2/25/2010

கிழக்குக்கரை அமெரிக்காவாழ்த் தமிழர் கவனத்திற்கு!

அமெரிக்கத் தலைநகர் வாசிங்டனில், தமிழ் இலக்கிய ஆய்வுக் குழுமமும், வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்தும் சிறப்புக் கூட்டம் பற்றிய இடுகை இது.

இரண்டாம் ஜாமத்துக் கதை

குழந்தைகளைப் பெற்றதற்குப் பிந்தைய
இரவுகளில்
பழகிய நிர்வாணத்திற்கிடையில்
அதிருப்தியுற்றுத் தேடுகிறாய்
என் அழகின் களங்கமின்மையை

பெருத்த உடலும்
பிரசவக் கோடுகள் நிரம்பிய வயிறும்
ரொம்பவும்தான் அருவருப்பூட்டுவதாய்ச்
சொல்கிறாய்
இன்றும் இனியும்
எப்போதும் மாறுவதில்லை எனது உடலென்றும்

நிசப்தத்தின் பள்ளத்தாக்கில்
புதையுண்டிருக்கும் என் குரல்
தனக்குள்ளாகவே முனகிக்கொண்டிருக்கும்
உண்மைதான்

என் உடலைப் போலல்ல
உன்னுடையது
பறைசாற்றிக்கொள்வதில்
வெளிப்படையாக இருப்பதில்

இதற்கு முன்னும்கூட
உன் குழந்தைகள் வேறு எங்கெங்கோ
யார் யாருக்கோ பிறந்திருக்கலாம்
உன்னிடம் தடயங்களில்லை என்பதால்
நீ பெருமைகொள்ளலாம்

நான் என்ன செய்ய?
என் நசிவைப் போலத்தான்
இந்தப் பிரசவக் கோடுகளும்
எளிதில் செப்பனிட முடிவதில்லை
வெட்டி ஒட்டிவிட இவ்வுடல் காகிதமில்லை

உன்னைக் காட்டிலும்
மோசமான துரோகத்தினைப் புரிந்திருக்கிறது
இயற்கை எனக்கு
உன்னிலிருந்துதானே தொடங்கிற்று
எனது தோல்வியின் முதலாவது நிலை

முதல் ஜாமத்தைக் காட்டிலும்
விபதமுமானது
கனவுகள் பெருகும் இரண்டாம் ஜாமம்

சுவரோவியத்தில் அமைதியாக
அமர்ந்திருந்த புலி
இவ்விரண்டாம் ஜாமத்தில்தான்
என் தலைமாட்டிலமர்ந்து
உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கிறது.

-சல்மா
கவிஞர் சல்மா அவர்கள், தாயகத்தில் இருந்து அமெரிக்கா வந்துள்ளார்கள். கவிஞர் அவர்களது கவிநயம் மிகுந்த சொற்பொழிவைக் கேட்கவும், அவருடன் கலந்துரையாடவும் ஒரு இனிய வாய்ப்பு!

நாள்: பிப்ரவரி 28, 2010, ஞாயிற்றுக் கிழமை
நேரம்: மாலை 5 மணி முதல் 7.30 வரையிலும்
இடம்: Potomac Community Centre, 13315 Falls Road, Potomac, MD 20854


நிகழ்ச்சி நிரல்

தமிழ்த்தாய் வாழ்த்து
தலைவர் உரை: ஜான் பெனடிக்ட்,
வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கம்
வரவேற்பு: முனைவர் பாலாஜி சீனிவாசன்

சிறப்புரை: கவிஞர் சல்மா,
தலைவர், சமூகநல வாரியம், தமிழ்நாடு அரசு

கலந்துரையாடல்: முனைவர் சொர்ணம் சங்கர் (நெறியாளுகை)

நன்றி நவிலல்: திருமதி கல்பனா மெய்யப்பன், செயலாளர்,
வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம்.

தகவல் தொடர்பு:

நாஞ்சில் பீற்றர் (301)873 8574, பாலாஜி (443) 995 2657

27 comments:

Jerry Eshananda said...

விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்.

இராகவன் நைஜிரியா said...

விழா இனிதே நடைபெற வாழ்த்துகள்.

Unknown said...

வன்மையாகக் கண்டிக்கிறேன்..

மூணு நாள் முன்னால சொன்னா எப்பிடி பயண ஏற்பாடுகள் செய்யறது?

விழா சிறப்பா நடைபெற வாழ்த்துகள்..

வீடியோ எடுத்தா பகிரவும்.

ஈரோடுவாசி said...

விழா சிறக்க வாழ்த்துகள்....

பழமைபேசி said...

@@ஜெரி ஈசானந்தா.
@@இராகவன் நைஜிரியா
@@ஈரோடுவாசி

நன்றிங்க!

//முகிலன் said...
வன்மையாகக் கண்டிக்கிறேன்..

மூணு நாள் முன்னால சொன்னா எப்பிடி பயண ஏற்பாடுகள் செய்யறது? //

அஃகஃகா... ரொம்பச் சரி! பீற்றர் அய்யா, இதைக் கொஞ்சம் பாருங்க.... தமிழ்க்காவலர் இலக்குவனார் நூற்றாண்டுவிழா நிகழ்ச்சி நிரலையாவது முன்கூட்டியே கொடுங்க!

//விழா சிறப்பா நடைபெற வாழ்த்துகள்..//
நன்றிங்க!

//வீடியோ எடுத்தா பகிரவும்.//
நிச்சயமாங்க முகிலன்!

Unknown said...

வணக்கம் பழமை பேசி , உங்களை நான் ஈரோடு பதிவர் சங்கமத்தில் சந்தித்தேன் . எனது பெயர் தேவராஜ் விட்டலன்.. வலைதளம் http://vittalankavithaigal.blogspot.com/, vittalan@gmail.com

பழமைபேசி said...

//vittalan said...
வணக்கம் பழமை பேசி , உங்களை நான் ஈரோடு பதிவர் சங்கமத்தில் சந்தித்தேன் . //
நண்பா, என்ன சொல்வது? உங்களைப் பற்றி தனி இடுகையே இடலாம் என இருக்கிறேன்!

Thekkikattan|தெகா said...

பழம, சல்மாவின் கவிதை ரொம்ப நிசர்சனத்தைக் கொண்டு விளாசித் தள்ளுதே...!! தகிப்பு தாங்கலையப்பா. பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!

நம்ம எங்க வாஷிங்டன் பக்கமெல்லாம் அதுவும் இத்தனை குறுகிய noticeக்கு முன்னாடி போறது... விழா சிறக்க வாழ்த்துக்கள். கண்டிப்பா ஆடியோவிலாவது நிகழ்ச்சியை கேட்டுவிடுவோம், கொண்டு வந்து சேர்த்திருங்க.

அகல்விளக்கு said...

அம்மையாரின் கவிதை அருமை...

விழா சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா....

விழாவிற்கு பிறகு கண்டிப்பாக காணொளி வலையேற்றம் செய்யவும்.....

பழமைபேசி said...

@@ Thekkikattan|தெகா
@@அகல்விளக்கு

நன்றிங்க, காணொளிகளுக்கு சொல்லி இருக்கோம்!

க ரா said...

அந்த கவிதை அருமை. விழா இனிதே நடைபெற வாழ்த்துக்கள்.

நசரேயன் said...

//
முகிலன் said...
வன்மையாகக் கண்டிக்கிறேன்..

மூணு நாள் முன்னால சொன்னா எப்பிடி பயண ஏற்பாடுகள் செய்யறது?

விழா சிறப்பா நடைபெற வாழ்த்துகள்..

வீடியோ எடுத்தா பகிரவும்.
//

யோவ்.. போக முடியாது என்பதை எப்படி எல்லாம் சொல்லி சமாளிக்கியரு ,கடைசியிலே நானும் அதையே திரும்ப சொல்லிகிறேன்

சுந்தரவடிவேல் said...

//விபதமுமானது//
ரீ

முன்பொருமுறை இரமணிதரன் சல்மாவின் செவ்வியொன்றைப் பூங்காவுக்காகப் பதிவு செய்தது நினைவிருக்கிறது. சிறந்த படைப்பாளி, நிர்வாகி. இயன்றால் செல்லலாம்தான். கிழக்குக் கடற்கரையென்றாலும்....கொஞ்சம் தூரமாகப் போய்விட்டது!

பழமைபேசி said...

//சுந்தரவடிவேல் said...
//விபதமுமானது//
ரீ//

நண்பரே வாங்க, வணக்கம்; எனக்கும் இதே ஐயம் இருந்து விபரீதம் என்றே பதிவிட்டுப் பின் திருத்தினேன்.

*விபதம், (p. 943) [ *vipatam, ] s. A bad road, கெடுவழி; [ex வி et பதம்.] W. p. 774. VIPAT'HA.

selventhiran said...

நேற்றுத்தான் சல்மாவின் கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு கிடைத்த வரவேற்பையும், அதனைத் தொடர்ந்து அவருடைய கதைகளும் மொழிபெயர்க்கப்பட்டு வருவதையும் மெட்ரோ பிளஸில் எழுதி இருந்தார்கள்.விழா இனிதே நிகழ்ந்தேற வாழ்த்துகள்.

vasu balaji said...

அருமையான பகிர்வு. விழாவுக்கு வாழ்த்துகள்.

க.பாலாசி said...

என்னோட வாழ்த்துக்களும் தலைவரே... கலக்கவும்...

PPattian said...

விழா சிறக்க வாழ்த்துகள்

சல்மாவின் கவிதையுடன் எனக்கு உடன்பாடில்லை..

நம் குழந்தையை என்னால் சுமக்க முடியாது
இயற்கை எனக்களித்த குறைபாடு
நீ சுமந்த தடங்கள் என் சொர்க்கம்
இரண்டாம் ஜாமம் முதலினும்

இதுவே இன்று பல ஆண்களின் பார்வையாக இருக்கும்..

மணிப்பயல் said...

தங்கள் தமிழ்ப பணி தொடர வாழ்த்துக்கள்

கபீஷ் said...

சல்மா கவிதை நோ கமெண்ட்ஸ்:-)

//கிழக்குக்கரை அமெரிக்காவாழ்த் தமிழர் கவனத்திற்கு//

விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்

கபீஷ் said...

//தங்கள் தமிழ்ப பணி தொடர வாழ்த்துக்கள்
//
சொல்லீட்டீங்க இல்ல. இப்போ தமிழ்ப் பணின்னு திருத்துவார்.

பழம ஏற்கனவே காங்கிரசு=பேராயம் தமிழ்ப்’படுத்தி’ட்டு இருக்கார்.

(தனித்தமிழ் ஆர்வலர்கள் கும்முவதென்றால் பழமையை கும்மவும்:-)

சசிகுமார் said...

சுவாரஸ்யமான பதிவு. தொடர்ந்து எழுதி மேலும் பல சாதனைகள் புரிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

தாராபுரத்தான் said...

வாழ்ததுக்கள்.விழா பதிவுகளை ஆவலோடு எதிர் பார்த்திருப்போம்.

பழமைபேசி said...

//செல்வேந்திரன் //

ஆமாங்க செல்வேந்திரன்... இந்த செவ்வியும் வாசிச்சுப் பாருங்க... நல்லா இருக்கு....

சல்மாவுடன் நேர்காணல்

பழமைபேசி said...

@@க.இராமசாமி

மிக்க நன்றி!

//நசரேயன் said...
//

யோவ்.. போக முடியாது என்பதை எப்படி எல்லாம் சொல்லி சமாளிக்கியரு ,கடைசியிலே நானும் அதையே திரும்ப சொல்லிகிறேன்
//

தளபதியோட நச்! இஃகிஃகி!!

//வானம்பாடிகள் said...
அருமையான பகிர்வு. விழாவுக்கு வாழ்த்துகள்.
//

நன்றிங்க பாலாண்ணே!

//க.பாலாசி said...
என்னோட வாழ்த்துக்களும் தலைவரே... கலக்கவும்...
//

கலக்குறதா? எதை??

// PPattian : புபட்டியன் said...
விழா சிறக்க வாழ்த்துகள்
//

நன்றி, நன்றி!

//மணிப்பயல் said...
தங்கள் தமிழ்ப பணி தொடர வாழ்த்துக்கள்
//

வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி நண்பா!

//கபீஷ் said...

(தனித்தமிழ் ஆர்வலர்கள் கும்முவதென்றால் பழமையை கும்மவும்:-)
//

என்னா கொல வெறி?!

//சசிகுமார் said...
சுவாரஸ்யமான பதிவு.
//

நன்றி! நிச்சயமாங்க!!

//தாராபுரத்தான் //

அண்ணா, பெங்களூர்ல இருந்து வந்தாச்சுதுங்ளா?

எம்.எம்.அப்துல்லா said...

விழா சிறக்க வாழ்த்துகள்.

பழமைபேசி said...

//எம்.எம்.அப்துல்லா said...
விழா சிறக்க வாழ்த்துகள்.
//

அண்ணாச்சி, விழா சிறப்பாகவே நடந்தது... படங்கள் வெளியிடப்பட்டு உள்ளது! நன்றி!!