8/16/2010

இன்றைய நாள் இட்டேரியோடு!!!

புறக்கொல்லை... அம்சமா இருக்கு!
தமிழுக்குத் தட்டுப்பாடு?!
நல்லாத் தமிழ் வளர்க்குறாய்ங்க?!

நீலவானமும் நீலமலையும்
இட்டேரி
கற்றாழையும் வேம்பும்
கொட்டைமுத்துச் செடி(ஆமணக்கு)
மதுக்கரை ACS
பூவேந்தர் மலை
தோப்பு, ஆனா கள்ளு இல்லை
உண்டி வில்
தட்டக்கூடை
நாயுருவி
பட்டாம்பூச்சித் தழை
துண்ணூர்ப்பத்தினி
மருதாணிச் செடி
துத்திச் செடி
ஆயா மரம்
சுள்ளிக் கற்றாழை
காரச்செடி (அ) கிளுவஞ்செடி
நாயினன் செடி
கொஞ்சம் மழை வந்தாத் தேவலை!!
சீதாப் பழம்
காந்தள் செடி (குள்ளநரிப் பூ)
தூதுவளை?
பிரண்டை
பிரண்டை

17 comments:

vanjimagal said...

அடடா மதுக்கரை பக்கம் போயிட்டு எங்க ஊரூக்கு போகலியா?
நீங்க பெயர் எழுதாத படங்களுக்கு

எனக்கு தெரியுமே?
என்ன இன்னுமா ஊரில் இருக்கிறீர்கள்?

Jerry Eshananda said...

மண்வாசனை தூக்கலா இருக்கு.

vasu balaji said...

இட்டேரின்னு ஏரியக்காணோமே:))

Mahi_Granny said...

இட்டேரி ?

Mahi_Granny said...

இட்டேரி ?

அரசூரான் said...

பழமை,
சுள்ளிக் கற்றாழையில் ஒரு கள்ளியின் பெயர் கண்டேன், கௌரி-சௌரி-யமா?

இட்டேரியில் ஒரு ஈட்டேறிய பின்னூட்டம். இஃகி... இஃகி.

பழமைபேசி said...

இடுதரை -> இட்டேரி

இருமருங்கிலும் கற்றாழைகள், செடி கொடி மரங்கள் சூழ இருக்கும் வண்டி வாகனங்கள் செல்லும்படியான மண் தரை... மண் சாலை....

காகிதப்பூ said...

"தூதுவளை" என குறிப்பிடப்பட்டுள்ளது, "கொவ்வை" என் நினைக்கிறேன்.

ஈரோடு கதிர் said...

||ஆனா கள்ளு இல்லை||

ப்ச்!!!

Anonymous said...

அண்ணே, ரொம்ப நாள் கழிச்சு தட்டக்கூடை(சிமெண்ட் தட்டுன்னு எங்க ஊருல சொல்லுவாங்க),நாயுருவி,பட்டாம்பூச்சித் தழை(சின்ன சின்ன வெள்ளை பூ பூத்து இருக்குமே, அந்த செடி தானே,, -- அதுல தேன் இருக்குன்னு அந்த பூவ படுத்துன பாடு இன்னும் நியாபகம் இருக்கு),துத்திச் செடி,சுள்ளிக் கற்றாழை(அதுல யாரோ பெற எழுதி இருக்காங்க - எங்க எல்லாம் இடம் கிடைக்குதோ அங்க எல்லாம் எழுதுவாணுக போல),பிரண்டை பாத்ததுல ரொம்ப சந்தோசமா இருக்கு..
ஆமணக்கு செடிய பாத்து பல வருஷம் ஆச்சுண்ணே... ரொம்ப நன்றி உங்களுக்கு.....

// vanjimagal said...அடடா மதுக்கரை பக்கம் போயிட்டு எங்க ஊரூக்கு போகலியா?
நீங்க பெயர் எழுதாத படங்களுக்கு
எனக்கு தெரியுமே?
என்ன இன்னுமா ஊரில் இருக்கிறீர்கள்? //

கொஞ்சம் சொன்னீங்கன்னா நாங்களும் தெரிஞ்சுகிருவோம்ல ....நானும் அந்த செடிய பாத்து இருக்கேன்... பேரு நியாபகத்துல இல்ல...

பழமைபேசி said...

//அரசூரான் said...
பழமை,
சுள்ளிக் கற்றாழையில் ஒரு கள்ளியின் பெயர் கண்டேன், கௌரி-சௌரி-யமா?//

வெவரமா, அதையெல்லாம் பார்த்திடுவீங்ளே??

கண்ணகி said...

அது தூதுவளை இல்லை...தூதுவளை அடியில் முள்ளோடு இருக்கும்..

செல்வா said...

எல்லாமே நமக்கு பழக்கப்பட்ட செடிகள் தான் என்றாலும் அருமை ..!!

க.பாலாசி said...
This comment has been removed by the author.
க.பாலாசி said...

தூதுவளை

Mahesh said...

இன்னமும் ஊர்ப்பக்கம் சுத்திக்கிட்டிருக்கீங்களா?

துத்திக்காய் அச்சுல படம் வரைஞ்சது ஞாபகம் வருதா?

Prabakar said...

அது தூதுவளை இல்ல, கோவை பழச்செடி.. கிராம வழக்கில் உள்ளது போல கூறியது அருமை.