மக்களே, வணக்கம்! நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்களோடு எழுத்தாடுவதில் உவகையுறுகிறேன். விரைவில் விடுப்பில் செல்லவிருப்பதால் கூடுதல் பணிச்சுமை; நீண்ட நெடிய நேர அலுவலுக்குப் பின்னர் அறைக்கு வந்து, மேலதிகமாகக் கணனியைப் பார்த்தால் ஒரு விதமான சலிப்பும் வெறுப்புமே மேலிடுகிறது. எனவேதான் எழுத்தாடுவதில் இந்தத் தற்காலிகமான தொய்வு!
வார ஈறுக்கு இருப்பிடம் திரும்பி, வலையில் நண்பர்களோடு மடலாட, சிட்டாடலாமென்றால் அதற்கும் காலதேவன் கைநீட்டி வேறு திசையைக் காண்பிக்கிறான். ஆம், எங்கள் நகரில் இந்த வாரஈறில் தீப ஒளி விழாக் கொண்டாட்டம் நடைபெற உள்ளது. அவ்விழாவில் இடம்பெறும் நடனத்தில் அடியேனையும் கோர்த்துவிட்டு வேடிக்கை பார்க்கிறார்கள் சிலர். எனவே அதற்கான ஒத்திகை! இப்படியாக அன்றாட அலுவல்கள் திசைமாறிப் பயணித்துக் கொண்டு இருக்கிறது மக்களே!!
அந்த ஒத்திகையினூடே எம்மை வெறுப்பேற்றும் பொருட்டு, உடன் நடனமாட இருக்கும் சிறுவன் ஒருவனை ஏவிவிட்டு வேடிக்கை பார்த்தனர் அந்தச் சிலர். அந்த இளம்பாலகனும் நமதருகே வந்து, Pazamai Uncle, what is a Thamizh word for Pizza? என்றான். எமக்கு எய்தவர் யாரென உடனே புரிந்து விட்டது. பிள்ளாய் நீ ஆடும் போது கழுத்தில் எதையோ வைத்து ஆடுகிறாயே, அது என்ன என வினவினோம் நாம். காவடி என்று பதிலுரைத்தான் அம்பானவன். சரி, அதற்கு ஆங்கிலத்தில் என்ன என்று உம்மை ஏவிவிட்டோரிடம் கேட்டுச் சொல்ல இயலுமா என்றேன்? அம்பும் மாயமானது, கூடவே நாண் பூட்டிச் செலுத்தியோரும்!!
’க்’ வெச்சிப் பேசுறான் அவன்! எதுக்கும் ஒரு ‘க்’கு வெச்சு இழுப்பியே நீ!! இப்படி எல்லாம் ஒரு ’க்’ வைத்துப் பேசுவதை நீங்களும் கண்டிருப்பார்களாய் இருக்கும். அது என்ன ‘க்’ வைத்துப் பேசுவது?
ஒரு சாரார் சொல்கிறார்கள், ‘க்’ எனும் மெய்யெழுத்து இறுதியில் இடம்பெற்று முற்றுப் பெறாது. ஒருவேளை அது இடம் பெறுமேயாயின், மேற்கொண்டு ஏதோவொன்றுக்கு அங்கே இடம் இருக்கிறது என்றாகிவிடும், ஒரு சொல்லை, மற்றொன்றோடு சேர்க்க இது பாவிக்கப்படும் என்ற வகையில்! Conjunction!! எனவேதான், ஒன்றைச் சொல்லி மற்றொன்றைச் சொல்லாமல் தொக்கி நிற்கும்படியாகப் பேசும் வாடிக்கையைக் குறிக்கும் பொருட்டு, ‘க்’ வைத்துப் பேசுவது எனும் வழக்குத் தொடர் உருவானது.
மறுசாரார் சொல்வதென்ன? இல்லை, இல்லை, அது இக்கு வைத்துப் பேசுவது. இக்கு என்றால், நிச்சயமற்ற, எதிர்மறை நிகழ்வுகளுக்கான தகமைக்கு வாய்ப்பு இருப்பது. இதை Risk என்பர் ஆங்கிலத்தில். அத்தகைய இக்கு ஒன்றை உள் வைத்துப் பேசுவதுதான், இந்த க்கு வெச்சிப் பேசுறது என்கிறார்கள்.
எமக்கு இனி, அடுத்த இடுகைக்கான காலநேரம் எப்போது வாய்க்கிறதோ தெரியவில்லை; அது வரையிலும் உங்களை எல்லாம் நல்ல பொழுதுகள் ஆரத்தழுவி, இனிமையானது பூஞ்சாமரம் வீசட்டுமாக!!
Subscribe to:
Post Comments (Atom)
20 comments:
பழமையண்ணா, தங்கள் நடனத்தை காணொளியாக்கினால் அன்பர்கள் அனைவரும் பார்க்க முடியும். "இக்கு" வைத்துப் பேசுவதற்கான விளக்கம் அழகு :)
'க்' வச்சுத்தானே இப்ப பேசறீங்க.....தொடருங்கள்....
வாழ்த்துக்கள்
ஆமாம் பழமை. அவன் சரியான இக்கு புடிச்சவன்னு திட்டுறதுண்டு. அம்பை வம்பாக்கி உட்டுட்டீங்க. அது இனிமே குடைஞ்சிகிட்டே இருக்கும். =))
பேச்சுவாக்கில் நிறைய உபயோகப்படுத்தும் வார்த்தைதான். இனிமேல் தான் பொருள் புரிந்து பேசவேண்டும்... நன்றிங்க...
பிரபாகர்.
அப்படி இப்படி ஏதோ சொல்லவந்து இக்கு வச்சிட்டு போயிட்டீரு. இனி எப்ப வந்து அந்த இக்கு பிரச்சினையை தீர்க்க போறீரோ தெரியலெ. சரியான இக்காக இருப்பீர் போல...
அது சரி என்னிக்கி ஊரில் சந்திக்கலாம்னு சொல்லுங்க (தனி மடல் அனுப்பவும்)
உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்.
அண்ணே நன்றி..
பழமை ,கண்டிப்பாக உங்கள் நடனத்தின் காணொளி வேண்டும்.ஏதாவது சொல்லித் தவிர்த்துவிடாதீர்கள்.
@@ ச.செந்தில்வேலன்(09021262991581433028)
வாங்க தம்பி, வணக்கம்!
@@ஆரூரன் விசுவநாதன்
இஃகிஃகி!
@@வானம்பாடிகள்
பாலாண்ணே, வாங்க, வணக்கம்!
@@பிரபாகர்
நன்றிங்க பிரபாகர்!
@@மஞ்சூர் ராசா
மடல் அனுப்புகிறேனுங்க அண்ணல்!
//அக்பர் said...
உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்.
//
நன்றிங்க!
// இராகவன் நைஜிரியா said...
அண்ணே நன்றி..
//
ஆனா, என்னோட கேள்விக்கு பதில்? நைஜிரியாவா, அல்லது நைஜீரியாவா??
@@ ஸ்ரீ
ஆகா, வாங்க மதுரைச் செல்வரே! இப்பிடி மாட்டிவுடுறீங்களே?
செரிங்க மாப்பு... பீசா-வுக்கு தமிழில் என்னனு சொல்லாமையே போயிட்டீங்களே...
நடனத்தை கண்டிப்பா போடுங்க
அன்பின் ப்ழமை பேசி - காணொளி காணக் காத்திருப்பவர்களில் நானும் ஒருவன் - நடனமாடும் அழகு காண ஆவல். சிறுவன் தானே ! விட்டுத்தள்ளுங்கள் - அம்பும் எய்தவர்களும் திருந்துவார்கள்.
இக்கு வைத்துப் பேசுவது பற்றி ஒரு இடுகை - நன்று நன்று - நல்வாழ்த்துகள்
'க்' வைப்பது என்பது பற்றி நான் புதிதாகத் தெரிந்து கொண்டேன். நன்றி. ஒற்று மிகுவது போன்ற ஒரு இலக்கணப் போக்கு, ஒருவரின் குணாதிசயத்திற்கு உவமையாகக் கூறப்படுவது சில அடிப்படை இலக்கண விதிகளை எப்படி எல்லோரும் உள்வாங்கியிருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.
தற்போது செய்தித்தாள்களிலும் சுவரொட்டி விளம்பரங்களிலும் மலிந்து கிடக்கும் ஒற்றுப் பிழைகளைக் காணும் போது நீங்கள் தந்த இவ்விவரம் நம்பிக்கை ஊட்டுகிறது.
//மக்களே, வணக்கம்! நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்களோடு எழுத்தாடுவதில் உவகையுறுகிறேன். விரைவில் விடுப்பில் செல்லவிருப்பதால் கூடுதல் பணிச்சுமை; நீண்ட நெடிய நேர அலுவலுக்குப் பின்னர் அறைக்கு வந்து, மேலதிகமாகக் கணனியைப் பார்த்தால் ஒரு விதமான சலிப்பும் வெறுப்புமே மேலிடுகிறது. எனவேதான் எழுத்தாடுவதில் இந்தத் தற்காலிகமான தொய்வு!//
வாங்க பழம வாங்க.....
//எமக்கு இனி, அடுத்த இடுகைக்கான காலநேரம் எப்போது வாய்க்கிறதோ தெரியவில்லை; அது வரையிலும் உங்களை எல்லாம் நல்ல பொழுதுகள் ஆரத்தழுவி, இனிமையானது பூஞ்சாமரம் வீசட்டுமாக!! //
வரும்வரை காத்திருப்போம் நண்பா...
//
வாரஈறில் தீப ஒளி விழாக் கொண்டாட்டம் நடைபெற உள்ளது. அவ்விழாவில் இடம்பெறும் நடனத்தில் அடியேனையும் கோர்த்துவிட்டு வேடிக்கை பார்க்கிறார்கள் சிலர்.
//
சரி, சரி, வீடியோவை யூட்யூப்ல போடுங்கப்பு....நல்லா சிரிச்சி நெம்ப நாளாச்சி...:0)))
நாங்க காத்து இருக்கோம்
Risk என்பதற்கு இக்கு என்று பொருள் என்று இராம.கி ஐயா பதிவில் படித்தேன். இப்பதான் தெரியுது நம்மூர்ல இக்குன்னு சொல்லறது.
ரசித்தேன் :)
பழமை, இப்பதான் தெரியுது நீங்க ஏன் அக்கு 'ஃ' வச்சி இஃகி... இஃகி போடுறீங்கன்னு. நாங்கெல்லாம் 'க்'-தான்... ரிஸ்க ரஸ்கா பாவிக்கிறவிய்ங்க... எப்பூடி?
pizza = வார்ப்பு தோசை
நாங்க யாரு
Post a Comment