5/03/2009

கல்பனாக் கொட்டாயித் தெருவோரம்...

கோழிக கூப்புட,
சாவலுக கூவ,
குருவிக சிலுசிலுக்க,
பால்காரன் மணியடிக்க,
இன்னுஞ்சித்தநேரந் தூங்குவமின்னு,
இழுத்துப் போத்தயில,
எழுந்திருடா மணியா
உடலைப்பேட்டை போயித்
துணியெடுத்து தெக்கக்குடுத்துட்டு
வருவமுன்னு சொல்லி எழுப்பிஉட்டு,
குடிக்க காப்பித்தண்ணியுங் குடுக்க
நெறஞ்சமனசோட எட்டுமணி வண்டிக்கு
வாகாப் பட்டணம் போனோம்!

அந்த பட்டணத்து நடுப்புல
கல்பனாக் கொட்டாயித் தெருவோரம்
வித்தக்காரன் கூட்டங்கூட்ட
நானும் ரெண்டு எட்டுவெச்சு
பராக்குத்தான் பாப்பமின்னு போக,
அம்மாக்காரி சொன்னா,
ஏன்டா வேலியில போற ஓணானை
எடுத்து மடியில உட்டுக்கிற?


என்னடா இவன் தலையும் இல்லாம, வாலும் இல்லாம ஓணாங்கீணான்னு எல்லாம் பாட்டுப் படிக்கிறானேன்னு யோசிக்குறீங்களா? விசயம் இருக்கு, வாங்க பேசுலாம். போன வாரத்துல ஒரு நாளு, நம்ம கவிஞர் கயல் அவிங்க பதிவுக்கு போயி, அவங்களோட ஒரு இடுகைக்கு, நனவோடை நல்லா இருக்குன்னு சொல்ல, அவங்க நனவோடைன்னா என்னன்னு திருப்பிக் கேக்க, எனக்கு கதி கலங்கிப் போயிருச்சு.

கதி கலங்குறதுன்னா என்ன? அதுக்கு தனியா ஒரு இடுகைதான் போடணும். இப்ப குறுக்க பேசப்படாது! ஆமாங்க, அவங்க திருப்பிக் கேக்க, நாம உள்ளக்கிடக்கய வெளிப்படுத்துன விதம் நல்லாயிருக்குன்னு சொல்லிச் சமாளிச்சோம். அவங்க, தான் எழுதின கவிதைய நனவோடைன்னு சொல்லிட்டானேன்னு கோவிச்சுகுவாங்களோன்னு ஒரு சங்கடம். அந்த கையோடயே, கவிதைன்னா என்னன்னு நம்மகிட்ட இருக்குற புத்தங்கங்களைத் தூசி தட்டினோம். வலையில மேஞ்சோம். வெவரந்தெரிஞ்ச நாலு பேர்கிட்டவும் கேட்டுப் பாத்தோம்.

ம்ம்ம்... ஒன்னு ஒன்னும் ஒன்னு சொல்ல, பேசுனவங்களும் அவங்க பழமயச் சொல்ல, நமக்கு ஒரே கொழப்பமாப் போச்சு. கடசீல, கையேட்டுல சொல்லி வெச்சது ஏத்துகிடுறா மாதர இருக்கு. அதை வெளில சொன்னா, வேண்டாத பொல்லாப்பு வரும். அப்பத்தானுங்க, வேலியில போற ஓணானை எடுத்து மடியில உட்டுக்குற கதை ஞாவகத்துக்கு வந்துச்சு. பெரிய பெரிய பாட்டுகாரங்க, கவிஞருங்க சொன்னா அது சபை ஏறும். நமக்கெதுக்கு வம்பு?!

தலைவரையோ, தலைவியையோ போற்றிப் பேசுறாங்க. அது புகழுரைன்னுதான வரும்?! ஆனாக் கவிதையின்னு சொல்லுறோம். காதலிய அப்படீ இப்படீன்னு நல்லதா நாலு பழம சொல்லும் போது, வர்ணனையின்னுதான வரோணும்? ஆனா, அதையும் காதல் கவிதையின்னு சொல்லுறோம். மன்சுல தோணுற நெனப்பையெல்லாம் ஒரு சீராச் சொல்லுறோம். அதையுங் கவிதையின்னே சொல்லுறம்?! அந்தக் காலத்துல எல்லாம், சித்திரகவி, ஆசுகவி, மதுரகவி, வித்தாரகவின்னு சொல்லி, அதுக்கு இலக்கணமுஞ் சொல்லி வெச்சாங்க. இந்த காலத்துலயும், பெரியவிங்க எல்லாம் ஒன்னு கூடி எல்லாரும் ஏத்துகிடுறா மாதர, கவிதையின்னா என்னன்னு சொல்லி வெச்சாத் தேவுல.



ஆமாங்க, உற்பத்தி பண்றதெல்லாம் கவிதை இல்லீங்களாம். சொல்ல நினைக்குறதை, இலக்கண வரம்புக்குள்ள வெச்சி செய்யுறது செய்யுள்ன்னு வருமுங்களாம். செய் + உள்வைத்து = செய்யுள். இஃகிஃகி! உள்ளக்கிடக்கைய வெளிப்படுத்துறது, நனவோடை. அதுக்கு, பெரியவங்க சொன்ன இலக்கணம் இதுதானுங்க. “வாசகர்களின் மனதைச் சுண்டியிழுக்கும் பாங்கினில், காலம், இடம் இவற்றினைப் பொருட்படுத்தாமல், மனதில் உள்ள எண்ணங்களை அலை அலையாகக் கிளப்பிவிடப்பட்ட நிலையில், நல்ல சொற்கள் கொண்டு வடிமைப்பது நனவோடை (Stream of Consciousness)!". என்னோட மனசுல எப்பிடி, அலை அலையாக் கெள்ம்புதுன்னு பாருங்க சித்த! கேவலமா இருந்தா கண்டுகிடாதீங்க சரியா?!


ஓய்வு ஒழிவு இன்றி
மூடுமந்திரம் ஓதி
அலையாய் அலைந்து
பின்னால்வர ஆட்சேர்த்து
உளம்கவர் வேடமிட்டு
மனங்கோணாப் பேச்சுப்பேசி
வினையாற்றுதல் யாதென
சிரத்தையுடன் எண்ணியதில்
ஒருநிலைக்கு வந்தாயிற்று,
வேண்டாம் அரசியல்!!!




20 comments:

Mahesh said...

நல்ல விளக்கம் !!

அப்ப நான் எழுதறதுக்கெல்லாம் இனிமேத்தான் பெரியவங்க எதாவது பேரு கண்டுபுடிக்கோணும் :(

SUREஷ்(பழனியிலிருந்து) said...

விளக்கங்கள் அறுமை

பழமைபேசி said...

//Mahesh said...
அப்ப நான் எழுதறதுக்கெல்லாம் இனிமேத்தான் பெரியவங்க எதாவது பேரு கண்டுபுடிக்கோணும் :(
//

அண்ணே வாங்க, அப்பிடியெல்லாம் இல்ல... நான் பதிவுலகத்தைப்பத்தி ஒன்னுமே சொல்லலை...

பழமைபேசி said...

//SUREஷ் said...
விளக்கங்கள் அறுமை
//

மருத்துவர் ஐயா, வாங்க, வணக்கம்! நன்றி!!

vasu balaji said...

/பெரியவங்க சொன்ன இலக்கணம் இதுதானுங்க. “வாசகர்களின் மனதைச் சுண்டியிழுக்கும் பாங்கினில், காலம், இடம் இவற்றினைப் பொருட்படுத்தாமல், மனதில் உள்ள எண்ணங்களை அலை அலையாகக் கிளப்பிவிடப்பட்ட நிலையில், நல்ல சொற்கள் கொண்டு வடிமைப்பது நனவோடை (Stream of Consciousness)!". என்னோட மனசுல எப்பிடி, அலை அலையாக் கெள்ம்புதுன்னு பாருங்க சித்த!/

இந்த பெருசுங்க படுத்தற பாடு தாங்கல சாமி. இவிங்களே தான இடம் பொருள் ஏவல் பார்த்து பேசணுமின்னும் சொன்னது. மத்தபடி நல்ல விளக்கம். மனசுல தோணினத எனக்குப் பிடிச்சா மாதிரி சொல்றேன். அது கவிதையின்னா என்னா, கட்டுரையின்னா என்னா. உனக்கும் பிடிச்சிருக்கா. அவ்ளோதானே!

எம்.எம்.அப்துல்லா said...

//சித்திரகவி, ஆசுகவி, மதுரகவி, வித்தாரகவின்னு //

நீங்க என் மனசுக்குப் புடுச்ச கவிண்ணே :)

தமிழ் said...

அருமை

குடந்தை அன்புமணி said...

நனவோடைக்கு நல்ல விளக்கம்!

பழமைபேசி said...

//பாலா... said...
இந்த பெருசுங்க படுத்தற பாடு தாங்கல சாமி. இவிங்களே தான இடம் பொருள் ஏவல் பார்த்து பேசணுமின்னும் சொன்னது. மத்தபடி நல்ல விளக்கம். மனசுல தோணினத எனக்குப் பிடிச்சா மாதிரி சொல்றேன். அது கவிதையின்னா என்னா, கட்டுரையின்னா என்னா. உனக்கும் பிடிச்சிருக்கா. அவ்ளோதானே!
//

ஆகா, வாங்க பாலாண்ணே! நறுக்ன்னு சொல்லி அசத்திட்டீங்க... சபாசு!

பழமைபேசி said...

//எம்.எம்.அப்துல்லா said...
//சித்திரகவி, ஆசுகவி, மதுரகவி, வித்தாரகவின்னு //

நீங்க என் மனசுக்குப் புடுச்ச கவிண்ணே :)
//

ஆனா, நீங்க எங்க எல்லாருக்கும் பிடிச்ச அண்ணனுங்ண்ணே!!!

பழமைபேசி said...

//திகழ்மிளிர் said...
அருமை

May 4, 2009 1:19 AM


குடந்தைஅன்புமணி said...
நனவோடைக்கு நல்ல விளக்கம்!
//

வணக்கம் திகழ்மிளிர், அன்புமணியாரே!!!

ராஜ நடராஜன் said...

நதி எங்க எங்கேயோ ஓடி ஒரு நிலைக்கு வந்தாச்சு போல இருக்குதே:)

ராஜ நடராஜன் said...

மகேசு வீட்டுக்குப் போனேனா.அவர் புலி பார்க்கப் போயிட்டாராம்.

http://www.xbhp.com/talkies/tourer/7016-destination-unknown.html


போட்டா புடிக்கிற பயகிட்டயெல்லாம் உங்களுக்கு என்ன சாகவாசம்ன்னு நெனச்சுகிட்டே வந்தேன்.

கயல் said...

தெரியாத ஒரு வார்த்தைக்கு விளக்கம் கேட்க போயி, இப்போ தெரிஞ்சதா நினைச்சிகிட்டிருந்த‌ வார்த்தைக்கு பொருள் தெரியாம போயிடுச்சு!உங்க ஆராய்ச்சி முடிவ சொல்லாமலே இடுகைய முடிச்சிட்டீங்க? ஆமா கடைசில கவிதைனா என்னங்க?? நீங்க தானே சந்தேகம் கேட்குற‌வுங்க பின்னாளில் அறிவாளி ஆகலாம்னு சொல்லி இருக்கீங்க‌!அதான்... இஃகி!

சித்திரகவி, ஆசுகவி, மதுரகவி, வித்தாரகவி - இந்த வகைப்பாடெல்லாம் அவங்க மொழியுற கவியைப் பொறுத்ததுன்னு நினைக்குறேன்! ஆனா கவிதைன்னா என்ன என்பதற்கான பொது இலக்கணம் சொல்லுங்க ஆசானே!
இல‌க்க‌ண‌ங்க‌ள் இல்லாதது என்ப‌தாலேயே புதுக்க‌விதை எல்லாராலும் எளிதா கையாள‌ப்ப‌டுது!
இல‌க்க‌ண‌ வர‌ம்புக்குள் மொழிய‌ப்ப‌டுவ‌தே க‌விதைனா அது ம‌ர‌புக் க‌விதை தானே?
பாதித்த‌ விச‌ய‌ங்க‌ளை த‌மிழோடு ஒரு சேர‌ மொழிவ‌தும் க‌விதையாகாதா?

//
ஓய்வு ஒழிவு இன்றி
மூடுமந்திரம் ஓதி
அலையாய் அலைந்து
பின்னால்வர ஆட்சேர்த்து
உளம்கவர் வேடமிட்டு
மனங்கோணாப் பேச்சுப்பேசி
வினையாற்றுதல் யாதென
சிரத்தையுடன் எண்ணியதில்
ஒருநிலைக்கு வந்தாயிற்று,
வேண்டாம் அரசியல்!!!
//

உங்க நனவோடை ரொம்ப நல்லா இருக்குங்க! இஃகிஃகி!!!

பழமைபேசி said...

// கயல் said... //

அகோ கயல்... சாயுங்காலம் விபரமா பதில் போடுறேன்...

பழமைபேசி said...

//நீங்க தானே சந்தேகம் கேட்குற‌வுங்க பின்னாளில் அறிவாளி ஆகலாம்னு சொல்லி இருக்கீங்க‌!அதான்... இஃகி!//

ஆமாங்க, ஆமாங்க!!

//சித்திரகவி, ஆசுகவி, மதுரகவி, வித்தாரகவி - இந்த வகைப்பாடெல்லாம் அவங்க மொழியுற கவியைப் பொறுத்ததுன்னு நினைக்குறேன்! //

ஆமாங்க... நாம சித்திரகவி வகையில நிறைய எழுதியிருக்கோம்... இஃகிஃகி!!

//ஆனா கவிதைன்னா என்ன என்பதற்கான பொது இலக்கணம் சொல்லுங்க//

அதுலதாங்க வில்லங்கம். வரிகளை மடிச்சுப் போட்டா அது கவிதை ஆயிடுமான்னு பாயுறாரு பாலகுமாரன். நல்ல தமிழ்ல எழுதினா, அது கவிதை ஆயிடுமான்னு நிறையப் பேர் கொதிக்குறாங்க... உணர்ச்சிகளை லாவகமாச் சொல்லுறது கவிதைன்னா, அது உரைநடைலயுந்தான வருதுன்னு கொஞ்சம் பேர்... ஒரே குழப்பம்....

//இல‌க்க‌ண‌ங்க‌ள் இல்லாதது என்ப‌தாலேயே புதுக்க‌விதை எல்லாராலும் எளிதா கையாள‌ப்ப‌டுது!
//

தாய்த்தமிழில் உள் உணர்வைச் சொரிவது கவிதை!

தாய்த்தமிழில் உள் எண்ணங்களை வடிப்பது நனவோடை!!

நல்லாக் கவனிங்க, உணர்வுகளைச் சொரிவதுங்றது வேற, எண்ணங்களை வடிப்பது வேற. உணர்வுகள், எதோ ஒன்றினால் உண்டாக்கப்படுவது. நிலாவைப் பார்த்தவுடனே உங்களுக்கு உள்ளுணர்வு வெளிப்படலாம். அடுத்தவங்க துயரத்தைப் பார்த்து உணர்வுகள் வெளிப்படலாம்.

எண்ணங்கள் அப்படி இல்ல. நீங்களா உட்கார்ந்து யோசிச்சா, அது அலை அலையாக் கிளம்பும்.

இலக்கணம்ன்னா, ஒன்றின் தன்மை. ஆக, எந்த வரைமுறையும் இல்லாமத் தாய்த்தமிழ்ல வடிக்கிறதுங்ற இலக்கணத்துல வர்ற கவிதை புதுக்கவிதை. போதிச்சவர், காசி ஆனந்தன்.

இஃகிஃகி, நாஞ்சொன்னேன் யாருகிட்டவும் இதைச் சொல்லிடாதீங்க, சரியா?!

நசரேயன் said...

இதுக்கு தான் நான் கவிதையே எழுதுவதில்லை

வில்லன் said...

நனவோடைன்னா என்னன்னு தெரியாது. "நல்ஒடை" ( L வடிவுல முள்ளு இருக்கும். ஆட்டுக்கு அந்த காய உணவா கொடுப்பாங்க) இல்ல "நல்ல ஓடை" (கிரீக்) ன்னா தெரியும்......

Joe said...

அருமையான பதிவு.
தெளிவாக விளக்கியுள்ளீர்கள்.

Unknown said...

விளக்கம் நல்லாதானுங்கோ இருக்குது....!! ஆனா கொஞ்சம் பெருசா இருக்குது...!! பரவால்லைங்கோவ்....!!!!