3/22/2010

வினை!


அண்டப் பெருவெளியில்
அறிவியல்க் கண்டுபிடிப்புகளில்
அலையலையாய் மக்கள்
ஆர்ப்பரித்துத் திரிந்த
மற்றுமொரு மாலை நேரம்!

அமெரிக்க தேசத்தில்
இருந்து வந்து
ஊரெல்லாம் உறவுகளெனக்
கர்வமெனும் மமதையில்
ஊர்மீது உலாவந்த தருணமது!!

அரக்கப்பறக்க அங்குமிங்கும்
கல்நெய்யைக் குடித்துக்
கரும்புகையைக் கக்கியபடி
ஓலமிட்டுச் செல்வதையெலாம்
கண்டுங் காணாதபடிக்கு
கடை வாயிலில்
தெருவோரம்
கைக்குழந்தையுடன்
தாயானவள் கர்மமே கண்ணாக!

அருகிவரும் கைவினைகளில்
நிச்சயமாய் இதுவும் ஒன்று;
வெகு நேர்த்தியாய்
இடுக்குகளில் இணுக்குகளை
விட்டுவிட்டுச் செருகி வாங்குவதென,
விரல்கள் நாட்டியநர்த்தனமாட
முடையப்பட்டுப் பிறக்கின்றன
கூடைகள் கண்முன்னே!
கடையில் காற்று மட்டும்
ஒய்யாரமாய்
ஏகாதிபத்திய உலாத்தல்!!

சாமியண்ணே
நிறுத்திட்டுப் போயி
ரெண்டு கூடையா வாங்கிட்டு
மேல நூறு உருவாவும்
குடுத்திட்டு வந்திடுங்க!
சார்,
வீட்ல பெரியமேடம் திட்டுவாங்க சார்!!

27 comments:

Senthil Kumar Vasudevan said...

அவசியமான பதிவு சார்..

ஒருவேளை கூடை வச்ச வீட்டுக்கு நல்லதுன்னு எதாச்சும் கிளப்பிவிட்டா கண்டிப்பா வாங்குவாங்க.. பித்தளை சட்டி வைக்ககாசிருக்கும்போது, இதை வைக்கமுடியாதா?

Karthick ( biopen) said...

கவிதை அருமை. பொட்டி முடைவது என்று என் பாட்டி அம்மா எல்லாம் சொல்ல கேள்வி. ஒரு சில முறை நேரிலும் பார்த்து உள்ளேன்.
எங்கள் ஊர் திருவிழாவுக்கு வந்து எங்கள் முன்னிலையிலே முடைவார்கள்.

அவர்கள் கைகள் தட்சனின் கைகள். நீங்கள் என் நினைவுகளை தூண்டிவிடீர்கள்.

இப்போது கோலி சோடாவை காணோம். இந்த கூடைகளை காணோம்.
அரசியலில் ஒழுக்கத்தை காணோம். நிறைய காணோம்.

http://eluthuvathukarthick.wordpress.com/

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

ம்ம்.. இயற்கையான கைப்பொருள்.. மறுசுழற்சிக்கக்கூடியது.. இவைகளை வரவேற்க வேண்டும்..

மேல நூறு ரூவாயா? ரொம்ப நல்ல மனசுத்தான் போங்க :))

பத்மா said...

மேடத்துக்கும் இதன் அருமை சொல்லித்தரலாமே
நல்ல கவிதை .
பாக்கு தட்டுக்கு வரி விலக்கு போல இதற்கும் வரி விலக்கு தரலாம். கல்யாணம் போது கட்டாயம் உபயோகப்படும் இந்த கூடைகள்

அப்பாவி முரு said...

உண்மை சுடுகின்றது...
(வீட்டில் பெரியமேடத்துக்குத்தான் சத்தென்பது, டிரைவர் அண்ணாச்சிக்கும் தெரிஞ்சிடுச்சா? அவ்வ்வ்வ்வ்)

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

அருமை.

பிரபாகர் said...

நல்லாருக்குங்கண்ணே!

உங்க மனசு தங்கம்ன்னே!

பிரபாகர்.

vasu balaji said...

சென்னையில சில குறிப்பிட்ட இடங்கள்ளதான் இவங்க இருக்காங்க. முகூர்த்த நாள்ள இவங்க சொல்றதுதான் விலை:). ஆனா வெறும் கூடையோட இல்லாம, பூக்குடுவை, பழத்தட்டுன்னு அழகு பொருட்கள் கூடவே விக்கிறதால, வியாபாரம் நல்லாவே ஓடிட்டிருக்கு:)

Unknown said...

எங்க வீட்ல சாணிக்கூடை கூட இரும்புச் சட்டி என்று இப்போதுதான் உணர்கிறேன்.. :-(

Anonymous said...

ஒரு காலத்தில இதுல தான் காய்கறி எல்லாம் வித்துட்டு வருவாங்க.

கயல் said...

அப்போ வாங்கவேயில்ல அப்படித்தானே?

பழமைபேசி said...

@@செந்தில் குமார் வாசுதேவன்

ப்ச், ஒரு அங்கலாப்புதானுங்க செந்தில்!

@@Karthick ( biopen)

அதேதானுங்க!

@@ எல் போர்ட்.. பீ சீரியஸ்..

ஆமாங்க; நன்றி!

@@ padma

மேலிடத்துக்கு சொல்லியாச்சுங்கோ! நன்றி!!

@@ அப்பாவி முரு

அய்ய, எங்கம்மாவைச் சொல்றாருங்க அவரு!

@@ஸ்ரீ

வாங்க ஸ்ரீ!

@@பிரபாகர்

வாங்க பிரபாகர்; நன்றி!!

@@வானம்பாடிகள்

ஆகா பாலாண்ணே! உங்க ஊர்ல அரிய பொருள்; எங்க ஊர்ல அருகுற பொருள் போல!!நல்லது!!!

@@திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்)

ஏன்? ஏன்?? ஏன்???

@@ சின்ன அம்மிணி

ஆமாங்க!

@@கயல்

வாங்கினோம்! வாங்கி, வீட்டுக்குத்தான் கொண்டு வரலை; சொந்தக்காரங்க வேணும்னு கேட்க, அங்கயே வெச்சிட்டு வந்துட்டோம்!

Unknown said...

பெரிய மேடம் இதைப் படிப்பாங்களா??

Unknown said...

//.. ஏன்? ஏன்?? ஏன்??? ..//

அப்படியே போய் எங்க அம்மாகிட்ட கேக்கறேன், அப்புறம் உங்களுக்கு பதில் சொல்லுறேன்..

தாராபுரத்தான் said...

நம்ம ஊரில் அன்னக்கூடை ங்க....

தாராபுரத்தான் said...

நம்ம ஊரில் அன்னக்கூடை ங்க....நிச்சியத்திற்கு உப்பு மாத்திரதுக்கு இதுலேயே சின்ன சைஸ்ங்க.

பழமைபேசி said...

//முகிலன் said...
பெரிய மேடம் இதைப் படிப்பாங்களா??

March 23, 2010 9:19 AM//

படிக்க மாட்டாங்கங்ற தைரியத்துலதான....இஃகிஃகி!

@@திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்)

என்னைச் சிக்க வைக்கக் கூடாது பாருங்க!

@@தாராபுரத்தான்

வாங்ணா, வணக்கம்; அதேதானுங்க!!

நசரேயன் said...

//வீட்ல பெரியமேடம் திட்டுவாங்க சார்!!//

எந்த மேடம் ?

வில்லன் said...

//
கல்நெய்யைக் குடித்துக்
கரும்புகையைக் கக்கியபடி///

அதென்ன "கல்நெய்" பனம்பாலா? வெளக்கம் தேவை....

வில்லன் said...

//சாமியண்ணே
நிறுத்திட்டுப் போயி
ரெண்டு கூடையா வாங்கிட்டு
மேல நூறு உருவாவும்
குடுத்திட்டு வந்திடுங்க!//

இது யாரு சொன்னது.... நம்ம நக்கீரர் அண்ணாச்சியா??????

//
சார்,
வீட்ல பெரியமேடம் திட்டுவாங்க சார்!! //
இது யாரு சொன்னது.... கைத்தடியா......... கைதடிஎல்லாம் வசுருகின்களா?? ரொம்ப பெரிய ஆளு தான் போங்க........

பழமைபேசி said...

// வில்லன் said...
//
கல்நெய்யைக் குடித்துக்
கரும்புகையைக் கக்கியபடி///

அதென்ன "கல்நெய்" பனம்பாலா? வெளக்கம் தேவை....

March 23, 2010 3:14 P//

Petrol

வில்லன் said...

ஒரு காலத்துல எங்க ஊருல கல்யாண வீட்டுல சோறெல்லாம் மண்பானைல பொங்கி, அத வடிச்சு ஓலைபாயில தான் கொட்டுவாங்க.... அத எடுத்துட்டு வர ஓலை பெட்டி தான் உபயோகிப்பாங்க.... இப்ப எல்லாம் அத பாக்கவே முடிவதில்லை........அது போல கரண்டிக்கு செறட்டை ஆப்பை தான் பயன்படுத்துவாங்க..... இப்ப அத முஸியதுல தான் மக்கனும் போல....எல்லாமே அலுமினியம் ஆகி போயிடுச்சு.... இப்ப எனன்ன வாழை இலை போயி வாழை இலை மாதிரி பேப்பர் வந்துடுச்சு......காலத்தின் கொடுமை..... எங்க போயி முடியுமோ தெரியல....

பழமைபேசி said...

//வெளக்கம் தேவை....//

வில்லன் அண்ணாச்சி, இதை ஒருதடவை உரக்கப் படிச்சுக் காமிங்க!!

வில்லன் said...

//பழமைபேசி said...


//வெளக்கம் தேவை....//

வில்லன் அண்ணாச்சி, இதை ஒருதடவை உரக்கப் படிச்சுக் காமிங்க!!//
ரொம்பதான் இருங்க வச்சுக்கறேன்......

பனித்துளி சங்கர் said...

அருமை .
சிறந்த சிந்தனை .
பகிர்வுக்கு நன்றி !

Thekkikattan|தெகா said...

good one, pazhama!

பழமைபேசி said...

@@வில்லன்

படிக்க முடியாதபடிக்கு, அண்ணாச்சி மிரட்டுறாக....அவ்வ்வ்.....

@@ ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪
@@ Thekkikattan|தெகா said...

நன்றிங்க!