக்கணும்.. வை, எக்ஸ் ஐ நம்பி, இந்த பந்தத்துக்கு உடன்படறாங்க.. கண்டிப்பா அவங்க இடத்துல இருந்து பாத்தா அது நம்பிக்கை துரோகம் தான்.. அதை அவனோட விருப்பம் அல்லது மனிதஇயல்பு ன்னு நீ ஏத்துக்கோ ன்னு வை ய யாரும் நிர்பந்திக்க முடியாது..
ஆனா ஒரு மூன்றாம் மனுஷரா இந்தச் சம்பவத்தைப் பாத்து, எக்ஸ் சோடக் காதலை
வஞ்சகம்ன்னோ இல்ல கள்ளம்ன்னோ, சம்பந்தமே இல்லாத ஒருத்தர் சொல்றது சரியாகப் படல. அதை எக்ஸ் சோட திருமணத்துக்கு அப்பாற்பட்ட காதல்/உறவுன்னு நாம கடந்து போயிடனும்ன்னு தான் தோணுது.. (extra-marital லவ் என்ற பதத்துல)..
எல்லா மன(ண)ங்களும், உறவுகளும் சரியாகப் பொருந்தறது இல்ல. நீங்க சொல்லியிருக்கற மாதிரி மணவிலக்கு எளிதானா இப்படி spouse க்கு தெரியாம செய்யறது குறையும்ன்னு மட்டும் புரியுது..
//ஆனா ஒரு மூன்றாம் மனுஷரா இந்தச் சம்பவத்தைப் பாத்து, எக்ஸ் சோடக் காதலை
வஞ்சகம்ன்னோ இல்ல கள்ளம்ன்னோ, சம்பந்தமே இல்லாத ஒருத்தர் சொல்றது சரியாகப் படல. அதை எக்ஸ் சோட திருமணத்துக்கு அப்பாற்பட்ட காதல்/உறவுன்னு நாம கடந்து போயிடனும்ன்னு தான் தோணுது.. (extra-marital லவ் என்ற பதத்துல)..
//
இங்க பிரச்சினையே, தி.அ.உறவுல இருக்கிற மறைபொருள்தான்....
இங்க வஞ்சகக் காதல்னு சொல்றது... பாதிக்கப்பட்டவருடைய கோணத்தில்தான்....
அவங்களுக்கு சம்மதம்னாத்தான் பிரச்சினையே இல்லையே?!
for follow-up
முடியலை.... மின்ஞ்சல்ல அனுப்பாதீங்க.... நாம என்ன, சொல்லக் கூடாததையா சொல்றோம்... தயக்கம்/அச்சமின்றி அலசலாம்....
உடன்பாடு இல்லாதவர் வாழ்க்கை
குடங்கருள் பாம்போடு உறைத்தற்று
இது வள்ளுவர் கூற்று
Post a Comment