6/20/2010

FeTNA: ஆடுவமே பள்ளுப் பாடுவமே

ஆடுவமே பள்ளுப் பாடுவமே! தமிழ்
ஆட்சியின் மாட்சியில் கூடுவமே!

கண்கவர் கனடியத் தேசமுதல் - தென்கோடிப்
பெருதேச மட்டும் தமிழர் கோலங் கொண்டே
ஆடுவமே பள்ளுப் பாடுவமே! தமிழ்
ஆட்சியின் மாட்சியில் கூடுவமே!

மானிடம் என்னுமோர் ஆதிப்பயிர் - தமிழ்
மக்களென்றே குதித்தாடுவமே!
கானிடை வாழ்ந்திட்ட மனிதர்க்கெலாம் - நல்ல
கதியினைக் காட்டினர் தமிழர் என்றே நாம்
ஆடுவமே பள்ளுப் பாடுவமே! தமிழ்
ஆட்சியின் மாட்சியில் கூடுவமே!

வானிடை மிதந்திடும் தென்றலிலே - மணி
மாடங்கள் கூடங்கள் மீதினிலே,
தேனிடை ஊறிய செம்பவழ - இதழ்ச்
சேயிழை யாரொடும் ஆடுவமே! நாம்
ஆடுவமே பள்ளுப் பாடுவமே! தமிழ்
ஆட்சியின் மாட்சியில் கூடுவமே!

கவிதைகள், காவியம், உயர்கலைகள் - உளம்
கவர்ந்திடும் சிற்பமும் சிறந்தனவாம்
குவிகின்ற பொன்பொருள் வெள்ளியெலாம் - இங்குக்
குறையிலவாம் என்றாடுவமே!பள்ளுப் பாடுவமே! தமிழ்
ஆட்சியின் மாட்சியில் கூடுவமே!

நாஞ்சில் ஐயனொடு பெருங்கூட்டம் இலக்கியம் செப்பிடுவர்
கவின்மிகு கவிகள் கவி பாடிடுவர், தித்திக்கும்
தீந்தமிழ்ப் பேச்சாளர் பட்டிமண்டபம் நடத்திடுவர்; நாம்
ஆடுவமே பள்ளுப் பாடுவமே! தமிழ்
ஆட்சியின் மாட்சியில் கூடுவமே!

ஆடுவமே பள்ளுப் பாடுவமே! தமிழ்
ஆட்சியின் மாட்சியில் கனெக்டிகெட்
வாட்டர்பெரியில் கூடுவமே!
ஆடுவமே பள்ளுப் பாடுவமே! தமிழ்
ஆட்சியின் மாட்சியில் கனெக்டிகெட்
வாட்டர்பெரியில் கூடுவமே!








மக்களே,

வணக்கம். சென்ற ஆண்டைக் காட்டிலும், கூடுதல் இணைய, பல்லூடக வசதிகளுடன், இந்த ஆண்டும், வட அமெரிக்காவில் நடக்கப் போற தமிழ்த் திருவிழாவை, உலகெங்கும் பரந்து விரிந்து வாழும் நம் பதிவுலக நண்பர்களுக்கும், வாசகர்களுக்கும் தொகுத்தளிக்க இருக்கிறேன்.

அமெரிக்காவில் இருக்கும் தமிழர்கள் எல்லாம் நிகழ்ச்சிக்கு வாங்க. நேர்லயே சந்தித்துப் பேசுவோம். உறவுகளை அமைப்போம். பொருளாதார, பண்பாட்டு மேம்பாடுகளுக்கான வழி வகைகளை வலுப்படுத்துறதுக்கான ஒரு வாய்ப்பா இதைப் பயன்படுத்த முனைவோம். உடனே, நிகழ்ச்சிக்கு முன்பதிவு செய்யுங்க. இன்னும் 12 நாட்கள்தான் இருக்கு.

நேரடித் தொகுப்பாளரா இருந்து, நிகழ்ச்சியை உடனுக்குடன் அப்படியே இம்மி பிசகாது, உள்ளது உள்ளபடி தர முயற்சிக்கிறேன். நீங்களும் உங்க ஆலோசனையச் சொல்லுங்க. நிறைய பதிவர்கள் வர இருக்காங்க. நான் அவங்களோட ஒருங்கிணைஞ்சு, எவ்வளவுக்கு எவ்வளவு மேம்பட்டுத் தர முடியுமோ, அந்தளவுக்கு நயமாவும் தரமாவும் தர முயற்சிக்கிறேன்.

9 comments:

பழமைபேசி said...

ஒலிப்பதிவு கொஞ்சம் சொதப்பிடிச்சி... இது ஒரு வெள்ளொட்டந்தான்... போகப் போக சரியாக்கிடுவம்ல?!

vasu balaji said...

//எவ்வளவுக்கு எவ்வளவு மேம்பட்டுத் தர முடியுமோ, அந்தளவுக்கு நயமாவும் தரமாவும் தர முயற்சிக்கிறேன்.//

இதான் வேணும்.

Naanjil Peter said...

தம்பி மணி

தமிழ் விழா 2010 பற்றிய கவிதை அருமை.
நன்றி உரித்தாகுக!
அன்புடன்
நாஞ்சில் இ. பீற்றர்

ஆரூரன் விசுவநாதன் said...

வாழ்த்துக்கள்.....

க.பாலாசி said...

காத்திருக்கிறேன்...

ஈரோடு கதிர் said...

கவி அருமை

தொகுப்பாளர் இப்பவே கலக்க ஆரம்பிச்சாச்சா..

//பள்ளு// ளி வந்துடுச்சுங்க மாப்பு

பழமைபேசி said...

//ஈரோடு கதிர் said...

//பள்ளு// ளி வந்துடுச்சுங்க மாப்பு
//

ஆமாங்க மாப்பு... மறுபடியும் பதிய நேரம் கிடைக்கலை...

கயல் said...

நன்று! கலக்கலா இருக்கு இப்போவெல்லாம்!

Vijay Manivel said...

மிக மிக அருமை....மிகவும் ஆவலோடு
தமிழ் விழாவை நோக்கி காத்திருக்கிறோம்....

விஜய் மணிவேல்