வளையவரும் தென்றல்
நெளிந்து செல்லும் நதி
மச்சிதானந்தாவோ
மஞ்சிதாவைக் காண
பவித்ரமாய்ப் பெரியதொரு படகில்!
கண்டுங் காணமுடியாத
தூரத்தில் ஒரு
வண்ணப் பதாகை!
படிக்கத்தான் முயலுகிறார்
ஆனாலும் முடியவில்லை!
படகை அதனருகில் செலுத்த
ஆழமும் போதவில்லை!
எட்டிப்பாய்ந்து
தவளைப் பாய்ச்சலாய்
நீச்சலினூடே அதனருகே!!
பதாகையில் வாசகம் சொல்கிறது,
எச்சரிக்கையாய் இரு!
விழுங்கு முதலைகள் அதிகம் இங்கு!!
Subscribe to:
Post Comments (Atom)
19 comments:
அது சரி.......:)
ஓ. படிக்கறதுக்குதான் அப்புடிப் பாக்கறதா? நான் பகவானைப் பார்க்கிறார்னு நினைச்சுட்டேன். ஆனாலும் அந்த தவளைப்பாய்ச்சல் குசும்பு அனியாயம்:))
ஙே!!!!!!!!!
// எச்சரிக்கையாய் இரு!
விழுங்கு முதலைகள் அதிகம் இங்கு!! //
நல்ல எச்சரிக்கை... தேவையானதும் கூட..
ஆஹா....
அருமையா சொல்லி யிருக்கீங்க...
இது உண்மையா நடந்திருந்தா இன்னும் நல்லாந்திருக்குமுங்க...
கவிதை ரொம்ப நல்லாருக்ங்க. ஆனா இந்த தலைப்புதான் குழப்பமா இருக்குங்க. மச்சிதானந்தாவா இல்லேன்னா குச்சிதானந்தாவாங்க.
அன்பின் மணி
இன்றைய நிலையில் நித்தி -ரஞ்சிதா பற்றிய இடுகையா - ஆர்வக்கோளாறினால் சிக்கிக் கொண்டாரா ? ம்ம்ம்ம்ம்ம்ம்
பழைய நகைச்சுவையை புதிய படிவத்தில் தந்துள்ளீர்கள்.. :))
எச்சரிக்கையா இருந்தா இப்படி மாட்டியிருப்பாரா.
:-))
இதைப்பத்தி எழுதி நீங்களும் பதிவர்னு நிரூபிச்சிட்டீங்க :)
முதலையையே விழுங்கி துப்பியாச்சு போல..:)
:))))))))
ங்கப்ப்ப்ப்பா!!!
மாப்பு எப்படியெல்லாம் ஓசிக்கிறாரு..
மாப்பு பாலண்ணாக்கி போன் போடுங்க.. உங்க இடுகைக்கு ஆப்பு வச்சிருக்கார்!!!
காலையிலிருந்தே தலைப்பு கண்ணை உறுத்துது.போகாதே போகாதே மூளை.போய்த்தான் பாரேன் பாழும் மனசு.பயந்துகிட்டே வந்தேன்.பயத்துக்கு கணினி மேல பலன்:)
சாமி வெகு வேலை பார்க்கிறார் போல இருக்குது...ங்கோ..
//மஞ்சிதாவைக் காண//
கிக்காவே இல்ல ! ஸ்விஞ்சிதா, குஞ்சிதா என ஏதாகிலும் வைத்திருக்கலாம்
# நித்ய கருத்து
குச்சிதானந்தாவா? மச்சிதானந்தாவா? எதுவா இருந்தாலும் ,நல்லாத்தான் இருக்கு. எதிர் ஓட்டுப் போட்ட நண்பர் யாரோ?
அங்கேயே குத்துறது..
Post a Comment