8/12/2009

நீட்டி மொழக்காதடா, டேய்!

பாருங்க மக்களே, சிலபல நேரங்கள்ல நாம உச்சரிக்கிற விதம் ஒரு சொல்லுக்குண்டான அர்த்தத்தையே மாத்திடும். இயல்பா, ‘வீட்டுக்கு போயிட்டு வர்ற போல இருக்கு?’ன்னு கேட்டா, அது நேரிடையான கேள்வி. அதே, ‘என்ன, வீஈஈஈட்டுக்குப் போயிட்டு வர்ற போலிருக்கு?’ன்னு நீட்டி மொழக்கும் போது, அவன் யாரோ, போகக் கூடாதவங்க அல்லது அந்த வீட்டுக்குப் போயிட்டு வர்றதைக் கேட்டது போல ஆயிடும். அதாவது சொல்ல வந்ததை உச்சரிப்புல நீட்டி, முழக்குதல்.

அதே நேரத்துல ஒருத்தர் உங்க வீட்டுக்கு சாயுங்காலம் வரலாமுன்னு இருக்கேன். ஊர்த் தலைவாசல்ல இறங்கி, எப்படி வர்றதுன்னு கேட்டவுடனே, அவரு வீட்டுக்கு வர விரும்பாத நாம,


‘ஓ அதா, ரொம்ப சுலுவு. அங்க இறங்கி, வலது பக்கமாப் போயிடாதீங்க. அல்லாரும் அதே தப்பைத்தான் செய்யுறது. அதனால யாருகிட்டவும் கேக்காமக் கொள்ளாம நேரா வந்திட்டு இருங்க. வரும் போது ஒரு வேப்ப மரம் இருக்கும். அந்த இடத்துல இடது பக்கம் திரும்புனா, திரும்பவும் தலைவாசலுக்கே போயிடுவீங்க. அதனால அங்க திரும்பிடாதீங்க என்ன?...’

இப்படி அளவுக்கு அதிகமான தகவல்களைக் கொடுத்து நீட்டி முழக்குறது அடுத்த இரகம். வர்ற யோசனையில இருந்த அந்த ஆள், தலை தெறிக்கக் காத தூரம் ஓடிடுவாரு. அதான நமக்கு வேணும்?! இஃகிஃகி!!

இப்படி நீட்டி முழக்கினாவே விவகாரந்தாங்க. இப்படித்தாங்க நான் இலட்சுமி நாயக்கன் பாளையத்துல இருக்குற பள்ளியில படிச்சுட்டு இருந்தேன். அப்ப ஒன்பது, பத்தாம் வகுப்புத் தேர்வுல ஆங்கிலப் பாடத்துல கேள்வி வரும்.


Describe briefly about Gandhi அப்படின்னு இருக்கும். அதைப் படிச்ச உடனே, வகுப்புல வாத்தியார் ’Describe ப்ரீஈஈஈஇஃப்லி’ன்னு நீட்டி முழக்குனது ஞாவகத்துக்கு வரும். நாமளும் வெச்சு ஒரு பக்கத்துக்கு வெளுத்து வாங்குவம்ல?!

அப்படித்தாங்க, மாதிரித் தேர்வுல வெச்சு வெளுத்து வாங்கிட்டு இருந்தேன். மேற்பார்வையாளரா இருந்த தமிழ் வாத்தி வந்து, பக்கத்துல நின்னு பார்த்தாரு. பார்த்துட்டு காதைப் பிடிச்சித் திருகுனாரு.

’என்னடா இது? உம்பாட்டுக்கு எழுதிட்டே இருக்க?’

‘ஐயா, ப்ரீஈஈஈஈஈஈஃபா எழுதச் சொல்லி இருக்குங்க ஐயா, அதான்!’

’அடேய், ப்ரீரீரீஃப்கேசுன்னு சொல்லிச் சொல்றாங்க. அதுக்காக பெரிய பொட்டி எடுத்துட்டு போவீயளோ?’ன்னு நெல்லைத் தமிழ்ல கேட்டாரு.

அப்பத்தாங்க இந்த சொல்லுக்கு அர்த்தம் வெளங்குச்சு. அது போல, அதீதம்ங்ற சொல் வடமொழியில என்ன பொருள் தரும்ன்னு எனக்குத் தெரியாது. ஆனா, இந்த சொல் தமிழ்லயும் இருக்கு. தேவாரம், திருவாசகம்ன்னு நிறைய பண்டைய இலக்கியங்கள்ல நீங்க பார்க்கலாம்.


அதாவது, அதீஈஈஈதம்ங்றதால இது, மிகையான, நிறையங்ற பொருள்ல நடைமுறையில இருக்கு. ஆனா, சங்க இலக்கியத்துல அந்த பொருள் அதுக்குக் கிடையாது.

எனதியானும் வேறாகி எவரும் யாதும் யானாகும்
இதய பாவனாதீத மருள்வாயே!


இது அருணகிரி நாதரோட திருப்புகழ்ல பாடி வெச்சது. தனதுங்கற சுயநலம் நீங்கி, பொதுநலம் ஓங்கக் கூடிய அரிய பண்பைப் பெற்றுத் தந்திடுவாயேங்றது பொருள்.

ஆக, அதீதம் அப்படீன்னா, அரிய அல்லது கிடைக்கப் பெறாதங்றது பொருள். அந்த அடிப்படையில, சாமான்யனின் பாவனாதீதம் அப்படின்னா, என்னோட சிற்றறிவுக்கு இது கிடைத்தற்கரிய ஒன்னுன்னு சொல்றதுதாங்க, அது!

அதீஈஈதம்ன்னு நீட்டுறதுல விழுந்திடாதீங்க என்ன? அதீத கற்பனைன்னா, நிறைய (அ) மிகையான கற்பனை அல்ல; அது அரிய கற்பனை!

சரி, சரி, நீட்டி முழக்குனது போதும், போயி வேலைப் பாருடா பழமைன்னு நீங்க சொல்லுறதுக்கு முன்னாடி, நானே போயிடுறேன்!


விண்ணாளக்காரனுக்கு வீதி முச்சூடும் வெவகாரம்!

15 comments:

பெருசு said...

அது சரிங்ண்ணா

வாட்டி வளவு எடுத்தது சரி.

ஒரம்பறைக்கு போறதுன்னா என்னெங்.

Anonymous said...

அதீதம் - நீட்டி மொழக்குதல்
சரியா

SUREஷ்(பழனியிலிருந்து) said...

அரிய இடுகை..,

ஈரோடு கதிர் said...

// ’Describe ப்ரீஈஈஈஇஃப்லி’ன்னு நீட்டி முழக்குனது ஞாவகத்துக்கு வரும்//

இஃகிஇஃகி

ஆமாங்க

பதிவு அருமைங்

தாராபுரத்தான் said...

அந்தியூர் தம்பி! கலக்க‌ரீகளே!

பழமைபேசி said...

//பெருசு said...
அது சரிங்ண்ணா

வாட்டி வளவு எடுத்தது சரி.

ஒரம்பறைக்கு போறதுன்னா என்னெங்
//

வணக்கம்; தென் அமெரிக்க நாட்டில் இருந்து எனக்கு ஒறம்பரை கிடைச்சதுல நெம்ப சந்தோசம்.... உங்ககூடப் பேசிட்டு இருந்ததுல நேரம் போனதே தெரீல போங்க....

//சின்ன அம்மிணி said...
அதீதம் - நீட்டி மொழக்குதல்
சரியா
///

அவ்வ்வ்வ்வ்வ்வ்.... மிகைப்படுத்துல அல்லன்னு சொல்லியும் இப்படிக் கேக்குறீங்க? இருங்க, நான் எங்க அமுச்சிகிட்டச் சொல்லிக் கூட்டியாறன்!

//SUREஷ் (பழனியிலிருந்து) said...
அரிய இடுகை..,
//

நன்றிங்கோ!

//கதிர் - ஈரோடு said...
இஃகிஇஃகி

ஆமாங்க

பதிவு அருமைங்
//

படுவா மாப்பு... இடுகைன்னு சொல்லோணும்....

//அப்பன் said...
அந்தியூர் தம்பி! கலக்க‌ரீகளே!
//

இஃகிஃகி, நன்னீங்கோ!

ஈரோடு கதிர் said...

//படுவா மாப்பு... இடுகைன்னு சொல்லோணும்....//

இடுகை.
இடுகை..
இடுகை...

தோப்புகரணம் போட்டுக்கறேன் மாப்பு

இராகவன் நைஜிரியா said...

பதிவு இடுகை குழப்பம் இன்னும் நிறையப் பேருக்கு இருக்குங்க அய்யா...

ஒன்றும் செய்ய இயலவில்லை.

நானும் பார்க்கின்ற வலைப்பூக்களில் எல்லாம், உங்களுடைய 50 / 100 வது இடுகைக்கு வாழ்த்துகள் என்றும் போட்டு வருகின்றேன்.

இந்தியாவில் இருந்த போது, தினமலரில் வந்த வாழ்த்து விளம்பரங்களில் எல்லாம் வாழ்த்துக்கள் என்றே வந்திருந்தன.

தமிழ் நாட்டிலேயே தமிழ் தினசரியிலேயே இப்படி இருந்தா என்னச் செய்வது?

பழமைபேசி said...

//கதிர் - ஈரோடு said...

இடுகை.
இடுகை..
இடுகை...

தோப்புகரணம் போட்டுக்கறேன் மாப்பு
//

இஃகிஃகி, அந்த பயமிருந்தாச் செரி. பதிவுன்னு எழுதும் போதெல்லாம் என்னோட நெனப்பு உங்களுக்கு வரோணுமாக்கூ?!

பழமைபேசி said...

//இராகவன் நைஜிரியா said...
பதிவு இடுகை குழப்பம் இன்னும் நிறையப் பேருக்கு இருக்குங்க அய்யா...//

ஆமாங்க ஐயா.... இடுகை, இஃகி... இந்த இரண்டையும் சரியாகத் தாங்கள் பாவித்திருப்பதை நான் பல இடங்களில் கண்டிருக்கிறேன்.... மிக்க நன்றிங்க ஐயா!

மருத்துவர் தேவாவும் இவற்றைப் புழங்கி தங்களைப் போலவே பிரபலபடுத்தி வருகிறார்... உங்கள் இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!

சுப.நற்குணன்,மலேசியா. said...

எப்பிடீய்ய்ய்ய்ய்ய்ய்ய்யா இப்படிலாம் உங்களால எழுத முடியுது!

பிச்சுபுட்டீங்க! கும்புடு போடுறேன்!

குறும்பன் said...

//ஆக, அதீதம் அப்படீன்னா, அரிய அல்லது கிடைக்கப் பெறாதங்றது பொருள்.//

புது பொருள் தெரிந்து கொண்டேன். அதிகம் அப்படிங்கறததான் நீட்டி முழக்கி இப்ப அதீதம் என்று ஆக்கிட்டாங்களோ?


பழமைக்காக சிறப்பு இடுகை ஒன்று இட்டுள்ளேன் இஃகிஃகி.

Unknown said...

நீங்க அருமையா இப்படி வழக்குல இருக்குற மற்றும் இல்லாத வார்த்தைகளுக்கு விளக்கம் சொல்றீங்க ...இதே உரைநடையில், சில முக்கியமான சோழ மண்டல வரலாற்று சம்பம்வங்களை கொடுத்தா சூப்பரா இருக்கும்..
வரலாறும் பழைமை தானே? -- பழைமை பேசிய விட்டா வேறு யாரு இவ்வளவு அருமையா சொல்லமுடியும்
இது என்ர சின்ன விண்ணப்பம் ..


உங்களின் இடுகைகளை தொடர்ந்து படிக்கும் - வெங்கி

நாகராஜன் said...

பழமை பேசி,

நல்ல கலக்கரீங் போங்க... இந்த மாதிரி தொழாவி தொழாவி (எழுத்து பிழை இருந்தா திருத்தி சொல்லுங்) எழுதறதுக்கு உங்களை விட்ட வேற யாரும் இல்லைன்னு நினைக்கறனுங்கோவ்.

பழமைபேசி said...

@@சுப.நற்குணன்

நன்றிங்க ஐயா!

//குறும்பன் said...
பழமைக்காக சிறப்பு இடுகை ஒன்று இட்டுள்ளேன் இஃகிஃகி.
//

இஃகிஃகி... நன்றீங்கோ....

@@Venkatesan

வாங்க வெங்கி, செய்துட்டாப் போகுது.. நன்றிங்க வெங்கி!

@@ராசுக்குட்டி

அய்ய, நாம எதோ தெரிஞ்சதை வெச்சி... நன்றிங்க...