7/20/2009

நயம்மிகு பதிவர்கள்

இல்லா இடத்தும் இயைந்த அளவினால்
உள்ளஇடம் போல் பெரிதுவந்து - மெல்லக்
கொடையொடு பட்ட குணனுடைய மாந்தர்க்கு
அடையாவாம் ஆண்டைக் கதவு.

பாராட்டுதலும் ஈகையும் இருக்குறவங்களுக்கு சொர்க்கத்தின் கதவுகள் அடைபடாதுன்னு பதினென்கீழ்க் கணக்கு நூல்கள்ல ஒன்றான நாலடியார்ல சொல்லி இருக்காங்க பெரியவங்க. அது போல பாராட்டி விருது குடுக்குறவங்க நல்லா இருக்க வாழ்த்துகள்.

அதே ரீதியில பாராட்டுப் பெற்றவர்கள், விருது பெற்றவர்கள் நன்றி செலுத்தணுமா வேண்டாமா? அதே பதினென்கீழ்க் கணக்கு நூல்கள்ல ஒன்றான இனியவை நாற்பதுல நன்றி நவில்தலை என்ன சொல்றாங்க பெரியவங்க?


நன்றிப் பயன் தூக்கி வாழ்தல் நனி இனிதே;
மன்றக் கொடும்பாடு உரையாத மாண்பு இனிதே;
'அன்று அறிவார் யார்?' என்று அடைக்கலம் வெளவாத
நன்றியின் நன்கு இனியது இல்.

நன்றி மனப்பான்மையோட, பொது இடத்துல மாண்பு கெடாத மாதிரி, யாருக்கு என்ன தெரியும்ன்னு சொல்லாமக் கொள்ளாம நன்றி செலுத்துவது இனிமைன்னு சொல்றாங்க இந்தப் பாட்டுல. ஆக, விருது கொடுத்தவங்களுக்கு நன்றியச் சொல்லிட்டு நாமளும் நாலு பேர்க்கு நயம்மிகு பதிவர் விருது கொடுக்கலாம் வாங்க!

ஆமாங்க, திறந்தமனத்தோன் செந்தழல் இரவி, அப்பாவி முரு, அன்பு அக்பர் இவங்கெல்லாம் நமக்கு விருது கொடுத்தவங்க. அவங்களுக்கும், என்னோட கவனத்திற்கு வராமலே இனியும் யாராவது கொடுத்திருந்தா அவங்களுக்கும் நன்றிகள் உரித்தாகட்டும். நாம பாராட்டி பாசத்தோட விருது கொடுக்குறது யாருக்குன்னு பார்க்கலாம் இப்ப.

ச.செந்தில்வேலன்

நம்மூர் அன்புத் தம்பி இவர், கொஞ்சு தமிழுக்கு புகழ் சேர்த்துட்டு இருக்கார்.

கதிர்

நம்ம மாப்பிள்ளை, கவிதைகள் நயம்பட எழுதிட்டு இருக்கார்.


சின்ன அம்மிணி

நம்ம ஊர் அம்மணி, கலந்து கட்டி எழுதுறவங்க. அவுசுதிரேலியாவுல குடித்தனம்.

எம்.எம்.அப்துல்லா

ஊர்க் கிணத்துக்கு தடம் சொல்லணுமா? ஊர்க் கெணறு மாதிரியே என்னத்தச் சொன்னாலும் பண்பா நடந்துக்குற ஒருத்தர், பண்பா எழுதுறவரும் கூட.

பெரியாரோடு யாத்த தொடர் விடுதல் இன்னா! இது இன்னா நாற்பதுல வர்றது. அதாவது அறிவார்ந்த சக மனிதர்களின் தொடர்பை விட்டு விடுவது இனியதல்ல. ஆகவே, பதிவுலகில் இருக்கிற சக பதிவர்கள், வாச்கர்கள் எல்லாருக்கும் வாழ்த்துகளும் நன்றியும் சொல்லி இந்த இடுகையை இட்டு முடித்துக் கொள்ளும்,

பணிவுடன்,
பழமைபேசி
.

19 comments:

நிகழ்காலத்தில்... said...

\\ஊர்க் கெணறு மாதிரியே என்னத்தச் சொன்னாலும் பண்பா நடந்துக்குற ஒருத்தர், பண்பா எழுதுறவரும் கூட.\\


பொருத்தமாய் சொன்னீர்கள்

வாழ்த்துக்கள்

Anonymous said...

விருது வாங்கிய உங்களுக்கும், விருது பெற்ற அனைவருக்கும்., அருமை நண்பர் அப்துல்லாவிற்கும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

ப்ரியமுடன் வசந்த் said...

வாழ்த்துக்கள் சார் தங்கள் கரங்களில் விருது பெற்றவர்களுக்கு......

ஸ்ரீ.... said...

நண்பர் அப்துல்லா உட்பட விருதுபெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களுக்கு நன்றிகள்.

ஸ்ரீ....

இராகவன் நைஜிரியா said...

விருது பெற்ற உங்களுக்கும், உங்களால் பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள்..

ரவி said...

:)))

ஈரோடு கதிர் said...

இனிய சிநேககிதமே...

என் அன்பை இதில் பகிர்ந்துள்ளேன்

http://maaruthal.blogspot.com/2009/07/blog-post_20.html

ஏற்றுக்கொள் தோழமையே...

நன்றிகளுடன்
கதிர்

ஊர்சுற்றி said...

விருது வாங்கினவங்களுக்கும்
விருது கொடுத்தவங்களுக்கும் வாழ்த்துக்கள். :)

பழமைபேசி said...

@@நிகழ்காலத்தில்.
@@கடையம் ஆனந்த்
@@பிரியமுடன்.........வசந்த்
@@ஸ்ரீ....
@@இராகவன் நைஜிரியா
@@செந்தழல் ரவி
@@கதிர்
@@ஊர்சுற்றி

நன்றி மக்களே!

Anonymous said...

விருதுக்கு நன்றி. சந்தனமுல்லை மூலமா முதல்முறை கிடைச்சுது. இப்ப உங்க மூலமா மறுபடியும். நன்றி

அப்பாவி முரு said...

வாங்கியவர்களை விட குடுத்தவர்களின் எண்ணிக்கை அதிகமா இருக்கும் போலிருக்கே

:)))

பழமைபேசி said...

//அப்பாவி முரு said...
வாங்கியவர்களை விட குடுத்தவர்களின் எண்ணிக்கை அதிகமா இருக்கும் போலிருக்கே

:)))
//

அப்படித்தான் போலிருக்கு.... இஃகிஃகி!

ஆ.ஞானசேகரன் said...

விருது பெற்றவருக்கும் கொடுத்தவருக்கும் வாழ்த்துகள்

Mahesh said...

//பெரியாரோடு யாத்த தொடர் விடுதல் இன்னா!// அதனாலதான் நான் உங்களை விடறதில்லை...

குடந்தை அன்புமணி said...

விருது பெற்ற தங்களுக்கும், தங்களிடமிருந்து விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள்.

எம்.எம்.அப்துல்லா said...

விருதுக்கு உங்க தமிழின் அடிமையின் நன்றி

:)

பழமைபேசி said...

//Mahesh said...
//பெரியாரோடு யாத்த தொடர் விடுதல் இன்னா!// அதனாலதான் நான் உங்களை விடறதில்லை...
//

ஆகா ஆகா ஆகா

suresh said...

விருது பெற்றவருக்கும் கொடுத்தவருக்கும் வாழ்த்துகள்

சிநேகிதன் அக்பர் said...

உங்களுக்கும், விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.