டில்லியில் தமிழன்னை!
தமிழ்நாடு இல்லத்தில்!
மக்களே, வணக்கம்! மனநிறைவோடு தாயகம் வந்து சேர்ந்தேன். தொலைபேசியில் அழைத்த அன்பர்களுக்கு நன்றி; நெடுநேரம் அளவளாவ இயலாமைக்கு பொறுத்துக் கொள்ளவும்.
வந்து சேர்ந்த உடனேயே டில்லி சென்றாக வேண்டிய அலுவல். அங்கே தமிழக அரசின் விருந்தினராக தமிழ்நாடு இல்லத்தில் தங்கி இருந்த அனுபவம் மற்றும் மேலதிக நிழல்படங்களை வாய்ப்புக் கிட்டும் போது இடுகையாக இட வேண்டும்.
மூன்றாண்டுகளுக்கு முன்னர் பூனா நகருக்கு வந்திருந்தேன். அதன் பின்னர் தற்போதுதான் வங்து இருக்கிறேன். ஆக மொத்தம் ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னரே எமது கோவை வாசம்.
கோவையிலே வளர்ச்சி என்பதை விட, டில்லியிலே தமிழின், தமிழனின் ஆட்சி வெகுவாக ஓங்கி இருப்பதைக் காண முடிந்தது. மிக்க மகிழ்ச்சி.
19 comments:
// டில்லியிலே தமிழின், தமிழனின் ஆட்சி வெகுவாக ஓங்கி இருப்பதைக் காண முடிந்தது//
அப்படியா....சந்தோஷமான விடயம்.
வருக...வருக...
மாப்பு....
நலமாய் வந்து சேர்ந்துட்டீங்களா....
உங்க அலைபேசி எண் கொடுங்க
துள்ளுந்து... புது வார்த்தை உங்களிடமிருந்து... அனுபவங்களை நிறைய எழுதுங்கள்
பிரபாகர்.
//டில்லியிலே தமிழின், தமிழனின் ஆட்சி வெகுவாக ஓங்கி இருப்பதைக் காண முடிந்தது//
இது எப்ப?
நானு எங்கய்யாமாருங்க கூட தொலைபேசியில பேசணும்னு முயற்சிக்கும் போதெல்லாம் வேணுமுன்னே ஆப்கோ இந்தி நஹி மாலும்?பான். அப்புறம் தமிழ்ல யோவ். உங்கய்யனுக்கு கனக்சன போடுங்கறது. அவனுக்கு கனக்சன் மட்டும் புரியும். சாப். மீட்டிங் மேம்பான். இல்லீன்னா ஏக் மினிட். =))
வாங்க....வாங்க.....வணக்கம்....
தங்கத் தமிழ்நாடு வரவேற்கிறது.
ஆமா.....சும்மா குழப்பிவிடத்தான் என்று ஒரு படத்தப் போட்டு குழப்பி விட்டுட்டு இங்க எப்படி உண்மையான படம்.....?
தலைமுடி கொஞ்சம் அதிகம் வளர்ந்து விட்டதோ.....?
என்ன ரகசியமய்யா.......?எனக்கும் கொஞ்சம் சொல்லுங்கள்
அட....கருப்புக் குல்லாய்...
நான் கூட என்னமோன்னு நினைச்சன்...
//கோவையிலே வளர்ச்சி என்பதை விட, டில்லியிலே தமிழின், தமிழனின் ஆட்சி வெகுவாக ஓங்கி இருப்பதைக் காண முடிந்தது//
ரெம்ப சந்தோசம் டெல்லியை தமிழ் நாட்டோட இணைக்க சொல்லன்னுமுன்னே
இந்தியா போயாச்சா... விடுமுறை இனிதாக இருக்க வாழ்த்துகள்.
கோவையிலே வளர்ச்சி என்பதை விட, டில்லியிலே தமிழின், தமிழனின் ஆட்சி வெகுவாக ஓங்கி இருப்பதைக் காண முடிந்தது//
கம்னு டெல்லிய பிரிச்சு தமிழ்நாட்டோட சேர்க்கச்சொல்லி டெல்லியில்யே உண்ணாவிரதம் இருங்க. பிரிக்கிறது நெறைய மக்கள் இருக்காங்க. நீங்க இதை சேர்த்துவெச்சுட்டு வாங்க புண்ணியமா போவும்.
ஊரு போயாச்சுல்லே, ஊரு, உலகம், சனம் எல்லாத்தையும் விசாரிச்சதா சொல்லுங்க.
விடுமுறை பயனுள்ளதாய் அமைய வாழ்த்துகள்.
அன்புள்ள மணி,
வாங்க, பழமைபேசலாம்.
நல்வரவு அண்ணே !!
//அங்கே தமிழக அரசின் விருந்தினராக தமிழ்நாடு இல்லத்தில் தங்கி இருந்த அனுபவம்//
பழம தமிழக அரசின் விருந்தினராக டில்லி போனீங்களா? வாழ்த்துகள். அது பற்றிய இடுகை கண்டிப்பா வேணும்.
//டில்லியிலே தமிழின், தமிழனின் ஆட்சி வெகுவாக ஓங்கி இருப்பதைக் காண முடிந்தது.//
எனக்கென்னமோ அப்படி தெரியலை. நீங்க சொல்றீங்க அப்படிங்கிறதுக்காக இந்த கருத்தை அரை மனசோட ஏத்துக்கறேன்.
//கோவையிலே வளர்ச்சி என்பதை விட//
ஏகப்பட்ட வளர்ச்சி இருக்கு. நிலம், வீடு விலை ஆகாயத்துக்கு போயிட்டுது.
உங்கள் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகள். எங்களுக்கு பல இடுகைகள் காத்துக்கிட்டிருக்கு அப்படின்னு நினைக்கறப்பவே குசியா இருக்கு.
//கோவையிலே வளர்ச்சி என்பதை விட, டில்லியிலே தமிழின், தமிழனின் ஆட்சி வெகுவாக ஓங்கி இருப்பதைக் காண முடிந்தது. மிக்க மகிழ்ச்சி. //
மகிழ்ச்சி
வாங்க தம்பி வாங்க,,
உள்ளேன் அய்யா
எங்களுக்கே கிடைக்காத
எங்க ஊரு போட்டோவை
டெல்லிலே இருந்துட்டு
போட்டுத்தள்ளறீங்க.
அருமை போங்க.
நாளைக்கு பார்த்து
நாலுபழமெ பேசுவமுங்கோ
நன்றி, வாழ்க வளமுடன்.
Post a Comment