அன்புப்பெருக்கானது பொங்கு கடலினும் அளப்பரியதாய் மேலோங்கி, எங்கும் செழித்திடச் செய்யும் கொங்குவள நாட்டின் சிற்றரசுகளில் ஒன்றான பொன்கலூர் நாட்டுக்கு உரிய செம்பை எனும் கிராமத்தைச் சார்ந்தவர். வளர்ந்து வரும் படைப்பாளி, சிந்தனைவாதி!
சிற்றிதழ்களில் இவரது கட்டுரைகள் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றன. இணையத்திலும் கடந்த இரு ஆண்டுகளாக எழுதி வருகிறார். சீரிய ஆளுமைக்குச் சொந்தக்காரர். சமூகநலப் பணிகளை வெகுவாக ஆதரித்து எழுதுபவர். அரிமா சங்கம் மற்றும் ஜேசீஸ் சங்கம் முதலானவற்றில் முனைப்பாகச் செயல்பட்டு வருபவர்.
பல ஆண்டுகளாக உடல்தானம் மற்றும் கண்தானங்களை முனைப்போடு ஆதரித்து, ஊக்குவித்துச் செயல்படுத்தி வருபவர். அரிமா சங்கம் மற்றும் தனது நண்பர்களோடு இணைந்து மரம் நடுதல், கல்விக்கான உதவி முகாம்கள் முதலானவற்றை நடத்துவதிலும் பங்களிக்கிறார்.
உலகளாவிய வலைப்பதிவர் கட்டமைப்பு உருவாக வேண்டும் என்பதில் திண்ணமாய் இருப்பவர். தமிழ்மணம் திரட்டியின் நல்லாதரவோடு, ஈரோடு பதிவர் சங்கமம் எனும் நிகழ்ச்சியை வெகு நேர்த்தியாக நடத்திக் காட்டியவர்களுள் இவரும் ஒருவர்.
வார ஈறில் வேளாண்மைத் தொழில் புரிந்து வரும் தன் பெற்றோருடனும், வார நாட்களில் ஈரோடு நகரில் சுயதொழில் புரிந்து கொண்டும் சமூகத்திற்குத் தன்னாலான பணிகளைச் செய்து வருகிறார்.
செம்மொழி மாநாடு
கோயம்பத்தூரில் வெகு விமரிசையாக நடக்கவிருக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஒரு பகுதியாக தமிழிணைய மாநாடும் நடக்கவிருக்கிறது. இணையத்தில் தமிழ் வளர்க்கும் பல ஆன்றோர், சான்றோர், தொழில்நுட்பப் பொறிஞர்கள், இளைஞர்கள் என ஏராளமானோர் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
இந்நிகழ்வையொட்டி ஜூலை 25, 2010ம் நாள் பிற்பகல் 3.45 மணியிலிருந்து மாலை 4.15 வரையிலும், மாநாட்டு வளாகத்தில் இருக்கும் முரசொலி மாறன் அரங்கத்தில், கவிஞர்.திலகபாமா, சிவகாசி அவர்கள் தலைமையில் நடைபெறும் நிகழ்ச்சியில் வலைப்பூக்களால் நிகழ்ந்த சாதனைகள் எனும் தலைப்பில் உரையாற்றவிருக்கிறார் ஈரோடு கதிர் அவர்கள்.
சமூக மேன்மையைக் கருத்திற் கொண்டு படைக்கும் எழுத்துகளைக் கொண்ட ஒரு வலைப்பூவின் படைப்பாளி, இத்தகைய தலைப்பில் உரையாற்றுவது அவருக்கும், பதிவுலகக் கட்டமைப்புக்கும் பெருமை சேர்க்கும் ஒன்றாகும்.
நாளுக்கு நாள் இணையப் பயன்பாடு பெருகி வரும் இவ்வேளையில், வலைப்பூக்களின் சிறப்பைக் கூட்டப்போகும் அவரது உரை மற்றும் அவரோடு இணைந்து அரங்கத்தைச் சிறப்பிக்கும் மற்றவர்களது உரையும் சிறப்பாக அமைய வேண்டும் என வாழ்த்துகிறோம்!
எதுசெய்ய நாட்டுக்கே எனத்துடித்த சிங்கமே! இன்றே, இன்னே,
புதுநாளை உண்டாக்கித் தமிழ்காப்பாய் புத்துணர்வைக் கொணர்வாய்
அதிர்ந்தெழுக! தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் அழகு காப்பாய்!
இதுதான்நீ செயத்தக்க எப்பணிக்கும் முதற்பணியாம் எழுக நன்றே!
--பாவேந்தர் பாரதிதாசன்
வாழ்த்தும்,
உலகளாவிய நண்பர்கள் மற்றும் பழமைபேசி
32 comments:
உங்கள் மூலமும் கதிருக்குப் பாராட்டுகள்:). மாப்பு இப்போ டாப்பு:)
படத்தப் பாருங்க:))). சூப்பான் புடுங்கின பாப்பா மாதிரி என்னாஆஆஆஆ லுக்கு:))..
இந்த மொழிக்கு என் வந்தனங்கள்
நண்பர் கதிருக்கு என் வாழ்த்துகள்
/எதுசெய்ய நாட்டுக்கே எனத்துடித்த சிங்கமே/
எல்லாருக்கும் குசும்பு அதிகமாப் போச்சு. அந்த மனுசன சிங்கம் சிங்கம்னு சொல்லி வெறுப்பேத்துறாய்ங்க:))
கதிர் அண்ண்னுக்கு வாழ்த்துகள்.
உள்ளே போவதற்கு ஏதாவது பாஸ் வேணுமோ என்னமோ, தெரியலயே?
கதிருக்குப் பாராட்டுகள்....
உங்க பதிவை வழி மொழிகிறேன். நமக்கெல்லாம் பெருமை.. பூ வோடு சேர்ந்த நான்..
கதிர் அண்ணனுக்குப் பாராட்டுக்கள்!!
வாழ்த்துகள்!
தோழர் கதிருக்கு அன்பின் அரவணைப்புகள் !
அருமை...
உங்களுக்கு ஓட்டு போட்டாச்சு..
தமிளிஷில் என் பதிவும் வந்திருக்கிறது அதற்கும் ஒரு ஓட்டு போடுங்கள்....
http://rkguru.blogspot.com/2010/06/blog-post_20.html
வாழ்த்துகள் கதிர் !!!! மிகவும் பெருமையாக இருக்கிறது.
அன்பு நண்பர் கதிருக்கு வாழ்த்துக்கள்
வாழ்த்துகள் கதிர் !!!!
//வானம்பாடிகள் said...
படத்தப் பாருங்க:))). சூப்பான் புடுங்கின பாப்பா மாதிரி என்னாஆஆஆஆ லுக்கு:))..
//
:)
வாழ்த்துகள் கதிர்..
வெறுமனே வாழ்த்திடல் போதாது... வணக்கங்களும்...
கதிருக்குப் பாராட்டுகள்
வாழ்த்துகள் கதிர்
மிக நெகிழ்ச்சியாக வாழ்த்துகளை ஏற்றுக்கொள்கிறேன்...
வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள்
நாம் நாட்டு மக்களின் கனவு ஆட்சியாளர்
திரு சகாயம் ஐஏஎஸ் அவர்களை
நாமக்கல் மட்டுமேயின்றி, நாட்டு மக்களும்
(குறிப்பாக பதிவர்கள்) அறிய செய்ததில்,
ஈரோடு கதிரின் பங்கினையறிவோம்.
கதிரின் வீச்சு, மாநாட்டில் புத்தொளி பரப்பட்டும்
அங்குள்ள முகஸ்துதி மூடுபனிகளையும் கடந்து.
நண்பர் கதிருக்கு வாழ்த்துகள்..
பாராட்டுக்கள் கதிருக்கு!!!
///சமூகநலப் பணிகளை வெகுவாக ஆதரித்து எழுதுபவர்////////
கதிர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
கதிருக்கு கிடைத்துள்ள இந்த அங்கீகாரம் இன்னும் பல கதிர்களை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை.
கதிர் போல் முழு மூச்சுடன் சமூக மறுமலர்ச்சி பற்றிய பதிவுகள் எழுதுவதில்லை என்றாலும், கதிர் போன்றே ”இணையதளங்களுக்கு சமூக மாற்றத்திற்கு வித்திடும் சக்தி உள்ளதால், புகைப்பழக்கத்தினை ஒழிப்பதற்கான போரில் நானும் குதிக்கிறேன்.வலைப்பூ மூலமாக!” என்று ஒரு இடுகையிட்டேன்.
இதுவரை 1,119 முறை பார்வையிடப்பட்டுள்ளது என்பதில் அகமகிழ்கிறேன்.
ஈரோடு கதிருக்கு வாழ்த்துக்கள்.
அருமையான தமிழ் எழுத்து பழமைபேசி. :)
வாழ்த்துகள் கதிர் அண்ணா.
அன்பு நண்பர் கதிருக்கு வாழ்த்துகள். நண்பர் சஞ்சயும் இன்னொரு அமர்வில் உரையாற்றுகிறார். இன்னும் பலரும் இருக்கக்கூடும். கேட்கவே மகிழ்வாக இருக்கிறது. தொடரட்டும் நம் பணி.
வாழ்த்துகள் கதிர் அண்ணா.
தமிழ் வலைப்பதிவர்களுக்கு கிடைக்கும் முக்கியத்துவம் மகிழ்ச்சி அளிக்கிறது.
வாழ்த்துக்கள் கதிர்
வாழ்த்துக்கள்
அன்பு கதிருக்கு மீண்டும் எனது வாழ்த்துக்கள் ,எனது தளத்திலும் ...
செம்மொழி வாழ்த்துக்கள் !
http://neo-periyarist.blogspot.com/2010/06/blog-post_24.html
Post a Comment