உரக்கப் பேசினா உண்மை! உண்மை அல்லாததை கூட்டத்தை சேர்த்துகிட்டு, மொத்தமாப் பேசுனா அதுவே உண்மை!! பத்திரிகை அல்லது ஊடகத்துல எது வந்தாலும் அது உண்மை!! இது யதார்த்தம்; அந்த யதார்த்தம் உண்மை அல்லாதப்ப அதை முறியடிக்க வேண்டிய கடமை நம்ம எல்லாருக்கும் இருக்கு!!
ஆனா இந்த உலகத்துல நமக்குத் தெரிஞ்சே தெரியாம நிறைய; தெரிஞ்சே தெரிஞ்சது ரொம்பக் கொஞ்சமா; தெரியாம தெரிஞ்ச விசயங்களும் நிறைய இருக்கு; தெரியாம தெரியாத விசயங்கள் எவ்வளவு இருக்குன்னு யாருக்கும் தெரியாது, ஆனா இருக்கு; இந்த இடத்துலதாங்க, ‘நான்’ங்ற அகம்பாவம் அடிபட்டுப் போகுது.
இதைத் தெளிவாப் புரிஞ்சிட்டா, வாழ்க்கையில நிறையப் பிரச்சினைகள் வராதுன்னு சொன்னாரு ஒரு பெரியவர். உடனே அது யார் அந்தப் பிரபலம்ன்னு யோசிக்க ஆரம்பிச்சிடாதீங்க! அது எங்க பூட்டன் வெண்குடை சுப்பையாங்ற விவசாயி எழுதி வெச்ச விலாக்குறிப்பு (புத்தகத்துப் பக்கங்களின் விளிம்பில் எழுதி வைப்பது).
அந்த வகையில ஒரு சில உண்மைக் கூற்றுகள்:
எப்ப வேணாலும் பொய் சொல்லலாம். ஆனா ஒருத்தர், தலையில நிக்கும் போது, அதாவது தலைகீழா நின்னுட்டு பொய் சொல்லவே முடியாதாம். முயற்சி செய்து பார்த்துட்டு சொல்லுங்க, என்ன?
அமெரிக்கக் குடிமக்கள்ல நாலு பேர்த்துல ஒருத்தர் எதோ ஒரு தொலைக் காட்சியில தோற்றம் அளிச்சவங்களா இருக்காங்களாம். நான் அமெரிக்கக் குடியுரிமை பெற்றவன் கிடையாது, இருந்தாலும் உள்ளூர்த் தொலைக் காட்சியில இந்திய விழா பற்றி ஓரிரு மணித்துளிகள் பேசி, அதுவும் ஒளி பரப்புல இடம் பிடிச்சது.
நீங்க தும்மும் போது வாய்/மூக்குல இருந்து பறக்கக் கூடிய துகளின் வேகம் மணிக்கு 100 மைல்களுக்கும் மேல்.
குதிக்க முடியாத ஒரே மிருகம் யானை!
சரி வரட்டுமாங்க? இஃகிஃகி!!
Subscribe to:
Post Comments (Atom)
26 comments:
//உள்ளூர்த் தொலைக் காட்சியில இந்திய விழா பற்றி ஓரிரு மணித்துளிகள் பேசி, அது ஒலி பரப்புல இடம் பிடிச்சது.//
அட.. வாழ்த்துகள்..
//நீங்க தும்மும் போது வாயில இருந்து பறக்கக் கூடிய உணவுத் துகளின் வேகம் மணிக்கு 100 மைல்களுக்கும் மேல்.//
உருப்படியான தகவல்
//ஆனா இந்த உலகத்துல நமக்குத் தெரிஞ்சே தெரியாம நிறைய; தெரிஞ்சே தெரிஞ்சது ரொம்பக் கொஞ்சமா; தெரியாம தெரிஞ்ச விசயங்களும் நிறைய இருக்கு; தெரியாம தெரியாத விசயங்கள் எவ்வளவு இருக்குன்னு யாருக்கும் தெரியாது, ஆனா இருக்கு; //
ஆமா இது என்னாங்கோ...
இது என்ன மாதிரியான தகவல்...
கொஞ்சம் சொன்னா தேவல..
//நான் அமெரிக்கக் குடியுரிமை பெற்றவன் கிடையாது, இருந்தாலும் உள்ளூர்த் தொலைக் காட்சியில இந்திய விழா பற்றி ஓரிரு மணித்துளிகள் பேசி, அது ஒலி பரப்புல இடம் பிடிச்சது.//
இது வரைக்கும் இடுகை சரி!அதென்னங்க கீழே என்ன புதுமொழிகள்?பாட்டெல்லாம் மறந்து போச்சாக்கும்:)
/தலைகீழா நின்னுட்டு பொய் சொல்லவே முடியாதாம்/
தலகீழா நின்னு சொன்னாலும் நம்பமாட்டன்னு சொல்றது இதனால தானோ?
/முயற்சி செய்து பார்த்துட்டு சொல்லுங்க, என்ன?/
இதுக்கு நான் தலைகீழா நின்னு இத சொல்றேன்னு சொன்னா நம்பமாட்டமா? இஃகி இஃகி
//உள்ளூர்த் தொலைக் காட்சியில இந்திய விழா பற்றி ஓரிரு மணித்துளிகள் பேசி, அது ஒலி பரப்புல இடம் பிடிச்சது///
கலக்குங்கஃ... கலக்குங்க....
வாழ்த்துகள்
///ஆனா இந்த உலகத்துல நமக்குத் தெரிஞ்சே தெரியாம நிறைய; தெரிஞ்சே தெரிஞ்சது ரொம்பக் கொஞ்சமா; தெரியாம தெரிஞ்ச விசயங்களும் நிறைய இருக்கு; தெரியாம தெரியாத விசயங்கள் எவ்வளவு இருக்குன்னு யாருக்கும் தெரியாது, ஆனா இருக்கு;///
நல்லாவே புரிய்து...
:-(
//குதிக்க முடியாத ஒரே மிருகம் யானை//
இன்னிக்கு ஒரு விஷயம் தெரிஜ்சிக்கிட்டேன்
// ஆனா இந்த உலகத்துல நமக்குத் தெரிஞ்சே தெரியாம நிறைய; தெரிஞ்சே தெரிஞ்சது ரொம்பக் கொஞ்சமா; தெரியாம தெரிஞ்ச விசயங்களும் நிறைய இருக்கு; தெரியாம தெரியாத விசயங்கள் எவ்வளவு இருக்குன்னு யாருக்கும் தெரியாது, ஆனா இருக்கு; இந்த இடத்துலதாங்க, ‘நான்’ங்ற அகம்பாவம் அடிபட்டுப் போகுது.//
படுச்சு, அர்த்தம் புரிஞ்சுக்க ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன். ஐயா உங்களுக்கு என்னாச்சு, இப்படி யெல்லாம் எழுத ஆரம்பிச்சுட்டீங்க.
// எப்ப வேணாலும் பொய் சொல்லலாம். ஆனா ஒருத்தர், தலையில நிக்கும் போது, அதாவது தலைகீழா நின்னுட்டு பொய் சொல்லவே முடியாதாம். முயற்சி செய்து பார்த்துட்டு சொல்லுங்க, என்ன?//
ஐயா இத நேரா நின்னுகிட்டு சொல்றீங்களா இல்ல தலைகீழா நின்னுகிட்டு சொல்றீங்களா..
// உள்ளூர்த் தொலைக் காட்சியில இந்திய விழா பற்றி ஓரிரு மணித்துளிகள் பேசி, அது ஒலி பரப்புல இடம் பிடிச்சது.//
வாழ்த்துகள்.
// குதிக்க முடியாத ஒரே மிருகம் யானை! //
அய்யோ பாவம். அவங்க டீம் விளையாடி ஜெயிச்சாக் கூட அதனால் குதித்து கும்மாளம் போட முடியாது...
//உள்ளூர்த் தொலைக் காட்சியில இந்திய விழா பற்றி ஓரிரு மணித்துளிகள் பேசி, அது ஒலி பரப்புல இடம் பிடிச்சது.//
ஒரு பதிவு போட்டு ரகளை பண்ணவேணாம்!!!.. வாழ்த்துகள்..
தமிழ்மணத்தின் அனுப்பு கருவிப்பட்டை என்னுடைய வலைப்பக்கத்தில் வரவில்லையே? ஏன்?
தமிழ்மணமும் தரவிறக்கம் செய்ய வரவில்லை!!
//நான் அமெரிக்கக் குடியுரிமை பெற்றவன் கிடையாது, இருந்தாலும் உள்ளூர்த் தொலைக் காட்சியில இந்திய விழா பற்றி ஓரிரு மணித்துளிகள் பேசி, அதுவும் ஒளி பரப்புல இடம் பிடிச்சது.//
சொல்லவே இல்லை
@@தீப்பெட்டி
தீப்பெட்டியார், ஒரு தடவைக்கு ரெண்டு தடவை நிதானமா படிச்சுப் பாருங்க, தெரியும் விசயம்!
@@ராஜ நடராஜன்
அண்ணா வாங்க.... இஃகிஃகி!
@@பாலா...
பாலாண்ணே, நான் நினைச்சேன்...நீங்க எப்படியும் கண்டு பிடிச்சிடுவீங்கன்னு....
@@உருப்புடாதது_அணிமா
மலைக்கோட்டையார் வாங்க, ஓட்டு போடுறதுக்காவது, வந்து போங்க...
//இராகவன் நைஜிரியா said...
படுச்சு, அர்த்தம் புரிஞ்சுக்க ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன். ஐயா உங்களுக்கு என்னாச்சு, இப்படி யெல்லாம் எழுத ஆரம்பிச்சுட்டீங்க.
//
ஐயா வணக்கம்! உங்களுக்கு ஒரு சபாசு, படிச்சுப் புரிஞ்சிகிட்டீங்களே, அதுக்குத்தான்!
//நசரேயன் said...
சொல்லவே இல்லை
June 2, 2009 10:30 AM
//
கேக்கவேயில்லை
:)
வணக்கம்ணே.
யூடுயூப் கிளிப் இருந்தா போடுங்கண்ணே
//ஆனா ஒருத்தர், தலையில நிக்கும் போது, அதாவது தலைகீழா நின்னுட்டு பொய் சொல்லவே முடியாதாம். முயற்சி செய்து பார்த்துட்டு சொல்லுங்க, என்ன?//
தமிழகத்து அரசியல் வியாதிகளை காக்கும் விதமாக ஏதும் உள்குத்து இல்லை தானே???
நல்ல தகவல்கள் அண்ணே
Expecting blogs abt Venkudai Subbiah.Reason for Venkudai.
//இராகவன் நைஜிரியா said...
// ஆனா இந்த உலகத்துல நமக்குத் தெரிஞ்சே தெரியாம நிறைய; தெரிஞ்சே தெரிஞ்சது ரொம்பக் கொஞ்சமா; தெரியாம தெரிஞ்ச விசயங்களும் நிறைய இருக்கு; தெரியாம தெரியாத விசயங்கள் எவ்வளவு இருக்குன்னு யாருக்கும் தெரியாது, ஆனா இருக்கு; இந்த இடத்துலதாங்க, ‘நான்’ங்ற அகம்பாவம் அடிபட்டுப் போகுது.//
படுச்சு, அர்த்தம் புரிஞ்சுக்க ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன். ஐயா உங்களுக்கு என்னாச்சு, இப்படி யெல்லாம் எழுத ஆரம்பிச்சுட்டீங்க.
//
இராகவன் ஐயா...இதைப் படிக்கிறப்ப எனக்கு இனியொரு ஞாவகம் வருது...
வாசிக்கிற வாசகங்கள் நெஞ்சுல போயி விழணுமாம்...படிக்கிற வாசகர் அதை உள்ளிழுத்து அனுபவிக்கணுமாம்... அதான் எழுதின எழுத்துக்கும் பெருமை, வாசிக்கிற வாசகனுக்கும் பெருமை... அதை விட்டுட்டு ச்சும்மா மேலோட்டமாப் படிச்சி சொகங் காணுறது, கஞ்சா அடிச்சி காணுற சொகத்துக்கு இணையின்னு... இதை நாஞ் சொல்லலை.. நூலகர் பாக்கியநாதன் சொன்னது...
இஃகிஃகி! முந்தாநாள் எழுதின கதைக்கே ஆப்பு... இதுக வேற பிரசங்கமான்னு நீங்க நினைக்கிறதும் புரியுது... ஞாவகத்துக்கு வந்துச்சு...சொன்னேன் ---இஃகி
புரிஞ்சுது அப்புறம் குழப்பமாகிடுச்சு. :-((
அமெரிக்க தொலைக்காட்சி புகழ் பழமையார் வாழ்க வாழ்க.
தலைகீழா நின்னுகிட்டு எப்படிங்க விலாவாரியா பேசறது? எதுவுமே பேசமுடியாதுன்னு நினைக்கிறேன்.
தலைகீழா நின்னு பேசிபார்த்துட்டு சொல்றேன்.
@@thevanmayam
@@நசரேயன்
@@எம்.எம்.அப்துல்லா
@@குடுகுடுப்பை
@@பதி
@@பிரியமுடன்.........வசந்த்
@@Muniappan Pakkangal
நன்றிகள் உரித்தாக்குறேன் மக்கா!
//குறும்பன் said...
தலைகீழா நின்னுகிட்டு எப்படிங்க விலாவாரியா பேசறது? //
நான் சொன்னது பொய் பேசமுடியாதுன்னு.... இஃகிஃகி!!
உங்களுக்கு தெரிஞ்ச -- உதெ
உங்களுக்கு தெரியா - உதெரியா
வெளிய தெரிஞ்ச -- வெதெ
வெளிய தெரியா -- வெதெரியா
உதெ/வெதெ
உதெ/வெதெரியா
உதெரியா/வெதெ
உதெரியா/வெதெரியா
///உள்ளூர்த் தொலைக் காட்சியில இந்திய விழா பற்றி ஓரிரு மணித்துளிகள் பேசி, அதுவும் ஒளி பரப்புல இடம் பிடிச்சது.///
வாழ்த்துகள் நண்பா! அமெரிக தொலைகாட்சில எப்பொழுது?
//ஆ.ஞானசேகரன் said...
வாழ்த்துகள் நண்பா!
//
நன்றிங்க...
வழக்குத் தமிழ்ல இடுகை எழுதி கலக்குற ஒரே தல பழமைபேசி ஐயா...
:-)
நன்னா இருக்குங்க...
/தலைகீழா நின்னுட்டு பொய் சொல்லவே முடியாதாம்/
ஒ அதனால்தான் லாக் அப்ல தள கிழாக கட்டடி வச்சி அடிகிராங்களா
சில புதியத் தகவல்களுக்கு நன்றி..!
Post a Comment