6/30/2009

அமெரிக்காவில் புதுமையான, சவாலான நிகழ்ச்சி!

மக்கா! நான் சும்மா சொல்லலை! நெசமாலுமே சொல்லுதேன்; இது ஒரு புதுமையான நிகழ்ச்சி, காலத்திற்கேற்ற நிகழ்ச்சி, சவாலான நிகழ்ச்சியும் கூட. ஆமாங்க, முத்தமிழ், இயல், இசை, நாடகம் ஆகியவற்றின் வரலாறு, சிறப்பு, அருமை பெருமைகளை அலசி ஆராயப் போற நிகழ்ச்சி.


பல புத்தகங்கள், குறுந்தகடுகள், இசைப் பேழைகள்ன்னு பல ஆதாரங்களையும் அலசி ஆராய்ஞ்சு கடுமையா நாங்கெல்லாம் உழைச்சி ஆயத்தப்படுத்திகிட்டு இருக்கோம். நான் இடம்பெற்று இருக்கிற அணி, ஈழப்புலவர் பெருமகனார் பூதன்தேவன் அணி. தலைவர் கொழந்தைவேல் இராமசாமி அவர்கள் வழிகாட்டுதலின் பேரில் சிறப்பா வேலைகள் நடந்துட்டு இருக்கு.

நாஞ்சில் பீற்றர் ஐயா ஒருங்கிணைத்து நடத்தப் போகிற தமிழ் இலக்கிய வரலாறு குறித்த இந்த நிகழ்ச்சி, வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் தமிழர் திருவிழாவின் ஒரு அங்கமாக, வருகிற வெள்ளிக்கிழமை காலை 10.46 மணிக்கு நடைபெற உள்ளது. அனைவரும் வாரீர்! ஆதரவு தாரீர்!!

28 comments:

அப்பாவி முரு said...

//வெள்ளிக்கிழமை காலை 10.46 மணிக்கு நடைபெற உள்ளது. அனைவரும் வாரீர்! ஆதரவு தாரீர்!! //

அண்ணே நான் வர்றேன்.,

ஆனா வழி - வாய்க்கால் தெரியலை, நீங்களே எல்லா சீட்டையும் எடுத்து அனுப்பீட்டைங்கன்னா வந்து சேர்ந்திடுவேன்.

எப்பிடி வசதி?

ஈரோடு கதிர் said...

பழமையோட அணி பளபளக்கட்டும். வாழ்த்துக்கள்

ஆ.ஞானசேகரன் said...

விழா சிறப்பாக அமைய வாழ்த்துகள் பழம. உங்களின் அணி சிறக்க அன்பு முத்தங்கள்


// அப்பாவி முரு saidஅண்ணே நான் வர்றேன்.,

ஆனா வழி - வாய்க்கால் தெரியலை, நீங்களே எல்லா சீட்டையும் எடுத்து அனுப்பீட்டைங்கன்னா வந்து சேர்ந்திடுவேன்.//

எனக்கு சேர்த்தே அனுப்புங்க சரிங்களா

குடந்தை அன்புமணி said...

விழா சிறக்க வாழ்த்துகள் நண்பா! அனுபவங்களை பதிவு போடுவீர்கள்தானே?
பாஸ்போர்ட் ரெடி பண்ணிட்டேன். டிக்கெட்டை நீங்க ரெடிபண்ணிட்டு சொல்லுங்க! கண்டிப்பா வர்றேன். நல்ல நிகழ்ச்சியை நீங்க கூப்பிட்டு தவறவிடலாமா?

Unknown said...

ஆகா! சிங்கம் களமிறங்கிடுச்சு!

சிங்கம்ண்ணு சொல்லுறதா இல்லே புளின்னு சொல்லூறதா?

இது நம்மூரு பக்கத்துல இருக்குற சிங்கமில்லெ!

நம்மூருலெருந்து போன சிங்கம்!

சிங்கமுனே சொல்லுவோம்! இஃகி இஃகி

Unknown said...

புளி - எழுத்துப்பிழையாப் போட்டுது.

தீப்பெட்டி said...

எப்படி பாஸ் அங்க வர்றது?

நீங்களே நிகழ்வுகளை தொகுத்து பதிவா போடுங்க..

பழமைபேசி said...

//அப்பாவி முரு said...
அண்ணே நான் வர்றேன்.,
ஆனா வழி - வாய்க்கால் தெரியலை, நீங்களே எல்லா சீட்டையும் எடுத்து அனுப்பீட்டைங்கன்னா வந்து சேர்ந்திடுவேன்.

எப்பிடி வசதி?
//

வாங்க, அப்படியே ஞானியாரை அழைச்சிட்டு வாங்க!

Anonymous said...

தங்கள் அணி சிறக்க வாழ்த்துகள் அண்ணே ..

பழமைபேசி said...

//கதிர் said...
பழமையோட அணி பளபளக்கட்டும். வாழ்த்துக்கள்
//

@@ஆ.ஞானசேகரன்

@@குடந்தை அன்புமணி
@@எழுத்தாணி

@@தீப்பெட்டி

@@இங்கிலீஷ்காரன்



நன்றிங்க!

பழமைபேசி said...

//எழுத்தாணி said...
நம்மூருலெருந்து போன சிங்கம்!

சிங்கமுனே சொல்லுவோம்! இஃகி இஃகி
/

அதான! இஃகி!!

தேவன் மாயம் said...

ஆஹா!! நாங்கள் வரலாமா?

தேவன் மாயம் said...

வீடியோ பதிவு உண்டா?

ப்ரியமுடன் வசந்த் said...

அமெரிக்காவுக்கு எந்த பஸ்ல வரணும்?

RRSLM said...

//தலைவர் கொழந்தைவேல் இராமசாமி அவர்கள் வழிகாட்டுதலின் பேரில் சிறப்பா வேலைகள் நடந்துட்டு இருக்கு//
யாருங்க இவரு? மேரிலேண்டு-ல இருக்காரே அவருங்கள?

பழமைபேசி said...

@@thevanmayam
@@பிரியமுடன்.........வசந்த்

நன்றிங்க!

//RR said...
யாருங்க இவரு? மேரிலேண்டு-ல இருக்காரே அவருங்கள?
//

ஆமாங்க!

kicha said...

வாழ்த்துக‌ள் ந‌ண்ப‌ரே!

பழமைபேசி said...

//kicha said...
வாழ்த்துக‌ள் ந‌ண்ப‌ரே!
//

நன்றிங்கோ!

Joe said...

அண்ணே எனக்கு ஒரு டிக்கெட் போட்டு கொடுங்க, வந்திர்றேன்.

அமெரிக்க போனதுமே, நம்ம பக்கிக "Hey Dude, wassup man? what these buggers are always talking abt Tamil..., I don't like it" அப்படின்னு அலப்பறை பண்ணிக்கிட்டு திரியிதுக. அங்கே ஏதோ உங்கள மாதிரி ஒரு சில பேராச்சும் தமிழை மறக்காமே இருக்கீக, சந்தோஷம்!

நசரேயன் said...

பஞ்சப்படி, பயணப்படி கிடைக்குமா ?

vasu balaji said...

வெற்றி பெற‌ வாழ்த்துகள்.

சிநேகிதன் அக்பர் said...

தங்கள் அணி சிறக்க வாழ்த்துக்கள்.

குடுகுடுப்பை said...

ஓ நீங்க இது விசயமாதான் போறீங்களா?
மத்ததெல்லாம் வதந்தியா

முகவை மைந்தன் said...

வெற்றி பெற வாழ்த்துகள். ஆயத்தப் பணிகள், போட்டி நடைபெற்ற விதம் போன்றவற்றையும் பதியுங்கள்.

priyamudanprabu said...

அனைவரும் வாரீர்! ஆதரவு தாரீர்!!

///////////

டிக்கெட் பிளிஸ்

priyamudanprabu said...

ஆஹா
முருகேசு முந்திகிட்டாரே?????????????????

priyamudanprabu said...

கலக்குங்க
வாழ்த்துக்கள்

மாதேவி said...

அருமையான முயற்சி வாழ்த்துக்கள்.