சென்ற சில நாட்களுக்கு முன்னர் சங்கைச் செய்தி(hidden message) எதுவுமன்றி, திறந்த மனதோடு புணரின் புணருமாம் இன்பம் எனும் தலைப்பிட்டு ஒரு இடுகை வெளியிட்டு இருந்தேன்.
அதாவது, புறநிலைத் தாக்கங்களுக்கு ஒருவனது அகநிலையானது எவ்வாறு வெளிப்படுகிறதோ, அதை ஒட்டியே அவனது பிம்பம் உருவாக நேரிடும். இதுதான் இயற்கையின் நியதி.
அதை விடுத்து, பிம்பங்கள் கட்டி எழுப்பப்படுகின்றன. இது சமூகத்தின் அவலம்; ஏற்படும் வழு; அதற்கான விளைவுகள், தொடர்ச்சியின் நீட்சியாகச்(cascade) சென்று சென்று... சென்று கொண்டே இருப்பதன் காரணமாய் மனிதங்கள் மரித்துப் போகிற காட்சியை எவரும் அறிவர்.
பதிவில் இட்ட இடுகைக்கு அவ்வளவு வரவேற்பு அமையப் பெறாதது ஏமாற்றமே! எனினும், அறிஞர்கள் கூடும் இடத்தில் மாபெரும் வரவேற்பு கண்டு, மகிழ்ந்து நெகிழ்ந்து போனேன்.
வரவேற்பும், இதர கருத்துகளும்!
அவற்றுள் சில:
எதிர்ப்பவன் ஏழை என்றால், கோபம் சண்டாளம்!
புறநிலைத் தாக்கமே, அகநிலையின் வெளிப்பாடு!!
உருத்திரமும் இடம் பெற்ற ஒன்பான் சுவைகள்: வீரம், அச்சம், இழிவு, வியப்பு, இன்பம், அவலம், நகை, உருத்திரம் மற்றும் நடுவுநிலை.
வலியவர் உடைத்தால் மண் குடம்; மெலிந்தவர் உடைப்பின் அது பொன் குடமும்; குற்றமும்!!
Moral outrage is a response to the behavior of others.. never one's own!
சங்கை இல்லாதன சங்கையாம்!
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
/சங்கைச் செய்தி(hidden message) எதுவுமன்றி, திறந்த மனதோடு புணரின் புணருமாம் இன்பம் எனும் தலைப்பிட்டு ஒரு இடுகை வெளியிட்டு இருந்தேன்./
இப்புடி ஆரம்பிச்சிட்டு முடிக்கிறப்ப
/சங்கை இல்லாதன சங்கையாம்!/
இப்புடி முடிச்சா ஒரு மனுசன் எப்புடி தூங்கறது. :))
/புறநிலைத் தாக்கமே, அகநிலையின் வெளிப்பாடு!!/
இதுவும் தெளிவாச்சி.
/Moral outrage is a response to the behavior of others.. never one's own!/
கண்கூடாப் பார்த்தமே இதை:))
அன்பின் பழமை பேசி
பல புது சொற்கள் - ( சங்கைச் செய்தி )அறியத் தந்தமை நன்று.
வரவேற்பில்லையே என வருந்த வேண்டாம். சில சமயங்களில் படித்து விட்டு மறு மொழி போடாமல் போவது இயல்பு. பழமை பேசி இதற்கெல்லாம் வருந்த வேண்டாம். அறிஞர்கள் கூடும் (???) இடமான மின் தமிழிலிலும் சென்று பார்த்தேன். அவ்வளவாக வரவேற்பு இல்லை.
பழமை பேசி - கடமையைச் செய் - பலனை எதிர் பாராதே - கீதாசாரம்.
நல்வாழ்த்துகள் பழமை பேசி
நட்புடன் சீனா
//
Moral outrage is a response to the behavior of others.. never one's own!//
true ,agreed
முந்தைய இடுகையில் தாரபுரத்தான் அவர்கள் பின்னுட்டம் தான் என்னுடையதும் . சங்கை, ஆசங்கை என்னும் வார்த்தைகளுக்கு பொருள் கூட இப்போது தான் தெரிந்தது.ஏற்கனவே உங்களிடம் சொல்லியிருக்கிறேன் .என்ன செய்வது சொல்லுங்கள்
வசிஷ்டர் (சீதம்மா) வாயால் ----- பெருமை பட்டு கொள்ளலாம்
கடமையைச் செய்வோம்
@@வானம்பாடிகள்
அண்ணே, வணக்கமும் நன்றியும்!
@@cheena (சீனா)
நன்றிங்க ஐயா!
@@ரோகிணிசிவா
நன்றிங்க!
@@Mahi_Granny
நன்றிங்க!!!
//ஜோதிஜி said...
கடமையைச் செய்வோம்
//
அதேதானுங்க!
Post a Comment