//பட்டிக்காட்டான்.. said...
//.. நொம்பலத்துக்கு ..//
இதென்னன்னு கொஞ்சம் வெளக்கமா சொன்னீங்கன்னா ஆகும்..
அப்புறம் அப்படியே நாளுக்கு ரண்டு பழுதில்லைனா என்னானும் சொல்லிப்போடுங்க..
//
நொம்பலம்னா துன்பம். அன்பே சிவம் பாடல்கள் கேட்டது இல்லை போலிருக்கு? ஆனா, அஞ்சுக்கு ரெண்டு பழுதில்லைங்றதை இப்படி மாத்திப் போட்டியளே? அவ்வ்வ்........
சரி, அதை அலசித் தொவச்சிக் காயப் போடலாம் வாங்க! நல்லாக் கவனமாப் படிக்கோணும், ஏன்னா நாம இப்ப பேசப் போறது வரவு செலவு சமாச்சாரம். நல்லா நிமுந்து உக்காருங்க மொதல்ல! செரி, இப்ப மேல படிக்கலாம் வாங்க!!
எந்த ஒரு தொழில் நடத்தினாலும், அதுக்கு அடிப்படை அஞ்சு தொகைன்னு கிராமத்துல சொல்லக் கூடிய ஐந்தொகை! அதென்ன அந்த ஐந்தொகை? விழுமுதல்(முதலீடு), வரவு, செலவு, இருப்பு, அஞ்சாவதா ஆதாயம். இந்த அஞ்சுல விரயத்துக்கு இடங்கிடையாது! இந்த பின்னணியில ஒரு நிகழ்வைப் பார்க்கலாம் நாம இப்ப!
எதோ ஒரு தொழில் செய்யுற கந்தப்பன், அன்னைக்கி உள்ளூர்லயே நடந்த தெரட்டி ஒன்னுக்குப் போறாரு. போன எடத்துல,
“என்றா கந்தப்பா, ஊட்ல எல்லாரும் செளக்கீந்தானோ?”
“எல்லாரும் செஞ்சேரிமலை மந்தரகிரி ஆண்டவன் புண்ணியத்துல கை காலு சொகந்தானுங் சகலை! நம்மூட்லீங்கோ?!”
“ம்...ம்... எதோ போய்ட்டு இருக்கு! அப்பறம், பாடு பழமயெல்லாம் எப்பிடிப் போயிட்டு இருக்கூ?”
“இது வரைக்கும் அஞ்சுக்கு ரெண்டு பழுதில்லாமப் போயிட்டு இருக்குங் சகலை! நாளமின்னா எப்பிடின்னு தெரீலீங்!”
இப்பிடி எல்லாந்தானுங்க, இந்த சொலவடைய நாட்டுப் புறத்துல பொழங்குறது! அதாவது மேல சொன்ன, முதலீடு, வரவு, செலவு, இருப்பு, ஆதாயம், இந்த அஞ்சுல வரவும் இருப்பும் பழுதாகாத வரையிலும் தொழிலுக்கு பாதிப்பு கிடையாது, ஆதாயம் இல்லாவிட்டாலுங் கூட!
இந்த ரெண்டும் செரியா இருக்குற வரையிலும் வண்டி ஓடும். ஆக, இலாபமோ நட்டமோ, வண்டி ஓடக் கூடிய வகையில தொழில் நடந்துட்டு இருக்குன்னு சொல்றதுதான், அஞ்சுக்கு ரெண்டு பழுதில்லை! என்னாவொரு சூட்சுமம்? ஒரு சொலவடையிலயே எல்லாத்தையும் சுருக்கி வெச்சிட்டாங்களே பெரியவங்க?!
நல்லா யோசிச்சு பாருங்க, இந்த இரண்டும் இல்லாம எப்பவோ ஒரு நாள் பெரும் இலாபம் தரக்கூடிய தொழிலானது ஒரு சீரா நடக்குமா? அமெரிக்காவுல இந்த சூட்சுமம் செரியாக் கடைபுடிக்காமக் கோட்டை வுட்டுட்டாங்களேப்பா?
நான் இருக்குற ஊரான, சார்லட்ல இருந்த Wachovia வங்கியின் நெலமை அதான?! அவ்ங்க பெருசா ஒன்னும் நட்டப்படலை, ஆனா வரவு குறைஞ்சி, அன்றாடப் பராமரிப்புக்கு போதிய இருப்பு இல்லாமப் போனதுதான வீழ்ச்சிக்கு காரணம்?! ஒரு சில நாட்கள் நடத்தக்கூடிய இருப்பு இருந்திருந்தாலே, அது பிழைச்சிருக்கும்னு பொருளாதாரப் பட்சிகள் சொல்லுது!
சரி...சரி, அஞ்சுல ரெண்டு பழுதில்லாம இருக்கான்னு போயிப் பாருங்க போங்க! ஊர் ஞாயத்தைக் கேக்குறதுன்னா வந்திருவீங்களே? ஆடாத கூத்து ஆடினாலும், காரியத்துல கண்ணா இருக்கணுமா? இல்லியா??
-------------------------------------
வணக்கங்கள்.
ஆன்மீக உலகில் திருமுறைகளைப் பற்றி குறிப்பிடும்போது அஞ்செழுத்து மந்திரம் (ந ம சி வா ய) செபிக்காவிட்டாலும் இரண்டெழுத்து மந்திரம் (சிவ) செபித்தால் நல்லது என்று குறிப்பதற்கு ”அஞ்சுக்கு ரெண்டு பழுதில்லை” என்று சொல்வதாக சமீபத்தில் ஒரு சொற்பொழிவில் கேட்டேன்.
அன்புடன், குமார்(சிங்கை)
16 comments:
"இனி அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்வதோடு, இந்த பிரிவில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரிக்கும். ஒன்றாம் வகுப்பிலேயே மாணவர்கள் ஆங்கிலம் படிக்க ஆரம்பிப்பதால் தமிழ் மீதான மோகம் குறையும்!"
http://www.dinamalar.com/new/fpnnewsdetail.asp?news_id=5151
தமிழ்நாட்டுல தமிழ் மீதான மோகம் பொங்கி வழியுது... இனிக் குறைஞ்சிடுமாம்!
என்னா விசமத்தனம்? என்னா விசமத்தனம்??
ஓ இதுக்கு பின்னால் இம்புட்டு விவரம் இருக்கா?
வணக்கம் நண்பா,.. வழக்கம் போல சிறப்பாக சொல்லியுள்ளீர்கள்
வழக்கம் போல் தெரியாத விஷயங்களை தூய தமிழில் தெளிய வைக்கிறீர்கள்..
/"இனி அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்வதோடு, இந்த பிரிவில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரிக்கும்./
இது ஒண்ணு உருப்படியா இருந்திச்சி. இங்கயும் இப்படின்னா வாத்திமாரு டியூசன்னு ஆறு பழுது இல்லாம இருந்துப்பாங்க.
நல்ல விளக்கம். நன்றி பழமை
நல்ல விளக்கம் பாஸ்..
அஞ்சுக்கு ரெண்டு பழுதில்லாமப் பார்க்கிறதில நம்மூருக்காரங்க எப்பவுமே சூட்டிப்புங்க... அதுனாலதான் அமெரிக்கா ஆடுனப்போகூட நம்மாளுக தெகிரியமா இருந்தாங்க
//இனி அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்வதோடு, இந்த பிரிவில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரிக்கும். ஒன்றாம் வகுப்பிலேயே மாணவர்கள் ஆங்கிலம் படிக்க ஆரம்பிப்பதால் தமிழ் மீதான மோகம் குறையும்!"
http://www.dinamalar.com/new/fpnnewsdetail.asp?news_id=5151
தமிழ்நாட்டுல தமிழ் மீதான மோகம் பொங்கி வழியுது... இனிக் குறைஞ்சிடுமாம்!
என்னா விசமத்தனம்? என்னா விசமத்தனம்??
//
அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஆங்கில வழிக்கல்வி என்று
வெளியிடப்பட்டுள்ள செய்தியை நான் முற்றிலுமாக மறுக்கிறேன்.
--கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு.
@@பிரியமுடன் பிரபு
வாங்க பிரபு!
@@ஆ.ஞானசேகரன்
ஞானியார், எங்க ஆளே காணோம்?
@@பிரியமுடன்...வசந்த்
நன்றிங்க வசந்த்!
@@வானம்பாடிகள்
நன்றிங்க பாலாண்ணே!
//தீப்பெட்டி said...
நல்ல விளக்கம் பாஸ்..
//
தீப்பெட்டியார், எங்க காணாமப் போயிட்டீங்க?
@@கதிர் - ஈரோடு
நீங்க சொன்னாச் செரிங் மாப்பு!
வழக்கம் போல அருமை ! நம்ம மக்களுடைய என்ன ஒரு சொல் ஆளுமையை அறிந்துகொள்ளும்போது வியப்பே மிஞ்சுகிறது.
//ஆடாத கூத்து ஆடினாலும், காரியத்துல கண்ணா// இதைத்தான் நம்ப ஆளுங்க ஆரியத் கூத்தாடினாலும் அப்படீன்னு மாத்திப்போட்டாங்களா?
தம்பி மணி
எந்தத் தொழிலை எடுத்தாலும், நீங்கள்
கூறியிருக்கும் ஐந்தும் அடிப்ப்டை, ஆனால் ஒன்றுக்குள் ஒன்று பிண்ணிபிணைந்த பகுதிகளாகும்.
ஏதாவது இரண்டு கூறுகள் நன்றாக இருந்தால் அவைகள் மற்றவைகளை கவனித்துக் கொள்ளும். எடுத்துக்காட்டாக வரவு வந்தாலே போதும் அது மற்றவைகளை நிலைப்ப்டுத்தி விடும்.
அருமையான, சிற்ப்பான தகவல்.
Source, Resource என்ற இரண்டு சொற்களின் விரிவுயமைப்பில், வணிகயிலின் முழுகணக்கு வழ்க்குகளும் அடங்கியுள்ளது.
நன்றி
அன்புடன் அண்ணன்
நாஞ்சில் பீற்றர்.
யாரு அந்த அஞ்சு
//ஆன்மீக உலகில் திருமுறைகளைப் பற்றி குறிப்பிடும்போது அஞ்செழுத்து மந்திரம் (ந ம சி வா ய) செபிக்காவிட்டாலும் இரண்டெழுத்து மந்திரம் (சிவ) செபித்தால் நல்லது என்று குறிப்பதற்கு ”அஞ்சுக்கு ரெண்டு பழுதில்லை” என்று சொல்வதாக சமீபத்தில் ஒரு சொற்பொழிவில் கேட்டேன். அன்புடன், குமார்(சிங்கை)//
அருமை பழமை!!!
அருமை குமார்(சிங்கை).
அஷ்வின் ஜி
www.vedantavaibhavam.blogspot.com
கோவை தமிழில் எழுதியிருப்பது படிக்க பிடித்திருந்தது. மிக நல்ல பதிவு.
ரேகா ராகவன்.
@@தமிழ் நாடன்
நன்றிங்க தமிழ் நாடன்!
@@naanjil
மேலதிகத் தகவலுக்கு மிக்க நன்றி அண்ணா!
//நசரேயன் said...
யாரு அந்த அஞ்சு
//
எந்த பிஞ்சு?
@@Ashwinji
நன்றிங்க Ashwinji!!!
//KALYANARAMAN RAGHAVAN said...
கோவை தமிழில் எழுதியிருப்பது படிக்க பிடித்திருந்தது. மிக நல்ல பதிவு.
ரேகா ராகவன்.
//
நன்றிங்க ஐயா!
இதுக்கு தான் அண்ணங்கிட்ட செரியா பேசொனும்கிறது..
//.. அதை அலசித் தொவச்சிக் காயப் போடலாம் வாங்க! ..//
என்ன இப்படி தொவச்சுப் போட்டிங்களே.. :-(
Post a Comment